நவம்பர் 27ல் ரிலீசாகவுள்ள கன்னி ராசி & காவல்துறை உங்கள் நண்பன் & அல்டி… ஒரு பார்வை

altiநவம்பர் 27ல் ரிலீசாகவுள்ள கன்னி ராசி & காவல்துறை உங்கள் நண்பன் & அல்டி ஆகிய படங்கள் பற்றிய ஒரு பார்வை…

1. கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கன்னி ராசி’.

இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார்.

இதில் விமல், வரலட்சுமி, பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

2. ஆர்.டி.எம் இயக்கியுள்ள ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தில் சுரேஷ் ரவி, ரவீனா, மைம் கோபி, சரத் ரவி, ஆர்.ஜே.முன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்பட வெளியீட்டு உரிமையை தனஞ்ஜெயன் கைப்பற்றியுள்ளார்.

மேலும், இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெற்றிமாறனும் வெளியீட்டு பணியில் இணைந்துள்ளார்.

3. எம்ஜே.உசைன் இயக்கத்தில் நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி நாயகனாக அறிமுகமாகும் மர்ம திரில்லர் திரைப்படம் ‘அல்டி’.

இதில் கதாநாயகியாக மனிஷா ஜித் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் செண்ட்ராயன், மாரிமுத்து, ராபர்ட், ‘பசங்க’ சிவகுமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இதற்கு ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டராக வில்சி பணியாற்றியுள்ளார்.

Kanni Rasi, KUN and Alti to release on 27 th november

Overall Rating : Not available

Latest Post