முதல்வரிடம் கலைமாமணி விருது பெற்ற சிவகார்த்திகேயன் உருக்கம்..; புற்றுநோய் மருத்துவமனையில் ரசிகர்கள் உதவி

Sivakarthikeyan (2)தமிழகத்தில் இயல், இசை, நாட்டியம், நாடகம், சினிமா, இசை நாடகம், நாட்டுப்புறக் கலைகள், சின்னத்திரை உள்ளிட்ட கலைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு தமிழக அரசின் கலை மற்றும் கலாச்சாரத்துறை சார்பாக ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, சௌகார் ஜானகி, பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி, சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, எடிட்டர் ஆண்டனி, தயாரிப்பாளர் தாணு, ஐசரி கணேஷ் உள்ளிட்ட 42 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை பிப்ரவரி 20ல் சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலைஞர்களுக்கு வழங்கினார்.

விருதினை பெற்ற நடிகர் சிவகார்த்திகேயன் தன் தாயின் காலில் விழுந்து வணங்கிய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

அத்துடன்.. “சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும்,இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி.

தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம் https://t.co/EtBPVyycNK

என ட்விட்டரில் பதிவிட்டார்.

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனை பாராட்டும் விதமாக அவரது ரசிகர்கள் கேன்சர் நோயாளிகளுக்கு உதவிகள் செய்துள்ளனர்.

கலைமாமணி விருது பெற்ற அண்ணன் @Siva_Kartikeyan சந்தோசத்தை கொண்டாடும் விதமாக புற்றுநோய் மருத்துவமனையில் ஹார்லிக்ஸ், பிஸ்கட்ஸ், பழங்கள், பால் மற்றும் சாப்பாடு டாப்பகள் @Chengai_SKFC பம்மல் நகர நற்பணி இயக்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது

@AllIndiaSKFC @navneth @AnandSkfc https://t.co/Ikgr4LpMFc

Actor Sivakarthikeyan dedicated his Kalaimamani award to his mom

Overall Rating : Not available

Latest Post