பிரியங்கா டைவர்ஸ் பற்றி ரசிகர் ட்வீட்; அஜித்தால் ரசிகரின் ‘தல’ தப்பியது

பிரியங்கா டைவர்ஸ் பற்றி ரசிகர் ட்வீட்; அஜித்தால் ரசிகரின் ‘தல’ தப்பியது

vijay tv priyanka ajithவிஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் தொகுப்பாளினி பிரியங்கா.

இவருக்கு ஒரு ரசிகர் ட்வீட் செய்யும்போது “அடுத்து உனக்கும் உன் புருஷனுக்கும் விவாகரத்து கன்பார்ம் என ட்விட் செய்துள்ளார்.

அவர் ஏன் இதை தேவையில்லாமல் சொன்னார் எனத் தெரியவில்லை.

ஆனால் இதை பார்த்த பிரியங்கா.. மக்களே இவன என்ன செய்யலாம்?. என் தல புகைப்படத்தை DPயாக வைத்திருக்கிறாய் என்ற ஒரே காரணத்துக்காக உன்னை சும்மா விடுறேன் என்று டுவிட் செய்துள்ளார்.

Priyanka Deshpande‏ @Priyanka2804
Makkaleee.. ivanaa enna seiyalam? PS: en thala photo dp ah vachurka ndra oreyyy karnathuku unna summa vidren.

Ajith fan tweet about Vijay TV Priyanka’s personal life

விஜய்சேதுபதி-த்ரிஷா இணையும் ‘96’ பட சூட்டிங் தொடங்கியது

விஜய்சேதுபதி-த்ரிஷா இணையும் ‘96’ பட சூட்டிங் தொடங்கியது

vijay sethupathi trisha 96சின்ன சின்ன வேடங்களில் நடித்து இன்று முன்னணி நடிகர்களின் வரிசையில் இடம் பிடித்துவிட்டார் விஜய் சேதுபதி.

கிட்டதட்ட அரை டஜன் படங்களில் நடித்து கொண்டிருக்கும் இவர் முதன்முறையாக த்ரிஷாவுடன் இணைந்து 96 என்ற படத்தில் நடிக்கிறார்.

பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரேம் குமார் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பாக எஸ் நந்தகோபால் தயாரிக்கும் இப்படத்திற்கு சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, இசை பணிகளை – கோவிந்த் மேனன் மேற்கொள்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பூஜை சற்றுமுன் போடப்பட்டது. இதனையடுத்து இதன் சூட்டிங்கை தொடங்கவிருக்கிறார்கள்.

விஜய்சேதுபதி, த்ரிஷா ஆகியோரின் சிறு வயது கேரக்டர்களில் புதியவர்கள் நடிக்கவிருக்கிறார்களாம்.

எடிட்டிங்- கோவிந்தராஜ்
கலை – வினோத் ராஜ்குமார்
பாடல்கள் – உமாதேவி, கார்த்திக் நேத்தா.

கார்த்தி-சிவகார்த்திகேயன் மோதல் கன்பார்ம்..?

கார்த்தி-சிவகார்த்திகேயன் மோதல் கன்பார்ம்..?

karthi sivakarthikeyanமோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஸ்நேகா நடித்துள்ள வேலைக்காரன் படம் செப்டம்பர் 29ஆம் தேதி ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியாகிறது.

இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் இப்படத்துடன் கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படமும் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

‘சதுரங்க வேட்டை’ இயக்குனர் H.வினோத் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இதில் போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடிக்க, நாயகியாக ராகுல் பிரித்தி சிங் நடித்து வருகிறார்.

ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இன்னும் ஒருசில தினங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்க உள்ளதாம்.

Karthi and Sivakarthikeyan movie may clash on Ayudha Pooja holidays

‘வல்லரசு அப்புறம்; இப்போ நல்லரசு வேண்டும்..’ விஜய்

‘வல்லரசு அப்புறம்; இப்போ நல்லரசு வேண்டும்..’ விஜய்

vijay new stillsநாட்டில் நடைபெறும் சில சம்பவங்கள் குறித்து தன் கருத்துக்களை அதிரடியாக அண்மைகாலமாக கூறிவருகிறார் இளைய தளபதி விஜய்.

