ஹிப் ஹாப் ஆதி இசையில் வைபவ் & பார்வதி இணைந்த் பேண்டஸி படம்

ஹிப் ஹாப் ஆதி இசையில் வைபவ் & பார்வதி இணைந்த் பேண்டஸி படம்

Aalambanaகே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் சந்துரு இணைந்து ஆலம்பனா’ என்ற படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர்.

இந்தப் படம் பேண்டஸி கான்செப்ட் பாணியில் தயாராகியுள்ளது. அந்த கான்செப்ட் பின்னணியில் தமிழில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு தயாராகியுள்ள படம் இது என்று சொல்லலாம்.

இந்தப் படத்துக்குக் கதை, திரைக்கதை, எழுதி இயக்கியுள்ளார் பாரி கே.விஜய். இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய தரமான படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றியவர்.

வைபவ், பார்வதி நாயர், திண்டுக்கல் ஐ.லியோனி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ஆனந்த்ராஜ், முரளி சர்மா, கபீர்துபான் சிங் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மைசூர் அரண்மனை, சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கியுள்ளனர்.

பேண்டஸி கான்செப்ட் படம் என்பதால் படக்குழுவினர் மிகவும் சிரத்துடன் உருவாக்கியுள்ளனர். பெரும் பொருட்செலவிலான படம் என்பதால் நடிகர்களும் முழு ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.

வைபவ் நடித்து வெளியான படங்களில், இது தான் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றுள்ளது. இதனைப் படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

கிராபிக்ஸ் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழுவினர் மும்முரமாக பணிபுரிந்து வருகிறார்கள். விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், பாடல்களையும் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

துள்ளலான இசையை வழங்கும் ஹிப் ஹா ஆதி இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

அவருடைய இசை கண்டிப்பாகப் பேசப்படும் என்கிறது படக்குழு. ஏனென்றால், பாடல்களே கதைக்குத் தகுந்தவாறு அற்புதமாகக் கொடுத்து ஆச்சரியப்படுத்தினார் என்கிறார் இயக்குநர் பாரி கே.விஜய்.

மைசூர் அரண்மனை காட்சிகள், பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகள் என பம்பரமாய் சுழன்றும், அதே வேளையில் நேர்த்தியாகவும் ஒளிப்பதிவு செய்துள்ளார் ரத்தினசாமி. எடிட்டரான ஷான் லோகேஷ் பணிபுரிந்து வருகிறார்.

பிரம்மாண்ட படங்களின் சண்டைக் காட்சிகளுக்கு பணிபுரிந்த பீட்டர் ஹெய்ன், இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளை பிரத்தியேகமாக வடிவமைத்து வித்தியாசமாகக் கையாண்டுள்ளார்.

அது ஏன் என்பது படமாகப் பார்க்கும் போது புரிந்து கொள்வீர்கள் என்கிறது படக்குழு. பேண்டஸி கான்செப்ட் படம் என்பதால் அரங்குகள் அனைத்துமே யாருமே யூகிக்க முடியாத அளவுக்கு நேர்த்தியாக வடிவமைத்துக் கொடுத்துள்ளார் கோபி ஆனந்த்.

கரோனா அச்சுறுத்தலிலிருந்து மீண்டு சகஜ நிலைக்குத் திரும்பியுள்ள மக்களை, சிரிப்பு மழையில் நனைய வைத்து குழந்தைகளை குஷிப்படுத்த ‘ஆலம்பனா’ தயாராகி வருகிறது.

Vaibhav and Parvati Nair joins for Aalambana

தனுஷின் தந்தை இயக்கிய ‘என் ராசாவின் மனசிலே’.; அதன் 2ஆம் பாகத்தை இயக்கும் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது

தனுஷின் தந்தை இயக்கிய ‘என் ராசாவின் மனசிலே’.; அதன் 2ஆம் பாகத்தை இயக்கும் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது

Raj kiran with his son1991-ஆம் ஆண்டு ராஜ்கிரண் தயாரிப்பில் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் நடிகர் ராஜ்கிரண் – மீனா ஆகியோர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘என் ராசாவின் மனசிலே’.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.

