பெரிய படமா இருந்தாலும் ஒரே மாசம்தான் சூட்டிங்…; டைரக்டர் கண்ணன் போடும் கண்டிசன்

பெரிய படமா இருந்தாலும் ஒரே மாசம்தான் சூட்டிங்…; டைரக்டர் கண்ணன் போடும் கண்டிசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2008 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயம் கொண்டான்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆர்.கண்ணன், அப்படத்தை தொடர்ந்து ‘கண்டேன் காதலை’, ‘வந்தான் வென்றான்’, ‘சேட்டை’ உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியதோடு, தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

மசாலா பிக்ஸ் என்ற தனது நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து இயக்கி வரும் ஆர்.கண்ணன், இயக்கத்தில் ‘காசேதான் கடவுளடா’ மற்றும் தள்ளிப் போகாதே’ ஆகிய இரண்டு படங்களில் உருவாகி வருகின்றன.

அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தள்ளிப் போகாதே’ படத்தில் அமிதாஷ், ஜெகன் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் காளி வெங்கட், ஆடுகளம் நரேன், வித்யுலேகா ராமன், ஆர்.எஸ்.சிவாஜி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இளமை துள்ளும் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற படத்தின் ரீமேக் என்பதால், தமிழிலும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ‘தள்ளிப் போகாதே’ படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் படம் குறித்து பேசிய இயக்குநர் ஆர்.கண்ணன்,…

“நான் இந்த மேடையில் நிற்பதற்கு தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் சார் தான் காரணம். இன்று இயக்குநராக பத்துக்கு மேற்பட்ட படங்கள் இயக்கியிருப்பதோடு, படம் தயாரிப்பிலும் ஈடுபட்டு வெற்றிகரமாக பயணிப்பதற்கு அவர் தான் காரணம். அவருடைய சரியான திட்டமிடலை பின்பற்றி தான், நான் இயக்கி தயாரிக்கும் படங்களின் பணிகளை மேற்கொண்டு வருகிறேன்

ஒரு படத்தை தொடங்கும் சரியான திட்டமிடலோடு தொடங்கினால், படப்பிடிப்பை குறுகிய நாட்களில் முடித்துவிடலாம். எப்படிப்பட்ட பெரிய படமாக இருந்தாலும் நான் 30 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிடுவேன். அதற்கு காரணம் சரியான திட்டமிடல் தான். இந்த திட்டமிடலை எனக்கு கற்றுக்கொடுத்த டி.ஜி.தியாகராஜன் சார், மணிரத்னம் சார் ஆகியோருக்கு நன்றி.

நான் டி.ஜி.தியாகராஜன் சாரிடம் படம் பண்ண கதை சொல்லிவிட்டு இரண்டு வருடங்கள் காத்திருந்தேன். 250 முறை கதை சொல்லியிருப்பேன். அப்படிப்பட்ட ஒரு முறையில் இயக்குநரானதால் தான் என்னால் இத்தனை படங்களை இயக்க முடிகிறது.

ஆனால், இப்போது வருபவர்கள் ஒன்று இரண்டு படங்களில் பணியாற்றி விட்டு இயக்குநராகி விடுகிறார்கள். என்னிடம் பணியாற்றிய ஒருவர் வெறும் பத்து நாட்கள் பணியாற்றிவிட்டு படம் இயக்க சென்றுவிட்டார். அப்படி ஒரு அனுபவத்தை வைத்துக்கொண்டு அவர் எந்த மாதிரியான படம் எடுப்பாரோ, என்று தெரியவில்லை.

‘தள்ளிப் போகாதே’ அனைவருக்கும் பிடித்தமான ஒரு படமாக இருக்கும். அதர்வா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோரது கெமிஸ்ட்ரி மற்றும் வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் அமிதாஷ் கதாப்பாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவரும்.” என்றார்.

நடிகர் அதர்வா பேசுகையில்…

“தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தை தமிழில் பண்ண வேண்டும், என்று நான் விரும்பியதும் கண்ணன் சார் தான் என் நினைவுக்கு வந்தார். அவர் படத்தை வேகமாக எடுத்தாலும், மிக் அழகாக எடுக்க கூடியவர்.

