அஜித்-விஷாலை அடுத்து சூர்யா உடன் இணையும் ஆர்யா

arya suriyaஅஜித்துடன் ஆரம்பம், விஷாலுடன் அவன் இவன் ஆகிய படங்களில் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடித்தார் ஆர்யா.

தற்போது சூர்யா உடன் நடிக்கிறார். அதுபற்றிய விவரம் வருமாறு…

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பட சூட்டிங் அண்மையில் லண்டனில் தொடங்கியது.

சூர்யாவின் 37-வது இப்படத்தில் சாயிஷா, மோகன்லால், அல்லு சிரிஷ், பாலிவுட் நடிகர் பொம்மி இரானி முதலானோருடன் ஆர்யாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலை வெளியிட்டிருந்தோம்.

இப்போது, ‘சூர்யா-37’ல் ஆர்யா நடிக்க இருப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் கே.வி.ஆனந்த் வெளியிட்டுள்ளார்.

‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.

அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார்.

Overall Rating : Not available

Related News

அஜித் நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில்…
...Read More
அறிந்தும் அறியாமலும்', `பட்டியல்', `சர்வம்' உள்ளிட்ட…
...Read More
அண்மையில் போக்குவரத்து மற்றும் மின்துறை ஊழியர்கள்…
...Read More
வீரம் படம் வெற்றிப் பெறவே, தொடர்ந்து…
...Read More

Latest Post