2 கைகளை இழந்த மாற்றுத் திறனாளியை மகிழ்வித்த ரஜினி

2 கைகளை இழந்த மாற்றுத் திறனாளியை மகிழ்வித்த ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini and artist pranavகேரளாவில் மழை வெள்ளத்தின் போது தான் சேமித்த தொகையை நிவாரண நிதியாக கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் வழங்கியவர் மாற்றுத் திறனாளி இளைஞர் பிரணவ்.

இவருக்கு 2 கைகள் இல்லை என்றாலும் தான் கால்களாலேயே சாப்பிடுவது, வண்டி ஓட்டுவது, ஓவியம் வரைவது, செல்போனில் செல்வி எடுப்பது என அனைத்தையும் செய்து வருகிறார்.

இவருக்கு நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க விருப்பம் என ஒரு முறை தெரிவித்திருந்தார்.

தற்போது இதனை அறிந்த ரஜினிகாந்த் அவரை அழைத்துள்ளார்.

சந்திப்பின் போது, பிரணவின் காலை, தனது கைகளால் குலுக்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் பிரணவ் தான் வரைந்த ரஜினி படத்தை அவருக்கு பரிசாக அளித்துள்ளார்.

பின்னர் தன் கால்களால் பிரணவ் ரஜினியுடன் செல்பி எடுத்து கொண்டார்.

எவ்வளவு பெரிய மனிதர். ஆனால் இத்தனை எளிமையாக இருக்க முடியுமா? என ரஜினி பற்றி நெகிழ்ந்து வருகிறார் பிரணவ்.

ஹீரோ சிவகார்த்திகேயன் அடுத்து டாக்டராகிறார்; அனிருத் இசை!

ஹீரோ சிவகார்த்திகேயன் அடுத்து டாக்டராகிறார்; அனிருத் இசை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanநயன்தாரா, யோகிபாபு நடித்து சூப்பர் ஹிட்டான கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர் நெல்சன் திலீப்குமார்.

இவர் அடுத்து இயக்கவுள்ள படத்தை சிவகார்த்திகேயன் நடித்து தயாரிக்கிறார்.

இந்த படத்திற்கு டாக்டர் என தலைப்பு வைத்துள்ளனர்.

அனிருத் இசையமைக்க, கேஜேஆர். ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

டாக்டர் படத்தலைப்புடன் சேர்த்து மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இதன் சூட்டிங்கை வருகிற வரும் 6ம் தேதி தொடங்கவுள்ளனர்.

இதன் மூலம் தெலுங்கு நடிகை ப்ரியங்கா மோகன் கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.

இவர்களுடன் யோகிபாபு, டோனி, வினய் மற்றும் அர்ச்சனா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

கேஜேஆர் நிறுவனம் தயாரித்துள்ள சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் இந்த மாதம் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan and Priyanka Mohan team up for Doctor

ரஜினிக்கு பேசப்பட்ட ‘நாற்காலி’; அஜித் இயக்குனருடன் அமீர் கூட்டணி

ரஜினிக்கு பேசப்பட்ட ‘நாற்காலி’; அஜித் இயக்குனருடன் அமீர் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Naarkali movie stillsமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படத்திற்கு தர்பார் என தலைப்ப வைத்துள்ளனர். ஆனால் இந்த தலைப்புக்கு முன்னர் இந்த படத்திற்கு நாற்காலி என தலைப்பு வைக்கவுள்ளதாக செய்திகள் வந்தன.

அதனை அப்போதே முருகதாஸ் மறுத்தார்.

இந்த நிலையில் தற்போது நாற்காலி என்ற படத்தலைப்பில் புதிய பட சூட்டிங் இன்று தொடங்கியுள்ளது.

அஜித்தின் முகவரி, சிம்புவின் தொட்டி ஜெயா ஆகிய படங்களை இயக்கிய VZ துரை இந்த படத்தை இயக்கவுள்ளார்.

டைரக்டர் அமீர் இந்த படத்தில் ஹீரேவாக நடிக்கிறார்.

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரிக்கிறார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.

10 நாட்களுக்கு முன்பே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி.; ஏன் தெரியுமா?

10 நாட்களுக்கு முன்பே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி.; ஏன் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini birthdayசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்தநாள் எது என்றால் கேட்டால் சின்ன குழந்தையும் சொல்லும். அவர் டிசம்பர் 12ம் 1950ல் பிறந்தார்.

இந்த வருடத்துடன் அவருக்கு 68 வயது முடிந்து 69 வயதாகிறது.

அவரின் பிறந்தநாளை ரஜினி ரசிகர்கள் கொண்டாட தயாராகி வரும் வேளையில் நேற்று டிச.,2 தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார் ரஜினி.

ஏனென்றால் நட்சத்திரப்படி, நேற்று தான் பிறந்தநாளாம். அதாவது அவரின் பிறந்த நட்சத்திரமான திருவோணம் நாள் நேற்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஐய்யர்கள் மந்திரங்கள் முழங்க ரஜினியின் நட்சத்திரத்தின் பெயரில் பூஜைகள் செய்தனர். ரஜினி மற்றும் லதாவிடம் குடும்ப உறுப்பினர்கள் ஆசிர்வாதம் பெற்றனர்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் வெளியிட்ட வரலக்ஷ்மியின் டேனி செகண்ட் லுக்

தயாரிப்பாளர் தனஞ்செயன் வெளியிட்ட வரலக்ஷ்மியின் டேனி செகண்ட் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

danny second look poster’மக்கள் செல்வி’ வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, PG Media Works பி.ஜி.முத்தையா மற்றும் எம். தீபா இவர்களின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம்தான், ‘டேனி’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் லா.சி.சந்தானமூர்த்தி இயக்கியிருக்கிறார். படத்திற்கான ஒளிப்பதிவில் ஆனந்த்குமார், படத்தொகுப்பில் எஸ்.என்.ஃபாசில், பின்னணி இசையில் சாய் பாஸ்கர், பாடல்களில் சந்தோஷ் தயாநிதி ஆகியோர் பணியாற்றியிருக்கிறார்கள். ’டேனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே, ஐந்து வித்தியாசமான போஸ்டர்களில் வெளிவந்து, தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்தது. தற்போது ’டேனி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான தனஞ்செயன், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்துகளும் தெரிவித்திருக்கிறார்.

விஜய் பட தலைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்

விஜய் பட தலைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sambavam movie stillsமைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ், ஜான் மேக்ஸ் புதிய படத்தை தயாரித்து வருகிறார். ரஞ்சித் பாரிஜாதம் இயக்கும் இத்திரைப்படத்திற்கு “சம்பவம்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குனர் தினேஷ் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். நாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன், பக்ரீத் படத்தில் நடித்த பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்திற்கு சம்பவம் என்று தலைப்பு வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு ரஞ்சித் பாரிஜாதம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம் கூறும்போது, நான் சம்பவம் என்ற படத்தை இயக்கி வருகிறேன். ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ், பூர்ணா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்து வருகிறார்கள். சம்பவம் என்ற தலைப்பை முறையாக பதிவு செய்து இப்படத்தின் படப்பிடிப்புகளை நடத்தி வருகிறோம். ஆனால் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு சம்பவம் என்று பெயர் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது எங்கள் படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் என்ற தலைப்பு எங்களுக்கு சொந்தமானது. அதனால் விஜய் படம் பற்றி வரும் வதந்திகளை நம்பாதீர்கள்’ என்றார்.

More Articles
Follows