சூர்யாவுடன் மோதுவாரா அல்லது தனித்து வருவாரா ‘போகன்’.?

சூர்யாவுடன் மோதுவாரா அல்லது தனித்து வருவாரா ‘போகன்’.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bogan movie stillsஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘போகன்’.

‘ரோமியோ ஜூலியட்’ இயக்குநர் லட்சுமண் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இமான் இசையமைக்க, பிரபுதேவா இப்படத்தை தயாரித்துள்ளார்.

இதில் விக்ரம் என்ற கேரக்டரில் ஜெயம் ரவியும், விக்ரமாதித்யன் என்ற கேரக்டரில் அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர்.

‘தனி ஒருவன்’ படத்தை போன்று இப்படம் இவர்களின் கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இப்படத்தை டிசம்பரில் திரைக்கு கொண்டு வரவிருக்கிறார்கள்.

டிசம்பர் 16ஆம் தேதி சூர்யாவின் எஸ் 3 படம் ரிலீஸ் ஆகிறது.

அதே தேதியில் போகன் வருவாரா? அல்லது தனித்து வருவாரா? என்பதை இன்னும் சில நாட்களில் தெரிந்து கொள்வோம்.

தனது ரசிகரான ரஜினியை சந்திக்க விரும்பும் பி.வி. சிந்து

தனது ரசிகரான ரஜினியை சந்திக்க விரும்பும் பி.வி. சிந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth and PV Sindhuரியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்றார் இந்தியாவைச் சேர்ந்த பி.வி.சிந்து.

இவருக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த், தான் உங்களின் மிகப்பெரிய ரசிகன் ஆகிவிட்டேன் என தெரிவித்திருந்தார்.

ரஜினியின் பாராட்டில் உருகிப்போன சிந்து, தன்னுடைய சமீபத்திய பேட்டியில் ரஜினிகாந்தை நேரில் சந்திக்க ஆசைப்படுகிறேன்.

அவரை சந்திக்கும் நாளுக்காக காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனுடன் இணையும் பாசமான அண்ணன் நடிகர்

சிவகார்த்திகேயனுடன் இணையும் பாசமான அண்ணன் நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan photosடிவியில் பிரபலமான சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வந்தது வென்றது எல்லாம் நாம் அறிந்ததே.

இவரைப் போலவே நிறைய டிவி நடிகர்களும் சினிமாவுக்கு வந்துக் கொண்டே இருக்கின்றனர்.

அதில் முக்கியமானவர் நடிகர் ரோபா சங்கர்.

இவர் சிவகார்த்திகேயனை பாசமுடன் தம்பி என்றே அழைப்பார்.

டிவி நிகழ்ச்சிகளில் இவர்கள் இணைந்து வந்தாலே களை கட்டும்.

இந்நிலையில் தற்போது முதன்முறையாக இருவரும் இணைந்து நடிக்கவிருக்கிறார்களாம்.

மோகன் ராஜா இயக்கவுள்ள படத்தில்தான் இவர்களின் சினிமா கூட்டணி இணைகிறது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா, சினேகா, ஃபஹத் பாசில், சதீஷ், பிரகாஷ்ராஜ், ஆர்ஜே பாலாஜி ஆகியோரும் நடிக்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்-அட்லி படத்தின் நாயகி, இசையமைப்பாளர் இவர்களா..?

விஜய்-அட்லி படத்தின் நாயகி, இசையமைப்பாளர் இவர்களா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and atleeபரதன் இயக்கும் பைரவா படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக வந்த செய்திகளை பார்த்தோம்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது.

இந்நிலையில் இதில் நாயகியாக காஜல் அகர்வால் நடிப்பார் என்றும், இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

இது உறுதியானால் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத்தெரிகிறது.

விஜய்யின் உதயா, அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களுக்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

நேற்று ‘உச்சத்துல சிவா’… இன்று ‘பணம் காய்க்கும் மரம்’

நேற்று ‘உச்சத்துல சிவா’… இன்று ‘பணம் காய்க்கும் மரம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Panam Kaaikkum Maram movie 1st look releasedகரண் நடித்த உச்சத்துல சிவா என்ற படம் அண்மையில் வெளியானது.

இப்படத்தை ஜேப்பி என்பவர் இயக்கியிருந்தார்.

தற்போது இவர் தனது அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார்.

இப்படத்திற்கு பணம் காய்க்கும் மரம் என பெயரிட்டுள்ளனர்.

இப்படத்திற்கும் அவரது முந்தைய பட ஒளிப்பதிவாளர் ஹார்முக் ஒளிப்பதிவு செய்கிறார்.

தங்கவேலு, ஆனந்த் லிங்ககுமார் இசையமைக்கின்றனர்.

ராமலிங்கம் மற்றும் ராதா ஜெயபிரகாஷ் இணைந்து தயாரிக்கின்றனர்.

காமெடியான விளையாட்டுதான் இப்படத்தின் கதை என தெரிவித்துள்ளனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

ஷார்ட் & ஸ்வீட்…. ஹாலிவுட்டில் விருது பெற்ற பூஜா தேவாரியா

ஷார்ட் & ஸ்வீட்…. ஹாலிவுட்டில் விருது பெற்ற பூஜா தேவாரியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pooja Devariyaசெல்வராகவனின் ‘மயக்கம் என்ன’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நாடக கலைஞரான பூஜா தேவாரியா.

அதன்பின்னர் இறைவி, ‘குற்றமே தண்டனை’ மற்றும் ‘ஆண்டவன் கட்டளை’ படங்களில் நடித்து தன் அழகான முத்திரையை பதித்து வருகிறார்.

பாபி சிம்ஹாவுடன் நடித்துள்ள ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படம் இவரது நடிப்பில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸில் பிரபலமான ஹாலிவுட் நாடக விழாவான ‘ஷார்ட் & ஸ்வீட் நாடக விழாவில்’ ‘வளர்ந்து வரும் கலைஞர்’ என்கிற விருதை பெற்றிருக்கிறார்.

இவருடன் மதிவாணன் ராஜேந்திரனும் இந்த விருதை பெற்றிருக்கிறார்.

‘ஸ்ட்ரே பேக்டரி’ என்னும் நிறுவனத்தின் சார்பில் இந்த இருவர் மட்டும் தான் இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மை நேம் ஸ் சினிமா’ மற்றும் ‘வா வன் கோ’ ஆகிய இரண்டு நாடகங்களை இந்த விழாவில் பூஜா தேவாரியாவும், மதிவாணன் ராஜேந்திரனும் அரங்கேற்றி இருக்கின்றனர் .

மேலும் சிட்னி மற்றும் ஆக்லேண்ட் நகரங்களில் அரகேற்றப்பட்ட ‘மை நேம் ஸ் சினிமா’ நாடகத்திற்காக, சிறந்த நடிகை மற்றும் சிறந்த இயக்குனருக்கான விருதுகளை இவர்கள் இருவரும் பெற்றுள்ளனர்.

More Articles
Follows