ஒயிட் & ஒயிட்டில் சால்ட் லுக் அஜித்; வைரலாகும் *விஸ்வாசம்* ஸ்டில்ஸ்

ஒயிட் & ஒயிட்டில் சால்ட் லுக் அஜித்; வைரலாகும் *விஸ்வாசம்* ஸ்டில்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajiths Viswasam shooting stills leaked It goes viralவீரம், வேதாளம் மற்றும் விவேகம் படங்களை தொடர்ந்து சிவா & அஜித் கூட்டணியில் உருவாகி வரும் படம் விஸ்வாசம்.

இதில் அஜித்துடன் நயன்தாரா, தம்பிராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

முதன்முறையாக அஜித் படத்துக்கு இமான் இசையமைத்து வருகிறார்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் தெலுங்கு நடிகரான ரவி அவானா இணைந்துள்ளார்.

இவர் நடிகர் நானி நடிப்பில் வெளியான கிருஷ்ணார்ஜுன யுத்தம் படத்தில் வில்லனாக நடித்தவராம்.

இந்நிலையில் அஜித்துன் ரவி அவனா மோதும் சண்டைக்காட்சிகள் படமாக்கப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லீக்காகியுள்ளது.

அதில் வெள்ளை நிற வேட்டி சட்டையில் அஜித் இருக்கிறார்.

Ajiths Viswasam shooting stills leaked It goes viral

சிவகார்த்திகேயனுக்கு எதிராக தல-தளபதி ரசிகர்கள் செயல்படுகிறார்களா.?

சிவகார்த்திகேயனுக்கு எதிராக தல-தளபதி ரசிகர்கள் செயல்படுகிறார்களா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Whether Thala Thalapathy fans creating memes against Sivakarthikeyanதமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக பாக்ஸ் ஆஃபிஸ் கிங் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.

இவரின் இடத்தை யாராலும் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை.

ரஜினியின் ஒரு சில படங்கள் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்த போதும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் குறைவில்லை என்றே கூறப்படுகிறது.

இவருக்கு அடுத்து விஜய், அஜித், சூர்யா ஆகியோர் பாக்ஸ் ஆபிசில் கலக்கி வருகிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளாக ரஜினிக்கு அடுத்த இடத்தில் இவர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இவர்களை அடுத்து சிவகார்த்திகேயன் முன்னேறி வருவதாக கூறப்படுகிறது.

அண்மையில் வெளியான ரெமோ, வேலைக்காரன், சீமராஜா படங்கள் சிவகார்த்திகேயனின் மார்கெட்டை நல்ல உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

அதிலும் சீமராஜா படம் நல்ல வசூலை பெற்று வருவதால் தல தளபதி ரசிகர்களில் ஒரு சிலர் சிவகார்த்திகேயனுக்கு எதிராக பல்வேறு விதமான மீம்ஸ்களை உருவாக்கி நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பி வருவதாக கூறப்படுகிறது.

இவை ஒரு புறம் இருக்க, பொன்ராம் இயக்கிய ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் படங்களின் எதிர்பார்ப்பை சீமராஜா ஈடு செய்யவில்லை என்ற பேச்சும் நடுநிலையாளர்களிடையே பரவலாக எழுந்துள்ளது.

Whether Thala Thalapathy fans creating memes against Sivakarthikeyan

கேரள பேரழிவை மையப்படுத்தி தயாராகும் *மஹா அவதார் ஐயப்பன்*

கேரள பேரழிவை மையப்படுத்தி தயாராகும் *மஹா அவதார் ஐயப்பன்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Maha Avatar Ayyappan movie story based on Kerala Floodசினிமாவில் காதல், ஆக்சன், பேய் படங்களுக்கு எப்படியொரு சீசன் இருக்கிறதோ அதுபோல் சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்கும் ஒரு சீசன் இருக்கிறது.

ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் இருக்கும் பக்தர்களுக்காகவே ஏராளமான சாமி படங்கள் ரிலீசான காலம் உண்டு.

சுவாமி ஐய்யப்பன், மணிகண்டன், எங்கள் சாமி ஐய்யப்பன், பதினெட்டாம் படி உள்ளிட்ட பெயர்களில் பல ஐயப்பன் படங்கள் வந்துள்ளன.

ரஜினி, கமல், கார்த்தி உள்ளிட்ட பல பிரபலங்களும் அதுபோன்ற படங்களில் நடித்தார்கள். ஆனால் தற்போது அது போன்ற படங்கள் வருவதில்லை.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு மஹா அவதார் ஐயப்பன் என்றொரு படம் தயாராகிறது.

செல்வபாரதி என்ற புதுமுகம் இயக்குகிறார். இவர் பழம்பெரும் நடிகர் பாண்டி ஆர்.செல்வராஜின் மகன். இ.ராசா என்பவர் தயாரிக்கிறார்

அண்மையில் கேரளாவில் நடைபெற்ற வெள்ள சேதங்களை மையப்படுத்தி இப்படத்தை எடுக்கவுள்ளனர்.

புதுமுகங்கள் செல்வின், இளங்கோ, சமி ஹீரோக்களாக நடிக்கின்றனர்.

கே.தினகர் வசனம் எழுத ந.குமார்லால் நேரு என்பவர் இசையமைக்கிறார்

“இந்தக்கால இளைஞர்களுக்கு ஐய்யப்பனின் மகிமையை கொண்டு செல்லும் முயற்சியே இந்தப்படம்.” என்கிறார் பட இயக்குனர் எஸ்.செல்வபாரதி.

