JUST IN ரஜினி அரசியல் ஆசையை நிறைவேற்றுவோம்… விரைவில் மாற்றம்..; அர்ஜுனமூர்த்தி ‘திடீர்’ அறிக்கை

JUST IN ரஜினி அரசியல் ஆசையை நிறைவேற்றுவோம்… விரைவில் மாற்றம்..; அர்ஜுனமூர்த்தி ‘திடீர்’ அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arjuna murthyநடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் கடந்த 2020 டிசம்பர் 3ல் அது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

தான் தொடங்கவுள்ள புதிய கட்சிக்கு கட்சிக்கு அர்ஜுனமூர்த்தியை தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் தமிழருவி மணியனை மேற்பார்வையாளராகவும் நியமித்திருந்தார் ரஜினிகாந்த்.

ஆனால் அதே மாதம் டிசம்பர் 29ல் தன் உடல்நிலையை காரணம் காட்டி “அரசியலும் கிடையாது கட்சியும் கிடையாது” என ட்விட்டரில் நீண்ட விளக்கம் அளித்தார்.

அதன் பின் சில நாட்களில் “தான் சாகும் இனி அரசியலில் ஈடுபட மாட்டேன் என தமிழருவி மணியன் அறிவித்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் அர்ஜுன மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்…

“சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நீண்ட கால அரசியல் மாற்றத்தின் நிறைவான நிச்சயமாக நிகழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து நமது தமிழகத்தில் அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம், இப்ப இல்லனா எப்போது என்று சொல்லிய சூப்பர் ஸ்டார் அவர்களின் நல்ல எண்ணம், நல்ல மனது, நம் தமிழகத்தின் மீது கொண்ட அக்கறை நிறைவேறும் என்று நம்புங்கள்.

ஒரு நடிகராக அவரது தொழில் தர்மத்தின் காரணமாக அவரது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் வர கூடாது என்ற காரணத்தால் அவரது பெயர் புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாம் என்று நான் விரும்புகிறேன்.

எனவே என்னை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என விரும்பி நாட்டிற்கு அறிமுகம் செய்த அவர்களின் பாதம் தொட்டு வணங்கி நான் மாற்றத்தின் வழியில் பயணித்து நல்லதொரு மாற்றத்தை தருவேன் என நம்புகிறேன்.

இந்த சூழ்நிலையிலும் எனக்கு தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். அரசியலில் இல்லை என்றாலும் எனக்கு தலைவர் என்பதையும் தாண்டி நானும் ஒரு ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன் .

அந்த அக்கறையில் அவரது புகழுக்கு எந்த இடத்திலும் கெட்ட பெயரை நாம் ஏற்படுத்த மாட்டோம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஆசிர்வாதம் மட்டுமே போதும், அவர்களின் ஆசையை நிறைவேற்றுவோம். விரைவில் மாற்றத்தின் சேவகனாக உங்கள் முன் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கை மூலம் ரஜினிகாந்தி முன்வைத்து அர்ஜுன மூர்த்தி அரசியலில், தனிக்கட்சி தொடங்க வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Arjuna Murthy statement about new party

பாக்ஸ் ஆபிஸ் ‘டான்’ சிவகார்த்திகேயனுடன் இணைவது மகிழ்ச்சி..; ‘லைகா’ சுபாஸ்கரன் நெகிழ்ச்சி

பாக்ஸ் ஆபிஸ் ‘டான்’ சிவகார்த்திகேயனுடன் இணைவது மகிழ்ச்சி..; ‘லைகா’ சுபாஸ்கரன் நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Don Sivakarthikeyan நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள “டாக்டர் மற்றும் அயலான்” திரைப்படங்கள் விநியோக தளத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

2021 ஆம் ஆண்டில் வெளிவரவுள்ள உச்சகட்ட எதிர்பார்ப்பு மிக்க படங்களின் பட்டியலில் மிக மேன்மையான இடத்தை இப்படங்கள் பெற்றிருக்கிறது. இந்நிலையில் அடுத்த அதிரடியான அறிவிப்பாக, சிவகார்த்திகேயனின் 19 வது படமாக “டான்” படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் அட்லியிடம் “மெர்சல், பிகில்” படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய, சிபி சக்கரவர்த்தி இப்படத்தினை இயக்குகிறார். லைகா புரடக்‌சன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா, சிவகார்த்திகேயன் புரடக்‌சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார்.

