மீண்டும் ரஜினியை இயக்கும் முருகதாஸ்; விஸ்வாசம் சிவா என்னாச்சு?

Again AR Murugadoss going to direct Rajini for Sun pictures ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு நடித்து வரும் தர்பார் படத்தை இயக்கி வருகிறார் ஏஆர். முருகதாஸ்.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதன் டிரைலர் மற்றும் பாடல்கள் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக கூறப்படும் நிலையில் அடுத்த வருடம் 2020 பொங்கலுக்கு படத்தை வெளியிட உள்ளனர்.

இப்படத்தை முடித்துவிட்டு மற்றொரு படத்தை அறிவிக்க இருக்கிறாராம் ரஜினி.

இப்படத்தை சிவா இயக்கவுள்ளதாகவும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் ஏற்கெனவே செய்திகள் வெளியிட்டு இருந்தோம்.

இந்த நிலையில் சூர்யா நடிக்கவுள்ள படத்தை சிவா இயக்கவிருப்பதால் அவரால் உடனடியாக ரஜினி படத்தை இயக்க முடியாத சூழ்நிலை உள்ளதாம்.

எனவே சிவாவுக்கு பதிலாக மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அதுபோல் அட்லியிடம் ரஜினி ஒரு கதை கேட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Again AR Murugadoss going to direct Rajini for Sun pictures

Overall Rating : Not available

Latest Post