காரிலேயே திரைக்கதை சொல்லும் ‘டிரைவர் ஜமுனா’ இயக்குனர் கின்ஸ்லீ

காரிலேயே திரைக்கதை சொல்லும் ‘டிரைவர் ஜமுனா’ இயக்குனர் கின்ஸ்லீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. இந்த திரைப்படத்தை ‘வத்திக்குச்சி’ படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.

இவருடன் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

டான் பாலா கலை இயக்கத்தை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஆர். ராமர் மேற்கொண்டிருக்கிறார். அனைத்து பணிகளும் நிறைவடைந்து நவம்பர் மாதம் 11ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி, கதையின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் கின்ஸ்லின், ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய், படத்தொகுப்பாளர் ராமர், கலை இயக்குனர் டான் பாலா உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி பேசுகையில்…

”வத்திக்குச்சி’ படத்திற்கு நான் மிகப் பெரும் ரசிகன். கொரோனா காலகட்டத்திற்கு முன் ‘வத்திக்குச்சி’ இயக்குநர் கின்ஸ்லின், ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் கதையை விவரித்தார். கதை கேட்டு முடித்ததும் தயாரிக்கலாம் என முடிவெடுத்தேன்.

அந்தக் காலகட்டத்தில் ‘க / பெ ரணசிங்கம்’ படத்தின் முன்னோட்டம் வெளியானது. இந்தக் கதைக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் பொருத்தமாக இருப்பார் என எண்ணி, அவரிடம் கதையை சொன்னோம். அவரும் கதையைக் கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார்.

தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்களுடைய அர்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கி இருக்கிறார்கள். ‘டிரைவர் ஜமுனா’ அற்புதமான கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

இந்தப் படத்தின் பிரம்மாண்டம் என்பது கதையின் நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்புதான். நவம்பர் 11ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்தத் தருணத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான ‘ஃபர்ஹானா’ படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்து, ‘டிரைவர் ஜமுனா’ படத்தினை வெளியிடுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

இயக்குநர் கின்ஸ்லின் பேசுகையில்…

” தயாரிப்பாளர் எஸ். பி. சௌத்ரியிடம் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் கதையை சொன்னவுடன் அவருக்கு பிடித்தது.

அவரிடம் நுட்பமான கதையறிவு உண்டு. கதையில் பல இடங்களில் பல சந்தேகங்களை எழுப்பினார். ஆனால் அதற்கான தீர்வினை நானே எடுக்கும் முழு சுதந்திரத்தையும் வழங்கினார்.

இந்தப் படம், ஒரு க்ரைம் திரில்லர் ஜானரில் உருவான படம். வாலாஜாபாத் எனும் இடத்திலிருந்து ஈசிஆர் எனும் இடத்திற்கு கூகுளில் பயண நேரம் எவ்வளவு? என்று கேட்டால், ’90 நிமிடம்’ என பதிலளிக்கும். அந்த 90 நிமிடமும், கதை தொடங்கிய பிறகு இருபதாவது நிமிடங்களுக்கு இந்தப் பயணம் தொடங்கும்.

ஆக இரண்டு மணி நேரம் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு தான் இந்த திரைப்படம்.‌

நெடுஞ்சாலை பயணமும், காரிலும் தான் மொத்த திரைக்கதையும் பயணிக்கும். இதனை திரைக்கதையாக எழுதும் போதும், இதனை காட்சிப்படுத்தும் போதும் ரசிகர்களுக்கு சோர்வை தராமல் இருப்பதற்கான விசயங்களை இணைத்தோம். திரைக்கதை காரில் பயணிப்பதால் கதாபாத்திரங்களுக்கு இடையே நீண்ட நேரம் உரையாடலையும் வைக்க இயலாது.

இதனால் நடிகர்களின் முகபாவனைகளையும், நடிப்புத் திறனையும் வைத்து தான் காட்சிகளை நகர்த்த வேண்டியதிருந்தது.

டிரைவராக நடிக்கும் கலைஞரின் நடிப்புத் திறன் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றால், இந்த திரைக்கதை வெற்றி பெறாது. முழு கதைக்கும் கதையின் நாயகி தான் மைய பாத்திரம். அவருடைய தோளில் சுமக்க வேண்டிய திரைக்கதை இது.

இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய பங்களிப்பை அற்புதமாக வழங்கியிருக்கிறார்.

அதிலும் காரை ஓட்டிக்கொண்டே இருக்க வேண்டும். அதனுடன் சக நடிகர்களிடமும் பேசி நடிக்க வேண்டும். வண்டியை ஓட்டும் போது போக்குவரத்து நெரிசல், சாலை விதிகள் அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதிலும் அவர்கள் காரில் அமர்ந்து பயணிக்கும் போது காட்சி கோணங்களுக்கு ஏற்ப நடிக்கவும் வேண்டும். இவை அனைத்தையும் சவாலாக ஏற்றுக் கொண்டு நடித்து அசத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ரசிகர்களை பயமுறுத்த வேண்டும் என்று நினைத்து காட்சிகளை உருவாக்குவது என்பது எளிதானது.

ஆனால் கதையில் இடம்பெறும் ஒரு கதாபாத்திரத்தின் பயத்தை.. அவருடைய நடிப்பின் மூலமாக பார்வையாளர்களுக்கு கடத்துவது என்பது பெரும் சவாலானது. இது இயக்குநர்களின் கையில் இல்லை. நட்சத்திர நடிகர்களின் கையில் தான் இருக்கிறது.