இந்த படத்திற்காக நான் தாடி வளர்க்க வேண்டி இருந்தது. அதனால், ஒரு 20 நாட்கள் பிரேக் எடுத்துக்கொண்டேன். அப்போது தாடி வளர்ந்தது போதுமா? என்று கேட்பதற்காக கண்ணன் சாருக்கு போன் பண்ணேன், அங்கே சார்ட் கட் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அவரிடம் அது குறித்து கேட்ட போது, ஒரு படம் இயக்கிக் கொண்டிருக்கிறேன், என்றார். ஆச்சரியமாக இருந்தது. அவர் அப்படி தான் எப்போதும் வேகமாக இருப்பார். ஆனால், காட்சிகளை தரமாக எடுப்பார். இந்த படத்திற்கு கபிலன் சார் பாடல்களையும், வசனமும் எழுத ஒப்பந்தமானவுடன் படம் மிகப்பெரிய படமாக மாறிவிட்டது.

அதேபோல், ஹீரோவுக்கு நிகராக வில்லன் வேடம் இருக்கும். அதற்கு சரியான நடிகரை நடிக்க வைக்க வேண்டும், என்று நினைத்தோம். எங்களின் எதிர்ப்பார்ப்பை அமிதாஷ் மிக சரியாக பூர்த்தி செய்திருக்கிறார். படம் நிச்சயம் ரசிகர்களை கவரும்.” என்றார்.

கோபி சுந்தர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு என்.சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா ஆர்.கே படத்தொகுப்பு செய்ய, கபிலன் வைரமுத்து பாடல்கள் மற்றும் வசனம் எழுதியுள்ளார். ஸ்டண்ட் சில்வா ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க, சதீஷ் கிருஷ்ணன் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

Director Kannan talks about his upcoming film Thalli Pogathey

இனி அவர் விஷயத்தில் நானும் என் விஷயத்தில் அவரும் தலையிட மாட்டோம்.. – விமல்

இனி அவர் விஷயத்தில் நானும் என் விஷயத்தில் அவரும் தலையிட மாட்டோம்.. – விமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான பசங்க படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி களவாணி படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விமல்.

மினிமம் கியாரண்டி ஹீரோ என்கிற பெருமையைப் பெற்ற இவர் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வந்தார்.

கடந்த சில வருடங்களில் அவரது படத்தை தயாரித்த வகையிலும் அவரது சில படங்களை வினியோகம் செய்த வகையிலும் தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கும் விமலுக்கும் சில பிரச்சனைகள் இருந்து வந்தன.

இந்த நிலையில் அவற்றை சுமுகமாக முடிவுக்கு கொண்டு வரும் விதமாக நடிகர் விமல் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.

இதுபற்றி நடிகர் விமல் கூறும்போது…

“சிங்காரவேலனுக்கும் எனக்கும் எனது படங்கள் தொடர்பாக ஏற்பட்ட சில பிரச்சனைகள் இருந்தன. அவை எனது அடுத்தடுத்த படங்கள் சரியான சமயத்தில் வெளியாவதற்கு தடைக்கற்களாக இருந்தன.

தற்போது அவற்றை சட்டரீதியாகவும் பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாகவும் முடிவுக்குக் கொண்டு வந்து விட்டோம். இனி அவர் விஷயத்தில் நானும் என் விஷயத்தில் அவரும் எந்த தலையீடும் செய்வதில்லை என முடிவு செய்து உள்ளோம்.

மேலும் தொடர்ந்து நல்ல கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து ரசிகர்களை மகிழ்விக்கும் முயற்சி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு படங்களில் நடிப்பேன்.

அதுமட்டுமல்ல, தயாரிப்பாளர்களுக்கு எந்தவித சங்கடங்களையும் தராத, தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் விரும்பும் ஹீரோவாக இனி என்னுடைய திரைப் பயணம் தொடரும்” என்று கூறியுள்ளார் நடிகர் விமல்.

Fight between Actor Vimal and Producer Singara Velan

விவேக் & யோகி பாபு சீன்ஸ் பட்டைய கிளப்புது.; படம் பார்த்த விஐபிக்களை வியப்பில் ஆழ்த்திய ‘அரண்மனை 3’

விவேக் & யோகி பாபு சீன்ஸ் பட்டைய கிளப்புது.; படம் பார்த்த விஐபிக்களை வியப்பில் ஆழ்த்திய ‘அரண்மனை 3’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘அரண்மனை’ மற்றும் ‘அரண்மனை 2’ மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், ‘அரண்மனை 3’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ‘அரண்மனை 3’ படத்தை ரிலீஸுக்கு முன்பாக வாய்ப்பு கிடைத்தவர்கள், படம் குறித்து வெகுவாக பாராட்டியிருப்பதோடு, படத்திற்கு தாய்மார்களின் ஆதரவு மிகப்பெரிய அளவில் கிடைக்கும், என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, படத்தின் கிளைமாக்ஸ் இதுவரை எந்த ஒரு தமிழ்த் திரைப்படத்திலும் இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளதாகவும், VFX, CG காட்சிகள் மிக தத்ரூபமாக அமைந்துள்ளதாகவும் பாராட்டியுள்ளனர்.

