நடிப்பு கிடையாது ஒன்லி படிப்புதான்; தன் மகள் குறித்து ரேகா விளக்கம்

நடிப்பு கிடையாது ஒன்லி படிப்புதான்; தன் மகள் குறித்து ரேகா விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Rekha statement about his daughter entry in Cinemaகடலோரக் கவிதைகள், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, புரியாத புதிர், அண்ணாமலை போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ்பெற்றவர் நடிகை ரேகா.

இவர் தற்போது ஜெயப்பிரதா, பார்த்திபன், ரேவதி, நாசர், அனுஹாசன் ஆகியோருடன் இணைந்து “கேணி” திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் இவரது மகள் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவிருப்பதாக செய்திகள் பரவின.

இதனை மறுத்து நடிகை ரேகா விளக்கமளித்திருக்கிறார். அவர் கூறியதாவது…

“மதிப்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கு, என் மகள் சினிமாவில் நடிக்கவிருப்பதாக சமூக வலைதளங்களிலும், சில இணையதள பக்கங்களிலும் தவறான செய்திகள் பரப்பப்படுவதாக அறிகிறேன்.

அந்த செய்தியில் எள்ளளவும் உண்மையில்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், என் மகள் உயர்கல்வி படிப்பதற்காக ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதையும், சினிமாவில் நடிப்பதற்கான ஆர்வமோ, ஆசையோ அவருக்குத் துளியும் இல்லை என்பதனையும் இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது சம்பந்தமாக தவறான தகவல்களை பரப்பி வருவோர் இனியும் தொடராமல் நிறுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி” என கூறியுள்ளார்.

Actress Rekha statement about his daughter entry in Cinema

20 வெட்டு காட்சிகளுடன் யு/ஏ வாங்கிய நாகேஷ் திரையரங்கம்

20 வெட்டு காட்சிகளுடன் யு/ஏ வாங்கிய நாகேஷ் திரையரங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ghost movie Nagesh Thiraiarangam Censor and release updatesஒரே ‘ஷாட்’டில் எடுக்கப்பட்ட ‘அகடம்’ படத்தை இயக்கி, ‘கின்னஸ்’ சாதனை படைத்த இசாக் டைரக்டு செய்துள்ள படம் ‘நாகேஷ் திரையரங்கம்’.

‘நெடுஞ்சாலை’ புகழ் ஆரியும், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,’ ‘இனிமே இப்படித்தான்’ ஆகிய படங்களில் நடித்த ஆஷ்னா சவேரியும், இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இதில் ஆரியின் தங்கையாக அதுல்யா நடித்துள்ளார்.

இப்படம் பற்றி இயக்குனர் இசாக் கூறியதாவது…

“இந்த படத்தில், ஆரி, ஆஷ்னா சவேரி ஜோடியுடன் காளி வெங்கட், மும்பை மாடல் மாசூம் சங்கர், மனோபாலா, சித்ராலட்சுமணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

முக்கிய கதாபாத்திரங்களில் லதாவும், சித்தாராவும் நடித்து இருக்கிறார்கள். நவுஷாத் ஒளிப்பதிவில், ஸ்ரீ இசையில் படம் உருவாகி இருக்கிறது. ட்ரான்ஸ் இந்தியா மீடியா நிறுவனம் சார்பில் ராஜேந்திர எம்.ராஜன் தயாரித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இன்று வரை எண்ணற்ற திகில் படங்களும், பேய் படங்களும் வந்துள்ளன.

இதில் முதன்முறையாக ஒரு தியேட்டரில் பேய் என்ற புதிய கோணத்தில், படத்தை உருவாக்கியுள்ளோம்.

ஆட்சேபகரமான சில காட்சிகள் இருப்பதாக கூறிய சென்சார் குழுவினர், 20 இடங்களை வெட்டி நீக்கிவிட்டு, ‘யு ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.” என்றார்.