லைகா குழும தலைவர், தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா அவர்கள் கூறியதாவது…

தமிழின் மிக முக்கிய நடிகர், பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாயகனான, சிவகார்த்திகேயனுடன் இணைந்தது, மிகப்பெரும் மகிழ்ச்சி. அவரது அடுத்த படங்கள் ( டாக்டர் & அயலான் ) 2021 வருடத்தின் ரசிகர்களின் எதிர்பாப்பில் முதன்மை இடத்தை பெற்ற படங்கள் என்பதில் எந்த் சந்தேகமுமில்லை.

அப்படங்கள் கண்டிப்பாக திரையரங்குகளுக்கு பெரும் ரசிகர் பட்டாளத்தை அழைத்து வரும். ஒவ்வொரு படத்திலும் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னை அடுத்த உயரத்திற்கு உயர்த்திற்கொள்ள, உழைக்கும் உழைப்பு, அர்ப்பணிப்பு அபாரமானது.

“டான்” எங்கள் இருவருக்கும் மிக முக்கியமானதொரு படமாக இருக்கும். இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இப்படத்தின் கதையை கூறியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

கதையில் பல காட்சிகளில் நகைச்சுவை மிளிர்ந்ததை உணர்ந்தேன். இப்படத்தில் ரசிகர்கள் 100 சதவீதம் உற்சாகமான காமெடி கலாட்டாவான அனுபவத்தை பெற்று மகிழ்வார்கள் என்பது உறுதி.

அனிருத் அவர்களின் இசை படத்திற்கு கிடைத்திருக்கும் மற்றுமொரு பலம். சிவகார்த்திகேயனுடனான அவரது கூட்டணி, இதுவரை பிரமாண்ட வெற்றியினை மட்டுமே பெற்றுள்ளது.

அவர்களது கூட்டணியில் மீண்டும் ஒரு அற்புதமான ஆல்பத்தை கேட்க ஆவலாக உள்ளேன்.

இப்படத்தில் பணியாற்ற முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதனை பற்றிய அறிவிப்புகள் மிக விரைவில் அறிவிக்கப்படும்.

Sivakarthikeyan next film with Lyca

ஆஸ்கர் போட்டியில் களமிறங்கியது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’

ஆஸ்கர் போட்டியில் களமிறங்கியது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Soorarai Pottru (2)இந்தியத் திரையுலகினர் மத்தியில் கொண்டாடப்பட்ட படம் ‘சூரரைப் போற்று’. சூர்யாவின் அசுரத்தமான நடிப்பு, அபர்ணாவின் யதார்த்தம், சுதா கொங்கராவின் துல்லியமான இயக்கம், ஜி.வி.பிரகாஷின் ஆர்ப்பரிக்கும் இசை, நிக்கத் பொம்மியின் யதார்த்தமான ஒளிப்பதிவு என அனைத்து பிரிவுகளிலும் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது.

கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தமிழ்ப் படம் என்ற அபார சாதனையைப் படைத்தது.

தற்போது ‘சூரரைப் போற்று’ படக்குழுவினரின் அபாரமான உழைப்புக்கு மேலும் பெருமைச் சேர்க்கும் வகையில் ஆஸ்கர் போட்டியில் களமிறங்கியுள்ளது.

இந்த முறை கொரோனா அச்சுறுத்தலால் ஆஸ்கர் போட்டியில் பல மாற்றங்களைச் செய்துள்ளனர்.

ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் கூட ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம்.

அந்த வரிசையில் பொதுப்பிரிவில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் போட்டியிடுகிறது.

இந்தப் போட்டியில் தேர்வாகி பரிந்துரை பட்டியலில் இடம்பெறவேண்டும்.

அதனைத் தொடர்ந்து யார் வெற்றியாளர் என்பதை ஆஸ்கர் மேடையில் அறிவிப்பார்கள்.

இப் பொதுப்பிரிவுப் போட்டியில் ‘சூரரைப் போற்று’ திரையிடலுக்காக அகாடமி திரையிடல் அறையில் அப்லோட் செய்யப்பட்டுள்ளது.

இந்த அறையில் உள்ள படத்தை ஆஸ்கர் குழு உறுப்பினர்கள் பலரும் பார்த்து எந்தெந்த பிரிவில் இந்தப் படத்தைத் தேர்வு செய்யலாம் என்பதை முடிவு செய்வார்கள்.

உலக திரையுலகினரின் பாராட்டுகளை அள்ளிய ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஆஸ்கர் குழு உறுப்பினர்களின் பாராட்டுகளையும் அள்ளும் என்பதில் படக்குழுவினர் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்” என்று கூறினார் படத்தின் இனண தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன்.