Maha Avatar Ayyappan movie story based on Kerala Flood

தற்கொலைக்கு முன்பு நிலானியின் காதலர் வெளியிட்ட அந்தரங்க படங்கள்

தற்கொலைக்கு முன்பு நிலானியின் காதலர் வெளியிட்ட அந்தரங்க படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TV actress Nilanis lover attempts suicide He leaks Bedroom photosதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது போலீஸ் சீருடையில் தோன்றி போலீசுக்கு எதிராக பேசிய வீடியோவை வெளியிட்டார் சீரியல் நடிகை நிலானி.

இது பெரும் சர்ச்சையை அப்போதே ஏற்படுத்தியது.

இவருக்கும் சின்னத்திரை உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்தாக கூறப்படுகிறது.

இருவரும் பலமுறை நெருக்கமாக இருந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

நிலானிக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளின் தாய் என்று தெரிந்த போதிலும் கடந்த 3 ஆண்டுகளாக காந்தி அவரை காதலித்து வந்துள்ளதாகவும் ஆலப்பாக்கத்தில் இருவரும் ஒரே வீட்டில் குடும்பமும் நடத்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் திருமணம் செய்து கொள்வதில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து நடிகை நிலானியை காந்தி வற்புறுத்தியுள்ளார். ஆனால் நிலானிக்கு விருப்பம் இல்லாததால் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் மனம் உடைந்த காந்தி பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் இறப்பதற்கு முன்பு நிலானியுடன் காந்தி நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோக்களும், போட்டோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு வீடியோவில், நிலானியின் கால் விரல்களில் மெட்டி போட்டுவிடும் காதலர் காந்தி, நிலானியின் 2 கால்களையும் தன் உள்ளங் கைகளில் ஏந்தி முத்தம் கொடுக்கிறார்.

TV actress Nilanis lover attempts suicide He leaks Bedroom photos

nilani gandhi

தீபாவளி ட்ரீட்: சர்கார் சரவெடி; சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி அதிரடி

தீபாவளி ட்ரீட்: சர்கார் சரவெடி; சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Saravana Stores Annachi plans new advertisement with TV Starsஇந்தாண்டு தீபாவளிக்கு விஜய் நடித்த சர்கார் திரைப்படம் வெளியாகவுள்ளது. எனவே விஜய் ரசிகர்கள் இந்த சரவெடிக்காக காத்திருக்கின்றனர்.

தீபாவளி என்றால், சினிமா மட்டும்தானா..? பட்டாசு, இனிப்பு, புத்தாடைகள் இதெல்லாம் சேர்ந்தால் தானே தீபாவளி உற்சாகமாய் இருக்கும்.

இதில் புத்தாடை எடுக்க சென்னையில் பல கடைகள் இருந்தாலும் பலரின் நினைவுக்கு வருவது சரவணா ஸ்டோர்ஸ் தான்.

அதற்கு முக்கிய காரணம் நடிகைகளுடன் சரவணன் அண்ணாட்சி ஆடி பாடும் விளம்பரங்கள் முக்கிய காரணம்.

எந்த டிவி சேனலை வைத்தாலும் அதில் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை நிச்சயம் அண்ணாச்சி வந்துவிடுவார்.

தற்போது தயாராகி வரும் புதிய விளம்பரத்தில் டிவியில் பிரபலமான தொகுப்பாளர்கள், காமெடி நடிகர்கள், சீரியல் நடிகைகள் ஆகியோருடன் ஆடி பாடவிருக்கிறாராம்.

இந்த விளம்பர படங்களை இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரி இயக்க பிருந்தா நடனம் அமைத்துள்ளார்.

ஆக தீபாவளி நெருங்கும் சமயத்தில் அண்ணாச்சியின் ஆட்டம் ஆரம்பம் ஆகும் என எதிர்பார்க்கலாம்.

Saravana Stores Annachi plans new advertisement with TV Stars

விழிப்புணர்வை ஏற்படுத்திய *மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன* படத்திற்கு அண்ணா விருது!

விழிப்புணர்வை ஏற்படுத்திய *மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன* படத்திற்கு அண்ணா விருது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் ஃபைன் ஆர்ட்ஸ் நடத்திய விழாவில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக தேர்வு செய்யப்பட்ட “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன” அண்ணா விருதை தட்டிச்சென்றது.

பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய இப்படம் கமர்ஷியல் வெற்றியையும் ருசி பார்த்தது.

கூடுதல் சிறப்பாக தற்போது தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் திரையிட தேர்வுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவ்வளவு எளிதாக இங்கு படங்களை தேர்வு செய்து திரையிடுவதில்லை. தரமான படங்களை மட்டுமே குறிக்கிறார்கள்.

இமைக்கா நொடிகள்.. கோலமாவு கோகிலா, மேற்குத்தொடர்ச்சி மலை ஆகிய படங்கள் சமீபத்தில் திரையிடப்பட்டவை.

இயக்குநர் ராகேஷ் தமிழ்நாடு அரசுத் திரைப்படக் கல்லூரியில் பயின்றவர் என்றாலும் அவரது முந்தைய படங்கள் திரையிடத் தேர்வாகவில்லையாம்.

தற்போது “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன” படம் பயிலும் மாணவர்களின் நலன் கருதி திரையிடப்படுவதும் கலந்துரையாடல் நடைபெறுவதும் தனக்கு மகிழ்ச்சியைத் தருவதாகக் குறிப்பிட்டார் இயக்குநர் ராகேஷ்.

வரும் வியாழனன்று (20/9/18) “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன” படம் திரையிடப்பட இருக்கிறது.

அப்போது இப்படக்குழுவினர்கள் கலந்துகொள்கின்றனர்.

IMG-20180918-WA0039

IMG-20180918-WA0040

More Articles
Follows