இத்திரைப்படத்தில் தான் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை ராஜ்கிரண் அறிமுகப்படுத்தினார்.

நடிகர் ராஜ்கிரணின் சினிமா கரியரிலும் நல்ல சினிமா ரசிகர்களின் ரசனையிலும் நீங்கா இடம் பிடித்த படம் இது.

80-ஸ் கிட்ஸ் மட்டும் அல்ல இப்போதுள்ள 2K கிட்ஸுக்கும் பிடிக்கும் அளவிற்கு அப்படம் இன்றும் நிறம் மாறாமல் இருக்கிறது.

தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை ராஜ்கிரனின் மகன் ‘திப்பு சுல்தான் நைனார் முஹம்மது’ இயக்க இருக்கிறார்.

இது குறித்து நடிகர் ராஜ்கிரன் வெளியிட்டுள்ள செய்தி,

இறை அருளால்,
இன்று, என் மகனார் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது
அவர்களின் இருபதாவது பிறந்த நாள்…

“என் ராசாவின் மனசிலே”
இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு,
திரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கிறார்… அவரே படத்தை இயக்கவும் உள்ளார்.

அவர் மிகப்பெரும் வெற்றிப்பட இயக்குனராக, உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறேன்…

En Rasavin Manasile sequel is on cards

தனுஷின் ‘கர்ணன்’ பட ரிலீஸ் தகவலை வெளியிட்டார் மாரி செல்வராஜ்

தனுஷின் ‘கர்ணன்’ பட ரிலீஸ் தகவலை வெளியிட்டார் மாரி செல்வராஜ்

கலைப்புலி தாணு – மாரி செல்வராஜ் – தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘கர்ணன்’.

இதில் தனுஷுடன் லால், ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கடந்தாண்டு டிசம்பர் 9-ம் தேதியுடன் இப்பட ஷூட்டிங் நிறைவடைந்தது.

திருநெல்வேலி மாவட்டம் அருகே இப்பட காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

இந்நிலையில் வருகிற ஏப்ரல் மாதத்தில் திரையரங்கில் இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதற்கான அறிவிப்பை சிறப்பு டீசர் மூலம் வெளியிட்டுள்ளனர்.

Dhanushs Karnan movie release date updates

ரஜினியின் ‘எந்திரன்’ பட கதை திருட்டு விவகாரம்.; டைரக்டர் ஷங்கருக்கு பிடிவாரன்ட்.!

ரஜினியின் ‘எந்திரன்’ பட கதை திருட்டு விவகாரம்.; டைரக்டர் ஷங்கருக்கு பிடிவாரன்ட்.!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாகரன் நடித்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான படம் ‘எந்திரன்’.

2010ல் ரிலீசான இப்படம் தமிழ் சினிமாவை உலகளவில் எடுத்து சென்றது என்று சொன்னால் அது மிகையல்ல.

இந்த படம் வெளியான சமயத்திலேயே இப்பட கதை தன்னுடைய ‘திக்திக் தீபிகா’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்டதாக எழுத்தாளர் ஆருர் தமிழ்நாடன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

எனவே விசாரணைக்குத் தடைகேட்டு உச்சநீதிமன்றம் வரை சென்றார் இயக்குநர் ஷங்கர்.

ஆனால், உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.

எனவே, மீண்டும் எழும்பூர் நீதிமன்றத்துக்கு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

ஆனால், இயக்குநர் ஷங்கரோ, அவர் தரப்பு வழக்கறிஞரோ யாரும் பதில் தராததால் கைது செய்ய தற்போது பிடிவாரன்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ஷங்கர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரன்ட் பிறப்பிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Enthiran story theft case Court issues non bailable warrant against Shankar

சூர்யா படத்தில் டபுள் ஹீரோயின்ஸ்.; ரம்யா பாண்டியன் & வாணி போஜன் கூட்டணி

சூர்யா படத்தில் டபுள் ஹீரோயின்ஸ்.; ரம்யா பாண்டியன் & வாணி போஜன் கூட்டணி

வித்தியாசமான களங்களைத் தேர்வு செய்து, தயாரித்து அதில் வெற்றியும் பெற்று வரும் நிறுவனம் 2டி.