அரண்மனை சீரீஸ் படங்களில் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் மனதை உருக்கும் வகையில் இடம்பெற்றிருக்கும்.

அரண்மனை 3 படத்தில் இடம்பெற்றிருக்கும் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் முந்தைய இரண்டு படங்களை விட மிகவும் உருக்கமாகவும் தாய்மார்கள் கண்ணீர் சிந்துவது போலவும் அமைந்துள்ளதாம்.

பொதுவாகவே அரண்மனை படங்களுக்கு தாய்மார்கள் ஆதரவு அதிகம். ஆனால், ’அரண்மனை 3’ திரைப்படத்திற்கு தாய்மார்களின் அதீத ஆதரவு கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள்.

’அரண்மனை’ மற்றும் ’அரண்மனை 2’ படங்களில் வரும் கதாநாயகர்கள் கதாப்பாத்திரத்தை விட ’அரண்மனை 3’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ஆர்யாவின் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

ஆர்யாவின் சினிமா கேரியரில் ’அரண்மனை 3’ ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், யோகி பாபு மற்றும் விவேக் காம்பினேஷனில் நகைச்சுவை காட்சிகள் பட்டையை கிளப்பியிருப்பதாகவும், தியேட்டரில் ரசிகர்கல் வயிறு குலுங்க சிரித்து திரையரங்கையே அதிர வைக்கப்போவது உறுதி, என்றும் கூறுகிறார்கள்.

அரண்மனை சீரிஸ் படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் இயக்குநர் சுந்தர்.சி, ‘அரண்மனை 3’ படத்தில் பல முக்கியமான மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். அதேபோல், தனது படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் இயக்குநர் சுந்தர்.சி, இந்த படத்தில் அதை கூடுதலாக செய்திருக்கிறாராம்.

மொத்தத்தில், ‘அரண்மனை 3’ திரையரங்கில் பார்க்கும் படமாகவும், அனைத்து தரப்பினரும் பார்த்து மகிழும் படமாகவும் நிச்சயம் இருக்கும், என்று படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Movie critics praises Sundar C’s Aranmanai 3

ஆதிக் என்னென்ன நினைச்சாரோ என்னை வைச்சு செஞ்சுட்டார்..; ‘பஹீரா’ பற்றி பிரபுதேவா பகீர் வாக்குமூலம்

ஆதிக் என்னென்ன நினைச்சாரோ என்னை வைச்சு செஞ்சுட்டார்..; ‘பஹீரா’ பற்றி பிரபுதேவா பகீர் வாக்குமூலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், பிரபுதேவா பல மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் படம் ‘பகிரா’.

சைக்கோ கில்லர் வகை பாணியிலான வித்தியாசமான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அமீரா தஸ்தூர் நாயகியாக நடித்திருக்கிறார்.

மேலும், ரம்யா நம்பீசன், யாஷிகா ஆனந்த், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, சாக்‌ஷி அகர்வால், காயத்திரி ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

அபிநந்தன் ராமனுஜம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்ய, கணேசன் சேகர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இதில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் தேனாண்டாள் முரளி, தயாரிப்பாளர் தாணு, திருப்பூர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசுகையில்,…

“கொரோனாவால் இரண்டு வருடம் யாரையும் சந்திக்கவில்லை. நாம் திரும்பி வரும்போது ஒரு வித்தியாசமான படைப்புடன் வரவேண்டும் என நினைத்தேன். இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் இவ்வளவு பிரமாண்டமாக இருக்க பரதன் பிலிம்ஸ் தான் காரணம். அவர்களுக்கு நன்றி.

நான் உதவி இயக்குநராக இருக்கும் போது, சத்யம் தியேட்டரில் ஒரு ஆடியோ வெளியீட்டுக்கு வந்தேன், கூட்டத்தால் உள்ளே விடவில்லை, அப்போது என் படத்தின் அனைத்து விழாக்களும் இங்கு நடக்க வேண்டும் என முடிவு செய்தேன். இப்போது நடப்பது மகிழ்ச்சி. என் முதல் படத்தில் வேலை செய்த போதே, கணேசன் சேகரிடம் நான் பெரிய இயக்குநர் ஆனவுடன் உன்னை இசையமைப்பாளராக ஆக்குவேன் என்றேன்.

