அதர்வா & அனுபமா இணைந்த படம் இனியும் தள்ளிப் போகாமல் விரைவில் திரையில்.!

அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் கண்ணன் இயக்கத்தில் உலுவாகியுள்ள காதல் திரைப்படம் “தள்ளிப் போகாதே”.

இப்போது அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு திரைக்கு தயாராகியுள்ளது.

சமீபத்தில் கண்ணன் இயக்கிய ‘இவன் தந்திரன்’ எனும் ஆக்சன் கமர்ஷியல் படம் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல், விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களை குவித்தது.

இதனை தொடந்து அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு, தற்போது தனது தனித்தன்மை மிகுந்த ரொமான்ஸ் வகை படத்திற்கு திரும்பியுள்ளார்.

முழுக்க முழுக்க காதல், நகைசைவை, உணர்வுகள் நிரம்பிய அழகான குடும்ப படத்தினை இயக்கியுள்ளார். அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, அமிதாஷ் ஆடுகளம் நரேன், வித்யூலேகா ராமன், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இப்படத்தின் டப்பிங் பணிகள் முதல், அனைத்து கட்ட பணிகளும் முடிக்கப்பட்டு தற்போது படத்தின் விளம்பர முன்னோட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளன. படத்தின் திரை வெளியீடு குறித்த அறிவிப்பு மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்க, சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கபிலன் வைரமுத்து பாடல்கள் மற்றும் வசனத்தை எழுதியுள்ளார்.

இயக்குநர் R.கண்ணன் இப்படத்தினை இயக்குவதுடன் Masala Pix நிறுவனத்தின் சார்பில் M.K.R.P நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

Atharvaa’s Thalli Pogathey is ready for release

Overall Rating : Not available

Related News

அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் மற்றும்…
...Read More

Latest Post