Ghost movie Nagesh Thiraiarangam Censor and release updates

ரஜினியின் காலா பட ரிலீஸ் தேதியை அறிவித்தார் தனுஷ்

ரஜினியின் காலா பட ரிலீஸ் தேதியை அறிவித்தார் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaala stillsசூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கியுள்ள காலா படம் வருகிற ஏப்ரல் 27 ஆம் தேதி ரிலீஸ் என அப்பட தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் ரஜினியுடன் நானா படேகர், பங்கஜ் த்ரிபாதி, ஹ்யூமா குரேஷி, சமுத்திரகனி, ஈஸ்வரி ராவ், அஞ்சலி பாட்டீல், அருள்தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

நடிகர்கள்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே, அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், ஈஸ்வரிராவ், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்கேயர், ராஜ் மதன், சுகன்யா.

தொழில் நுட்பக்குழு:

இயக்குனர் – பா. ரஞ்சித்
இசை – சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு – முரளி . ஜி
கலை இயக்கம் – டி.ராமலிங்கம்
படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்
சவுண்ட் டிசைன்ஸ் – ஆண்டனி பி ஜெயரூபன்
கிரியேட்டிவ் டிசைனர் – வின்சி ராஜ்
சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயன்
நடனம் – சாண்டி
ஆடை வடிவமைப்பு – அனு வர்தன், சுபிகா
காஸ்ட்யூம்ஸ் – செல்வம்
ஒப்பனை – பானு பாஷ்யம், ராஜா
ஸ்டில்ஸ் – ஆர்.எஸ்.ராஜா
தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.பி. சொக்கலிங்கம், ஆர். ராகேஷ்
நிர்வாகத் தயாரிப்பு – எஸ்.வினோத்குமார்
தயாரிப்பு – வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மது

எக்ஸ் சோனுக்கு தடை; எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா? சென்சாரின் ஓரவஞ்சனை!

எக்ஸ் சோனுக்கு தடை; எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா? சென்சாரின் ஓரவஞ்சனை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

x videos movie stillsஒரு படம் சென்சார் போர்டின் விதிகளைத் தாண்டி வரும்போது சில வெட்டுக்களையும், பல மியூட்களையும் முதுகில் தாங்கிக் கொண்டுதான் வெளியாகிறது.

சென்சாரைப் பொருத்தவரையில் அவர்கள் பார்வையிலும், அரசியல் அதிகாரமிக்கவர்களைப் பாதிக்காத வகையிலும் இருந்தால் பிரச்சனையில்லை.

சான்றிதழ் எளிதாகக் கைக்கு வந்துவிடும்.

கொஞ்சம் சமூகப்பிரச்சனைகள், கிளாமர் உள்ள படங்கள் திணறத்தான் செய்கின்றன. அப்படி திணறி வர முடியாமல் போன படம் எக்ஸ் சோன் என்ற பெயரில் சென்சாருக்கு வந்த இந்திப் படம்.

மேல்முறையீடு வரை சென்றும் கடைசி வரை வெளி வர முடியாமலே போய்விட்டது.

ஆனால் இப்போது எக்ஸ் வீடியோஸ் என்ற படத்திற்கு ஏ சான்றிதழும் சென்சார் போர்டு பெண் உறுப்பினர்களிடமிருந்து பாராட்டும் கிடைத்திருப்பது இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எக்ஸ் வீடியோஸ் படம் தமிழ் இந்தி ஆகிய மொழியில் தயாராகியுள்ளது.

இயக்குநர் ஹரியின் உதவியாளர் சஜோ சுந்தர் இயக்கியுள்ளார். அஜய்ராஜ், பிரபுஜித், ஆஹிருதி சிங், ரியாமிக்கா, ஷான் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை கலர் ஷாடோஸ் எண்டெர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

எக்ஸ் சோனுக்கு கிடைக்காத சான்றிதழ் எக்ஸ் வீடியோஸுக்கு கிடைத்ததெப்படி? படத்தின் இயக்குநர் சஜோ சுந்தரைக் கேட்டோம்…

நான் மையப்படுத்தியிருப்பது பெண்களின் பாதுகாப்பு குறித்த கருத்துகளை… வெறுமனே உடலைக் காட்டி பணம் பண்ண எடுக்கப்பட்ட படம் அல்ல இது.

