நடன இயக்குநர் ராபர்ட் & அன்பு மயில்சாமி இணைந்த ‘அல்டி’..; தியேட்டர்களில் அசத்தல்

நடன இயக்குநர் ராபர்ட் & அன்பு மயில்சாமி இணைந்த ‘அல்டி’..; தியேட்டர்களில் அசத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil film Altiதமிழ் சினிமாவின் இணையற்ற நகைச்சுவை நடிகர்களில் மயில் சாமி அவர்களுக்கும் முக்கிய பங்குண்டு. இந்நிலையில் அவருடைய மகன் அன்பு மயில்சாமி கடந்த நவம்பர் 27ம் தேதி திரைக்கு வந்த ‘அல்டி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது தடத்தை பதித்துள்ளார்.

‘அல்டி’ என்ற இந்த படத்தை அறிமுக இயக்குனர் எம்.ஜெ.உசேன் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 27ம் தேதி வெளியான இந்த திரைப்படம் தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த வாரம் வெளியான படங்களில் ‘அல்டி’ மிகவும் பேசப்படுகின்ற படமாக வெற்றிநடை போட்டு வருகின்றது.

முதல் திரைப்படம் என்ற பிம்பத்தில் இருந்து மாறுபட்டு இயக்குநர் எம்.ஜெ.உசேன் இந்த படத்தை திரில்லர் கலந்த காதல் திரைப்படமாக அளித்துள்ளார்.

மக்களுக்கு தேவையான கருத்துக்களுடன் ஜனரஞ்சகமான ஒரு படமாக ‘அல்டி’ கலக்கி வருகின்றது.

அறிமுக படம் என்றபோது, மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்துள்ளார் அன்பு மயில்சாமி. நடன இயக்குநர் ராபர்ட் தான் நடித்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் என்றால் அது மிகையல்ல.

மொத்தத்தில் மக்கள் ரசிக்கும் அசத்தல் திரைப்படமாக அல்டி அசத்தி வருகின்றது.

Anbu Mayilsamy’s Alti gets good response from public

டிஎஸ்கே காமெடி நடிகரே இல்லை ; ‘புனிதன்’ குறித்து ஆதவன் பேச்சு

டிஎஸ்கே காமெடி நடிகரே இல்லை ; ‘புனிதன்’ குறித்து ஆதவன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகில் நம்பிக்கை தரும் நகைச்சுவை நடிகராக முன்னேறி வருபவர் திருச்சி சரவணக்குமார் என்கிற டிஎஸ்கே.. சின்னத்திரையில் வளர்ந்து வந்த நேரத்தில், தமன்னா நடித்த காமெடி ஹாரர் படமான பெட்ரோமாக்ஸ் படம் மூலம் லைம்லைட்டுக்குள் வந்த இவர், தற்போது பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் சற்றே வித்தியாசமான முயற்சியாக ‘புனிதன்’ என்கிற பைலட் படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார் டிஎஸ்கே.

டாப் வியூ என்டர்டெய்ன்மென் சார்பில், வினோத் தயாரிப்பில், உருவாகியுள்ள இந்தப்படத்தை, இயக்குநர் பாபி ஜார்ஜ் இயக்கியுள்ளார்.

இவர் பிரம்மா உள்ளிட்ட படங்களில், உதவி இயக்குனராக பணியாற்றியவர். 28 நிமிடம் ஓடும் பைலட் பிலிமாக உருவாகியுள்ள, இந்த புனிதன் படத்தின் திரையிடல் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், படக்குழுவினருடன் நடிகர்கள் காளி வெங்கட், முனீஸ்காந்த், ஜெய்வந்த், ஆதவன், ஜார்ஜ், இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இசையமைப்பாளர் ரமேஷ், தயாரிப்பாளர் சங்கத்தின் (கில்ட்) கௌரவ செயலாளர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

இயக்குனர் பாபி ஜார்ஜ் பேசும்போது….

“இது ஒரு முழுநீள திரைப்படமாக எடுக்கப்போகும் கதை.. தயாரிப்பாளருக்காக, தற்போது இதை பைலட் பிலிமாக எடுத்துள்ளோம்.

கதை வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, நிறைய விஷயங்களை மறைத்து தான், படமாக்கியுள்ளோம்.

இதன்மூலம் நாயகன் டிஎஸ்கே மற்றும் படத்தில் நடித்த பலருக்கும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறேன்” என்று கூறினார்.

