20 வருடங்களுக்கு முன்பே விஜய் படத்தில் இணைந்த ரோலக்ஸ் & டீனா

20 வருடங்களுக்கு முன்பே விஜய் படத்தில் இணைந்த ரோலக்ஸ் & டீனா

லோகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்த ‘விக்ரம்’ படம் கடந்த ஜூன் மாதம் ரிலீஸ் ஆனது.

இந்த படம் தமிழ் சினிமாவின் அனைத்து ரெக்கார்டுகளை முறியடித்து நல்ல வசூல் வேட்டை செய்துள்ளது.

தற்போது 50 நாட்களைக் கடந்துள்ள நிலையிலும் இன்னும் சில தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் சிறிய கேரக்டரில் நடித்த நடிகர் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டரும் வசந்தியின் டீனா என்ற கேரக்டரும் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டது.

இந்த இரண்டு கேரக்டர்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் இவர்கள் இருவரும் ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கு முன்பு இணைந்து நடித்துள்ள தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய் சூர்யா இணைந்து நடித்த ‘ப்ரெண்ட்ஸ்’ படத்தில் ருக்கு ருக்கு… என்ற பாடலுக்கு விஜய் சூர்யா தேவயாணியுடன் டீனா இணைந்து ஆடும் பட காட்சிகளை ரசிகர்கள் இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ரோலக்ஸ் & டீனா

20 years ago, Rolex and Tina teamed up in Vijay’s film

வரலாற்று உண்மை : சிவகார்த்திகேயன் படத்தை தொடர்ந்து உதயநிதி படத்தை தயாரிக்கும் கமல்

வரலாற்று உண்மை : சிவகார்த்திகேயன் படத்தை தொடர்ந்து உதயநிதி படத்தை தயாரிக்கும் கமல்

கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் ஆர்வம் காட்டி வந்த நடிகர் கமல்ஹாசன் தற்போது மீண்டும் சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறார்.

விரைவில் மகேஷ் நாராயணன் இயக்க உள்ள படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன்.

நடிப்பு மட்டும் என்றும் இல்லாமல் தன் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக திரைப்படங்களை அடுத்தடுத்து தயாரித்து வருகிறார்.

இவர் தற்போது தயாரித்து வரும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவரது நிறுவனத்தின் 54வது படைப்பான புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை கமலுடன் இணைந்து மகேந்திரன் தயாரிக்கிறார்.

பல புதிய முயற்சியுடன் கூடிய வெற்றி படங்களை தயாரித்த, உலகநாயகன் திரு.கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனமும் தயாரிப்பாளர் திரு.ஆர்.மகேந்திரனும் மீண்டும் ஒரு வெற்றி கூட்டணியில் இணைந்து தயாரிக்க இருக்கும் 54வது திரைப்படத்தின் கதாநாயகனாக திரு. உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருக்கிறார்.

இது ஒரு உண்மை வரலாற்று நிகழ்வினை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். பிரம்மாண்டமாகத் தயாராகும் இந்தப் படம் குறித்த பிற விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

கடந்த ஜூன் மாதம் வெளியான கமலின் ‘விக்ரம்’ பட விநியோக உரிமையை உதயநிதி பெற்றிருந்தார்.

அதுபோல பல ஆண்டுகளுக்கு முன் கமல் நடிப்பில் வெளியான ‘மன்மதன் அம்பு, படத்தை உதயநிதி தன் ரெட் ஜெயன்ட் மூவி சார்பாக தயாரித்து வெளியிட்டிருந்தார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Kamal Haasan to produce Udhayanidhi Stalin’s next film

அமீர்கான் – உதயநிதி கைகோர்த்த ‘லால் சிங் சத்தா’ தமிழ் டிரைலர் ரிலீஸ்

அமீர்கான் – உதயநிதி கைகோர்த்த ‘லால் சிங் சத்தா’ தமிழ் டிரைலர் ரிலீஸ்

அமீர்கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப்படத்திற்கான தமிழ் பதிப்பின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் ‘லால் சிங் சத்தா’ படத்தை ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் வெளியாகிறது.

