கஜானா-வை நிரப்ப பான் இந்தியா படத்தில் யோகி பாபு வேதிகா இனிகோ

கஜானா-வை நிரப்ப பான் இந்தியா படத்தில் யோகி பாபு வேதிகா இனிகோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காமெடி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் பல ஹிட் படங்களை கொடுத்து வரும் யோகி பாபு, முதல் முறையாக பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்கிறார்.

‘வீரப்பனின் கஜானா’ என்ற தலைப்பில் வளர்ந்து வந்த இப்படம் தற்போது ‘கஜானா’ என்ற பெயர் மாற்றத்துடன் பான் இந்தியா திரைப்படமாக ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையான தரத்தில் சாகச காட்சிகள் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகிறது.

‘இண்டியானா ஜோன்ஸ்’, ‘நேஷ்னல் டிரஸ்சர்’ போன்ற சாகச ஹாலிவுட் படங்களுக்கு இணையான, மாயமந்திர காட்சிகளும், யானை, புலி, பாம்பு போன்ற மிருகங்களின் சாகசக் காட்சிகளோடு மிக பிரம்மாண்டமான சாகச திரைப்படமாக உருவாகிறது.

இதில் வேதிகா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இதுவரை நடனத்திற்காக பாராட்டு பெற்ற வேதிகா, இப்படத்தில் அதிரடி ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருப்பதோடு பல சாகச காட்சிகளிலும் நடித்திருக்கிறார்.

அந்த காட்சிகள் படத்திற்கு கூதல் பலம் சேர்த்திருப்பதோடு, ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில் வந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்.

வேதிகா ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருப்பதோடு, ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் அழகில் கிரங்கடிக்கவும் செய்வார்.

மேலும், இனிகோ பிரபாகர், யோகி பாபு, பிரதாப் போத்தன், வேலு பிரபாகரன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் (Four Squar Studios) நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி பிரபாதிஸ் சாம்ஸ் இயக்குகிறார்.

VFX தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகியுள்ள இப்படத்தில் பிரபல ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்ற இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய முழு விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

இப்படத்தின் முந்தைய தலைப்பால் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், தற்போது ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுவது மற்றும் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருவது பற்றிய தகவல்கள் வெளியானதால் இப்படத்தை பற்றி கோலிவுட் பிரபலங்களும் பேச தொடங்கியிருக்கிறார்கள்.

Yogi Babu Vedihka Inigo Prabakar in the film Pan India

பயில்வான் வீடியோஸ்.: கார்த்திக் தனுஷ் வெங்கட்பிரபு செய்த சதி.; பாடகி சுசீத்ரா போலீசில் புகார்

பயில்வான் வீடியோஸ்.: கார்த்திக் தனுஷ் வெங்கட்பிரபு செய்த சதி.; பாடகி சுசீத்ரா போலீசில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகி சுசித்ரா (42). பாடகி, ரேடியோ ஜாக்கி என பணியாற்றியவர். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 100 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

இவர் ரேடியோ மிர்ச்சியில் “ஹலோ சுசி” நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் பணியாற்றியவர்.

இந்த நிலையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சுசீ அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது…

“யு டியூப்’ சேனலில் பயில்வான் ரங்கநாதன் என்பவர், என்னை பற்றி மிகவும் கீழ்த்தரமாக பேசி, வீடியோ வெளியிட்டு உள்ளார்.

‘மனநலம் பாதிக்கப்பட்டவர்; போதைக்கு அடிமையானவர். வாய்ப்புக்காக, பாலியல் இச்சைக்கு உடன்படுபவர்’ என, எவ்வித ஆதாரமும் இல்லாமல் பேசியுள்ளார். இதனால், மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன்.

பயில்வான் ரங்கநாதனை தொடர்பு கொண்டு, ‘என் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளீர்கள்; அதற்கான ஆதாரங்களை தாருங்கள்’ என்று கேட்டேன்.

அவரிடம் இருந்து, எந்த பதிலும் இல்லை. எனக்கும், அலைபாயுதே உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் கார்த்திக்குமார் என்பவருக்கும் திருமணம் நடந்தது. நாங்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம்.

