விஜய் படத்தை முடித்துவிட்டு ரஜினியை இயக்கும் ஏஆர். முருகதாஸ்.?

After Vijay 62 movie AR Murugadoss plans to direct Rajinikanthரஜினிகாந்த் தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டார்.

எனவே படங்களில் நடிக்க மாட்டார் என எல்லாரும் நினைத்திருந்த நிலையில், திடீரென கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

தற்போது அதன் சூட்டிங்குக்காக மேற்கு வங்கத்தில் இருக்கிறார் ரஜினி.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையைமக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தை முடித்துவிட்டு ஏஆர். முருகதாஸ் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம் ரஜினி.

இப்படத்தை பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அல்லது சன் பிக்சர்ஸ் தயாரிக்கக்கூடும் என கிசுகிசுக்கப்படுகிறது.

தன் அரசியல் வருகையையொட்டி ஒரு பிரம்மாண்ட படத்தை கொடுத்து விட்டு பின்னர் கட்சிப் பணிகளில் தீவிரமாக பணியாற்றவிருக்கிறாராம் ரஜினிகாந்த்.

2021ல் வரும் தமிழக சட்டமன்ற தேர்தலையே ரஜினி குறி வைத்திருப்பதால் அதற்குள் படங்களை முடிக்கத் திட்டமிட்டு இருக்கிறாராம்.

After Vijay 62 movie AR Murugadoss plans to direct Rajinikanth

Overall Rating : Not available

Latest Post