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகரான அமீர்கான், அவரது கனவு படைப்பான ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப்படத்தை, இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் சென்றடைய செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார்.

அதனடிப்படையில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ‘லால் சிங் சத்தா’ படத்தை தமிழில் வழங்குவதுடன், தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், தொடக்கத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு பொருத்தமான மற்றும் முக்கியமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது.

இந்த பட்டியலில் அமீர்கானின் ‘ லால் சிங் சத்தா’வும் இணைந்திருக்கிறது. ஆகஸ்ட் 11 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான முன்னோட்டம் தற்போது வெளியாகியிருக்கிறது.

இதன் மூலம் நடிகர் அமீர்கான் தமிழ் ரசிகர்களிடத்திலும் நட்சத்திர நடிகராக அறிமுகமாகி, பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.

அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படத்தின் முன்னோட்டம் இந்தியில் வெளியாகி, சாதனை படைத்து வருகிறது.

அனைவரின் உலக அளவிலான ரசிகர்கள், அவரது கதாப்பாத்திரத்தை திரையில் காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இப்படத்தின் பாடல்களும் வெளியாகி, இணையத்தில் பெரிய அதிர்வை ஏற்படுத்தி, ட்ரெண்டிங்கில் தொடர்ந்து இருக்கிறது. மேலும் படக்குழுவினர், படத்தின் ஆத்மார்த்தமான உணர்வை தாங்கியிருக்கும் பாடல்களையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த இசையில் பங்களிப்பை வழங்கியிருக்கும் பாடலாசிரியர்கள், இசைக்கலைஞர்கள், இசையமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு இன்று பொதுவெளியில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

அமீர்கான் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கிரண் ராவ் மற்றும் வயாகம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ‘லால் சிங் சத்தா’ படத்தில், அமீர்கானுடன் கரீனா கபூர் கான், மோனா சிங், சைதன்யா அக்கினேனி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் ஆங்கிலத்தில் வெளியான ‘ஃபாரஸ்ட் கெம்ப்’ எனும் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

The Tamil Trailer of Aamir Khan starrer Laal Singh Chaddha is here

‘காமன்மேன்’ டைட்டிலை மாற்றி மிருகத்தனமான டைட்டில் வைத்த சசிகுமார்

‘காமன்மேன்’ டைட்டிலை மாற்றி மிருகத்தனமான டைட்டில் வைத்த சசிகுமார்

விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ வெற்றிப்படத்தை தொடர்ந்து IT.D.ராஜா மற்றும் D.R.சஞ்சய் குமார் சார்பில் செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘காமன்மேன்’.

சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தை ‘கழுகு’ பட இயக்குனர் சத்யசிவா இயக்கியுள்ளார்.

ஹரிப்ரியா கதாநாயகியாக நடிக்க, விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகி வரும் இந்தப்படம் சசிகுமாரின் வழக்கமான படங்களின் பாணியில் இருந்து விலகி முற்றிலும் புதிய கதைக்களத்தில் தயாராகி வருகிறது.

இந்தப்படம் துவங்கப்பட்டபோதே ‘காமன்மேன்’ என்கிற டைட்டில் வைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டாலும், இதே டைட்டிலை வேறு ஒரு நிறுவனம் தங்களது படத்திற்கு முன்கூட்டியே பதிந்துவிட்ட தகவல் பின்னர்தான் தெரிய வந்தது.

இதனால் இந்தக்கதைக்கு பொருத்தமாக இருந்தாலும் காமன்மேன் என்கிற டைட்டிலை பயன்படுத்த முடியாத சூழல் உருவானது.