இந்நிலையில், 2017ல் என், ‘ட்விட்டர்’ பக்கம் முடக்கப்பட்டது. பின்னர், டுவிட்டரில், ‘சுசிலீக்ஸ்’ என, கணக்கு துவங்கி, நடிகர், நடிகையரின் அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டனர்.

இதன் பின்னணியில், என் முன்னாள் கணவர் கார்த்திக் குமார், நடிகர் தனுஷ், இயக்குனர் வெங்கட்பிரபு உள்ளிட்டோர் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதுபற்றி போலீசில் புகார் அளித்தேன்.

மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர். அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானதால், என் சினிமா வாய்ப்புகள் பறிபோயின; வருமானமும் நின்று போனது.

தற்போது, என்னை பற்றி பயில்வான் ரங்கநாதன், அவதுாறு வீடியோ வெளியிட்டதன் பின்னணியில், கார்த்திக்குமார், தனுஷ், வெங்கட்பிரபு உள்ளிட்டோர் இருக்கலாம் என, சந்தேகம் எழுகிறது.

தனுஷுக்கு வேண்டிய நபர்கள், ஏற்கனவே என் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். நான் தனியாக வசித்து வருகிறேன். இவர்களால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. பயில்வான் ரங்கநாதன் மற்றும் அவருக்கு பின்னணியில் இருக்கும் நபர்கள் பற்றி தீர விசாரித்து, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

சுசிலீக்ஸ் கேள்வியால் தனுஷ் டென்ஷன்; என்ன செய்தார் தெரியுமா?

இவ்வாறு புகாரில் கூறியுள்ளார் பாடகி சுசீத்ரா.

கூடுதல் தகவல்..

நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது தொடர்ந்து புகார்கள் வருவதால் இது தொடர்பான விசாரணையை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர். மேலும் அவர் பல யூடியூப் சேனலில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி வருவதால் அந்த யூடியூப் சேனல் விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Singer Suchitra complains to police

அருள்நிதி பிறந்த நாளில் தியேட்டர்களில் ரிலீசாகும் ‘தேஜாவு’

அருள்நிதி பிறந்த நாளில் தியேட்டர்களில் ரிலீசாகும் ‘தேஜாவு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இணை தயாரிப்பில் நாயகனாக அருள்நிதி நடித்து வரும் திரைப்படம் ‘தேஜாவு’.

இப்படத்தினை அறிமுக இயக்குனரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்மிருதி, ராகவ் விஜய், சேத்தன், ‘மைம்’ கோபி, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் படக்குழுவினர் வெளியீட்டிற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் படத்தின் நாயகனான அருள்நிதியின் பிறந்த நாளான ஜுலை 21-ம் தேதி வெளியிடவிருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, PG முத்தையா ஒளிப்பதிவை மேற்கொள்ள, படத்தொகுப்பாளராக அருள் E சித்தார்த், சண்டை பயிற்சியாளராக பிரதீப் தினேஷும் கலை இயக்குனராக வினோத் ரவீந்திரனும் பணியாற்றியுள்ளனர்.

‘Tejavu’ to be released in theaters on Arulnithi’s birthday

தயாரிப்பாளராகி சன்னி லியோனுடன் ஆட்டம் போடும் நடிகர் விஷ்ணு மஞ்சு

தயாரிப்பாளராகி சன்னி லியோனுடன் ஆட்டம் போடும் நடிகர் விஷ்ணு மஞ்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு மஞ்சு.

இவர் தயாரிப்பாளர் தொழிலதிபர் என பன்முக திறன் கொண்டவராகவும் வலம் வருகிறார். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய தரமான திரைப்படங்களில் நடித்து வருவதோடு, ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ஏ வி ஏ எண்டர்டெயின்மெண்ட் என்ற புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை விஷ்ணு மஞ்சு தொடங்கியுள்ளார்.

இந்நிறுவனம் மூலம் திறமை மிக்க புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதோடு, வித்தியாசமான முயற்சிகள் மற்றும் புதிய சிந்தனைகளுக்கு வாய்ப்பளித்து ஊக்கம் அளிக்க விஷ்ணு மஞ்சு முடிவு செய்துள்ளார்.

