BREAKING : விஜய்சேதுபதியை பாராட்டி சிம்புவை தாக்கிய ராபர்ட் மாஸ்டர்

BREAKING : விஜய்சேதுபதியை பாராட்டி சிம்புவை தாக்கிய ராபர்ட் மாஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

robert masterநடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் கதாநாயகனாக நடித்துள்ள படம் “ஒண்டிக்கு ஒண்டி”.

ஜேஎம் என்பவர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

சற்றுமுன் இப்பட இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக விஜய்சேதுபதி, கேஎஸ் ரவிக்குமார் மற்றும் பேரரசு உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவில் ராபர்ட் பேசும்போது…

எனக்கும் விஜய் சேதுபதிக்கும் பழக்கமே இல்லை. ஆனால் அழைத்த உடன் அவர் வந்து விட்டார்.

ஆனால் நன்கு பழக்கமான ஒருவர் (சிம்பு) அழைத்தும் வரவில்லை.

ஒருவேளை நான் அந்த அளவுக்கு வரவில்லை என நினைக்கிறார் போல.

ஆனால் சந்தானம் அழைத்தால் அவர் செல்கிறார். ஒருவேளை அவர் அந்த உயரத்திற்கு வந்து விட்டார் என நினைக்கிறார் போல…

ஒரு நாள் எனக் கும் வருவார். நானும் முன்னேறுவேன்.”

எனப் பேசினார்.

Exclusive சுதந்திர தினத்தன்று சூப்பர் ஸ்டாரின் 2.0 பட டீசர் வெளியீடு

Exclusive சுதந்திர தினத்தன்று சூப்பர் ஸ்டாரின் 2.0 பட டீசர் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shankar plans to release 2point0 Teaser on 15th August 2018லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமிஜாக்சன் ஆகியோர் இணைந்துள்ள படம் 2.0.

ரூ. 500 கோடியில் தயாராகும் இப்படத்தை முழுக்க முழுக்க 3டியில் உருவாகியுள்ளார் ஷங்கர்.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு மேலாக இதன் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்ற நிலையில் இப்படத்தை இந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் 29ல் ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவித்தார் ஷங்கர்.

இந்நிலையில் ரஜினி ரசிகர்ளுக்கு பெரும் விருந்தாக வருகிற சுதந்திர தினத்தன்று 2.0 பட டீசரை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிகிறது.

Shankar plans to release 2point0 Teaser on 15th August 2018

புதிய இசையமைப்பாளர்-நாயகியை அறிமுகப்படுத்தும் விஷ்ணு விஷால்

புதிய இசையமைப்பாளர்-நாயகியை அறிமுகப்படுத்தும் விஷ்ணு விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Singer Krish composing Music for Vishnu Vishals 4th Production movieராட்சசன், சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜகஜால கில்லாடி என்று 3 படங்களை கைவசம் வைத்துள்ளார் விஷ்ணு விஷால்.

இந்த 3 படங்களையும் தொடர்ந்து 4வது ஒரு புதிய படத்தையும் இன்று தொடங்கியுள்ளார்.

தனது பெற்றோரின் திருமண நாளில் தனது சொந்த தயாரிப்பில் இப்படத்தை தொடங்கியுள்ளார்.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இப்படத்தை இயக்குனர் வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார்.

இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஷிவானி நடிக்கிறார்.

இவர் பிரபல நடிகர் டாக்டர்.ராஜசேகரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஷிவானி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

மேலும், பிரபு, சரண்யா பொன்வண்ணன், முனிஷ்காந்த், நான் கடவுள் ராஜேந்திரன், சிங்கம் புலி, பிரவீன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தில் பின்னணிப் பாடகரும், நடிகருமான க்ரிஷ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

வேல்ராஜ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பை தனது பெற்றோரின் திருமண நாளில் துவங்குவதில் மகிழ்ச்சி என்று விஷ்ணு விஷால் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Singer Krish composing Music for Vishnu Vishals 4th Production movie

vishnu vishal 4th production

*கடமான் பாறை* படத்துக்காக ஆதிவாசி சூரப்பனாக மன்சூரலிகான்

*கடமான் பாறை* படத்துக்காக ஆதிவாசி சூரப்பனாக மன்சூரலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mansoor AliKhan movie Kadamaan Paarai news updatesமன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “கடமான்பாறை“ என்று பெயரிட்டுள்ளார்.

இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார்.

மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் மன்சூரலிகானிடம் கேட்டோம்…

கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் இப்போது வழிமாறி போகிறார்கள். அப்பா அம்மா, ஆசிரியர் என யார் சொன்னாலும் எதையும் அவர்கள் பொருட்படுத்துவது கிடையாது.

அப்படி இருக்கும் ஒரு காதல் ஜோடி கல்லூரியை கட்டடித்துவிட்டு. ஒரு மலைப்பகுதிக்கு செல்கிறார்கள். அந்த கங்குவாரெட்டி மலை, கஞ்சாமலையை தன் வசம் வைத்திருக்கும் ஆதிவாசி சூரப்பன் மன்சூரலிகானிடம் மாட்டிக்கொள்கிறார்கள்.