இந்த நிலையில் இந்தப்படத்திற்கு ‘நான் மிருகமாய் மாற’ என புதிய டைட்டிலை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் வெளியீட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

sasi kumar changed common man movie title

‘பேப்பர் ராக்கெட்’ விடும் கிருத்திகா உதயநிதி.; சிம்பு மிஷ்கின் மாரி விஜய் வாழ்த்து

‘பேப்பர் ராக்கெட்’ விடும் கிருத்திகா உதயநிதி.; சிம்பு மிஷ்கின் மாரி விஜய் வாழ்த்து

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும், ஜீ5 ஒரிஜினல் வெப் சீரிஸ் “பேப்பர் ராக்கெட்”. 2022 ஜூலை 29 உலகமெங்கும் வெளியாகிறது.

மனதை இலகுவாக்கும் உணர்வுபூர்வமான தொடராக இந்த தொடர் உருவாகியுள்ளது. இந்தத் தொடர் வாழ்வின் தருணங்களை ரசிப்பது மற்றும் மகிழ்ச்சியைக் கண்டறிவது என்ற கருத்தைச் சுற்றி வருகிறது.

பாடல்களின் மாபெரும் வெற்றியின் காரணமாக, பேப்பர் ராக்கெட் வெளியீட்டிற்கான எதிர்பார்ப்புகள் படிப்படியாக அதிகரித்துள்ளன. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் இத்தொடரை தயாரித்துள்ளார்.

இத்தொடரின் டிரைலர் வெளியீட்டு படக்குழுவினர், பிரபலங்கள் கலந்துக் கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

இயக்குனர் கிருத்திகா உதயநிதி பேசியதாவது…

“பேப்பர் ராக்கெட் என் இதயத்திற்கு நெருக்கமான தொடர். இது எனக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை அளித்துள்ளது. படக்குழுவில் இணைந்த சினிமாவின் பெரிய நட்சத்திரங்களுடன், இந்த பேப்பர் ராக்கெட் ஒரு அற்புதமான இடத்தை வந்தடைந்துள்ளது.

பெரும்பாலும், திரில்லர் வகை அடிப்படையிலான தொடர்கள் தான் ஓடிடி இயங்குதளங்களின் விருப்பமான தேர்வாக இருக்கும். ஜீ5 இந்தத் தொடரில் ஆர்வம் காட்டியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதைச் செய்ததற்காக ஜீ5 குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி.

இதுவரை நான் பணியாற்றிய தயாரிப்பாளர்களில், சிறந்த தயாரிப்பாளர் பெண்டெலா சாகர் தான். நடிகர்கள் தங்களது சிறப்பான நடிப்பால் இந்த தொடரை உயர்த்தியுள்ளனர். தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் சிறந்த பங்களிப்புகளால் அதை அழகுபடுத்தியுள்ளனர். குறிப்பாக, பேப்பர் ராக்கெட்டில் ஒலி வடிவமைப்பு முக்கிய பங்கு வகித்துள்ளது. தபஸ் நாயக்கின் அற்புதமான பணிக்காக அவருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

பேப்பர் ராக்கெட் பார்வையாளர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது..

“ ஜீ5-க்கு முதலில் நன்றி கூறிக்கொள்கிறேன். இந்த தொடர் கண்டிப்பாக பெரிய வெற்றியடையும், அதற்கு எனது வாழ்த்துகள். ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் எனது வாழ்த்துகளை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன்.

படபிடிப்பு நடக்கும் போது, கிருத்திகாவின் தனிப்பட்ட வாழ்கையில் பல சிக்கல்கள் இருந்தாலும், அதை தாண்டி இந்த தொடரை முடித்துள்ளார். கிருத்திகா இந்த கதையுடன் மிகவும் ஒன்றிணைந்துவிட்டார், அதனால் தியேட்டரில் வெளியாகும் படங்களுடன் எதிரித்து போராடும் மனநிலையில் இருக்கிறார்.

OTT மற்றும் திரையரங்கு வெளியீடுகள் வேறுபட்டவை என்பதை அவர் அறிந்திருந்தாலும், தியேட்டர் பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்க்க விரும்புகிறார்.