அது இப்படத்தில் நடந்துள்ளது. இப்படத்தில் யாருமே நாயகிகள் இல்லை எல்லாருக்கும் முக்கியமான பாத்திரம் இருக்கிறது. நாயகி அமீரா தஸ்தூர் தமிழ் தெரியாவிட்டாலும் அருமையாக நடித்துள்ளார். என் வாழ்வின் வெற்றிக்கு காரணம் என் தந்தைதான். இந்தப்படம் உருவாக முழுக்காரணம் பிரபுதேவா மாஸ்டர் தான். இந்தப்படத்தின் ஆத்மா அவர் தான்.

நான் என்ன சொன்னாலும் யோசிக்காமல் ஒப்புக்கொண்டு செய்தார். என் மீது நம்பிக்கை வைத்த மாஸ்டருக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி. இப்படம் என்ன ஜானர் என்று எனக்கும் தெரியாது நீங்கள் பார்த்து விட்டு சொல்லுங்கள். எனக்கு முதன் முதலில் வாய்ப்பு தந்த ஜீவிக்கு நன்றி.” என்றார்.

நடிகர் பிரபுதேவா பேசுகையில்,….

“என் மீது அன்பைத்தரும் தரும், எல்லாருக்கும் என் அன்பு. பரதன் பிலிம்ஸ் பற்றி சொல்ல வேண்டும், மேன்மக்கள் மேன்மக்களே என்பது போல் அவர்கள் க்ரேட். ஒரு ஹெலிகாப்டர் கேட்டால் கூட முருகன் ஓகே சொல்லிவிடுவார், அப்படியான ஒருவர்.

சினிமாவுக்கு தேவையானவர். ஆதிக் என்னென்ன நினைத்தாரோ அதையெல்லாம் என்னை வைத்து பண்ணிவிட்டார். ஆதிக் ஒரு சிறந்த நடிகர். அவர் நடித்து காட்டுவது அட்டகாசமாக இருக்கும். இது என்ன ஜானர் என்று தெரியவில்லை என்றார்கள். இது ஆதிக் ஜானர் அவ்வளவு தான். இசை அற்புதமாக இருந்தது. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். சாய்குமார் 1000 படம் செய்துள்ளார் கிரேட்.

ஜனனி நடிப்பதை பார்த்து பிரமிப்பாக இருந்தது. அடுத்து காயத்திரி பார்த்தாலும் அட்டகாசமாக நடித்தார். எல்லோருமே நன்றாக நடித்தார்கள். சோனியா அகர்வால் எனக்கு முன்பே தெரியும் அவருடன் லேடி கெட்டப்பில் நடித்துள்ளேன்.

அம்ரிதா தஸ்தூர் தமிழே தெரியாமல் மிரட்டலான நடிப்பை தந்துள்ளார். உங்கள் அனைவர் ஆசிர்வாதமும் எங்களுக்கு தேவை நன்றி.” என்றார்.

தயாரிப்பாளர் ஆர்.வி.பரதன் பேசுகையில், ..

“இங்கு வந்து எங்களை வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி. இப்படத்திற்காக கடுமையாக உழைத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் நன்றி. இந்தப்படத்தில் நேம் கார்டில் மட்டும் தான் என் பெயர் இருக்கிறது. ஆனால் அனைத்து வேலைகளையும் பார்த்தது என் அப்பா தான்.

தொடர்ந்து தமிழ் தயாரிப்பாளர்களுக்கு உதவி புரிந்து வரும் என் தந்தை RV அய்யாவுக்கு நன்றி. இந்தப்டம் கண்டிப்பாக நன்றாக வரும் எனும் நம்பிக்கை உள்ளது. அனைவருக்கும் நன்றி.” என்றார்.

இசையமைப்பாளர் கணேசன் சேகர் பேசுகையில்,

“முதல் முறையாக இன்று விழா மேடை ஏறியுள்ளேன். இப்படத்தில் தயாரிப்பு தரப்பிலிருந்து முழு சுதந்திரம் கிடைத்தது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் இசையமைக்க முடிந்தது.

ஆதிக் உடன் இணைந்து பணியாற்றியது மிக நல்ல அனுபவமாக, மகிழ்ச்சியாக இருந்தது. ஜி.வி.பிரகாஷிடம் தான் நான் வேலை பார்த்தேன். அவர் தான் ஆதிக் என்னை இசையமைப்பாளர் ஆக்குவார் என்றார்.

இப்போது அது உண்மையாகிவிட்டது. அவருக்கு நன்றிகள். எனது இசைக்குழுவினருக்கு நன்றிகள்.” என்றார்.

