கமல் & சிம்புவை அடுத்து மீண்டும் அருண் விஜய்யுடன் இணையும் ப்ரியா பவானி சங்கர்

கமல் & சிம்புவை அடுத்து மீண்டும் அருண் விஜய்யுடன் இணையும் ப்ரியா பவானி சங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arun vijay priya bhavani shankarதமிழ் பெண்களுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைவு என்பதை மாற்றி மளமளவென தமிழ் படங்களை குவித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர்.

அதர்வாவுடன் ‘குருதி ஆட்டம்’, ஹரிஷ் கல்யாண் உடன் ‘ஓ மணப்பெண்ணே’, எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘பொம்மை’, ஜீவா & அருள்நிதியுடன் ‘களத்தில் சந்திப்போம்’ உள்ளிட்ட படங்கள் இவர் கைவசம் உள்ளன.

இந்த படங்கள் இந்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘ருத்ரன்’, சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர்.

இந்நிலையில் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என அறிவித்துள்ளனர்.

ஏற்கெனவே அருண் விஜய், பிரசன்னாவுடன் ‘மாஃபியா சாப்டர் 1 படத்தில் பிரியா நடித்துள்ளார்.

இப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சக்திவேல் தயாரிக்கிறார்.

அருண் விஜய் படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

பிப்ரவரி மாதம் 2021-ம் ஆண்டு படப்பிடிப்பை ஆரம்பித்து ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

சூர்யா நடிக்காமல் விலகிய ‘அருவா’ படத்தின் கதைதான் இப்படம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Arun Vijay and Priya Bhavani Shankar joins for a new film

விஜய்க்கு ஜோடியாகி 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹீரோயினாகும் ‘பிக்பாஸ்’ வனிதா

விஜய்க்கு ஜோடியாகி 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹீரோயினாகும் ‘பிக்பாஸ்’ வனிதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vanitha vijayakumar (1)விஜய் நடித்த ’சந்திரலேகா’ படம் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். இப்படம் 1995ல் ரிலீசானது.

ராஜ்கிரன் நடித்த ’மாணிக்கம்’ உள்ளிட்ட ஓரிரு படங்களில் பின்னர் நாயகியாக நடித்தார்.

பின்னர் திருமண வாழ்வில் பிசியானதால் (1… 2… திருமணங்களை செய்ததால்) சினிமாவில் நடிக்கவில்லை.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பின்னர் கொரோனா லாக்டவுன் சமயத்தில் 3வது திருமணம் செய்து ஓரிரு மாதங்களில் விவாகரத்து செய்து யூடிப்பில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி ஒரேடியாக பிரபலமானார்.

தற்போது மீண்டும் நாயகியாகுகிறார் வனிதா.

பாபி சிம்ஹா நடித்த ’பாம்பு சட்டை’ படத்தை இயக்கிய ஆதம்தாஸன் என்பவரின் அடுத்த பட நாயகி வனிதா தான்.

இது நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதை என கூறப்படுகிறது. இவருடன் முக்கிய வேடத்தில் கருணாகரன் நடிக்கிறார்.

Actress Vanitha Vijayakumar joins hands with Paambhu Sattai director for a woman-centric film

இமான் இசையில் டூயட் பாடும் பிரபுதேவா & ரம்யா நம்பீசன் ..; டைரக்டர் யார்..?

இமான் இசையில் டூயட் பாடும் பிரபுதேவா & ரம்யா நம்பீசன் ..; டைரக்டர் யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prabhu Deva Ramya Nambeesan (2)‘மஞ்சப்பை’ மற்றும் ‘கடம்பன்’ ஆகிய படங்களை இயக்கியவர் ராகவன்.

தற்போது அவர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் பிரபுதேவா நடிக்க உள்ளார்

இந்த படத்தில் நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கவுள்ளார்.

டி.இமான் இசையமைக்க செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

அபிஷேக் பிலிம்ஸ் தங்களது 8வது படைப்பாக இப்படத்தை தயாரிக்கின்றனர்.