நடிகர் சிலம்பரசன் TR பேசியதாவது…

முதலில் இங்கு நன்றி கூற வேண்டும், அப்பாவிற்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது உதவிய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அங்கிளுக்கும், உதயநிதி அண்ணாவுக்கும் நன்றி.

உதயநிதியை அணுகுவது வெகு இயல்பாக ஈஸியாக இருக்கிறது. அவர் உதவியதோடு நிற்காமல் தொடர்ந்து விசாரிப்பது பெரிய விசயம். அதற்கு நன்றி.

கிருத்திகா மேடமும் நானும் முன்பே ஒரு படம் செய்வதாக இருந்தோம். எனக்கு பெண் இயக்குநர் ஆண் இயக்குநர் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. ஆனால் இவர் ஹாபியாக செய்கிறாரோ என்ற சந்தேகம் இருந்தது ஆனால் அவரது உழைப்பு பிரமிப்பு தருகிறது.

இருப்பினும், அவருடைய அலாதியான ஆர்வத்தையும், தீவிர உழைப்பையும் கண்டு நான் மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைகிறேன், அது இந்த வெளியீட்டில் தெளிவாகத் தெரிகிறது. இந்தத் தொடர் அற்புதமான தொடர், படக்குழுவில் உள்ள அனைவருக்கும் இந்த தொடர் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

இயக்குனர் மிஷ்கின் பேசியதாவது..

“இந்த படத்தில் பெரிய அனுபவம் இருக்கிறது. இப்போதெல்லாம் படத்தில் இருக்கும் நல்ல காட்சிகளை டிரெய்லரில் போட்டு படம் பார்க்க முடியாமல் செய்து விடுகிறார்கள். அது போல் இல்லாமல் இயக்குனர் கிருத்திகா திறமையான நபர், அவருடைய திறமையை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

இந்த திரைப்படத்தில் பெரிய அனுபவங்களை கிருத்திகா பார்வையாளர்களுக்கு கொடுத்திருக்கிறார். தொடர் பார்க்க சிறப்பாக வந்துள்ளது. சிக்கலான திரைக்கதை அமைப்புடன் பார்வையாளர்களைக் குழப்புவதைத் தவிர்த்து, எளிமையான, நேர்த்தியான மற்றும் தெளிவான கதைகளைக் கொண்ட திரைப்படங்களையும் தொடர்களையும் அனைவரும் உருவாக்க தொடங்கினால் நன்றாக இருக்கும். இந்த தொடர் பிரம்மாதமாக இருக்கிறது, ஒட்டுமொத்த குழுவுக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியதாவது..

“இயக்குனர் கிருத்திகா, படத்தை கதையாக வித்தியாசமாகவும், தெளிவாகவும் புரிந்துகொள்கிறார். இந்த படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது எனக்கு பொறாமையாக இருக்கிறது.

இந்த படத்தில் நடித்தவர்களுக்கு ஒரு புது அனுபவமாக இந்த தொடர் இருக்கும். ஒரு வெப் தொடர், நடிகர்களுக்கு முக்கியமான ஒன்றாக இருக்கும். இந்தத் தொடரில் பல நடிகர்களின் திறமை விரைவில் வெளிவரும் என்று நான் நம்புகிறேன். ஜீ5 உடைய ‘விலங்கு’ தொடர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த தொடரும் அப்படி வெற்றி அடைய படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள்.

நடிகர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பேசியதாவது…

“கிருத்திகா ஒரு திறமையான இயக்குநர். இந்த படத்தில் அவர் செய்திருக்கும் விஷயத்தை டிரெய்லர் மூலமாக என்னால் உணர முடிகிறது. கிருத்திகா மிகப்பெரிய இயக்குநராக எனது வாழ்த்துகள். இதில் பணிபுரிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

நடிகர் காளிதாஸ் ஜெயராம் பேசியதாவது…

“பேப்பர் ராக்கெட் டிரெய்லரை வெளியிட்ட கமல்ஹாசன் சாருக்கு நன்றி. அவர் பாராட்டிய ஒவ்வொரு வார்த்தையும் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இந்த தொடரில் மிகவும் ரசித்து நடித்தேன். நீங்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும், இந்த தொடர் உங்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும்..

