தளபதி63-ல் நடிக்க நயன்தாரா கேட்ட சம்பளம் இத்தனை கோடியா.?

தளபதி63-ல் நடிக்க நயன்தாரா கேட்ட சம்பளம் இத்தனை கோடியா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Nayantharas salary in Thalapathy 63 movieஏஆர். முருகதாஸ் இயக்கிய சர்கார் படத்தை முடித்துவிட்டு தன் ஆஸ்தான் இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க ஏஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

முக்கிய கேரக்டரில் விவேக் மற்றும் யோகிபாபு நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அவர் ரூ. 6 கோடி சம்பளம் கேட்பதால் அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகிறதாம்.

கோலமாவு கோகிலா வரை ரூ. 4 கோடி வரை சம்பளம் பெற்ற நயன்தாரா அதன்பின்னர் தான் சம்பளத்தை ஏற்றியிருக்கிறாராம்.

கோலமாவு கோகிலா படத்திற்கு அதிகாலை 5 மணி காட்சிகள் திரையிடப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கது.

Actress Nayantharas salary in Thalapathy 63 movie

கஜா பாதிப்புக்கு ரஜினி அனுப்பிய பொருட்களை என் தம்பிகள்தான் நிர்வகிக்கிறார்கள் : கஸ்தூரி

கஜா பாதிப்புக்கு ரஜினி அனுப்பிய பொருட்களை என் தம்பிகள்தான் நிர்வகிக்கிறார்கள் : கஸ்தூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Kasthuri contributes generously for Gaja Cyclone reliefகஜா புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.

புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு உதவ திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் உதவி வருகின்றனர். இந்நிலையில், நடிகை கஸ்தூரி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த கஸ்தூரி, ‘சொல்ல முடியாத துயரில் உள்ள டெல்டா மக்களுக்கு உதவிகளை அள்ளிக்கொடுக்கும் உயர்ந்த உள்ளங்களை வாழ்த்துகிறேன்.

என்னால் முடிந்த அளவில், ரூ.12 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பி, நானும் நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல உள்ளேன்.

1000 குடும்பத்திற்கு தேவையான அதிநவீன வாட்டர் ஃபில்டர் மற்றும் போர்வைகள், கொசுமருந்து, காய்ச்சல் நிவாரணி மாத்திரைகள் சானிடரி நாப்கின்கள் அடங்கிய லாரியை அனுப்புகிறோம்.

உணவு பொருட்கள், மருத்துவ உதவி போன்றவை பலதரப்புகளிருந்து வந்துகொண்டிருக்கும் வேளையில், குடிநீர் பற்றாக்குறை பூதாகரமாக தலையெடுத்துள்ளது. இன்னும் நாட்கள் செல்ல செல்ல, சுத்தமான பாதுகாப்பான குடிநீர் மிக பெரிய தேவையாக இருக்க போகிறது. இதற்கு அத்தியாவசியமான 1000 நீர் சுத்திகரிப்பு கருவிகளை அனுப்புகிறோம்.

இந்த சுத்திகரிப்பு கருவிகள் (syphon filter) பேரிடர் காலத்தில் பயன்படுத்த மிகவும் உகந்தவை. எங்கும் எடுத்து செல்லலாம், சுலபமாக பயன்படுத்தலாம், எத்தனை மாசுபட்ட தண்ணீரையும் தெளிந்த பாதுகாப்பான சுத்தமான குடிநீராக மாற்றிவிடும். கொதிக்கவைக்க அவசியமில்லை.

பிளாஸ்டிக் பாட்டில்களையும் கேன்களையும் நாடவேண்டியதில்லை, இரண்டு வருடங்களுக்கு குறையாமல் செலவில்லாமல் குடிநீரை சுத்தப்படுத்திக் கொள்ளலாம் (Recyclable and biodegradeable). வெளிநாட்டில் மட்டுமே இப்போதைக்கு கிடைக்கிறது, இங்கு நம் பயன்பாட்டிற்காக ஆயிரம் ஃபில்டர்களை உடனடியாக தயாரித்து அனுப்பியிருக்கும் சென்னை ராமா வாட்டர் ஃபில்டர் நிறுவனத்திற்கு நன்றி’ என்றார்..