படத்திற்கு வைக்கப்பட்ட தலைப்பு வேண்டுமானால் ஆபாச படங்கள் கொண்ட தளத்தின் பெயரில் இருக்கலாம்.

ஆனால் குறிப்பாக சொல்லப்போனால் அந்த தளத்திற்கே ஆப்பு வைக்க எடுக்கப்பட்ட படம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அழகான பெண்களின் உடலமைப்பை குறிவைக்கும் ஆண்ட்ராய்ட் மாஃபியாவுக்கு எதிரான படம் இது. இந்த படத்தை சென்சார் போர்டிலுள்ள பெண் உறுப்பினர்களும் பார்த்தார்கள்.

இன்று அவசியம் சொல்லப்படவேண்டிய கருத்துள்ள முக்கியமான படம் இது என்று பாராட்டினார்கள். எக்ஸ் சோன் என்ன கதையம்சத்தோடு எடுக்கப்பட்ட படம் என்பது எனக்குத் தெரியாது. பண்பாடு, கலாச்சாரதிற்கு ஏற்ப ஒரு படம் எடுக்கப்பட்டிருந்தால் அதற்கு ஏன் தடை வரப்போகிறது?

அதனால் எக்ஸ் சோன் படத்தை எக்ஸ் வீடியோஸ் படத்தோடு ஒப்பிட்டு சென்சாரைக் குறை சொல்ல வேண்டாம்.

நான் தேவைப்படும் இடங்களில் மட்டுமே கிளாமர் வைத்துள்ளேன். அது படம் பார்க்கும் யாருக்கும் தவறாகத் தெரியாது என்று மட்டுமில்லாமல், சரியாகத் தானே சொல்லியிருக்கிறார்கள் என்றும் தோன்றும்.

எக்ஸ் வீடியோஸ் விரைவில் இந்தி, தமிழில் இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது..

நான் ஹீரோதான்; ஆனா ஹீரோ ரேஸில் நானில்லை… ஜீவா ஓபன் டாக்

நான் ஹீரோதான்; ஆனா ஹீரோ ரேஸில் நானில்லை… ஜீவா ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor jiivaசத்தமில்லாமல் ஆர்ப்பாட்டமில்லாமல் பல படங்களில் நடித்து வருகிறார் ஜீவா.

சுந்தர் சி இயக்கத்தில் இவர் நடித்துள்ள கலகலப்பு2 படம் நேற்று வெளியானது.

இவரின் சமீபத்திய பேட்டியில்..

சினிமாவில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தியேட்டர்களில் படங்கள் திரையிடப்படுவதை தாண்டி இன்டர்நெட் சினிமாவுலகம் ஒன்று இருக்கிறது.

எனது படங்களில் ஒன்றிரண்டு தவிர மற்ற படங்கள் நியாயமான வசூலை பெற்றிருப்பதால்தான் எனக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது.

கீ, கொரில்லா, ராஜுமுருகனின் ஜிப்சி போன்ற படங்களில் தனி ஹீரோவாக நடித்து வருகிறேன்.

தமிழ் சினிமா ரேசில் பல ஹீரோக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அந்த ரேசில் நான் இல்லை.” என்று கூறியுள்ளார்.

பிரபாகரன் மகன் பாலசந்திரன்; பாடகி இசைப்ரியா ஆகியோரை பற்றிய படம் : சாட்சிகள் சொர்க்கத்தில்

பிரபாகரன் மகன் பாலசந்திரன்; பாடகி இசைப்ரியா ஆகியோரை பற்றிய படம் : சாட்சிகள் சொர்க்கத்தில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

saatchigal sorkaththilஆஸ்திரேலியாவில், ஈழன் இளங்கோவின் இயக்கத்தில் உருவான, ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ திரைப்படம் வெளியாக உள்ளது.

