தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆர்யா சாயிஷா நடித்த ‘டெடி’ படம் ஓரிரு மாதங்களுக்கு முன் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசானது.
அண்மையில் ஆர்யாவின் அடுத்த படமான ‘சார்பட்டா பரம்பரை’ அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.
இரு படங்களுமே சூப்பரான வரவேற்பை ரசிகர்கள் & குடும்பத்தினரிடையே பெற்றது.
ஆர்யாவைப் போல் நயன்தாராவின் படங்களுமே ஓடிடியில் ருலீசாகி வருகிறது.
ஆர்ஜே பாலாஜியுடன் நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ படம் 2020ல் தீபாவளிக்கு ஹாட்ஸ்டார் & டிவியில் நேரடியாக வெளியானது.
தற்போது நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படம் ஆகஸ்ட் 13ம் தேதி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.
சூர்யா தயாரித்த ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ படமும் சூர்யா தயாரித்து நடித்த ‘சூரரைப் போற்று’ படமும் ஓடிடி தளத்தில் வெளியானது.
இவை இரண்டும் வெற்றிப் பெற்றது.
தற்போது ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ஜெய் பீம்’ படம் ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது.
Arya Suriya and Nayanthara’s success continues in OTT release





