சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த ‘அவதார்’ தொழில்நுட்ப கலைஞர்கள்

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த ‘அவதார்’ தொழில்நுட்ப கலைஞர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான அவதார் 2 பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ‘அவதார்’ படத்தில் பணிபுரிந்த சில டெக்னீஷியன்கள் இணைந்துள்ளனர் என்ற தகவல் கசிந்துள்ளது.

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ஏலியன் படமான ‘அயலான்’ படத்தின் 1000க்கும் மேற்பட்ட சிஜி காட்சிகள் படமாக்கப்பட்டதால் கடந்த பல மாதங்களாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சிக்கலான தொழில்நுட்ப வேலைகளை உள்ளடக்கிய சில காட்சிகளுக்காக, அவதாரில் பணியாற்றிய தொழில்நுட்ப வல்லுநர்களை பணியமர்த்தியுள்ளது.

‘சூர்யா 42’ பற்றிய ரெட் ஹாட் அப்டேட்ஸ் இதோ !

‘சூர்யா 42’ பற்றிய ரெட் ஹாட் அப்டேட்ஸ் இதோ !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல ஸ்டண்ட் நடன இயக்குனரான சுப்ரீம் சுந்தர் ‘சூர்யா 42’ படக்குழுவில் சமீபத்தில் இணைந்துள்ளார்.

யதார்த்தமான சண்டைக்காட்சிகளுக்கு பெயர் பெற்ற மாஸ்டர் ‘ஐயப்பனும் கோஷியும்’ படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்.

‘சூர்யா 42’ படத்தில் ஏற்கனவே பல நட்சத்திரங்கள் இருக்கும் நிலையில், கராத்தே கார்த்தி தான் லேட்டஸ்ட்டாக வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் ‘பிகில்’ படத்தில் முதன்முதலில் கவனிக்கப்பட்ட இவர், நெல்சன் இயக்கிய ‘டாக்டர்’ படத்தில் வில்லன் வேடத்தில் நகைச்சுவையான பாத்திரத்தில் நடித்தார்.

குறும்பட போட்டியில் பரிசு வென்ற ‘கோடீஸ்வரன்’.; சிஷ்யன் ஆதேஷ் பாலாவுக்கு பரிசளித்த குரு பாக்யராஜ்

குறும்பட போட்டியில் பரிசு வென்ற ‘கோடீஸ்வரன்’.; சிஷ்யன் ஆதேஷ் பாலாவுக்கு பரிசளித்த குரு பாக்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஆதேஷ் பாலா.

இவர் 1980களில் பிரபலமான நடிகர் சிவராமனின் மகன் ஆவார்.

‘ஒரு கதையின் கதை’ மூலம் பாக்யராஜ் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் இவர்.

சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 1’ படத்திலும் நடித்திருந்தார்.

மேலும் ரஜினியுடன் பேட்ட, சூர்யாவுடன் ஆறு, விக்ரமுடன் சாமி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் பல குறும்படங்களை இயக்கியும் நடித்தும் இருக்கிறார் ஆதேஷ் பாலா.

இந்த நிலையில் STAR AWARDS என்ற குழு நடத்திய விழாவில் சிறந்த குறும்படத்திற்கான போட்டியில் இரண்டாம் பரிசை தட்டிச் சென்று இருக்கிறார் ஆதேஷ் பாலா.

இந்த விருதுடன் இவருக்கு 25 ஆயிரம் ரொக்க பணமும் கிடைத்துள்ளது.

250 படங்கள் கலந்துக் கொண்ட குறும்பட விழாவில் இவர் இயக்கி தயாரித்து நடித்த ‘கோடீஸ்வரன்’ என்ற குறும்படம்
2வது பரிசை பெற்றுள்ளது.

இயக்குநர் கே பாக்யராஜ் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.

இது குறித்து ஆதேஷ் பாலா நம்மிடம் பேசுகையில்…

“என்னை அறிமுகப்படுத்திய என் ஆசான் பாக்யராஜ் அவர்களால் நான் விருது பெற்று இருப்பது பெரும் பாக்கியம்.

மேலும் என் தந்தையை அவர் நினைவு வைத்து “உன் அப்பா பெயரை காப்பாற்றி விட்டாய்..” எனக் கூறிய போது எனக்கு மெய் சிலிர்த்தது.

‘கோடீஸ்வரன்’ என்ற குறும்படம் ஒரு விவசாயியை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. விவசாயிகள் படும் வேதனையும் தத்துரூபமாக நடித்து இருந்தேன். பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த குறும்படம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு கிடைக்கும் என நம்புகிறேன்’ என தெரிவித்தார் ஆதேஷ் பாலா.

படையப்பா பாணியில் போயஸ் கார்டனில் ரஜினி பக்தர் ரஞ்சித்.; உதவ காத்திருக்கிறோம் என லதா உறுதி

படையப்பா பாணியில் போயஸ் கார்டனில் ரஜினி பக்தர் ரஞ்சித்.; உதவ காத்திருக்கிறோம் என லதா உறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பூளவாடி கிராமத்தை சேர்ந்த (களிமண்) மண்பாண்ட தொழில் செய்து வருபவர் ரஞ்சித்.

