‘ரஜினியை விமர்சிப்போம்; மன்னிப்பு கேட்டு ஆசி பெறுவோம்’ இது கஸ்தூரி கலாட்டா

rajini kasthuri meetசில நாட்களுக்கு முன்பு தன் ரசிகர்களை சந்தித்தபோது, ரஜினி தன் அரசியல் பிரவேசம் பற்றி பேசியிருந்தார்.

போர் வரும்போது சந்திப்போம் தயாராக இருங்கள். ஆண்டவன் முடிவு செய்தால் அரசியலுக்கு வருவேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

ரஜினியின் இந்த பேச்சை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார் நடிகை கஸ்தூரி.

எத்தனை வருடமாக இதையே சொல்லி கொண்டு இருப்பார். ஒரு அதிரடியான முடிவை எடுக்க தெரியாதவர் ரஜினி என விமர்சித்திருந்தார்.

இதனால் ரஜினி ரசிகர்களின் கடுமையான கண்டனத்திற்கு ஆளானார் கஸ்தூரி.

இந்நிலையில் தன் பிறந்தநாளை முன்னிட்டு (ஜீன் 15ஆம்) ரஜினியை அவர் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார் நடிகை கஸ்தூரி.

இதுகுறித்து அவர் தன் ட்விட்டர் கூறியுள்ளதாவது…

“சிறந்த பிறந்த நாள் ஆச்சரியம். ரஜினியுடன் நேருக்கு நேராக சந்திக்கும் வாய்ப்பு. உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

ரஜினியின் அரசியல் பார்வை, திட்டங்கள் குறித்து விவாதிக்கும் வாய்ப்பு பெற்றேன். எல்லாம் நல்லபடியாக அமையும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும்… ரஜினி ரசிகர்கள் தன் கருத்தை தவறாக புரிந்து கொண்டதாகவும் அதற்காக கஸ்தூரி மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது.

அரசியல் உலகில் ரஜினியின் வருகை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே அவரது கருத்தை தமிழகமே விவாதித்து கொண்டிருக்கிறது என தன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் கஸ்தூரி.

மேலும் ரஜினி கட்சி ஆரம்பித்தால் அதில் கஸ்தூரி இணைவார் எனவும் கோலிவுட்டில் சொல்லப்படுகிறது.

Actress Kasthuri met Rajinikanth on her birthday and discussed about Current Politics

 

Overall Rating : Not available

Latest Post