அந்த வகையில் இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒவ்வொரு நுணுக்கமான உணர்வுகளையும் அற்புதமாக உள்வாங்கி, வெளிப்படுத்தி, ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கு இசை மூலம் தன்னுடைய முழுமையான அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கி அசத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். இசையமைப்பாளர் மட்டுமல்ல ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், படத்தொகுப்பாளர் என ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களும் அவர்களின் முழு திறமையையும் இந்தப் படத்திற்காக வழங்கியிருக்கிறார்கள். ” என்றார்.

குறட்டை நாயகன் : காமெடியில் கலக்கப் போகும் ‘காலா’ மணிகண்டன்

குறட்டை நாயகன் : காமெடியில் கலக்கப் போகும் ‘காலா’ மணிகண்டன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி, ஜெய் பீம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மணிகண்டன். இவர் முதல் முறையாக தனி நாயகனாக நடித்து முடித்து இருக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்குகிறார்.

இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் நசரேத் பசிலியான், யுவராஜ் கணேசன், மகேஷ்ராஜ் பசிலியான் தயாரித்து இருக்கின்றனர்.

படத்தில் மணிகண்டன் உடன் முக்கிய கதாபாத்திரங்களில் மீதா ரகுநாத், ரமேஷ் திலக், இயக்குநர் பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள் (பக்ஸ்) உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தின் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் ஆக இயக்குநர் எஸ். பி. சக்திவேல் பணிபுரிந்துள்ளார். மேலும் படத்தின் ஒளிப்பதிவை ஜெயந்த் சேதுமாதவன், படத்தொகுப்பை பரத் விக்ரமன், கலை இயக்கத்தை ஸ்ரீகாந்த் ஆகியோர் மேற்கொள்கின்றனர்.

இன்று பெரும்பாலானோர் அவதிப்படும் ‘குறட்டை’ பிரச்சனையை மையமாக வைத்து நகைச்சுவையுடன் இணைந்த ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக்கி இருக்கின்றனர்.

சென்னையை சுற்றி ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கின்றனர். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா 2 சூட்டிங் அப்டேட் இதோ

அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா 2 சூட்டிங் அப்டேட் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புஷ்பாவின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ‘புஷ்பா: தி ரூல்’ இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இப்படத்தின் சூட்டிங் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் ஏற்பட்ட வேலைநிறுத்தம் காரணமாக படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இப்போது சமீபத்திய அறிக்கையின்படி, நவம்பர் 12 ஆம் தேதி பாங்காக்கில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இந்த ஷெட்யூலில் ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்படும் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பாலிவுட் படமான ‘போலா’ வில் இணைந்த அமலா பால்

பாலிவுட் படமான ‘போலா’ வில் இணைந்த அமலா பால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘போலா’ என்பது தமிழில் வெளியான ‘கைதி’ படத்தின் இந்தி மொழி ரீமேக் ஆகும். அஜய் தேவ்கன் மற்றும் தபு நடிக்கும் இப்படத்தில் அமலா பால் ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. பாலிவுட் நட்சத்திரத்துடன் அமலா பால் இணையும் இப்படம் 2023 இல் திரைக்கு வரவுள்ளது.

இதை பற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள அமலா பால் இது ஒரு “நல்ல செய்தி” என்று தெரிவித்துள்ளார்.

சமந்தாவின் முயற்சியை பாராட்டிய யசோதா ஆக்‌ஷன் இயக்குனர்

சமந்தாவின் முயற்சியை பாராட்டிய யசோதா ஆக்‌ஷன் இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒவ்வொரு முறையும் நடிகை சமந்தா சிறந்ததைத் தருகிறார் என்று யசோதா ஸ்டண்ட் இயக்குநர் யானிக் பென் கூறியுள்ளார். கிக் பாக்ஸிங், ஜுஜிட்சு போன்ற தற்காப்பு கலைகளை பயன்படுத்தி சண்டை காட்சிகளை அமைத்ததாக தெரிவித்தார்.

காட்சிகளை பதிவு செய்யும் போது சமந்தா மற்றும் பிறரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. “சமந்தா மிகவும் அர்ப்பணிப்புள்ளவர். அவர் எப்பொழுதும் சிறந்ததைக் கொடுக்கத் தயாராக இருக்கிறார் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் இணையும் புதிய படம் இந்த தேதியில் தொடங்கபடுகிறதா?

ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் இணையும் புதிய படம் இந்த தேதியில் தொடங்கபடுகிறதா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐஸ்வர்யா தனது தந்தை ரஜினிகாந்துடன் இணைந்து தனது மூன்றாவது படத்தில் இணையவுள்ளார் என்பதை ஏற்கனவே உங்களுக்கு தெரிவித்திருந்தோம்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு சக்திவாய்ந்த கெஸ்ட் ரோலில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

நவம்பர் மாதம் 5 ஆம் தேதி பூஜையுடன் இப்படம் ஆரம்பமாக உள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.

பூஜை விழாவில் ரஜினி, ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர் சுபாஸ்கரன் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் துணைத் தலைவர் பிரேம்சிவசாமி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

More Articles
Follows