Prabhu Deva speech at Bagheera trailer launch event

புளூ சட்டையை போட்டுட்டு வந்து உன் படத்தை என்ன பண்றேன் பார் ; மாறனை எச்சரித்த பாரதிராஜா

புளூ சட்டையை போட்டுட்டு வந்து உன் படத்தை என்ன பண்றேன் பார் ; மாறனை எச்சரித்த பாரதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன்..

இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குநர் புளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் ஆதம் பாவா, இணை தயாரிப்பாளர் மகேஷ், ஒளிப்பதிவாளர் கதிரவன், இயக்குநர் வேலு பிரபாகரன், நடிகர்கள் ஆடுகளம் நரேன், பசி சத்யா, விஜயா மாமி, சண்டைப் பயிற்சியாளர் ஹரி தினேஷ், இணை இசையமைப்பாளர் வில்லியம்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.

ஒளிப்பதிவாளர் கதிரவன் பேசும்போது,..

‘ஆன்டி இண்டியன் என்பது மாறனுடைய பிடிவாதம் என்று சொல்லலாம். அது வறட்டு பிடிவாதமோ, அல்லது முரட்டு பிடிவாதமோ அல்லாமல் ஒரு மாற்று சிந்தனைக்கான பிடிவாதமாகத்தான் எப்போதும் இருந்துள்ளது.

பெரியாரின் வாதம் போல நேர்மையாகவும் கூர்மையாகவும் தான் அது இருக்கும்.

திட்டமிட்டு படப்பிடிப்பை நடத்தியதால் தான் இந்தப்படத்தை 18 நாட்களில் 23 கால்ஷீட்டுகளில் முடித்தோம்” எனக் கூறினார்.

இயக்குநர் வேலு பிரபாகரன் பேசும்போது…,

“மாறனைப் பார்க்கும்போது ஒருபக்கம் ரவுடி குணம் கொண்ட குழந்தை மாதிரி தெரிகிறார்.

இன்னொரு பக்கம் உன்னதமான குணங்களைக் கொண்ட சினிமா தாதா போலத் தெரிகிறார்.

ஆனால் இப்படி ஒரு தாதா சினிமாவுக்கு தேவைதான். அவர் எடுத்திருக்கும் படம் கூட இன்று உலகையே ஆட்டிப்படைக்கும் மதம் பற்றிய படம் தான். சமூக பொறுப்புடன் கூடிய இயக்குநர்கள் இப்படிப்பட்ட படங்களைத்தான் எடுக்க வேண்டும்..

என்னுடைய எத்தனையோ கதைகளை பலபேர் காசு கொடுக்காமலே படமாக எடுத்துள்ளார்கள்.

பாலிவுட்டில் வெளியான டர்ட்டி பிக்சர் கூட என்னுடைய பேட்டியின் மூலம் சொல்லப்பட்ட கதை தான்.

ஆனால் மாறன் நான் சொன்ன கதைக்கு ஒரு நல்ல தொகை கொடுத்தார். அது இந்த கொரோனா காலகட்டத்தில் எனக்கு பேருதவியாக இருந்தது.

இப்படத்தில் இளம் நாயகனாக நடித்துள்ள ஷான் பேசும்போது…, “ஆன்டி இண்டியன் படத்தில் நடிக்கிறேன் எனக் கூறியதும் என் நண்பர்கள் அதிர்ச்சியானார்கள். ஆனால் எப்படியும் இவர் படத்தைப் பார்த்து கழுவி ஊற்றவாவது நிறைய பேர் வருவார்கள்.

அப்படியாவது என் முகமும் பிரபலமாகும் என்று நினைத்துதான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்” என்றார்.

ஆடுகளம் நரேன் பேசும்போது, “மறைந்த வெங்கட் மூலமாகத்தான் இந்தப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது.

மாறன் படம் இயக்குகிறாரா, அதிலும் என்னை நடிக்க அழைக்கிறாரா, இது வில்லங்கமா போயிடுமோ என நினைத்தேன்.. காரணம் மாறனை ஒரு யூ டியூப் விமர்சகர் என்கிற அளவில் தான் நான் புரிந்து வைத்திருந்தேன்.

ஆனால் பேசும்போதுதான் அவர் எப்படிப்பட்ட விஷய ஞானம், திட்டமிடுதல் கொண்டவர் என்பது தெரிந்தது, படப்பிடிப்பில் அவரைப் பொறுத்தவரை குழந்தை வடிவில் ஒரு கொலைகாரன் என்று கூட சொல்லலாம்.

