ரஜினியின் அரசியல் வருகையை வரவேற்கும் நடிகை நளினி

New Project (4)1980களில் சினிமாவில் நாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை நளினி.

அதன்பின்னர் சில வருடங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

தற்போது சீரியல் மற்றும் சினிமாக்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள நாவலூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளார் நளினி.

அப்போது அவர் தற்போதைய சினிமா நிலவரம் மற்றும் ரஜினியின் அரசியல் குறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டனர்.

சினிமாவைப் போல டி.வி. தொடர்களுக்கும் சென்சார் சர்ட்டிபிகேட் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

சினிமாவில் வன்முறை காட்சிகளை தவிர்த்து சமுதாய சீர்திருத்தம் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நடிகர்கள் வந்தாலும் தவறில்லை.

ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கினாலும் சரி, பா.ஜனதாவின் மாநில தலைவராக வந்தாலும் சரி அதை நிச்சயம் வரவேற்பேன்.

இவ்வாறு நளினி கூறினார்.

Overall Rating : Not available

Latest Post