தீவிர டயட்டில் இருந்த 27 வயதான நடிகை மிஷ்டி முகர்ஜி மரணம்

தீவிர டயட்டில் இருந்த 27 வயதான நடிகை மிஷ்டி முகர்ஜி மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mishti mukherjee death‘காஞ்சி: அன்ப்ரேக்கபிள்’, ‘கிரேட் க்ராண்ட் மஸ்தி’, ‘பேகம் ஜான்’, ‘மணிகர்னிகா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மிஷ்டி முகர்ஜி.

இந்தி மற்றும் பெங்காலி மொழிப்படங்களில் நடித்து வந்தார் இவர்.

இவர் தன் உடல் எடையை குறைக்க கீட்டோ ஜெனிக் டயட் என்ற டயட் முறையை பின்பற்றியுள்ளார்.

அதாவது… உணவில் மிக குறைந்த அளவில் மாவுச்சத்தை எடுத்துக்கொண்டு அதிக அளவில் கொழுப்பையும், அதற்கும் கொஞ்சம் குறைவாகப் புரதத்தையும் எடுத்துக்கொள்வதுதான் கீட்டோ டயட் என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் நடிகை மிஷ்டி முகர்ஜி பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை (02.10.20) அன்று மிஷ்டி முகர்ஜி மரணமடைந்தார். அவருக்கு வயது 27 என்பது குறிப்பிடத்தக்கது.

கீட்டோ டயட் முறையை தொடர்ந்து பின்பற்றியதாலேயே மிஷ்டி முகர்ஜிக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Keto Diet is Suspected to Be the Reason for Mishti Mukherjee’s Death

மறைந்த கணவர் கட் அவுட்டை வைத்து வளைகாப்பு நடத்திய நடிகை மேக்னா ராஜ்

மறைந்த கணவர் கட் அவுட்டை வைத்து வளைகாப்பு நடத்திய நடிகை மேக்னா ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

meghana raj baby showerநடிகை மேக்னா ராஜின் கணவரும் பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் மாதம் மாரடைப்பு காரணமாக காலமானார்.

இவர் ஆக்சன் கிங் அர்ஜூனின் உறவினர் என்பது தெரிந்ததே.

சிரஞ்சீவி சார்ஜா காலமானபோதே அவரது மனைவி நடிகை மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார்.

விரைவில் அவருக்கு குழந்தை பிறக்க உள்ளது.

இந்த நிலையில் மேக்னாராஜ்க்கு வளைகாப்பு நடத்தப்பட்டு உள்ளது.

கணவர் உயிருடன் இல்லாததால் கணவரின் கட்-அவுட்டை தன் அருகில் வைத்து மேக்னாவுக்கு வளைகாப்பு நடத்தியுள்ளனர்.

மேக்னா தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் ’நான் உங்களுக்காக காத்திருக்கிறேன்’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Actress Meghana Raj’s Baby Shower Pics With ‘Chiranjeevi’s Cutout Poster’

லாக்டவுன் முடிந்தபின் திருமண உறவில் லாக் ஆகும் காஜல் அகர்வால்..?

லாக்டவுன் முடிந்தபின் திருமண உறவில் லாக் ஆகும் காஜல் அகர்வால்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress kajal aggarwalவிஜய், அஜித், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போட்டவர் காஜல் அகர்வால்.

தமிழ் சினிமாவை போல் தெலுங்கிலும் இவருக்கு நல்ல மார்க்கெட் உள்ளது.

தற்போது கமல்ஹாசனுடன் ‘இந்தியன் 2’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் விரைவில் காஜல் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

பில்லியனர் தொழிலதிபர் கெளதம் என்பவரை திருமணம் செய்யவுள்ளதாகவும் கொரோனா பிரச்னை முடிந்த பிறகு திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Actress Kajal Aggarwal to marry businessman Gautam Kitchlu?

பாலாவின் ‘வர்மா’ நாளை வர்றார்..; நாம பார்க்க முடியாது. ஏனா நாமதான் இந்தியனாச்சே…

பாலாவின் ‘வர்மா’ நாளை வர்றார்..; நாம பார்க்க முடியாது. ஏனா நாமதான் இந்தியனாச்சே…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Varma movieஅர்ஜூன் ரெட்டி என்கிற தெலுங்குப் படம் தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

பிரபல இயக்குநர் பாலா இயக்க விக்ரம் மகன் துருவ் நாயகனாக இப்பட மூலமாக அறிமுகமானார்.