அந்தளவுக்கு அவருக்குத் தேவையான விஷயங்களை சிரித்த முகத்தோடு விடாப்படியாக நின்று வாங்கி விடுவார்.

இந்தப்படம் ரெடியானதும் என்னை பார்க்க அழைத்தார். ஆனால் உங்களை எப்படி கழுவி ஊற்றப் போகிறார்கள் என்பதை தெரிந்துகொள்வதற்காக நான் தியேட்டரில் ரசிகர்களோடு தான் படம் பார்க்கப்போகிறேன் என கூறிவிட்டேன்” என பேசினார்…

தயாரிப்பாளர் ஆதம் பாவா பேசும்போது,..

“குறைந்த நாட்களில் படத்தை எடுத்துள்ளோம் என சொன்னதுமே சின்ன பட்ஜெட் என நினைத்து விடாதீர்கள்.. அத்தனை நாட்களிலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்.,

படத்தின் முன் தயாரிப்புக்கும் நிறைய செலவு செய்துள்ளோம்.

பின்னர் சென்சார் சான்றிதழ் பெறுவதற்கான போராட்டத்திலும் நிறைய செலவு செய்துள்ளோம்.

விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் அதனை மனதில் வைத்துக்கொண்டு வியாபாரம் பேச வாருங்கள்.

இந்தப் படத்திற்கான சென்சார் சான்றிதழ் பெருகின்ற போராட்டத்தில், பல விஷயங்களை புரிந்து கொண்டோம். சென்சார் சான்றிதழுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது படத்திற்கு யு அல்லது யு/ஏ அல்லது ஏ என எந்த சான்றிதழ் பொருந்தும் என நீங்களே தீர்மானித்து அதற்கேற்ற சான்றிதழுக்கு விண்ணப்பியுங்கள்..

எந்த சிக்கலும் இன்றி எளிதாக கிடைத்து விடும்.. நாங்கள் எங்கள் படத்திற்கு யு சான்றிதழ் கேட்டதால் தான் இத்தனை சிக்கல்கள் எழுந்தது என்பதை பின்னர் தான் தெரிந்துகொண்டோம்.

நிச்சயம் இந்தப்படத்தை தியேட்டர்களில் தான் வெளியிடப் போகிறோம்..

எல்லோருடைய படங்களையும் விமர்சித்த மாறன் படத்தை நீங்கள் விமர்சிக்கப் போவதற்கு முன் இந்தப்படத்தில் ஹீரோ, ஹீரோயின், வில்லன், காமெடியன், ஒரே அடியில் பத்து பேர் பறக்கும் மாஸ் ஃபைட் என எதுவும் கிடையாது.

ஒரு புதிய களத்தில் இப்படத்தை இயக்கியுள்ளார் என்பதையும் நினைவில் வைத்துகொண்டு விமர்சியுங்கள்.

சொன்ன தேதிக்கு முன்பாகவே சொன்ன பட்ஜெட்டில் தரமான படம் எடுத்துக் கொடுத்துள்ளார்.

உண்மையிலேயே இவர் தயாரிப்பாளர்களின் இயக்குநர்.

ரசிகர்களின் இயக்குநர். இருவரையுமே அவர் ஏமாற்ற மாட்டார்.” எனக் கூறினார்.

இயக்குநர் புளூ சட்டை (இள)மாறன் பேசும்போது…

, “இந்தக் கதையை தயார் செய்ததும் அதை பதிவெல்லாம் செய்யவில்லை. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை.

நடிகர் ஆர்கேவை சந்தித்து படம் பண்ணப் போகிறேன் எனக் கூறியபோது உனக்கெதுக்குய்யா இந்த வேண்டாத வேலை..?? நீ எப்படி படம் எடுத்தாலும் கழுவி ஊத்தத்தான் போறாங்க என அறிவுறுத்தினார்.

இதனால் படப்பிடிப்பு எண்ணத்தை தள்ளிவைத்துவிட்டு எனது கதையை பலரிடம் கூறி அபிப்ராயம் கேட்க ஆரம்பித்தேன். கதையையும் மெருகேற்ற ஆரம்பித்தேன்.

ஒருகட்டத்தில் என்னுடன் கூடவே உறுதுணையாக இருந்த இயக்குநர் சுப்ரமணிய சிவா, குழந்தையை குளிப்பாட்டி அழகாக்கலாம்… ஆனால் அதுக்காக குளிப்பாட்டி குளிப்பாட்டி கொன்னுடக்கூடாது… அபிப்ராயம் கேட்டது போதும் படத்தை உடனே ஆரம்பியுங்கள் என அறிவுரை கூறினார்.