நடிகை தான்யா ரவிசந்திரன் பேசியதாவது…

“இந்த தொடரில் பணிபுரிந்தது எனக்கு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இந்த தொடர் ஒரு அர்த்தமுள்ள மற்றும் மதிப்புமிக்க பயணத்தை மேற்கொள்வது போல் இருந்தது. எனது அனுபவத்தை சிறப்பாகவும் உற்சாகமாகவும் மாற்றியதற்காக அணியில் உள்ள அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் பாலாஜி தரணிதரன் பேசியதாவது…

“இந்த தொடரின் கதை எனக்கு முன்பே தெரியும். இது ஒரு பீல்குட் கதை. பேப்பரில் இருந்ததை அப்படியே திரைக்கு கொண்டு வந்துள்ளார் இயக்குநர் கிருத்திகா. இதில் சிறப்பான தருணங்கள் பல இருக்கிறது. இந்த தொடரை நீங்கள் அனைவரும் பார்க்க வேண்டும்.

நடிகர் மிர்ச்சி சிவா கூறியதாவது…

“ஒரு வெப் தொடர் எடுப்பது சாதாரண விஷயம் கிடையாது. கிருத்திகா ஒரு அற்புதமான படைப்பை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துகள்.”

எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் பேசியதாவது…

“பேப்பர் ராக்கெட் எழுத்தாகவே சிறப்பான ஒன்றாக இருந்தது. உணர்வுபூர்வமாகவும், கதாபாத்திரங்களாகவும் சிறப்பாக இந்த தொடர் வந்துள்ளது. நீங்கள் இதை பார்த்து உங்கள் ஆதரவை தரவேண்டும். “

இசையமைப்பாளர் சைமன் பேசியதாவது…

“நான் திரில்லர் படங்களுக்கு தான் வழக்கமாக இசையமைப்பேன், இது வாழ்கையை பற்றிய படம் என்பதால், எனக்கு புது அனுபவமாக இருந்தது. தொடர் நன்றாக வந்துள்ளது. இந்த தொடருக்கு ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் நாதன் பேசியதாவது…

“இந்த தொடர் பயணம் சம்பந்தபட்ட கதை என்பதால், அதை எடுக்கும் போதே நாங்கள் மிகுந்த சந்தோசத்துடன் பணிபுரிந்தோம். தொடரை பார்க்கும் போது உங்களுக்கும் அந்த உணர்வு வரும் என்று நினைக்கிறேன்.”

இசையமைப்பாளர் வேத் சங்கர் பேசியதாவது…

இந்த தொடரில் இரண்டு பாடல்களை நான் இசையமைத்துள்ளேன். இந்த தொடர் இப்படி உருவாகி வந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் இது உலகளாவிய மக்களால் விரும்பப்படும் என்பதை உங்களுக்குச் சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவரும் இந்தத் தொடரைப் பார்த்து உங்கள் ஆதரவைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நடிகர் காளி வெங்கட் பேசியதாவது…

“இந்த தொடரில் ஒரு எபிசோட் தான் நான் நடித்திருக்கிறேன். ஆனால் அதுவே கவித்துவம் நிறைந்த எபிசோடாக இருந்தது. வட்டார வழக்கு, பயணம் என இந்த தொடரில் நடித்தது ஒரு புது அனுபவமாக இருந்தது. “

நடிகர் கருணாகரன் பேசியதாவது…

“ஒரு வித்தியாசமான சீரிஸில் நடித்தது மகிழ்ச்சி. இது வாழ்வின் மகிழ்ச்சியை பற்றி 7 எபிசோடுகளில் கூறும் தொடர், 6 கதாபாத்திரங்கள் பற்றிய கதை. இந்த தொடரில் பணிபுரிந்தது பெரிய அனுபவமாக இருந்தது.”