நாயகன் டிஎஸ்கே பேசும்போது, “இந்தக் படத்தின் இயக்குநர் பாபி ஜார்ஜ் என்னை போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னபோது, எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது.. காமெடியாக நடித்துவரும் நான், போலீஸ் கேரக்டரில் நடித்தால், அது காமெடியாக போய்விடக்கூடாது என்கிற பயம் இருந்தது.

ஆனால், “இது ஹீரோ கதாபாத்திரம் அல்ல படத்திலுள்ள மற்ற கதாபாத்திரங்கள் போல, இதுவும் ஒன்று என, நினைத்துக்கொண்டு நடியுங்கள், அதுமட்டுமல்ல, ஏற்கனவே காமெடியாக நடித்துள்ளீர்கள் சீரியஸ் கதாபாத்திரங்களையும் முயற்சித்துப் பார்க்கலாமே என்று இயக்குநர் பாபி ஜார்ஜ் என்னை ஊக்கப்படுத்தினார்” என்றார் டிஎஸ்கே.

நடிகர் காளி வெங்கட் பேசும்போது, “நீண்ட நாட்களாகவே, இதை முழு நீள திரைப்படம் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன்.. இங்கே வந்தபோது தான், இது பைலட் படம் என்பது தெரியவந்தது.. நான், நிறைய குறும்படங்களில், நடித்திருக்கிறேன்.

ஆனால், அது முழுநீள திரைப்படமாக மாறியபோது, அதில் நடிக்க, எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.. இந்த படத்தின் இயக்குநர், கண்டிப்பாக டிஎஸ்கேவை வைத்து, இதை முழுநீள திரைப்படமாக எடுக்க வேண்டும்” என்று வேண்டுகோள் ஒன்றை வைத்தார்..

நடிகர் முனீஸ்காந்த் பேசும்போது, “பெட்ரோமாக்ஸ் படத்தில் நடிக்கும்போது தான், டிஎஸ்கே அறிமுகமானார்.. என்றாலும், சமீபத்தில் விஜய் டிவியில் நடைபெற்ற ஒரு தெருக்கூத்து நிகழ்ச்சியில், அவரது நடிப்பை பார்த்து மிரண்டு போனேன்.. அவருக்குள் உணர்ச்சிகரமான நடிப்பு இருப்பது, அப்போதுதான் தெரிந்தது. இந்த புனிதன் படத்திலும் அதே உணர்வைத்தான் வெளிப்படுத்தியுள்ளார்” என்று பாராட்டினார்

நடிகர் ஆதவன் பேசும்போது…,

“நான் ஒரு காமெடி நடிகர், என்னை சீரியஸான கதாபாத்திரத்தில், மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என, நண்பன் டிஎஸ்கே சந்தேகமாக, ஒரு கேள்வி கேட்டார். ஆரம்பத்திலேயே, அவரிடம் நான் சொல்லவேண்டும் என நினைத்தேன், அவர் ஒரு காமெடி நடிகரே கிடையாது.. ரொம்ப சீரியஸான ஒரு நடிகர் என்று.., சமீபத்தில் நடைபெற்ற, தெருக்கூத்து கலை நிகழ்ச்சியில் டிஎஸ்கேவின் நடிப்பை பார்த்தபோது அதை முழுதாக உணர்ந்தேன்.. ஒரு நகைச்சுவை கலைஞரால் அவ்வளவு சீரியஸாக மாற முடியாது.. டிஎஸ்கே, ஒரு உணர்வுப்பூர்வமான நடிகர்.. அவருக்கு ஒரு மிகப்பெரிய, நல்ல இடம் கிடைக்க வேண்டும் என்பது, என்னுடைய ஆசை.. எங்களை மாதிரி டிவி நடிகர்களை வைத்து, பைலட் பிலிம் மட்டும்தான் எடுப்பார்கள்.. ஆனால், அது பெரிய படமாக மாறும்போது, வேறு யாருக்கோ, அந்த வாய்ப்புகள் போய்விடும், இந்த படத்தின் இயக்குநர் பாபி ஜார்ஜ், டிஎஸ்கேவை கதாநாயகனாக வைத்தே, இதை முழு நீள திரைப்படமாக இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்

*நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்*

நடிகர்கள் ; டிஎஸ்கே, சௌமியா, ராஜேஷ், ஹரிஷ், அசார், அப்பு, கோபி
இயக்குனர் ; பாபி ஜார்ஜ்
ஒளிப்பதிவு ; மகேஷ்
இசை ; ஜோஷுவா பாபு
படத்தொகுப்பு ; A.மணிகண்டன் & லிங்கராஜ்
Sfx: பாபி பாபா பிரசாத்
Vfx: தேஸு dft
தயாரிப்பாளர்கள் ; வினோத் – மூர்த்தி பூங்கொடி

Actor Aadhavan speech at Punithan movie press meet

aadhavan

இந்த நீலம் சிவப்பு..; BLUE INK படத்தை இயக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்

இந்த நீலம் சிவப்பு..; BLUE INK படத்தை இயக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் பல படங்களில் அம்மாவாக நடித்தவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.

ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி என வித்தியாசமான படங்களை இயக்கிவயர் லட்சுமி ராமகிருஷ்ணன்,

இறுதியாக இவர் இயக்கிய படம் ஹவுஸ் ஓனர்.

ஒவ்வொரு படத்தில் ஒரு கருத்தை மையமாக வைத்து இயக்கியிருப்பார்.

ஆரோகணம் படத்தில் ஒரு தாயின் பாசத்தையும் நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் ஒரு துரத்திக் கொண்டே இருக்கும் காதலையும் சொன்னார்.

அம்மணி படத்தில் பெரியவர்களின் சமூக பிரச்சனைகளையும், ஹவுஸ் ஓணர் படத்தில் சென்னை வெள்ளத்தையும் திரைக்கதையாக அமைத்திருத்தார்.

இவர் அடுத்து இயக்கவுள்ள படம் ப்ளூ இங்க். இதில் இளம் பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை பற்றி பேசவுள்ளார்.

இந்த படத்தின் தலைப்பு அருகே துணை தலைப்பாக இந்த நீலம் சிவப்பு என குறிப்பிட்டுள்ளார் லட்சுமி.

Lakshmi Ramakrishnan’s next film is titled Blue Ink

Blue Ink

ஹிந்தி & தெலுங்கு கன்பார்ம்.. தமிழில் கமல் / ரஜினி..? ராஜமௌலிக்கு ஓகே சொல்பவர் யார்?

ஹிந்தி & தெலுங்கு கன்பார்ம்.. தமிழில் கமல் / ரஜினி..? ராஜமௌலிக்கு ஓகே சொல்பவர் யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாகுபலி படங்களுக்கு பிறகு ராஜமவுலி இயக்கத்தில் மெகா பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் ‘ஆர்ஆர்ஆர்’.

இதில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த படம் இந்தியாவில் உள்ள பல மொழிகளில் அடுத்தாண்டு வெளியாகவுள்ளது.

எனவே படத்தில் கேரக்டர்களை அறிமுகப்படுத்த பின்னணிக் குரல் ஒலிக்கவுள்ளது.

இதற்கு பிரபலமான நடிகர்களைக் கேட்டு வருகிறார் ராஜமௌலி.

தெலுங்கில் சிரஞ்சீவியும், ஹிந்தியில் ஆமீர் கானும் குரல் கொடுக்கவுள்ளனர்.

மலையாளத்தில் மோகன்லால் அல்லது மம்மூட்டி யாரேனும் குரல் கொடுக்க வாய்ப்புள்ளது.

தமிழில் ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசன் ஆகிய இருவரில் ஒருவரை அனுக வாய்ப்புள்ளது. இருவரில் யார் ராஜமௌலிக்கு ஓகே சொல்வார்கள் என பார்ப்போம்.

Kamal or Rajini to lend thier voice for RRR The movie ?

rajamouli rrr poster

ரசிகரை நேரில் அழைத்த நிவேதா..; இப்படியொரு வெறித்தனமா? விட்டா கோயில் கட்டிடுவாரோ?

ரசிகரை நேரில் அழைத்த நிவேதா..; இப்படியொரு வெறித்தனமா? விட்டா கோயில் கட்டிடுவாரோ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவான அழகே அடியே.. அடியே அழகே.. என்ற பாடலை பாடாத தமிழர்களே இல்லை எனலாம்.

அந்த பாடல் ஒரு நாள் கூத்து என்ற படத்தில் இடம் பெற்றது. இதில் நாயகியாக நிவேதா பெத்துராஜ் அறிமுகமானார்.

இதன்பின்னர் டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் கவர்ந்தார்.

தற்போது தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

இவரின் தீவிர ரசிகர் பிரபு என்பவர் நிவேதா பெத்துராஜ் என்ற பெயரை தனை கையில் பச்சை குத்திக் கொண்டுள்ளார்.

இதனை கேள்விப்பட்ட நிவேதா அந்த ரசிகரை பாண்டிச்சேரிக்கு அழைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அவருடன் சிறிது நேரம் பேசி அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டுள்ளார் நிவேதா.