அப்படித்தான் இந்தப்படம் துவங்கியது.

படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் வேலு பிரபாகரனை அழைத்தபோது மறுக்காமல் ஒப்புக்கொண்டார்.

அந்த சமயத்தில் வேலு பிரபாகரன் என்னிடம் ஒரு கதை சொன்னார். அவரிடம் நைஸாகப் பேசி அந்த கதையை உடனே விலைகொடுத்து வாங்கிவிட்டேன்..

ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க 65 வயது நடிகை ஒருவர் தேவைப்பட்டார்.

ஆனால் பல நடிகைகள் பாட்டி கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்து விட்டார்கள்.

அப்போதுதான் பலவருடங்களாக சினிமாவில் நடனமாடி வந்த விஜயா மாமி பற்றி தெரியவந்தது.

அவர் அந்த ரோலுக்கு சரியாக இருந்தார். அவரை நடிக்க வைத்தோம். அவருக்கு உதவி செய்யும் குப்பத்து கதாபாத்திரத்தில் பசி சத்யா அற்புதமாக நடித்துள்ளார்.

படத்தின் இன்னொரு முக்கிமான கதாபாத்திரத்தில் நடிக்க மான்ஸ்டர் படத்தில் நடித்த அனில்குமாரை அழைத்து நடிக்க வைத்தோம். எங்கள் படத்தில் நடிக்க அவரை அழைத்தபோது, தனது மனைவி பொன்னியின் செல்வன் படத்தின் ஆடிசனில் கலந்துகொள்ள சென்னை வரும்போது, உங்களை வந்து சந்திக்கிறேன் என்றார்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் பொன்னியின் செல்வன் படத்திற்கு ஆடிசனில் கலந்துகொண்ட அவர் மனைவி செலக்ட் ஆகவில்லை. கூடவே துணைக்கு வந்த இவர் செலக்ட் ஆகிவிட்டார்.

அப்படியே எங்கள் படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டார்.

அதேபோல வேறு ஒரு படத்திற்காக பேசி வைத்திருந்த ஷான் என்பவரை இந்தப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறேன்.. குறுகிய காலத்தில் மிகப்பெரிய நடிகராக அவர் வருவார் பாருங்கள்..

இந்தப்படத்திற்கு முக்கிய தூணாக ஆடுகளம் நரேன் நடித்துள்ளார். இடைவேளைக்கு பின் பதினான்கு நிமிடங்கள் கொண்ட ஒரே காட்சியை ஒற்றை ஆளாக தாங்கிப்பிடித்து நடித்துள்ளார்.

இத்தனைக்கும் 60 பேர் காம்பினேஷன் கொண்ட அந்த காட்சியை அவரது அற்புதமான நடிப்பால் ஒரே நாளில் படமாக்க முடிந்தது.

பதினான்கு நிமிட காட்சியா, போரடித்து விடாதா என நினைப்பீர்கள்.. ஆனால் படம் பார்த்த அனைவரும் அந்த காட்சியைத்தான் ஹைலைட்டாக கூறி பாராட்டினார்கள்.

இந்தப்படத்தில் ஒரு அரசு கட்டிடத்தில் பாம் பிளாஸ்ட் பண்ணுகிற மாதிரி ஒரு காட்சியை படமாக்க வேண்டும். சென்னையில் அப்படி ஒரு இடத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதியும் கிடைத்தது. ஆனால் ஒரு தீக்குச்சியை கூட உரசக்கூடது என்கிற அளவுக்கு கண்டிசன் போட்டார்கள். இந்த விஷயத்தை அறிந்த ஹரி தினேஷ் மாஸ்டர், யாரும் வந்து படப்பிடிப்பை நிறுத்துவதற்குள் ஒரு அரைமணி நேரத்தில் இந்த காட்சியை நீங்கள் நினைத்தபடி எடுத்துக் காட்டுகிறேன்.

அதன்பின் வருவது வரட்டும் பார்த்து கொள்ளலாம் என எனக்கு தைரியம் சொன்னதுடன் சொன்னபடி பாம் பிளாஸ்ட் காட்சிகளை நேர்த்தியாகவும் எடுத்துக் கொடுத்தார்.

இந்தப்படத்திற்கு நான் இசையமைப்பாளர் என்றாலும் இசைப்பணிகளை எல்லாம் வில்லியம்ஸ் தான் கவனித்துக்கொண்டார். சில பேர் பாங்காங் போனால் தான் இசையமைக்க மூடு வரும் எனச் சொல்வார்கள்.. ஆனால் நாங்கள் ஆம்னி வேன் சைஸில் உள்ள ரூமில் உட்கார்ந்துகொண்டு இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளோம்.

