டிடிவி தினகரனுடன் நடிகர் விஷால் ரகசிய சந்திப்பு

ttv dinakaran vishal meetமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு பக்கம். டிடிவி தினகரன் அணி ஒரு பக்கம் என அதிமுக பிரிந்து உள்ளது.

மேலும் தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பாண்டிச்சேரியில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அதிமுக ஆட்சி கவிழுமா? அடுத்த முதல்வர் யார்? என்ற பரபரப்பான சூழ்நிலை தமிழக அரசியலில் நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் டிடிவி தினகரனை நேரில் சந்தித்துள்ளார்.

விஷாலின் தங்கை திருமணம் வருகிற 27 ஆம் தேதி நடைபெறவுள்ளதால், திருமண பத்திரிகையை கொடுக்க சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர்கள் சந்தித்த எந்த விதமான படங்களையும் இதுவரை வெளியிடவில்லை.

அண்மையில் வைகோவையும் இதுபோல் சந்தித்தார் விஷால். ஆனால் அந்த படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Actor Vishal met ADMK Party member TTV Dhinakaran

Overall Rating : Not available

Latest Post