இவரை ரஜினி ரஞ்சித் என்று சொன்னால்தான் அந்த பகுதி மக்களுக்கே இவரை தெரிகிறது.

இவர் தீவிர ரஜினி ரசிகர் என்பதால் தன் பெயரை ரஜினி ரஞ்சித் என வைத்துக் கொண்டார். இவரை பார்த்தாலே இவர் ரஜினி ரசிகர்தான் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.

நெற்றியில் விபூதி பட்டை… கழுத்தில் ருத்திராட்ச மாலை, ரஜினி ஸ்டைலில் உடைகள், தலைவரின் 90s சிகை அலங்காரம் என அச்சு அசலாக ரஜினியாகவே வலம் வருகிறார்.

பத்தாம் வகுப்பு வரை படித்த ரஜினி ரஞ்சித் சிறுவயதிலிருந்தே ரஜினியின் படங்களை வரைவது வழக்கமாக கொண்டவர்.

தற்போது கடந்த 10 ஆண்டுகளாக மண்பாண்ட தொழில் செய்து வருகிறார்.

அந்த மண்பாண்டத் தொழிலில் ரஜினியின் உருவ சிலையை வடிவமைத்து ரஜினி அவர்களுக்கு அனுப்பி அவரிடம் இருந்து வாழ்த்து பெற்றுள்ளார்.

சில வருடங்களுக்கு முன் ரஜினியின் படையப்பா சிலையை வடிவமைத்து அதை ரஜினியிடமே நேரில் கொடுத்துள்ளார்.

ரஜினியை சந்தித்து அவரின் மற்றொரு சிலையை பரிசளிக்க ரஜினியின் நேரம் கேட்டு காத்திருக்கிறார்.

இதனையறிந்த ரஜினி.. “சீக்கிரமே உன்னை சந்திக்கிறேன் கண்ணா நீ மிகப் பெரிய திறமைசாலி. நீ நல்லா இருக்கணும் ஆண்டவனை வேண்டுகிறேன்” என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று டிசம்பர் 18ஆம் தேதி ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் அவரது மனைவி லதாவை சந்தித்துள்ளார்.

படையப்பா படத்தில் ரஜினி அணிந்திருந்த உடை போலவே உடையணிந்து தனது நண்பருடன் சென்று சந்தித்துள்ளார் ரஞ்சித்.

அப்போது ரஜினியின் பெற்றோர் உருவ சிலையை (தானே வடிவமைத்த) பரிசாக கொடுத்துள்ளார். மேலும் ரஞ்சித் வடிவமைத்த ஜெயிலர் பட ரஜினி சிலையையும் கொடுத்துள்ளார்.

இதனை பெற்றுக் கொண்ட லதா ரஜினிகாந்த்.. “விரைவில் தலைவர் ரஜினி உங்களை சந்திப்பார். அதற்கான ஏற்பாடுகளை செய்கிறேன் என்றும் உங்கள் தொழிலுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள். நாங்கள் செய்து தருகிறோம்” என்று உறுதி அளித்துள்ளார் லதா.

——-

தலைவர் புரிஞ்சிக்கவே மாட்டாரா.? கலங்கிய ரசிகரால் அதிர்ந்த ரஜினி. l Fan request to Thalaivar Rajini

‘துணிவு’ படத்தின் சமீபத்திய சர்ச்சை குறித்து மஞ்சு வாரியர் விளக்கம்

‘துணிவு’ படத்தின் சமீபத்திய சர்ச்சை குறித்து மஞ்சு வாரியர் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மஞ்சு வாரியரும் வைஷாக் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான் உடன் இணைந்து “காசேதான் கடவுளா” பாடலை பாடியுள்ளார்.

அவரது குரலைக் கேட்க ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பாடல் முழுவதும் வைஷாகின் குரல் மட்டுமே கேட்கப்படுவதால் அவரது குரல் கேட்கவில்லை.

மஞ்சுவின் குரல் காணாமல் போனதால் நெட்டிசன்கள் ட்ரோல் செய்யத் தொடங்கினர்.

காசேதான் கடவுளின் பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் எனது குரல் கேட்கவில்லை என்று கவலைப்பட வேண்டாம், இது வீடியோ பதிப்பிற்காக பதிவு செய்யப்பட்டது.

வேடிக்கையான ட்ரோல்களை ரசித்தேன் என பதிவிட்டுள்ளார்.

விஜய்யின் ‘வாரிசு’ படத்துக்காக களம் இறங்கிய ‘பிக் பாஸ்’ டைட்டில் வின்னர்

விஜய்யின் ‘வாரிசு’ படத்துக்காக களம் இறங்கிய ‘பிக் பாஸ்’ டைட்டில் வின்னர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தளபதி விஜய்யின் ‘வாரிசு’ 2023 பொங்கல் அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜனவரி 12 ஆம் தேதி வெளியிட தயாராக உள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் டிசம்பர் 24ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

தற்போது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் ராஜு ஜெயமோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

பிக் பாஸ் தமிழ் 5 இன் டைட்டில் வின்னர் ராஜுவும் இதையே தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

More Articles
Follows