என்னருகில் ஆயிரம் பேர் இருந்தாலும் எனக்கு நானே துணை… – த்ரிஷா

Actress Trisha clarifies how to reducer Stressதென்னிந்திய சினிமாவில் முக்கியமான நடிகை த்ரிஷா.

இவர் சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் இன்று வரை முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

இந்நிலையில் மன அழுத்தம் குறித்து நடிகை த்ரிஷா பேசியதாவது…

“நம் எதிரில் வரும் பலர் கையை தூக்கி ‘ஹாய்’ சொல்லி விட்டு செல்கிறார்கள்.

அவர்களில் சிலருடன் பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அதில் கொஞ்சம் பேர் நண்பர்களாக மாறி விடுவார்கள்.

அவர்கள் நண்பர்களாக இருந்தாலும் சொந்த விஷயங்கள் எல்லாவற்றையும் பகிர்ந்து விட முடியாது.

எனவே தினமும் நமக்கு நாமே ‘ஹலோ’ சொல்லிக் கொள்ள வேண்டும்.

எனக்கு மன அழுத்தம் ஏற்படும்போது தனிமையை விரும்புவேன்.

என்ன பிரச்சினை வந்தாலும் என்னை பரிசோதனை செய்து கொள்வேன்.

நல்ல குடும்பம், நண்பர்கள் இருக்கலாம். ஆனால் எனக்கு நானேதான் துணை.” என்று தெரிவித்தார்.

Actress Trisha clarifies how to reducer Stress

Overall Rating : Not available

Latest Post