A die-hard fan of Nivetha Pethuraj has tattooed her name on his forearm

2020-11-30 (1)

2020-11-30

இந்திய அளவில் ‘கே.ஜி.எஃப்’ தயாரிப்பு நிறுவனம் நிகழ்த்தவுள்ள சாதனை

இந்திய அளவில் ‘கே.ஜி.எஃப்’ தயாரிப்பு நிறுவனம் நிகழ்த்தவுள்ள சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்கள் எடுக்கும் நிறுவனங்கள் மிகவும் குறைவே. அதிலும் அனைத்து மொழிகளிலும் வெளியிடுவது போன்ற படங்களைத் தயாரிப்பது அரிதினும் அரிதே.

‘கே.ஜி.எஃப் சேப்டர் 1′ (KGF : Chapter 1’) படத்தைத் தயாரித்து, அதை அனைத்து மொழிகளிலும் வெளியிட்டு பிரம்மாண்ட வெற்றி கண்ட நிறுவனம் ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films).
கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டார்களான புனித் ராஜ்குமார் (Puneeth Rajkumar) நடித்த ‘நின்னிந்தலே’ (Ninnindale), ‘ராஜ்குமாரா’ (Raajakumara) மற்றும் யஷ் (Yash) நடித்த ‘மாஸ்டர் பீஸ்’ (Masterpiece) உள்ளிட்ட படங்களைத் தயாரித்தது ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films).

இதில் கன்னட திரையுலகில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையைப் புரிந்தது ‘ராஜ்குமாரா’ (Raajakumara) திரைப்படம்.

இதனைத் தொடர்ந்து இந்திய அளவில் தன்னுடைய நிறுவனத்தை வளர்க்க முடிவு செய்தார் ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films) நிறுவனர் விஜய் கிரகண்தூர் ( Vijay Kiragandur )
இதற்காக ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films) தயாரித்த படம் தான் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1′ (KGF : Chapter : 1’ ) பிரஷான்த் நீலின் (Prashanth Neel) அட்டகாசமான இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் யஷ் (Yash) நடித்த ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1′ (KGF : Chapter 1’) வசூல் இந்தியத் திரையுலகில் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, கதை, வசனம் என அனைத்து பிரிவுகளிலும் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டது ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1′ (KGF : Chapter 1’)

இப்படம் வெளியான 4 நாட்களிலேயே அதிக வசூல் செய்த கன்னடப் படம் என்ற மாபெரும் சாதனையையும் நிகழ்த்தியது. இந்திய அளவில் பரிச்சயமான தயாரிப்பு நிறுவனமாகவும் வளர்ந்தது ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films)
தற்போது ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films) நிறுவனம் அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது.

தொடர்ச்சியாக 3 படங்களின் தயாரிப்பில் பணிபுரிந்து வருகிறது.

கன்னடம் மற்றும் தெலுங்கில் புனித் ராஜ்குமார் ( Puneeth Rajkumar) நடித்து வரும் ‘யுவரத்னா’ (Yuvarathnaa), ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2′ ( KGF: Chapter 2’) மற்றும் இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குனரும் இணையும் படம் ஆகியவை தயாரிப்பில் உள்ளன.
இந்தியத் திரையுலகில் ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடர்ச்சியாக, அனைத்து மொழிகளிலும் தயாராகும் 3 படங்களைத் தயாரித்ததில்லை. அந்த சாதனையை இப்போது ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films) நிகழ்த்தியுள்ளது.

அனைத்து மொழிகளிலும் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1′ ( KGF : Chapter 1’) படத்தை வெளியிட்டு வெற்றி கண்டதைத் தொடர்ந்து, ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2′ ( KGF: Chapter 2’) படத்தையும் அனைத்து மொழிகளிலும் பிரம்மாண்டமாக வெளியிடத் தயாராகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குனரும் இணையும் படத்தை அனைத்து மொழிகளிலும் தயாரித்து வெளியிடவுள்ளது.

இது தொடர்பாக அதிகாரபூர்வமான அறிவிப்பு டிசம்பர் 2-ம் தேதி அன்று மதியம் 2 மணியளவில் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு கண்டிப்பாக அனைவரையும் ஆச்சரியமூட்டும் என்பதில் சந்தேகமில்லை.

தொடர்ச்சியாக அனைத்து மொழி மக்களை ஆச்சரியமூட்டும் வித்தியாச கதைக்களங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வெளியிட ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films) நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Hombale films next film announcement on 2nd december

Hombale Films 7

More Articles
Follows