நீண்ட காலமாகக் காத்திருந்த இத்திரைப்படத்தின், இசை வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை 25 ஆம் திகதி, மாசி மாதம் 2018 அன்று ஆஸ்திரேலியாவில், பெண்டில்ஹில்லில் உள்ள யாழ் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ ஒரு நடப்பியலுக்கு மாறுபட்ட தன்மையுடைய கதை பாணியில் அமைக்கப்பட்ட, இலங்கை அரச படையினரால் துன்புறுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட தமிழர்களினதும், அகதிகளாய் அயல் நாடுகளில் தமிழர் படும் அவலங்களையும், உண்மைச் சம்பவங்களையும் அடிப்படையாக கொண்டு உருவான படம்.

பாதிப் படம் தமிழில் துணையுரையுடன் ஆங்கிலத்திலும், மீதி ஆங்கில துணையுரையுடன் தமிழிலும் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் துணைக் கதைகள், குறும்படங்களாக பல சர்வதேச விருதுகளை தட்டிச்சென்ற கதைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படம், 2009ல் இலங்கை அரச படையினரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட தலைவர் பிரபாகரனின் புதல்வன் பாலச்சந்திரனுக்கும், பாடகியும் உடகவியளாளரும், நடிகையுமான சகோதரி இசைப்ரியாவுக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, அவர்களின் இழப்பை கருவாக கொண்டு உருவான கதைதான் ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’.

பாலச்சந்திரனின் வேடத்தில் இயக்குநர் ஈழன் இளங்கோவின் மகன் சத்யா இளங்கோ நடித்துள்ளார்.

ஈழத்தில் நடந்த கற்பழிப்பு கட்சிகளோ, கொலை கட்சிகளோ துன்புறுத்தல் கட்சிகளோ இத்திரைப்படத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, இருப்பினும், அதைவிட ஆழமான உணர்வுகளையும் வலியையும் அடக்கியுள்ளது இத்திரைப்படம்.

ஆஸ்திரேலியாவிலும், பிரான்ஸ் நாட்டிலும் படமாக்கப்பட்ட இப்படத்தின் தொழில்நுட்ப வேலைப்பாடுகள் தமிழ் நாட்டு திரைக் கலைஞர்களால் செய்யப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்திற்கு சென்னையில் பிரபலமான சதிஷ் வர்ஷன் இசையமைத்துள்ளார். சதீஷ் வர்ஷனின் குரலில் இரு பாடல்களும், தேசிய விருது பெற்ற பிரபல பாடகி சுர்முகியின் குரலின் ஒரு பாடலும் அமைந்துள்ளது.

இத்திரைப்படத்தில், ஆஸ்திரேலிய தமிழ், ஆங்கில நடிகர்களுடன் பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழ் நடிகர்களும், அவர்களோடு ஐம்பது வருட திரையுலக அனுபவமுள்ள ஈழத்து பிரபல நடிகர் ஏ ரகுநாதன் அவர்களும் நடித்துள்ளார்.

‘சாட்சிகள் சொர்கத்தில்’ ஒவ்வொரு தமிழனும் பார்க்கவேண்டிய திரைப்படம். பார்ப்பது மட்டும் அல்ல, இத்திரைப்படத்தை வேற்றுமொழி இனத்தவருக்கும் எடுத்துச்செல்ல வேண்டும்.

மொழி, உரையாடல், கதை அனைத்தும் அதற்கேற்பவே அமைக்கப்பட்டுள்ளது. திரையுலக வரலாற்றில், முக்கியமாக, ஈழத்தமிழரின் திரையுலக வரலாற்றில், இப்படம் வேறு ஒரு பரிமாணம் எடுத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஈழத் தமிழர்களின் வலிகள் இதுவரை கூறப்படாத வேறொரு வடிவில், வேறொரு அணுகுமுறையில், வேறொரு பரிமாணத்தில் கூறப்பட்டிருக்கிறது.

வேற்றுமொழி பேசுபவர்களுக்குக்கூட ஈழத் தமிழரின் வலிகள் இலகுவாய் புரியும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை வெற்றியடைய செய்வது ஒவ்வொரு தமிழனுடைய கடமை என்று உரிமையுடன் கூறலாம்.

More Articles
Follows