Suriya’s Soorarai Pottru enters the oscars race

டிஜிட்டல் ப்ரீமியர் அமேசான் ப்ரைம் வீடியோவில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்

டிஜிட்டல் ப்ரீமியர் அமேசான் ப்ரைம் வீடியோவில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Masterசேவியர் ப்ரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ள ‘மாஸ்டர்’ படத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரமியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான மாஸ்டர் படத்தின் பிரத்யேக டிஜிட்டல் வெளியீட்டை இந்தியா உள்ளிட்ட 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள ப்ரைம் சந்தாதாரர்கள் வரும் ஜனவரி 29 முதல் காணலாம்.

மும்பை, இந்தியா, 27 ஜனவரி 2021 – அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான மாஸ்டர் திரைப்படம் வரும் ஜனவரி 29 அன்று பிரத்தியேகமான டிஜிட்டலில் வெளியாகும் என்று அமேசான் ப்ரைம் வீடியோ இன்று அறிவித்துள்ளது.

‘மாஸ்டர்’ திரைப்படத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரமியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த மாஸ்டர் திரைப்படத்தில் இரு சூப்பர்ஸ்டார்களான தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி கதாபாத்திரங்களுக்கு இடையே மோதல் பார்வையாளர்களைச் சீட்டின் நுனிக்கு கொண்டு வரக்கூடியவை. இந்தியா உள்ளிட்ட 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள ப்ரைம் சந்தாதாரர்கள் வரும் ஜனவரி 29, 2021 முதல் மாஸ்டர் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் கண்டு மகிழலாம்.

இது குறித்து அமேசான் ப்ரைம் வீடியோவின் இந்திய பிரிவு தலைவரும், இயக்குநருமான விஜய் சுப்ரமணியம் கூறுகையில், ‘அமேசான் ப்ரைம் வீடியோவில் மாஸ்டர் படம் வெளியாவது பற்றி அறிவிப்பில் நாங்க பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படங்களில் ஒன்று மாஸ்டர்.

இந்தியா உள்ளிட்ட 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள ப்ரைம் சந்தாதாரர்களுக்கு இந்த மாதம் இப்படத்தை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த டிஜிட்டல் பிரீமியர் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவில் மட்டுமன்றி, உலகமெங்கும் உள்ள தங்களின் வீடுகளின் பாதுகாப்பு மற்றும் வசதியிலிருந்து இந்த சமீபத்திய தமிழ் பிளாக்பஸ்டர் திரைப்படத்தை ரசிப்பதற்கான தேர்வை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.’ என்றார்

இப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து தளபதி விஜய் கூறியுள்ளதாவது: இப்படத்தில், குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஜான் துரைராஜ் என்ற ஒரு கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன்.

ஒரு சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்படும் அவர், அங்குத் தனது எதிரியான பவானியைச் சந்திக்கிறார். விஜய் சேதுபதி ஏற்று நடித்திருக்கும் பவானி கதாபாத்திரம் அந்தப் பள்ளிக் குழந்தைகளைத் தனது சொந்த லாபத்துக்காகப் பயன்படுத்தி வருகிறார். ஜான் மற்றும் பவானிக்கும் இடையிலான சுவாரஸ்ய மோதல்கள் பார்வையாளர்களுக்கு ஒரு ஆக்‌ஷன் ரோலர் கோஸ்டர் பயணமாக இருக்கும் என உறுதியளிக்கிறேன்.

இந்தியா மற்றும் உலகம் முழுவதுமுள்ள ரசிகர்கள் அமேசான் ப்ரைம் விடியோவில் இப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் பார்த்து ரசிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.’ இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

தனது படத்தின் டிஜிட்டல் வெளியீடு குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளதாவது…

மாஸ்டர் படம் இரண்டு வலிமையான நடிகர்கள் நேருக்கு நேர் மோதும் காட்சிகளைக் கொண்டுள்ளது.

இது மக்களை திரையரங்குகளுக்கு வந்து படம் பார்க்கச் செய்யும் காரணிகளாக அமைந்துள்ளது.

எனினும், அமேசான் ப்ரைம் வீடியோவில் இப்படம் உலகம் முழுவதும் வெளியாவதன் மூலம் வீட்டில் உள்ள பார்வையாளர்களையும், சாத்தியமற்ற பகுதிகளையும் அடைய நாங்கள் விரும்புகிறோம்.

என் படம் அமேசான் ப்ரைம் வீடியோவின் மூலம் உலகளாவிய அளவில் வெளியாவது ஒரு இயக்குநராக மிகவும் திருப்தியாக உள்ளது. வரும் ஜனவரி 29 முதல் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இப்படத்தைக் கண்டு ரசிக்கலாம்.