படம் எடுத்து முடித்த பின்னர்தான் தயாரிப்பாளர் ஆதம் பாவா படம் பார்த்தார்.

அவருக்கு ரொம்பவே பிடித்து விட்டதால், படம் நிச்சயம் வெற்றி பெறும்.. அந்த வெற்றியை இன்னும் முழுமையாக்க வேண்டும் என்றால் நீங்கள் மீண்டும் ஏதாவது காட்சிகளைப் படமாக்கி இணைக்க விரும்பினால் கூட அதற்கு எத்தனை லட்சங்களையும் செலவு செய்யத் நான் தயார் எனக் கூறினார்.

ஆனாலும் தேவையானவற்றை நாங்கள் சரியாக படமாக்கி விட்டதால் அவரிடம் வேண்டாம் எனக் கூறிவிட்டேன்.

படம் முடிந்தவுடன் ஒருமுறை இயக்குநர் பாரதிராஜாவை சென்று சந்தித்தபோது, “டே சட்டை.. உன் படம் முடிஞ்சிருச்சுன்னு கேள்விப்பட்டேன்.. உன் படத்தை போடு.. நான் ஒரு புளூ சட்டையை போட்டுட்டு வந்து உன் படத்தை என்ன பண்றேன் பாரு என்றார்.

வருடத்திற்கு வெளியாகும் நூறு படங்களில் பத்து படங்கள் தான் நல்ல படங்களாக இருக்கின்றன. இந்த கொரோனா காலகட்டத்தால் கிட்டத்தட்ட இருநூறு படங்கள் தேங்கி கிடக்கின்றன. அவையெல்லாம் இனி தான் வரப்போகின்றன..

எல்லா படத்தையும் உடம்பை இரும்பாக்கிக்கொண்டுதான் பார்க்கவேண்டும். ஆனால் நிச்சயம் ஆன்டி இண்டியன் உங்கள் அனைவரையும் கவரும் விதமாக இருக்கும் என்றார்.

Director Bharathi Raja warning to Blu Sattai Maran

பகவதி பாலா இயக்கத்தில் புதுமுகங்களின் ‘இளம் ஜோடி’

பகவதி பாலா இயக்கத்தில் புதுமுகங்களின் ‘இளம் ஜோடி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மஞ்சுளா கிருஷ்ணப்பா வழங்க சி. எம்.கே. புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் ஓசூர் கிருஷ்ணப்பா தயாரித்துள்ள படம்தான் ” இளம் ஜோடி”.

புதுமுகங்கள் விஜய் கிருஷ்ணப்பா , பிரியங்கா ஜோடியுடன் அனு கிருஷ்ணா, ஆதிஷ் பாலா, மீரா கிருஷ்ணன், பயில்வான் ரங்கநாதன், பெஞ்சமின, வைகாசி ரவி, கர்ணா ராதா, ஜூனியர் அசோகன், போண்டாமணி, அம்பானி சங்கர், புரோட்டா முருகேசு, பட்டு மாமி ஆகியோருடன் பகவதி பாலா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தீப்பொறி நித்யா சண்டைப் பயிற்சியையும், தஷி இசையில் சுதந்திரதாஸ், கவிதா குப்புசாமி, ஏகம்பவாணன் பாடல்களையும், ராம்நாத் படத்தொகுப்பையும், பவர் சிவா நடன பயிற்சியையும் கவனித்துள்ளனர்.

” இளம் ஜோடி” படத்தின் கதை. திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவையும் கவனித்து, படத்தையும் இயக்கியுள்ள பகவதி பாலா படத்தைப் பற்றி கூறியதாவது…

” பணம் படைத்தவர்கள் மத்தியில் ஜாதியும் மதமும் கைகோர்த்து சிரிக்கிறது.

பணம் இல்லாதவர்களிடம்தான் இந்த ஜாதியும் மதமும் அரிவாள், வேல்கம்பு கொண்டு அவர்களின் வாழ்க்கையை சின்னா பின்னமாக்குகிறது என்பதை வீரம் கலந்த இளமை துள்ளலுடனும், அனல் தெறிக்கும் வசனத்துடனும், விறுவிறுப்பான சண்டை காட்சிகளுடனும், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பெங்களூரில் இந்தப் படத்தை வளர்த்துள்ளோம்.” என்று பகவதி பாலா கூறியுள்ளார்.

New faces joins for Director Baghavathi Bala’s Ilam Jodi

More Articles
Follows