நடிகை கௌரி கிஷன் கூறியதாவது…

“ஒரு நடிகையாக ஒரு வெப் சீரிஸ் பண்ண வேண்டுமென்ற ஆசை எனக்கு அதிகம் இருந்தது. கதையை நான் கேட்கும் போது இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக மாறியது. இந்த தொடரில் பெண் கதாபாத்திரத்திற்கு சிறப்பான எழுத்தை கொடுத்துள்ளார் இயக்குநர், அவருக்கு நன்றி. இத்தொடர் ரசிகர்கள் அனைவருக்கும் சிறப்பான அனுபவமாக இருக்கும், நன்றி.

நடிகை பூர்ணிமா பாக்யராஜ் கூறியதாவது…

“வெப் தொடரில் நடிக்க வேண்டும் என்பதும், ஒரு பெண் இயக்குனர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதும் எனது ஆசை. அது இந்த தொடரில் நிகழ்ந்தது. கிருத்திகா மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

இயக்குநருக்கு என்ன எடுக்க போகிறோம் என்ற தெளிவு இருந்தது. இந்த தொடரில் பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் வேலைபார்த்துள்ளனர். இந்த தொடர் கண்டிப்பாக வெற்றியடையும், அதில் எந்த சந்தேகமும் இல்லை.

நடிகர் சின்னி ஜெயந்த் பேசியதாவது…

“எனது 38 வருட திரைப்பயணத்தில் நான் நடித்த முதல் தொடர் இது தான். முதலில் என்னிடம் நீச்சல் தெரியுமா என்று தான் கேட்டார்கள் நான் தெரியாது என்றேன் பரவாயில்லை இல்லை வாருங்கள் என கூட்டிப்போனார்கள். நான் நடித்த பல காட்சிகள் கடலில் தான் எடுக்கப்பட்டது.

காளிதாஸ் உடன் இந்த தொடரில் நடித்தது எனக்கு சந்தோசம். அவரது அப்பா ஜெயராம் உடன் நடித்திருக்கிறேன் இப்போது காளிதாஸ் உடனும் நடிப்பது மகிழ்ச்சி. இந்த தொடர் பார்வையாளர்களுக்கு தனித்துவமான மற்றும் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும்.”

ஜூலை 29 முதல் ZEE5 இல் திரையிடப்படும் பேப்பர் ராக்கெட் தொடரில் காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், K.ரேணுகா, கருணாகரன், நிர்மல் பாலாஜி, கௌரி G.கிஷன், டாக்டர் தீரஜ், நாகிநீடு, V. சின்னி ஜெயந்த், காளி வெங்கட், உள்ளிட்டோருடன் பூர்ணிமா பாக்யராஜ், G.M.குமார், அபிஷேக், பிரியதர்ஷினி மற்றும் பல பெரிய நட்சத்திரப் பட்டாளம் இணைந்து பணியாற்றியுள்ளனர்

இந்தத் தொடரில் தரண் குமார், சைமன் K கிங் மற்றும் வேத்சங்கர் என மூன்று இசையமைப்பளர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

பேப்பர் ராக்கெட்

Paper Rocket trailer launch highlights

உதயநிதிக்கு ‘கலகத் தலைவன்’ பதவி கொடுத்த மகிழ் திருமேனி

உதயநிதிக்கு ‘கலகத் தலைவன்’ பதவி கொடுத்த மகிழ் திருமேனி

உதயநிதி நடிப்பில் உருவான ‘நெஞ்சுக்கு நீதி’ படம் கடந்த மே 20ல் வெளியானது.

தற்போது மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி.

இந்த படங்களை தொடர்ந்து ‘தடம்’ படம் தமிழ் சினிமாவில் தடம் பதித்த இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார் உதயநிதி.

இதில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு ‘கலகத் தலைவன்’ என்று பெயரிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

கலகத் தலைவன்

Magizh Thirumeni – Udayanidhi’s next film is titled Kalagathalaivan

More Articles
Follows