அவனிடம் பாரஸ்ட் ரேஞ்சர் கூட மாட்டிக்கொண்டால் உயிரோடு திரும்ப முடியாது அந்த மலையில் இருந்து செம்மரக்கட்டை கடத்த முடியாது, கனிமவளங்களை திருட முடியாது.

காட்டிலிருந்து எந்த பொருளும் வெளியே விடாமல் அந்த காட்டின் பாதுகாவலனாக இருக்கும் அவனிடம் சிக்கிய ஜோடி தப்பிதார்களா இல்லையா என்பதுதான் இந்த கடமான்பாறை படத்தின் திரைக்கதை. திகிலூட்டும் காட்சிகள் மக்களை ரசிக்கவைக்கும்.

படப்பிடிப்பு ஆந்திரா மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும், பாண்டிசேரி, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

Mansoor AliKhan movie Kadamaan Paarai news updates

ஒளிப்பதிவு – மகேஷ்.T
இசை – ரவிவர்மா பாடல்கள் – விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன், ரவிவர்மா, மன்சூரலிகான்,
கலை – ஜெயகுமார்
நடனம் – டாக்டர் சிவசங்கர், சம்பத்ராஜ், சங்கர், சந்துரு, சிவா
ஸ்டன்ட் – ராக்கி ராஜேஷ்,
தயாரிப்பு நிர்வாகம் – J.அன்வர்
ஒருங்கிணைப்பு – ஜே,ஜெயகுமார் ஆக்கம், இயக்கம் – மன்சூரலிகான்.

 

*அகோரி* ஆக மாறிய சாயாஜி ஷிண்டே ஆகஸ்ட்டில் வருகிறார்

*அகோரி* ஆக மாறிய சாயாஜி ஷிண்டே ஆகஸ்ட்டில் வருகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sayaji Shinde starring Aghori plans to release on August 2018சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘என்கிற படம் உருவாகி வருகிறது. ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி பாலா’ மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இப்படத்தை இயக்குபவர் அறிமுக இயக்குநர் D.S. ராஜ்குமார் .

சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டமே கதை, இது ஒரு முழுமையான எண்டர்டெய்ன்ட் படம் . ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதினருக்குமான வணிக அம்சங்கள் படத்தில் இருக்கும்.

சர்வதேச அளவில் புகழ் பெற்ற சாயாஜி ஷிண்டே இதில் அகோரியாக நடிக்கிறார். அவர் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடிப்பவர், படத்தின் கதை தன் தோற்றம் எல்லாம் கேட்டதும் உடனே நடிக்கச் சம்மதித்து இருக்கிறார். மிகவும் ஈடுபாடு காட்டி நடித்து வருகிறார்.

படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னை பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான ஹரிதுவார் செட் அமைத்து 150 அகோரிகளுடன் நடித்த காட்சி படமாக்கப்பட்டது.

இப்படத்திற்காக கேரளா காட்டுப் பகுதியில் பெரிய செட் போடப்பட்டு 200 அகோரிகள் நடிக்கும் காட்சிகள் படமாகியுள்ளன.

படத்தில் இடம்பெறும் ஒரு மணி நேர கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் கண்களை மிரளவைக்கும்படி இருக்கும்.

தெலுங்கில் ‘சஹா ‘படத்தின் மூலம் புகழ் பெற்ற சகுல்லா மதுபாபு தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார். இவரது உயரம் 6.5 ” ஆகும்.

நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார், இவர் கர்நாடக மாநில அரசின் விருது பெற்றவர், இவர் 144 பட நாயகி.

மைம் கோபி, சித்து, டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி, கார்த்தி, கலக்கப்போவது யாரு சரத், டிசைனர் பவன், இவர்களுடன் கூத்துப்பட்டறை பயிற்சி பெற்ற புதிய கலைஞர்களும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு வசந்த். இவர் ஈகோ, கள்ளத்துப்பாக்கி படங்களின் ஒளிப்பதிவாளர். இசை அண்மையில் கேரளாவில் புகழ் பெற்று வரும் ஃபோர் மியூசிக்.

நான்கு இசையமைப்பாளர்களின் கூட்டணி இது., ஆர்ட் டைரக்டர் ஜெயச்சந்திரன், வசனத்தை தயாரிப்பாளர் ஆர்.பி பாலா எழுதியுள்ளார்.

அண்மையில் சென்னை எம் ஜி.ஆர் பிலிம் சிட்டியில் அகோரிகள் புடை சூழ படப்பிடிப்பில் கலந்து கொண்டார் நடிகர் சாயாஜி ஷிண்டே.

இப்படத்தில் நடிப்பது பற்றி அவர் பேசும் போது…

“தமிழில் பாரதி படம் எனக்கு அழுத்தமான அறிமுகம் கொடுத்தது. அதன் பிறகு குணச்சித்திரம், வில்லன், நகைச்சுவை என்று விதவிதமான பாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.

