16 ஆண்டுகளுக்கு பிறகு 2018ல் சூர்யாவின் டபுள் டார்கெட்

16 ஆண்டுகளுக்கு பிறகு 2018ல் சூர்யாவின் டபுள் டார்கெட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya artஅடுத்த 2018ல் சூர்யா நடித்த இரு படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது என்பதை பார்த்தோம்.

பொங்கல் தினத்தில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து தீபாவளி தினத்தில் செல்வராகவன் இயக்கவுள்ள மற்றொரு படத்தை வெளியிட உள்ளதையும் பார்த்தோம்.

இதற்கு முன் கடந்த 2001ல் இதே போல சூர்யாவின் இரண்டு படங்கள் ஒரே ஆண்டில் பொங்கல் மற்றும் தீபாவளி தினத்தன்று வெளியானது.

அதாவது விஜய்யுடன் இணைந்த ப்ரெண்ட்ஸ் படம் பொங்கல் தினத்திலும் பாலா இயக்கிய நந்தா படம் தீபாவளியன்றும் வெளியானது.

இவையிரண்டும் மாபெரும் வெற்றிப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அது போன்ற வெற்றியை அடுத்த 2018 ஆண்டும் சூர்யா பெற வாழ்த்துவோம்.

After 16 years Suriya targetting two festivals on 2018

கருணாநிதியின் கொள்ளு பேரனை மணந்தார் விக்ரம் மகள்

கருணாநிதியின் கொள்ளு பேரனை மணந்தார் விக்ரம் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikrams Daughter Marries Karunanidhis Great Grandsonதி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து-சிவகாம சுந்தரியின் மகள் வழிப்பேரனும், கெவின்கேர் நிறுவனத்தலைவர் சி.கே. ரங்கநாதன்-தேன்மொழி தம்பதியின் மகனுமான மனோரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரம்- சைலஜா தம்பதியின் மகள் அக்‌ஷிதாவுக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களின் திருமணம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீட்டில் இன்று காலை நடைபெற்றது.

திருமணத்தில் கருணாநிதி மற்றும் நடிகர் விக்ரம் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். அரசியல் கட்சியினர் யாரும் பங்கேற்கவில்லை.

காலை 9.50 மணியளவில் மணமகள் அக்‌ஷிதாவை கோபாலபுரம் இல்லத்துக்கு நடிகர் விக்ரம் காரில் அழைத்து வந்தார்.

மணமகளுக்கு மாலை அணிவித்து உள்ளே அழைத்து சென்றனர்.

காலை 10 மணியளவில் மணமகன் மனோரஞ்சித் வந்தார். அவருக்கு மாலை அணிவித்து வரவேற்று அழைத்து சென்றனர்.

மணமக்கள் கருணாநிதியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

காலை 10.25 மணிக்கு கெட்டி மேளம் முழங்க தமிழ் முறைப்படி கருணாநிதி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

Vikrams Daughter Marries Karunanidhis Great Grandson

vikram daughter marriage

சூர்யா ரசிகர்களுக்கு 2018ல் பொங்கல் & தீபாவளி விருந்து

சூர்யா ரசிகர்களுக்கு 2018ல் பொங்கல் & தீபாவளி விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

On 2018 Suriya fans will have Pongal and Diwali treatsவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் 2018 பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் 2018 தீபாவளியன்றும் சூர்யாவின் மற்றொரு படம் வெளியாகும் என சற்றுமுன் அவரது மக்கள் தொடர்பாளர் ஜான்சன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு…

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இது சூர்யாவின் 36வது படமாகும்.

அதன் சூட்டிங்கை 2018ல் ஜனவரியில் தொடங்கவிருக்கிறார்களாம்.

விரைவில் படத்தின் மற்ற கலைஞர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் 2018 தீபாவளிக்கு படம் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.

On 2018 Suriya fans will have Pongal and Diwali treats

இப்போ அரசியல் இல்லை; ஆப் மட்டும்தான்.. கமல் பிறந்தநாள் பரிசு

இப்போ அரசியல் இல்லை; ஆப் மட்டும்தான்.. கமல் பிறந்தநாள் பரிசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan launching his App on his birthday special eventநவம்பர் 7ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் தன் பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார்.

அன்றைய தினம் அவரது ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக அவருடைய அரசியல் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்ப்பட்டது.

