‘மாணிக்’ படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்

‘மாணிக்’ படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், இந்தி என இருமொழிகளில் உருவாகும் ‘மாணிக்’ படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தில் சம்யுக்தா சண்முகநாதன், விவேக் பிரசன்னா, சாய் ஜனனி மற்றும் ஸ்வர் காம்ப்ளே ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

சாம்ராட் சக்ரவர்த்தி இயக்கத்தில் இப்படம் த்ரில்லர் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.

இப்படம் 2023ல் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் தான் தோசை சுட்ட விடியோவை தனது சமுக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

மேலும், ஐஸ்வர்யாவிடம் டிரைவர் ஜமுனா, இடம் பொருள் ஏவல், மோகன்தாஸ், தி கிரேட் இந்தியன் கிச்சன் போன்ற படங்கள் கைவசம் உள்ளது.

Aishwarya Rajesh completes Manik movie shoot

பல தடைகளை தாண்டி சமந்தாவின் யசோதா OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு !

பல தடைகளை தாண்டி சமந்தாவின் யசோதா OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமந்தாவின் புதிய படமான ‘யசோதா’ EVA IVF மருத்துவமனையை எதிர்மறையாகக் காட்டியதற்காக வழக்குத் தொடர்ந்ததால் சட்டச் சிக்கலில் படக்குழு மாட்டி இருந்தது.

கடந்த மாதம், ஐதராபாத் நீதிமன்றம் டிசம்பர் 30 வரை படத்தை OTT தளங்களில் வெளியிட தடை விதித்தது.

படக்குழுவினரும், மருத்துவமனை நிர்வாகத்தினரும் பேசி ஒரு சமரச முடிவுக்கு வந்துள்ளதால் பிரச்னைகள் சரியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

மருத்துவமனையின் அனைத்து காட்சிகளையும் மங்கலாக்க தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதனால் , ​​யசோதா டிசம்பர் 9 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

கௌதமி மற்றும் அவரது மகளின் கார்த்திகை தீப புகைப்படங்கள் வைரல்

கௌதமி மற்றும் அவரது மகளின் கார்த்திகை தீப புகைப்படங்கள் வைரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1998-ல் சந்தீப்பை மணந்த கௌதமி, ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அவரை விவாகரத்து செய்தார்.

தனது மகள் சுப்புலட்சுமியை ஒற்றைத் தாயாக வளர்த்து வருகிறார்.

தற்போது பாஜகவில் அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார்.

கௌதமியின் மகள் சுப்பலட்சுமி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ளார்.

அவ்வப்போது அவர் தனது தாயுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுகிறார், தமிழர் திருநாளான கார்த்திகை தீபம் இன்று (டிசம்பர் 6ஆம் தேதி) கொண்டாடப்படுவதையொட்டி, சுப்பலட்சுமி தனது தாயுடன் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

மீண்டும் பழைய ஃபார்முலாவில் ‘பாபா’.; ரஜினியுடன் கைகோர்த்தது லைக்கா.!

மீண்டும் பழைய ஃபார்முலாவில் ‘பாபா’.; ரஜினியுடன் கைகோர்த்தது லைக்கா.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2002 ஆண்டில் ஆகஸ்ட் 15ஆம் தேதி பெரும் பரபரப்பை கிளப்பி வெளியான திரைப்படம் ‘பாபா’.

கதை திரைக்கதை எழுதி இந்த படத்தை ரஜினிகாந்த் தயாரித்து இருந்தார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார்.

தற்போது சரியாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு டிசம்பர் 12ஆம் தேதி ரீ-ரீலீஸ் ஆகிறது.

எனவே சில காட்சிகளை இணைத்துள்ளனர். மேலும் சமீபத்தில் ரஜினிகாந்த் டப்பிங் பேசி இருந்தார்.

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இந்த படத்திற்கு தற்போது எதிர்பார்ப்புகள் எகிறி உள்ளது.

எனவே தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகளும் பாபா படத்தை மீண்டும் திரையிட உள்ளனர்.

பாபா

அதுவும் நள்ளிரவு ஒரு மணி காட்சி அதிகாலை 4:00 மணி காட்சி என சிறப்பு காட்சிகளும் திரையிடப்பட உள்ளதாக திரையரங்குகள் அறிவித்துள்ளன.

ரஜினி ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தப் படத்தின் வெளிநாட்டு உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பாபா-வை மீண்டும் திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்…

‘படையப்பா’ படத்திற்கு பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி நடித்த பாபா படம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த படத்தின் வெளியீட்டுக்கு பாட்டாளி மக்கள் கட்சி பெரும் தடைகள் விதித்தது. மேலும் பாபா படத்தில இடம்பெற்ற பாடல்களும் சர்ச்சையானது. அந்த பாடல் வரிகளுக்கு திராவிட கழகமும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

இப்படி பல சர்ச்சைகளைக் கிளப்பிய பாபா மீண்டும் ரீ ரிலீஸ் ஆவதில் அதே பிரச்சினை ஏற்படுமா ? அதே பரபரப்பு உண்டாகுமா? என்பதை காத்திருந்து பார்ப்போம்…

பாபா

Lyca grabbed overseas rights of Baba movie

கமல்ஹாசனுக்கு வியாதி இருக்கு.. அதான் அப்படி.; சீமான் ஓபன் டாக்

கமல்ஹாசனுக்கு வியாதி இருக்கு.. அதான் அப்படி.; சீமான் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு தனியார் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சீமான்.

அப்போது கமல் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது..

“எனக்கு எப்பவுமே கமல் ஒரு வியப்பு தான், ஐந்து ஆறு படம் நடிச்சிட்டா சோர்வு வந்துடும்.. ஆனா ஐந்து வயசுல இருந்து இப்ப வரைக்கும் அதே மிருக வெறியோட நடிச்சிட்டு இருக்காரு. அதை பாக்கும் போது பொறாமை வருது.

எங்க ஐயா சிவாஜி போல தான் கமலும். ரெண்டு பேருக்கும் நடிப்பு ஒரு வியாதி (நோய்) ஆனால் இந்த நோய் சாகடிக்காது. வாழவைக்கும்.

சில பேருக்கு நடிப்புல மட்டும் தான் ஆர்வம் இருக்கும். ஆனால் கமலுக்கு அது தாண்டி இலக்கியத்தில் அதிக ஆர்வம் இருக்கு.. இலக்கியம், கவிதை, படிப்பாரு, வாசிப்பாரு.” இவ்வாறு சீமான் பேசினார்.

#KamalHaasan #Seeman

Kamal have some disease says Seeman

இயக்குனர் சுந்தர் சியின் ‘காபி வித் காதல்’ OTT ரிலீஸ் தேதி வெளியானது

இயக்குனர் சுந்தர் சியின் ‘காபி வித் காதல்’ OTT ரிலீஸ் தேதி வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் – ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் ‘காபி வித் காதல்’ என்ற ரொம்-காம் படத்திற்காக இணைந்தனர் .

சுந்தர் சி எழுதி இயக்கிய இந்த மல்டிஸ்டாரர் நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது, ​​காபி வித் காதல் படத்தின் OTT வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

9 டிசம்பர் 2022 அன்று ZEE5 இல் ஸ்ட்ரீம் செய்யத் தயாராக உள்ளது.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசை மற்றும் கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவில், உடன்பிறந்த உறவை சித்தரிப்பதாக படம் அமைந்துள்ளது.

More Articles
Follows