மேலும், இந்நிறுவனம் மூலம் திரைப்படங்கள் தயாரிப்பு மட்டும் இன்றி இணைய தொடர்கள், ஆவணப்படங்கள், டாக்குமெண்டரி மற்றும் சர்வதேச தரத்திலான குறும்படங்கள் தயாரிப்புகளில் ஏ வி ஏ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ஈடுபட உள்ளது.

ஏ வி ஏ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் முதல் படமே மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமான ஃபான் இந்தியா திரைப்படமாக உருவாகுகிறது.

விஷ்ணு மஞ்சு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் சன்னி லியோன், பயல் ராஜ்புட் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கிறார்கள்.

தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் உருவாகும் இப்படம் விஷ்ணு மஞ்சுவின் 19 அது திரைப்படமாகும்.

இந்த புதிய நிறுவனம் வரும் இன்று ஜூன் 10 ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது. திரைப்பட தயாரிப்பில் ஈடுபட உள்ள இந்த நிறுவனத்துடன், ஏ வி ஏ மியூசிக் மற்றும் ஏ வி ஏ ஸ்டுடியோஸ் என்ற நிறுவனங்களையும் விஷ்ணு மஞ்சு தொடங்குகிறார்.

ஏ வி ஏ மியூசிக் நிறுவனம் மூலம் சுயாதீன தனி இசை பாடல்கள், இசை ஆல்பங்கள் மற்றும் தரமான மற்றும் ரசிகர்களுக்கான இசை படைப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

ஏ வி ஏ ஸ்டுடியோஸ் மூலம் சினிமா துறைக்கான அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதோடு, தொழில்நுட்ப ரீதியிலான தரம் மிக்க திரைப்படங்களை உருவாக்கி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

ஏ வி ஏ நிறுவனம் மூலம் ஒட்டு மொத்த பொழுதுபோக்கு துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்த வரும் ஏ வி ஏ நிறுவனம் பற்றிய மேலும் பல தகவல்களை நிறுவனத்தின் தொடக்க நாளான ஜூன் 10ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

Sunny Leone and Vishnu Manchu joins for a new film

ஜெயம் ரவி பிரியா தன்யா இணைந்துள்ள ‘அகிலன்’ படத்தின் அதிர வைக்கும் டீஸர்

ஜெயம் ரவி பிரியா தன்யா இணைந்துள்ள ‘அகிலன்’ படத்தின் அதிர வைக்கும் டீஸர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பூலோகம்’ படத்துக்கு பிறகு இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் மற்றும் ஜெயம் ரவி கூட்டணியில் புதிய படம் உருவாகியுள்ளது.

‘அகிலன்’ என்ற இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் தான்யா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நாயகிகளாக நடித்திருக்கின்றனர்.

சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படம் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நிச்சயம் அதிகரிக்கும் என நம்பலாம்.

Jayam Ravi starrer Agilan official trailer is out now

ரோலக்ஸ் எஃபெக்ட் : லோகேஷ் இயக்கத்தில் விஜய்யுடன் இணையும் தனுஷ்

ரோலக்ஸ் எஃபெக்ட் : லோகேஷ் இயக்கத்தில் விஜய்யுடன் இணையும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்‘ படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இதனால் கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதனால் சூர்யா குடும்பத்தினரும் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர்.

இது விக்ரம் 3 திரைப்படத்திற்கான லீடு கேரக்டர் என கூறப்படுகிறது.

இதனிடையில் ‘விக்ரம்’ படத்தை முடித்துவிட்டு விரைவில் தளபதி 67 படத்தை இயக்கவிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

இதன்மூலம் விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணி ‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு மீண்டும் இணைகிறது.

இந்த நிலையில் ரோலக்ஸ் சார் கதாபாத்திரம் போல தளபதி 67 படத்திலும் மிகப்பெரிய ட்விஸ்ட் கேரக்டர் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளாராம் லோகேஷ்.

இந்த கேரக்டரில் நடிக்க தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இது யார் கொளுத்தி போட்ட செய்தியோ.? ஆனால் பயங்கர வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

Rolex Effect: Dhanush joins Vijay in Lokesh direction

More Articles
Follows