தற்போது தங்களுடைய 14-வது தயாரிப்பை அறிவித்துள்ளது சூர்யாவின் 2டி நிறுவனம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் இன்று ஆரம்பமானது.

இதில் படக்குழுவினருடன் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.வெங்கட்ராமன், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் ஆர்.ரவி கிருஷ்ணன், இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், சக்தி பிலிம் பேக்டரி B.சக்திவேலன், கலரிஸ்ட் பாலாஜி கோபால், இயக்குனர் ஜே. ஜே ஃபிரடெரிக் உள்ளிட்ட பலர் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கலந்துக் கொண்டனர்.

இந்தப் படத்தில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை வந்து, அனைவரது மனதையும் கொள்ளைக் கொண்ட ரம்யா பாண்டியன் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அவருடன் இணைந்து பல்வேறு படங்களில் தன் நடிப்பால் முத்திரை பதித்து வரும் வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும், இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமாகிறார் நடிகர் மித்துன் மாணிக்கம்.

இவர்களுடன் இணைந்து ‘கோடங்கி’ வடிவேல் முருகன், செல்வேந்திரன் ஆவுடையப்பன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் அரிசில் மூர்த்தி.

பல்வேறு படங்களுக்கு தன் கேமரா கோணங்களால் அழகூட்டிய ஒளிப்பதிவாளர் சுகுமார் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ளார். தன் குரலால் கிறங்கடித்த க்ரிஷ், இந்தப் படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.

தன் இசையாலும் கிறங்கடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் இன்று சென்னையில் தொடங்கியது.

படக்குழுவினர் விவரம்:
தயாரிப்பாளர்: சூர்யா
இணை தயாரிப்பாளர்: ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன்
இயக்குநர்: அரிசில் மூர்த்தி
ஒளிப்பதிவாளர்: M. சுகுமார்
இசையமைப்பாளர்: க்ரிஷ்
படத்தொகுப்பு : சிவ சரவணன்
கலை இயக்குநர் : சி.கே.முஜிப்பூர் ரஹ்மான்
ஆடை வடிவமைப்பாளர்: வினோதினி பாண்டியன்
பாடல்கள்: யுகபாரதி, விவேக், மதன்குமார்
சண்டை வடிவமைப்பு: ராக் பிரபு
புரோடக்ஷன் கண்ட்ரோலர் : செந்தில் குமார்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Ramya Pandian and Vani Bhojan team up for Suriya movie

#ShameOnUYNot… ‘ஜகமே தந்திரம்’ படக்குழு மீது கடுப்பான தனுஷ் ரசிகர்கள்

#ShameOnUYNot… ‘ஜகமே தந்திரம்’ படக்குழு மீது கடுப்பான தனுஷ் ரசிகர்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன் ஆகியோர் நடித்த படம் ‘ஜகமே தந்திரம்’.

ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தயாரித்துள்ளார்.

கிட்டத்தட்ட ஒரு வருடமாக படம் வெளியீட்டுக்கு தயாரான போதிலும் கொரோனா ஊரடங்கு பிரச்சனையால் பட ரிலீஸ் தள்ளிப்போனது.

எனவே பொங்கல் விருந்தாக ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் வெளியாகலாம் என எதிர்பார்த்தனர்.

மேலும் படத்தை ஓடிடி-யில் ரிலீஸ் செய்யக்கூடாது தியேட்டர்களில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் படத்தின் ரீலீஸ் குறித்து எந்த அறிவிப்பையும் படக்குழு முடிவு செய்யவில்லை.

இதனால் கடுப்பான தனுஷ் ரசிகர்கள் ட்விட்டரில் #JagameThandhiram, #ShameOnUYNot ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் குறித்து கேட்டு வருகின்றனர்.

Dhanush fans condemns about Jagamae Thanthiram release

Raise voice against #JagameThandhiram OTT release!!

#ShameOnUYNot

First Time Dhanushians Create Negative Tag – #ShameonUYNOT Regarding #JagameThandhiram On OTT

@dhanushkraja Thalaiva Sorry for this Tag but We need a clarification !!

More Articles
Follows