மேலும் ரஜினி அனுப்பிய பொருட்களை கூட நமது தம்பிகள் தான் நிர்வகிக்கிறார்கள். அரசாங்கத்தின் செயல்பாடு உண்மையைச் சொல்லணும்னா முன்னாடி இருந்த பேரிடர்களை விட இந்த முறை அரசின் அணுகுமுறை நல்லா இருக்கு. முதல்வர் ஹெலிகாப்டர்ல பார்த்தார்னா, அவர் ஒரே நேரத்துல எல்லாரையும் பார்க்கணும்னு நினைச்சி இருக்கலாம்.

இருந்தாலும் அவர் தரை மார்க்கமா வந்து பார்த்தா நல்லா தான் இருக்கும். அங்கு ராணுவ உதவி அவசியத் தேவை. மத்திய அரசு இன்னும் வேகமா செயல்படணும். நமக்குத் தெரியாத ஆள்கள் மூலமா உதவிகள் போய்ச் சேர்வதை விட தெரிந்தவர்கள் மூலமா போய்ச் சேர்வது நல்லது’ என்றார்.

Actress Kasthuri contributes generously for Gaja Cyclone relief

Actress Kasthuri contributes generously for Gaja Cyclone relief

டிசம்பர் 9ல் *பேட்ட* பாடல்கள் ரிலீஸ்; டிசம்பரில் ரஜினி தரும் நாலு ட்ரீட்

டிசம்பர் 9ல் *பேட்ட* பாடல்கள் ரிலீஸ்; டிசம்பரில் ரஜினி தரும் நாலு ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth Petta songs will be released on 9th Dec 2018வருகிற நவம்பர் 29ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் உலகமெங்கும் ரிலீசாகிறது.

இப்படத்தை வரவேற்க ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் ரஜினியின் அடுத்த பேட்ட படத்தின் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

பேட்ட படத்தின் முதல் பாடலை டிசம்பர் 3ஆம் தேதியும் 2ஆம் பாடலை 7ஆம் தேதியும் வெளியிட உள்ளனர்.

மற்ற பாடல்கள் அனைத்தையும் டிசம்பர் 9ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்த 3 விருந்துகளை தொடர்ந்து மற்றொரும் விருந்தும் ரஜினி ரசிகர்களுக்கு வழக்கம் போல காத்திருக்கிறது.

இவற்றைத் தொடர்ந்து டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாள் வருகிறது. எனவே டிசம்பர் மாதம் ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

இப்படத்தை வருகிற 2019ஆம் ஆண்டில் பொங்கல் தினத்தில் வெளியிட உள்ளனர்.

பேட்ட படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ரஜினியுடன் நிறைய முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

Rajinikanth Petta songs will be released on 9th Dec 2018

அஜித்-விஜய்-சிம்பு பற்றி பிரசாந்த் பேச்சு

அஜித்-விஜய்-சிம்பு பற்றி பிரசாந்த் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor prashanthமணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட பல முன்னணி இயக்குனர்கள் படங்களில் நடித்தவர் பிரசாந்த்.

இடையில் தன் குடும்ப சூழ்நிலை காரணமாக படங்களை குறைத்துக் கொண்டார்.

தற்போது மீண்டும் ஜானி படத்தின் மூலம் ரீஎண்ட்ரிக்கு தயாராகிவிட்டார்.

இவரது அண்மை பேட்டியில்.., விஜய், அஜித், சிம்பு குறித்து பேசியுள்ளார்.

அஜித்துடன் நல்ல நட்பு தற்போது வரை இருக்கிறது. விஜய்யுடன் அடிக்கடி பேசுவேன்.

எல்லோரும் ஒரு குடும்பம் தான், அவருக்கு ஒரு பிரச்சனை என்றால் நான் வந்து நிற்பேன்” என்று கூறியுள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா – ப்ரியா பவானி ஷங்கர் இணையும் *மான்ஸ்டர்*

எஸ்.ஜே.சூர்யா – ப்ரியா பவானி ஷங்கர் இணையும் *மான்ஸ்டர்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

monster stills‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ படங்களை தொடர்ந்து பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் படம் ‘மான்ஸ்டர்’.

எஸ்.ஜே.சூர்யா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகும் இப்படத்தை ‘ஒரு நாள் கூத்து’ பட இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கி வருகிறார்.