இந்தப் படத்தில் நடிக்கக் கேட்ட போது அவர்கள் சொன்ன கதை எனக்குப் பிடித்திருந்தது. இப்படத்தில் நான் ஓர் அகோரியாக அதாவது சிவனடியாராக நடிக்கிறேன்.

நான் அகோரியைச் சந்தித்து இருக்கிறேன். அவர்களிடம் ஆசியையும் பெற்று இருக்கிறேன். அப்படிப்பட்ட அகோரியாக நானே நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இப்பாத்திரமும் அதன் தோற்றமும் நடிப்பும் என் வாழ்வில் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட்டில் ‘அகோரி’ வெளியாகவுள்ளது.

Sayaji Shinde starring Aghori plans to release on August 2018

ராசு ரஞ்சித்தின் *தீதும் நன்றும்* படத்தை வெளியிடும் சிங்காரவேலன்

ராசு ரஞ்சித்தின் *தீதும் நன்றும்* படத்தை வெளியிடும் சிங்காரவேலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Theethum Nandrum movie will be released by Distributor SingaravelanN H.ஹரி சில்வர் ஸ்கிரின் சார்பில் H.சார்லஸ் இம்மானுவேல் தயாரித்துள்ள படம் ‘தீதும் நன்றும்’. அழகிய தமிழ் வார்த்தைகளில் தமிழ்ப்படங்களுக்கு பெயர் வைப்பது அரிதாகிவிட்ட சூழலில் ‘தீதும் நன்றும்’ என அழகு தமிழ் டைட்டிலுடன் இயக்குனராக அறிமுகமாகிறார் ராசு ரஞ்சித்.

இவர் நாளைய இயக்குனர் குறும்பட போட்டியில் டைட்டில் வின்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்றாட தேவைகளுக்காக சின்னச்சின்ன திருட்டுக்களில் ஈடுபடும் மூன்று நண்பர்கள் பற்றிய கதை தான் இந்தப்படம். ஒருவருக்கு நல்லது நிகழ்வதும் பாதிப்பு ஏற்படுவதும் அவரவர் செய்யும் செயல்களால் தான்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா என்கிற தமிழ் பொன்மொழியில் இருந்துதான் இந்தப்படத்தின் டைட்டிலையே தேர்ந்தெடுத்து வைத்துள்ளோம். இந்தப்படம் ஆக்சன் த்ரில்லராக உருவாகியுள்ளது.

தமிழ் கலாச்சாரம் சார்ந்த படம் தான் என்றாலும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை இந்தப்படம் கொடுக்கும் என்கிறார் இயக்குனர் ராசு ரஞ்சித்.

இந்தப்படத்தின் மூன்று கதாநாயகர்களில் ஒருவராகவும் நடித்துள்ளார் ராசு ரஞ்சித், மற்ற இரண்டு ஹீரோக்களாக சந்தீப் ராஜ், ஈசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதில் சந்தீப் ராஜ் ஏற்கனவே தூங்காவனம் படத்தில் கமலுடன் நடித்தவர். கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்..

இவர் ‘8 தோட்டாக்கள்’ வெற்றிப்படம் மூலமாக ஏற்கனவே தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இவர் மூன்று நண்பர்களில் ஒருவரின் மனைவியாக படத்தின் மைய கதாபாத்திரமாக நடித்துள்ளார்.

இன்னொரு முக்கிய வேடத்தில் கேரளாவை சேர்ந்த லிஜிமோல் ஜோஸ் என்பவர் நடித்துள்ளார்.

அபர்ணாவை ஒப்பந்தம் செய்வதற்காக மலையாளத்தில் அவர் நடித்த படத்தை பார்த்தபோது அதில் இன்னொரு கேரக்டரில் நடித்திருந்த லிஜிமோலையும் இந்தப்படத்திற்கு அழைத்துக்கொண்டு வந்துவிட்டார் இயக்குனர் ராசு ரஞ்சித்.

கவின்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ‘எங்கேயும் எப்போதும்’ புகழ் சி.சத்யா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்களாலும் பின்னணி இசையாலும் படத்திற்கு முதுகெலும்பாக அவர் இருப்பார் என்கிறார் இயக்குனர் ராசு ரஞ்சித்.

அதுமட்டுமல்ல இவர் அடையாறு திரைப்பட கல்லூரியில் எடிட்டிங் படித்தவர் என்பதால் இந்தப்படத்தின் படத்தொகுப்பையும் தானே கவனித்துள்ளார். சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

தற்போது இறுதிகட்ட பணிகளில் இருக்கும் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.

படத்தை பார்த்து வியந்த விநியோகஸ்தர் சிங்காரவேலன் உலகம் முழுவதும் வெளியிடுகிறார்.

Theethum Nandrum movie will be released by Distributor Singaravelan

easan abarna bala murali

More Articles
Follows