ஜல்லிக்கட்டு போராட்டம், கருப்பு பணம் பற்றி பேசியிருந்த அவர் தற்போது விவசாயிகள் குறித்து பேசியுள்ளார்.

இன்று நடைபெற்ற ஒரு தனியார் விருது நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார் விஜய்.

அப்போது அவர் பேசியதாவது….

“விவசாயிகள் பிரச்சனைக்கு அவசியமாக மட்டுமல்ல அவசரமாகவும் தீர்வு வேண்டும்.

நமக்கு இப்போது 3 வேளை உணவு சுலபமாக கிடைப்பதால் அதன் மதிப்பு நமக்கு தெரியாமல் போய்விட்டது.

நாம் நன்றாக இருக்கிறோம் ஆனால் நமக்கு சோறு போடும் விவசாயிகள் நன்றாக இல்லை.

இது இப்படியே போனால், அடுத்த சந்ததிக்கு உணவு இல்லாமல் போகும் நிலைதான் ஏற்படும்.

அரிசியை உற்பத்தி செய்த விவசாயிகளே அதை இலவசமாக பெற ரேஷன் கடையில் வரிசையில் நிற்கிறார்கள்.

“நாடு வல்லரசாவதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் முதலில் விவசாயிகளுக்கு நல்லரசாக மாறவேண்டும்.” என பரபரப்பாக பேசினார் விஜய்.

கத்தி படத்தில் விவசாயிகளின் பிரச்சினைக்காக விஜய் பேசியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Vijay open talk about Farmers struggle in our nation India

கத்தி படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி கீழே…

vijay kaththi

ரஜினியை முதல்வர் மனைவி சந்தித்தன் ரகசியம் இதுதானா.?

ரஜினியை முதல்வர் மனைவி சந்தித்தன் ரகசியம் இதுதானா.?

Maharastra CM wife Rajini meetரஞ்சித் இயக்கும் ரஜினியின் காலா சூட்டிங் இரண்டு வாரங்களாக மும்பையில் நடைபெற்று வருகிறது.

இதனிடையில் மகாராஷ்ட்ர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா ரஜினியை சந்தித்து பேசினார் என்பதை நாம் பார்த்தோம்.

இது தொடர்பான படங்களும் வெளியாகி அரசியல் உலகில் பரபரப்பாக பேசப்பட்டது.

மரியாதை நிமித்தமாக ரஜினியை சந்தித்ததாக முதல்வர் மனைவி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் காலா படத்தில் அம்ருதா ஒரு பாடலை பாடக்கூடும் என மும்பை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

இதுதொடர்பாகதான் ரஜினியை சந்தித்து பேசியதாகவும் சொல்லப்படுகிறது.

பாட்டு, மாடலிங், சினிமா என ஆர்வம் கொண்டவராம் அம்ருதா.

மேலும் பெண் சிசு கொலை தொடர்பாக விழிப்புணர்வு பாடல் ஒன்றையும் அண்மையில் பாடியிருந்தாராம்.

Secret behind Amruta wife of Maharastra Chief Minister Devendra Fadnavis and Rajini meet

விஜயகாந்த் மகனுக்கு வில்லன் ஆனார் கமல் பட தயாரிப்பாளர்

விஜயகாந்த் மகனுக்கு வில்லன் ஆனார் கமல் பட தயாரிப்பாளர்

???????????????????????????????????????????கேப்டன் விஜயகாந்த்தை தொடர்ந்து அவரது மகன் சண்முகபாண்டியனும் படங்களில் நடித்து வருகிறார்.

அவர் தற்போது நடித்து வரும் படத்திற்கு மதுர வீரன் என பெயரிட்டுள்ளனர்.

பி.ஜி.முத்தையா இயக்கும் இதன் சூட்டிங் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இதில் வில்லனாக பிரபல தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன் நடித்து வருகிறார்.

கமல் நடித்த ’காதலா காதலா’, ’பம்மல் கே சம்மந்தம்’, ’பஞ்சதந்திரம்’ உள்ளிட்ட 14 படங்களை தயாரித்திருப்பவர் பி.எல்.தேனப்பன்.

மேலும் ராம் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் ’பேரன்பு’ படத்தை தயாரித்து வருகிறார் பி.எல். தேனப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.

Producer PL Thenappan plays baddies in Shanmuga Pandiyans Madura Veeran

More Articles
Follows