இப்படம் எனது முந்தைய படமான ‘ஒரு நாள் கூத்து’ படத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது அதைவிட நிச்சயமாக வித்தியாசமாக இருக்கும். அதை பார்வையாளர்களும் உணர்வார்கள்.

குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கும் படமென்பதால் அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் இருக்கும்.

ஆரம்பத்தில் நான் பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-க்கு வேறு ஒரு கதையைத்தான் கூறினேன். ஆனால், என் வீட்டில் நடந்த சம்பவம், என்னை அடிப்படையாகக் கொண்ட கதை மேலும், அது என்னை ஊக்குவித்ததால் இந்தக் கதை பிறந்தது. அதுதான் ‘மான்ஸ்டர்’. இதுபற்றி இதற்கு மேல் என்னால் கூற முடியாது.

அதன்பிறகு நாயகனைப் பற்றி யோசிக்க அவசியமே எழாமல் அவர் எஸ்.ஜே.சூர்யா தான் என்று முடிவாகியது. அவர் தனக்கான பாணியில், எளிமையாக நடித்து அனைவரையும் இதயத்திலும் இடம் பிடிக்கக்கூடியவர்.

அதுமட்டுமல்லாமல், முதல் காட்சியிலிருந்து கடைசி வரை அவர் தான் மிகவும் பொருத்தமாகவும் இருப்பார். நாயகி ப்ரியா பவானி ஷங்கரும் தனது கதாபாத்திரத்தின் ஆழத்தைப் புரிந்துக் கொண்டு தன்னால் இயன்ற அளவில் அதிகப்படியாக முயற்சி செய்திருக்கிறார்.

கருணாகரன் ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால், இந்தப் படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரம் நிச்சயம் அனைவராலும் ரசிக்கப்படும்.

தொழில்நுட்பம் – இசை – ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு – கோகுல் பெனாய், எடிட்டிங் – VJ சாபு ஜோசப், இணை எழுத்தாளர் – சங்கர் தாஸ், கலை – ஷங்கர் சிவா.

படம் வெளிவருவதற்கான வேலைகள் மும்முரமாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. இசை வெளியீடு மற்றும் படத்தின் வெளியீடு ஆகியவை விரைவில் வெளியிடப்படும்.

கமல் போல விமல் வருவார் என தயாரிப்பாளர் கே ராஜன் பாராட்டு

கமல் போல விமல் வருவார் என தயாரிப்பாளர் கே ராஜன் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vimalசாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் “இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு“.

விமல் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார்.

மற்றும் ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலீஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.

முதல் முறையாக ஆங்கில நடிகை “மியா ராய்“ கன்பைட் காஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

படம் பற்றி இயக்குனர் முகேஷ் கூறியதாவது…

இது கிளாமர் கலந்த ஹூயூமர் படம் என்று ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறோம்..

சினிமா என்பதே ஏழு வகையான கதையமைப்பு கொண்டவை தான்..இதற்குள் தான் எல்லா படங்களுமே அடங்கும்.

கிளாமரையும், நகைச்சுவையையும் சரிவிகிதத்தில் கலந்து திரைக்கதையை அமைத்துள்ளோம் என்கிறார் AR.முகேஷ்.

அதில் ஒரு வகை கிளாமர் ஹுயூமர். அதைத் தான் இதில் கையாண்டிருக்கிறோம். கிளாமரிலும் எல்லை மீறாத அளவையே தொட்டிருக்கிறோம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் 20 நாட்களும், சென்னை, தென்காசி, குற்றாலம் பகுதிகளில் 30 நாட்களும் நடைபெற்றது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட கே. ராஜன் பேசியதாவது…

படத்தில் முத்தக் காட்சிகள் இருந்தது. முத்தக் காட்சிகளில் கமல் போல விமல் வருவார். விமலுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு” என பேசினார்.

ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன்

இசை – நடராஜன் சங்கரன்

பாடல்கள் – விவேகா

கலை – வைரபாலன்

நடனம் – கந்தாஸ்

ஸ்டண்ட் – ரமேஷ்.

எடிட்டிங் – தினேஷ்

தயாரிப்பு மேற்பார்வை – சுப்ரமணி

தயாரிப்பு நிர்வாகம் – பி.ஆர்.ஜெயராமன்

தயாரிப்பு – சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வண்

திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் AR.முகேஷ்.

More Articles
Follows