மணிகர்னிகா-ஜான்சியின் ராணி பட சென்னை பிரஸ் மீட்டில் கங்கனா ரனாவத்

Bollywood Actress Kangana Ranaut at Chennai Manikarnika Movie Press Meetஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கமல் ஜெயின் இணைந்து மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் திரைப்படம் “மணிகர்னிகா – ஜான்சியின் ராணி”.

ராதாகிருஷ்ணா ஜாகர்லமுடி மற்றும் கங்கனா ரனாவத் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ராணி மணிகர்ணிகாவாக கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார்.

அங்கிதா லோகண்டே, ஜீஷூ சென்குப்தா, டேனி டென்சாங்போ, அதுல் குல்கர்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் வரும் ஜனவரி 25ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் தமிழ் பதிப்பின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

ஜான்சியின் ராணி, லக்‌ஷ்மி பாய் கதை சினிமாவில் சொல்லப்பட வேண்டிய ஒரு கதை. 2017 தொடங்கி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறோம். கங்கனா ரனாவத் இந்த கதையின் நாயகியாக மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் மிகவும் பொருத்தமான தேர்வு.

ராணி லக்‌ஷ்மி பாய் தேசிய அளவில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு ராணி. அதனால் இந்த படத்தை தென்னிந்திய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட முடிவு செய்தோம்.

மேலும் தமிழ், தெலுங்கு என்பது இந்திக்கு அடுத்து மிகப்பெரிய மார்க்கெட்டை கொண்டிருக்கிறது, கிராஃபிக்ஸ் காட்சிகள் மிகச்சிறப்பாக வந்திருக்கின்றன என்றார் தயாரிப்பாளர் கமல் ஜெயின்.

”தேசபக்தி பற்றிய ஒரு கதையில் நான் நடிக்கும் முதல் படம். 12 வருடங்களாக இந்த மாதிரி ஒரு படத்தில் நடிக்கவில்லையே என வருத்தம் இருந்தது.

இந்தியாவின் மிக முக்கிய ஆளுமைகளான விஜயேந்திர பிரசாத், டேனி டென்சாங்போ, அதுல் குல்கர்னி உட்பட பல முக்கியமான திறமையாளர்களுடன் இந்த படத்தில் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த படம் தொடங்கிய போது என் உடல் எடை 50 கிலோ. மிகவும் ஒல்லியாக இருந்தேன். ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்கும் போது என்னுடைய உடல் அதற்கு உகந்ததாக இல்லை என என் சண்டைப்பயிற்சியாளர் கூட சொன்னார்.

தினமும் 10-12 மணி நேரம் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டி இருந்தது. அதற்கேற்ற வகையில் நிறைய சிரமம் இருந்தது. ஆக்‌ஷன் காட்சிகள் ஏற்கனவே எடுத்து முடிக்கப்பட்டன.

அதன் பிறகு தான் நான் படத்தை இயக்கினேன். நான் டிராமா காட்சிகளை தான் இயக்கினேன். நான் நிறைய நேரம் எழுத்தாளர்களுடன் செலவு செய்திருக்கிறேன், அது எனக்கு உதவிகரமாக இருந்தது.

காட்சிகளை படம் பிடிப்பது எளிதாக இருந்தது, ஆனால், என்ன காட்சிகளை எடுக்க வேண்டும், அதற்கு தயாராவது தான் சவாலாக இருந்தது.

அதே போல ராணி லக்‌ஷ்மி பாய் கதாப்பாத்திரம் நாம் நடிக்கும் வழக்கமான ஒரு கதாப்பாத்திரம் போன்றது அல்ல.

அதை செய்ய எனக்கு நிறைய நம்பிக்கை தேவைப்பட்டது, அர்ப்பணிப்பு தேவைப்பட்டது, அனைத்து மொழி மக்களையும் இந்த கதை சென்றடையும் என நம்புகிறேன்.” என்றார் நாயகி.

Bollywood Actress Kangana Ranaut at Chennai Manikarnika Movie Press Meet

Overall Rating : Not available

Related News

Latest Post