கடலோரகவிதைகள் ரேகா மகனாக யோகிபாபு !

கடலோரகவிதைகள் ரேகா மகனாக யோகிபாபு !

New Projectபாரதிராஜாவின் கடலோர கவிதை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரேகா . இவர் ,1990 – களில் தமிழ்,மலையாள முன்னணி கதா நாயகர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஜோடியாக நடித்து, பிரபல கதாநாயகிகள் பட்டியலில் இருந்தார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் இவர் , தற்போது அம்மா,அக்காள் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் தர்மபிரபு படத்தில் அவருக்கு அம்மாவாக ரேகா நடித்து இருக்கிறார். யமன் மற்றும் யாமலோக பின்னணி கொண்ட கதை இது. ஜனனி அய்யர், ராதாரவி, ரமேஷ் திலக், போஸ் வெங்கட் , மனோபாலா,மொட்டை ராஜேந்திரன், கும்கி அஸ்வின் ,மாஸ்டர் கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒரு பாடலுக்கு மேக்னா நாயுடு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார். அழகம்பெருமாள் வில்லனாக நடித்துள்ளார். யுகபாரதி எழுதிய பாடல்களுக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்திருக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். கதை, திரைக்கதை எழுதி டைரக்டு செய்திருப்பவர் முத்து குமரன்.
யோகிபாபுவுடன் ரேகா மற்றும் படத்தில் இடம் பெரும் நடிகர் நடிகைகள் நடித்த காட்சிகள், பிரம்மாண்டமாக அமைக்க பட்டிருந்த யாமலோகம் அரங்கில் படமாக்கப்பட்டது. ஏ. வி. எம் . ஸ்டூடியோ,மற்றும் சென்னை, பொள்ளாச்சி சுற்றுவட்டரங்களில் வளர்ந்துள்ள இப்படம் மே மாதம் திரைக்கு வருகிறது.

கடவுள் நல்லது செய்வார்; காத்திருப்போம்… லாரன்ஸ் வேண்டுகோள்

கடவுள் நல்லது செய்வார்; காத்திருப்போம்… லாரன்ஸ் வேண்டுகோள்

Actor cum Dance Master Raghava Lawrences request to his fansநடிகர் ராகவா லாரன்ஸ், காஞ்சனா 3, ராகவா லாரன்ஸ் மாற்றுத் திறனாளிகள், லாரன்ஸ் திருநங்கைகள்,

ரசிகர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸ் அன்பான வேண்டுகோள் ஒன்றை வழங்கியுள்ளார்.

அதில், ‘காஞ்சனா 3 படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு மிக்க நன்றி.

. என் மீது அன்புள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள்…

என்னை பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுவர்களை பற்றி கவலை படாதீர்கள்…

என் மீது அக்கறை உள்ள ஒரு சில மாற்றுத் திறனாளிகளும் திருநங்கைகளும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சம்மந்தப்பட்டவர் மீது புகார் அளிப்பதாக கேள்விப் பட்டேன். அப்படி எதுவும் செய்யாதீர்கள்.. பொறுமையை கடை பிடியுங்கள்…

நாம் நமது வழியில் நல்லதை மட்டும் நினைப்போம்..நல்லதை யே செய்வோம்.. அவர்கள் அவர்கள் வழியில் போகட்டும்..

எனக்கு ஒரு சின்ன பிரச்சனை என்றால் உடனே ஓடி வருகிற உங்கள் ஒவ்வொருவருக்கும் என் குடும்பத்தார் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..

நான் மும்பையில் காஞ்சனா இந்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன்..படப்பிடிப்பு முடிந்து வந்தவுடன் ஒரு நல்ல முடிவு எடுப்போம்..அது வரை அமைதி காப்போம்…

கடவுள் நமக்கான நல்லதை செய்வார்..

நமக்கு கெடுதல் நினைப்பவர்களுக்கும் நாம் நல்லது நடக்க ஆண்டவனை பிரார்த்திப்போம்…

நம்மை பற்றி புரிந்து கொள்ள ஆண்டவன் அருள் அவர்களுக்கு கிடைக்கட்டும்.

இவ்வாறு ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Actor cum Dance Master Raghava Lawrences request to his fans

கிரிக்கெட் ஆடும் ரஜினிகாந்த்; தர்பாரில் மாஸ் காட்டும் தலைவர்

கிரிக்கெட் ஆடும் ரஜினிகாந்த்; தர்பாரில் மாஸ் காட்டும் தலைவர்

Rajini plays cricket in Darbar set Stills goes viralலைகா தயாரிப்பில் உருவாகும் தர்பார் படம் ரஜினியின் 167-வது படமாக வளர்ந்து வருகிறது.

ஏஆர். முருகதாஸ் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இதில் ரஜினியுடன் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இதன் சூட்டிங் மும்பையில் நடைபெற்று வருகிறது.

சூட்டிங்கில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தாலும் அனைத்தும் காட்சிகளின் படங்களும் வீடியோக்களும் இணையத்தில் லீக்காகியுள்ளது.

இன்றைய தினத்தில் ரஜினிகாந்த் கிரிக்கெட் ஆடும் படங்கள் வெளியாகியுள்ளது.

அவருடன் நயன்தாரா, யோகிபாபு, நிவேதா ஆகியோரும் உள்ளனர்.