பெட்ரோமாக்ஸ், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Prabhu Deva and Ramya Nambeesan joins for new film

தியேட்டரில் ரிலீசான 15 நாட்களிலேயே ஆன்லைனில் ‘மாஸ்டர்’..; கடுப்பான தியேட்டர் உரிமையாளர்கள் திடீர் முடிவு

தியேட்டரில் ரிலீசான 15 நாட்களிலேயே ஆன்லைனில் ‘மாஸ்டர்’..; கடுப்பான தியேட்டர் உரிமையாளர்கள் திடீர் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Masterவிஜய் நடிப்பில் உருவான ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13ல் ரிலீசானது.

இந்த படம் வசூல் ரீதியாக உலகளவில் நெம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளதாம்.

தற்போது வரை ‘மாஸ்டர்’ படம் உலக அளவில் ரூ 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம்.

கொரோனா லாக்டவுனிற்கு பிறகு தியேட்டர்கள் திறந்தவுடன் மாஸ்டர் நல்ல வசூலை தருவதாக திரையுலகினர் உற்சாகத்தில் உள்ளனர்.

தமிழகத்தைப் போல கேரளா, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகாவிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்புள்ளது.

இந்த நிலையில் நாளை மறுநாள் ஜனவரி 29ல் அமேசானில் மாஸ்டர் ரிலீஸ் என படக்குழு அறிவித்துள்ளது.

அதாவது இந்த படம் ரிலீசாகி 16 நாட்களில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாபியுள்ளனர்.

எனவே உடனடியாக இன்று மாலை ஆலோசனையில் ஈடுப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

விஜய் என்ன செய்ய போகிறார்? பார்ப்போம்

Blindsided by Vijay’s Master’s early OTT release, theatre owners rue lack of transparency

சூர்யா படத்தில் தன் மகனுடன் இணைந்து நடிக்கும் அருண் விஜய்

சூர்யா படத்தில் தன் மகனுடன் இணைந்து நடிக்கும் அருண் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arun Vijay (2)மூத்த நடிகர் விஜய்குமார் அவர்களின் பேரனும் நடிகர் அருண் விஜய் அவர்களின் மகனுமாகிய அர்னவ், நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.

இப்படத்தில் அர்னவிற்கு தந்தையாக அவரது தந்தை அருண் விஜய்யே நடிக்கிறார்.

இது குறித்து இயக்குநர் சரவ் சண்முகம் கூறியதாவது…

இந்த கதாப்பாத்திரத்தில் அருண் விஜய் நடிப்பாரா? எனும் பெரும் சந்தேகத்துடன் தான் முதலில் அவரை அணுகினேன்.

அவர் இந்தப்படத்தில் அர்னவிற்காக மட்டுமென்றால் நான் நடிக்க மாட்டேன் என முதலிலேயே கூறிவிட்டார்.

நான் திரைக்கதையை கூறிய பிறகு அந்த கதாப்பாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஒப்பந்தமாவதற்கு முன்னால் தனது கதாப்பாத்திரம் குறித்து நிறைய கேட்டு தெரிந்து கொண்டார்.

தற்போது ஊட்டியில் எங்களுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். படம் உருவாகி வரும் விதம் மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ள்து.

அர்னவ் மிகவும் துறுதுறுப்பான, உற்சாகம் கொண்ட திறன்மிகு நடிகர். இயல்பாகவே அவரிடம் நடிப்பு திறன் நிறைந்திருக்கிறது. இப்படம் மிக அழகாக உருவாகி வருகிறது.

குழந்தைகளின் உலகை மையமாக வைத்து உருவாகும், இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் நடிகர் அருண் விஜய் அவர்களின் 32 வது படமாகும்.

இப்படம் முழுக்க ஊட்டியில் படமாக்கப்படுகிறது சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிக்கிறது.

ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், RB Films யின் S.R.ரமேஷ் பாபு உடன் இணைந்து இணை தயாரிப்பு செய்கிறார். சரவ் சண்முகம் இப்படத்தை இயக்குகிறார்.

கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் K பிரசன்னா இசையமைக்கிறார். மேகா படத்தொகுப்பு செய்ய, தயாரிப்பு வடிவமைப்பை மைக்கேல் செய்கிறார். உடை வடிவமைப்பை வினோதினி பாண்டியன் மேற்கொள்கிறார்.

