தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர், பாடலாசிரியர், பாடகர் என வலம் வந்த அருண்ராஜா காமராஜா, அவரது நண்பர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா படத்தின் மூலம் இயக்குனராகவும் உருவெடுத்துள்ளார்.
இந்நிலையில் இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் முதன் முதலாக கை கோர்த்துள்ளார் அருண்ராஜா காமராஜ்.
ஜிவி. பிரகாஷ் நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கி வரும் படம் ‘சர்வம் தாள மயம்’ படத்தில் இடம்பெறும் ‘பீட்டர் பீட் ஏத்து’ என்று துவங்கும் பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியிருக்கிறாராம்.
இந்த பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார்.
மியூசிக்கல் சப்ஜெக்டாக உருவாகியுள்ள ‘சர்வம் தாள மயம்’ பட பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.
Arunraja Kamaraja teams up with AR Rahman in Sarvam Thaala Mayam