ரஜினியின் ஸ்டில்கள் வெளியாவது வருத்தமாக இருந்தாலும் தலைவர் தர்பாரில் செம மாஸாக உள்ளார் என ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Rajini Nayanthara Yogi babu plays cricket in Darbar set Stills goes viral

Darbar Rajini cricket Nayanthara yogibabu

விஜய்சேதுபதிக்கு இது தேவையா? கலாய்க்கும் அவெஞ்சர்ஸ் ரசிகர்கள்

விஜய்சேதுபதிக்கு இது தேவையா? கலாய்க்கும் அவெஞ்சர்ஸ் ரசிகர்கள்

Avengers fans troll Vijay Sethupathis dubbing in that movieமார்வெல் ஸ்டுடியோ நிறுவனம் தனது சூப்பர் ஹீரோக்களை ஒட்டு மொத்தமாக நடிக்க வைத்து தயாரித்துள்ள படம் தான் அவெஞ்சர்ஸ் என்ட் கேம்.

இதன் இறுதி பாகமான எண்ட் கேம் என்ற திரைப்படத்தை இன்று வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தில் இந்த படத்திற்கு தமிழ் படங்களை விட பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ளது.

தமிழ் டப்பிங் வசனத்தை இயக்குநர் ஏஆர் முருகதாஸ் எழுத, இந்த படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மார்வெல் ஆன்தம் பாடலை உருவாக்கியிருந்தார்.

மேலும் அயன்மேன் கேரக்டருக்கு விஜய் சேதுபதி டப்பிங் பேசியிருந்தார். பிளாக் விடோ கேரக்டருக்கு ஆண்ட்ரியா குரல் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று படம் பார்த்த பலர் விஜய்சேதுபதி வாய்ஸ் சரியாக பொருந்தவில்லை என கருத்து தெரிவித்துள்ளனர்

இந்த திரைப்படத்தில் அயன்மேன் கேரக்டர் இறந்து விடுகிறது. அதற்கு காரணம் விஜய் சேதுபதியின் வாய்ஸ் தான் என்றும் கிண்டல் செய்து மீம்ஸ்கள் போட்டு வருகின்றனர்.

Avengers fans troll Vijay Sethupathis dubbing in that movie

ரசிகர்கள் மாற்றுத்திறனாளிகள் திரு நங்கைகள் மற்றும் ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸின் அன்பு வேண்டுகோள்

ரசிகர்கள் மாற்றுத்திறனாளிகள் திரு நங்கைகள் மற்றும் ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸின் அன்பு வேண்டுகோள்

New Projectகாஞ்சனா 3 படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு மிக்ஜ நன்றி.
.என் மீது அன்புள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள்…

என்னை பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுவர்களை பற்றி கவலை படாதீர்கள்…

என் மீது அக்கறை உள்ள ஒரு சில மாற்றுத்திறனாளிகளும் திருநங்கைகளும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சம்மந்தப்பட்டவர் மீது புகார் அளிப்பதாக கேள்விப் பட்டேன்…அப்படி எதுவும் செய்யாதீர்கள்..பொறுமையை கடை பிடியுங்கள்…
நாம் நமது வழியில் நல்லதை மட்டும் நினைப்போம்..நல்லதை யே செய்வோம்..
அவர்கள் அவர்கள் வழியில் போகட்டும்..

எனக்கு ஒரு சின்ன பிரச்சனை என்றால் உடனே ஓடி வருகிற உங்கள் ஒவ்வொருவருக்கும் என் குடும்பத்தார் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..

நான் மும்பையில் காஞ்சனா இந்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன்..படப்பிடிப்பு முடிந்து வந்தவுடன் ஒரு நல்ல முடிவு எடுப்போம்..அது வரை அமைதி காப்போம்…
கடவுள் நமக்கான நல்லதை செய்வார்..

நமக்கு கெடுதல் நினைப்பவர்களுக்கும் நாம் நல்லது நடக்க ஆண்டவனை பிரார்த்திப்போம்…
நம்மை பற்றி புரிந்து கொள்ள ஆண்டவன் அருள் அவர்களுக்கு கிடைக்கட்டும்

இவ்வாறு ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்…

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் அப்டேட்ஸ்.; அதிகாலை காட்சிகள் ஹவுஸ்புல்

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் அப்டேட்ஸ்.; அதிகாலை காட்சிகள் ஹவுஸ்புல்

Avengers End game Preview and Release updatesஉலகம் முழுக்க உள்ள சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ள படம் “அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்”.

அவெஞ்சர்ஸ் படங்களின் வரிசையில் நான்காம் பாகமாக இது உருவாகியுள்ளது.

அமெரிக்காவில் நடந்த பிரிமீயர் காட்சியைப் பார்த்தவர்கள் படம் சூப்பர் என விமர்சித்துள்ளனர்.

இப்படம் ஏப்ரல் 26 ரிலீஸாகிறது. இப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியிட உள்ளனர்.

தமிழ்நாட்டில் மட்டும் 400க்கும் அதிகமான தியேட்டர்களிலும், இந்தியா முழுக்க 2000க்கும் அதிகமான தியேட்டர்களிலும் வெளியிடுகின்றனர்.

அமெரிக்காவில் சுமார் 4500 தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறதாம். எனவே அமெரிக்காவில் மட்டும் சுமார் 2000 கோடி ரூபாய் வசூலை எதிர்பார்க்கிறார்களாம்.

படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் மட்டும் முன்பதிவில் ரூ. 35 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் தமிழ் படங்களுக்கு இணையாக அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஒரு படம் ரிலீஸானால் அன்றைய தினத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியாகும். ஆனால் முதன்முறையாக அவெஞ்சர்ஸ் படம் வெளியாகும் முன்பே முழு படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

Avengers End game Preview and Release updates

Avengers End game Preview and Release updates

More Articles
Follows