கதைச் சுருக்கம்:

சிறுவர் சீர்திருத்தப் பள்ளி ஒன்றுக்கு அனுப்பப்படும் குடிபோதைக்கு அடிமையான பேராசிரியர் ஒருவருக்கு, அந்த பள்ளியின் குழந்தைகளைக் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தி வரும் கேங்க்ஸ்டர் ஒருவருடன் மோதல் ஏற்படுகிறது…

Master will have a digital premiere on Prime Video from January 29th

எஸ்.பி.பாலசுப்ரமணியமுக்கு பத்ம விபூஷன்.. சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ..; தமிழகத்தில் 11 பேருக்கு பத்ம விருதுகள்.!

எஸ்.பி.பாலசுப்ரமணியமுக்கு பத்ம விபூஷன்.. சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ..; தமிழகத்தில் 11 பேருக்கு பத்ம விருதுகள்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமூகச் சேவை, கல்வி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், விளையாட்டு, பொதுவாழ்வு, கலை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகள் இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.

பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ என்ற மூன்று பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவை இந்திய அரசின் உயர்ந்த விருதாக கருதப்படுகின்றன.

தற்போது இன்று ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுபவர்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி.., பத்ம விபூஷன் விருது ஜப்பான் பிரதமர் ஷின்சா அபே, மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உள்ளிட்ட ஏழு பேருக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம பூஷன் விருது மறைந்த அசாம் மாநில முதல்வர் தருண் கோகாய், மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட 10 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம ஸ்ரீ விருது தமிழகத்தைச் சேர்ந்த சாலமன் பாப்பையா, அனிதா, சுப்பு ஆறுமுகம், ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட 102 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் பத்ம விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Complete List of Padma awardees 2021

*Padma Vibhusan*

Shri Shinzo Abe – Public Affairs – Japan

Shri S P Balasubramaniam (Posthumous) – Art – Tamil Nadu

Dr. Belle Monappa Hegde – Medicine – Karnataka

Shri Narinder Singh Kapany (Posthumous) – Science and Engineering – United States of America

Maulana Wahiduddin Khan – Others – Spiritualism – Delhi

Shri B. B. Lal Others – Archaeology – Delhi

Shri Sudarshan Sahoo – Art – Odisha

*Padma Bhushan (10)*

Ms. Krishnan Nair Shantakumari Chithra – Art – Kerala

Shri Tarun Gogoi (Posthumous) – Public Affairs – Assam

Shri Chandrashekhar Kambara – Literature and Education – Karnataka

Ms. Sumitra Mahajan – Public Affairs – Madhya Pradesh

Shri Nripendra Misra – Civil Service – Uttar Pradesh

Shri Ram Vilas Paswan (Posthumous) – Public Affairs Bihar

Shri Keshubhai Patel (Posthumous) Public Affairs Gujarat

Shri Kalbe Sadiq (Posthumous) Others-Spiritualism Uttar Pradesh

Shri Rajnikant Devidas Shroff Trade and Industry Maharashtra

Shri Tarlochan Singh Public Affairs Haryana

padma-award-2021_1611592631

‘மாஸ்டர்’ படம் விஜய்சேதுபதி படமா.? மக்கள் செல்வன் கொடுத்த நெத்தியடி பதில்

‘மாஸ்டர்’ படம் விஜய்சேதுபதி படமா.? மக்கள் செல்வன் கொடுத்த நெத்தியடி பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

master vijay sethupathiசெங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட கார் சர்வீஸ் சென்டர் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நடிகர் விஜய்சேதுபதி.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது மாஸ்டர் படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

“விஜய், லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித்குமார், மக்களுக்கு ரொம்ப நன்றி.

மீண்டும் திரையரங்குக்கு மக்கள் வந்துள்ளனர். இது நிறைய பேருக்கு நம்பிக்கையை தொடங்கி வைத்துள்ளது.

‘மாஸ்டர்’ என்றாலே விஜய்சேதுபதி படம் என்று ஒரு சிலர் கூறுகிறார்களே என ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

“இந்தக் கேள்வியே அவசியமில்லாதது. விஜய்யால் மட்டும் தான் அந்தப் படம் இவ்வளவு சிறப்பாக வந்தது.”

இவ்வாறு விஜய்சேதுபதி கூறினார்..

Makkal Selvan Vijay sethupathi praises Thalapathy Vijay

More Articles
Follows