இது தொடர்பான எல்லா ஊடகங்களிலும் வெளியானது.

ஆனால் ஊடக உந்தல் கருதி அரசியல் கட்சியை அறிவிக்க முடியாது என்றார் கமல்.

இந்நிலையில் வருகிற நவம்பர் 5ஆம் தேதி கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனையில் கமல் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட விழா நடைபெற உள்ளதாம்.

அப்போது கமல் பெயரில் ஒரு ஆப் (செயலி) ஒன்றை அறிமுகப்படுத்தவிருக்கிறார்களாம்.

இந்த செயலி மூலம் ரசிகர்களும் பொதுமக்களும் இணைக்கப்பட உள்ளனர்.

மேலும் இந்த விழாவில் கலந்துக் கொள்ள தென்னிந்தியாவில் உள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

Kamalhassan launching his App on his birthday special event

கார்த்தி-விஜய்சேதுபதி உடன் இணையும் மேயாதமான் ப்ரியா

கார்த்தி-விஜய்சேதுபதி உடன் இணையும் மேயாதமான் ப்ரியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Meyaadha Maan fame Priya Bavani shankar next movie updatesசிவகார்த்திகேயனைப் போல் சின்னத்திரையில் இருந்து வந்து இன்று வெள்ளித் திரை ரசிகர்களை கவர்ந்துள்ளவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

இவர் நாயகியாக அறிமுகமான மேயாத மான் திரைப்படம் கடந்த அக். 18ல் தீபாவளியன்று வெளியானது.

மெர்சல் படம் வெளியான சமயத்தில் இதுவும் ரிலீஸ் ஆனதால் இந்த மான் வந்த சுவடு தெரியாது என்றனர்.

ஆனால் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ்வான விமர்சனங்களால் தற்போது படத்திற்கு நிறைய அரங்குகள் கிடைத்து வருகின்றது.

தற்போது விஜய்சேதுபதியுடன் ஜீங்கா படத்திலும் கார்த்தியுடன் ஒரு படத்திலும் நடிக்க பிரியாவுக்கு வாய்ப்புகள் வந்துள்ளதாம்.

இந்நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில் “ரசிகர்களிடமிருந்து இந்த மாதிரியான வரவேற்பை நான் எதிர்பார்க்கவில்லை.

பெண்களை கொச்சைப்படுத்தாமல் உள்ள படங்களில் மட்டுமே நான் நடிப்பேன்.

நான் ஹீரோயினுக்கான மெட்டீரியல் கிடையாது.

நான் ஒரு சாதாரண பெண். நடிப்பு திறமையை மட்டுமே காட்ட விரும்புகிறேன். கிளாமராக நடிக்கமாட்டேன்,” என தெரிவித்துள்ளார்.

Meyaadha Maan fame Priya Bavani shankar next movie updates

200 கோடியை வசூலிக்கவில்லை; மெர்சல் வசூலுக்கு தியேட்டர் ஓனர் பதிலடி

200 கோடியை வசூலிக்கவில்லை; மெர்சல் வசூலுக்கு தியேட்டர் ஓனர் பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal vijay posterவிஜய் நடிப்பில் ரிலீஸான மெர்சல் படம் அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

படத்திற்கு கிடைத்த எதிர்ப்பே இதற்கு பாப்புலாரிட்டியை கொடுத்தது.

வெளியான 3 நாட்களிலேயே படம் ரூ. 100 கோடியை கடந்துவிட்டதாகவும், தற்போது 200 கோடியை நெருங்கிவிட்டதாகவும் தகவல்கள் வந்தன.

படம் வெளியாகி 12 நாட்களை கடந்துள்ள நிலையில் தமிழக அளவில் மட்டும் ரூ. 100 கோடியை கடந்துவிட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த பிரபல தியேட்டர் அதிபர் ஒருவர் பேட்டியில் கூறும்போது…

மெர்சல் படம் ரூ. 200 கோடியை வசூலிக்கவில்லை. தியேட்டருக்கு மக்களை வரவழைக்கவே இது போன்ற யுக்திகளை கையாள்வது வழக்கம்.

இது எம்ஜிஆர் காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ளது. நாங்கள் தியேட்டர் வசூலை சொன்னால் மட்டுமே வசூலின் உண்மையான நிலவரம் தெரியும்” என கூறியுள்ளார்.

Mersal movie not collected Rs 200 crores in box office

More Articles
Follows