வங்காள நடிகை மேகா செளத்ரி, ஈஸ்வரி ராவ், பிக் பாஸ் ரைஸா போன்றோரும் நடித்தார்கள்.

ஆனால் இயக்குனருடன் ஏற்பட்ட கருத்து மோதலால் இப்படத்தை தயாரிப்பாளர் வெளியிட விரும்பவில்லை என அறிவித்தார் தயாரிப்பாளர்.

அதாவது ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் இருந்த உயிரோட்டம், ‘வர்மா’ வில் இல்லை என்றார்.

மேலும் ‘வர்மா’ படத்தை வேறு ஒரு இயக்குனரை வைத்து ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் படத்தை எடுத்து வெளியிட்டனர்.

இந்நிலையில், பாலா இயக்கிய ‘வர்மா’ படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர்.

நாளை (அக்டோபர் 6) சிம்பிளி செளத் என்கிற ஓடிடி தளத்தில் வர்மா படம் வெளியாகிறது.

எனினும் இந்தப் படத்தை இந்தியாவில் உள்ள ரசிகர்களால் பார்க்க முடியாதாம்.

இந்தியாவுக்கு வெளியே உள்ளவர்களால் மட்டுமே பார்க்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bala’s Varma to be released on an OTT platform

கவர்மெண்ட் பஸுக்கே டேக்ஸ் போட்ட டோல்கேட்.; பயணிகள் பணம் கட்டினர்.; இது வேற லெவல் கொள்ளையா இருக்கே!?

கவர்மெண்ட் பஸுக்கே டேக்ஸ் போட்ட டோல்கேட்.; பயணிகள் பணம் கட்டினர்.; இது வேற லெவல் கொள்ளையா இருக்கே!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN bus in toll gateசென்னை டூ திருச்சி செல்லும் விழுப்புரம் கோட்டம் அரசு பேருந்து செங்கல்பட்டு வழியாக சென்றது.

அப்போது செங்கல்பட்டு டோல்கேட்டை கடந்த போது வரி கேட்டுள்ளனர் சுங்கச்சாவடி ஊழியர்கள்.

அரசு பேருந்து ஓட்டுநர் & நடத்துனர் “இது அரசு பேருந்து இதற்கு சுங்கவரி வசூலிக்க தேவையில்லை” என கூறியுள்ளனர்.

ஆனால் சுங்கவரி கட்டாமல் செல்லக்கூடாது என சுங்கச்சாவடி ஊழியர்கள் பேருந்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனால் பிரச்னை பெரிதாக பயணிகள் அவதியுற்றனர்.

இதனால் வேறு வழியில்லாமல் பயணிகள் ஒன்றிணைந்து ஆளுக்கு 10 ரூபாய் கொடுத்து 150 ரூபாய் சேகரித்து சுங்கவரி கட்டியுள்ளனர்.

இதன் பிறகே பேருந்து புறப்பட்டு சென்றதாம்.

அரசு பேருந்திற்கு சுங்கவரி வசூலித்தவர்கள் மீது போக்குவரத்துறை & அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Toll gate officials asked for toll fees to the govt bus in chengalpattu

விஜய்சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் வெட்டி படுகொலை.; மன்ற நிர்வாகி வெறிச்செயல்

விஜய்சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் வெட்டி படுகொலை.; மன்ற நிர்வாகி வெறிச்செயல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi fan club head murderபுதுச்சேரி அடுத்த ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த நபர் மணிகண்டன்.

32 வயதான இவர் நடிகர் விஜய்சேதுபதி ரசிகர் மன்ற தலைவராக இருந்து வருகிறார்.

சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் சென்ற போது 4 பேர் கும்பல் வழி மறித்து ஆயுதங்களால் மணிகண்டனை வெட்டி விட்டு தப்பியோடி உள்ளது.

அதன்பின்னர் போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே மணிகண்டன் இறந்து போனார்.

இது குறித்து அவரது மனைவி விஜயகுமாரி, உருளையன்பேட்டை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ரசிகர் மன்றம் தொடர்பாக மணிகண்டனுக்கும், மன்ற நிர்வாகியான ஆட்டுபட்டி பகுதியை சேர்ந்த ராஜசேகருக்கு முன் விரோதம் இருந்து வந்துள்ளதாம்.

எனவே ராஜசேகர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மணிகண்டனை வெட்டி கொலை செய்துள்ளனர்.

இதையனையடுத்து ராஜசேகர் & தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Vijay Sethupathi fan club head murdered near Pondicherry

More Articles
Follows