Actor Arun Vijay to share the screen with his son Arnav

மக்களால் நான்… மக்களுக்காக நான்..; பீனிக்ஸ் பறவையாக மாறிய ஜெயலலிதா நினைவிடம் திறப்பு.!

மக்களால் நான்… மக்களுக்காக நான்..; பீனிக்ஸ் பறவையாக மாறிய ஜெயலலிதா நினைவிடம் திறப்பு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jayalalithaa Memorialமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5ல் மரணமடைந்தார்.

மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அமைந்துள்ள வளாகத்திலேயே ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதன்பின்னர் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றார்.

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க சுமார் ரூ.80 கோடியை தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்திருந்தது.

*இதைத்தொடர்ந்து, 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பில் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிக்கு கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

எனவே சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணிகள் முடிவடைந்துள்ளது.

அதன்படி ஜெயலலிதா நினைவிடத்தை இன்று காலை 11 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். ஜெயலலிதா நினைவிட கல்வெட்டும் திறக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

பின்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் முதல்வர்.

ஜெயலலிதா நினைவிடம் எப்படி..?

இந்த நினைவிட வளாகத்தில் பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக உயர்தர கருங்கல்லான நடைபாதை
அமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள கூரைகளின் மீது சூரிய ஓளி தகடுகள் பதிக்கப்பட்டு அதன்மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

பீனிக்ஸ் பறவை போல உள்ள இந்த நினைவு மண்டபத்திற்கு பின்புறம் மியாவாக்கி தோட்டமும், மண்டபத்தை சுற்றிலும் கருங்கற்கள் பதிக்கப்பட்ட தடாகங்களும், தோட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

எம்ஜிஆர் & அண்ணா நினைவிடம் போல இதுவும் ஒரு சிறிய சுற்றுலாத் தலமாகவே மாற்றப்பட்டுள்ளது எனலாம்.

நினைவிடத்தில் ‘மக்களால் நான்; மக்களுக்காக நான், அமைதி, வளம், வளர்ச்சி’ ஆகிய வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

புல்வெளி அமைக்கப்பட்டு நினைவிட வளாகத்தில் ஏராளமான மலர் செடிகள் நடப்பட்டுள்ளன. இரவிலும் நினைவிடம் ஜொலிக்கும் வகையில், வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

*நுழைவுவாயில் தடாகத்தின் அருகில் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

நினைவிடத்திற்கு வாகனங்கள் வந்து செல்ல ஏதுவாக 265 மீட்டர் நீளம் மற்றும் 9 மீட்டர் அகலத்தில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

நுழைவு வாயிலின் இருபுறங்களிலும், கருங்கல்லில் செய்யப்பட்ட சிங்க சிலைகள் கம்பீரமாக வைக்கப்பட்டுள்ளன.

இத்துடன் கண்காணிப்பு கேமராக்கள், பொது ஒலி அமைப்பு, அணையா விளக்கு ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

வாகன நிறுத்தும் இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஜெயலலிதா நினைவிடம் அருகே, அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா அமைக்கவும் தமிழக அரசு ₹12 கோடியும், நினைவிடத்தின் 5 ஆண்டு பராமரிப்பு பணிக்கு ₹9 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதில், அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், அவரது வீடியோ பதிவுகள், அவர் படித்த நூல்கள், அவரது சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் வைக்கப்படவுள்ளன.

இதில், ஜெயலலிதா பேசுவது போன்று தொடு திரை மூலம் ஒளி, ஒலி காட்சிகள் வைக்கப்படுகிறது.

இந்த அருங்காட்சியகம், அறிவுசார் மையம் முழுக்க, முழுக்க ஏசி வசதி செய்யப்படுகிறது.

தற்போது இந்த பணிகள் முடிவடையாததால், அடுத்த பிப்ரவரி மாதம் திறந்து வைக்கப்பட உள்ளது.

TN CM Unveiled Jayalalithaa’s Memorial At Marina Beach

More Articles
Follows