அஜித் பட நடிகருக்கு கால் முறிவு; நடிகையிடம் நலம் விசாரித்த ரிப்போர்ட்டர்.!

அஜித் பட நடிகருக்கு கால் முறிவு; நடிகையிடம் நலம் விசாரித்த ரிப்போர்ட்டர்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தில் அறிமுகமானவர் நவ்தீப்.

இதை தொடர்ந்து ‘நெஞ்சில்’ படத்தில் மற்றும் அஜித்குமாருடன் ‘ஏகன்’ படத்தில், ‘சொல்ல சொல்ல இனிக்கும்’, ‘சீறு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

நவ்தீப் தற்போது ‘வீரமாதேவி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு நவ்தீப் விபத்தில் சிக்கி காலை உடைத்துக்கொண்ட தகவல் வெளியாகி உள்ளது.

தேஜஸ்வி

இந்நிலையில், அவரது உடல் நலம் குறித்து விசாரிக்க பத்திரிக்கையாளர்கள் நடிகை தேஜஸ்வி வீட்டுக்கு சென்றார்கள்.

அப்போது, அங்கு நவ்தீப் கால் முறிவுக்கு சிகிச்சை எடுத்து வருகிறார் என கூறப்பட்டது.

நவ்தீப் காலில் கட்டுப்போட்டு ஊன்றுகோல் வைத்தபடி இருக்கும் புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்கள்.

அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நவ்தீப்3

actor navdeep broke his leg

ஷாருக் படத்தில் கெஸ்ட் ரோலில் விஜய்.; அட்லி படத்தை அதிக விலைக்கு வாங்கிய பிரபல நிறுவனம்

ஷாருக் படத்தில் கெஸ்ட் ரோலில் விஜய்.; அட்லி படத்தை அதிக விலைக்கு வாங்கிய பிரபல நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அட்லீ.

அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இதில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடிக்க, ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார்.

இப்படத்தில் தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தில், நடிகர் விஜய் கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாக உள்ளது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ஷாருக்கானின் மனைவி கவுரி கான் தயாரித்துள்ளார்.

‘ஜவான்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் ‘ஜவான்’ படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Red Giant movies has acquired the publishing rights of shahrukh khan’s jawan

அனுமதியில்லாமல் ‘ஜெய்பீம்’; சூர்யா மீது வழக்கு தொடர்ந்த ராஜக்கண்ணு உறவினர்

அனுமதியில்லாமல் ‘ஜெய்பீம்’; சூர்யா மீது வழக்கு தொடர்ந்த ராஜக்கண்ணு உறவினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2021-ம் ஆண்டு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் ‘ஜெய்பீம்’.

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ‘2 டி’ எண்டர்டைன்மென்ட்ஸ் மற்றும் படக் குழுவினர் மீது, சென்னை சாஸ்திரி நகர் போலீசார் காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்தனர்.

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் ‘ஜெய்பீம்’ படம் எடுக்கப்பட்ட நிலையில், காவல்துறை சித்ரவதையில் கொல்லப்பட்ட ராஜாக்கண்ணுவின் உறவினரும், அந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருமான கொளஞ்சியப்பன் என்பவர் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தங்களது வாழ்க்கையின் உண்மை சம்பவத்தை, தங்கள் அனுமதி இல்லாமல் திரைப்படமாக்கியதாகவும், காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜாக்கண்ணுவின் உறவினர் கொளஞ்சியப்பன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது.

சென்னை சைதாப்பேட்டை பெருநகர 9 ஆவது மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சந்தோஷ், வழக்கு பதிவு செய்து எட்டு மாதங்கள் கடந்தும், இன்னும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை ஏன் என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, நீதிபதி, விரைந்து விசாரணை நடத்தி மூன்று மாதத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார்.

மேலும், வழக்கை செப்டம்பர் 15 -ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

jai bheem movie case urgent investigation and final report should be filed saidapet court

ஹரீஷ் – தினேஷ் இணைந்த ‘லப்பர் பந்து’ பட டப்பிங் அப்டேட்ஸ்

ஹரீஷ் – தினேஷ் இணைந்த ‘லப்பர் பந்து’ பட டப்பிங் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கனா, எஃப்ஐஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘லப்பர் பந்து’.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

சுவாசிகா விஜய் மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இருவரும் கதாநாயகிகளாக நடிக்க, தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

லப்பர் பந்து

இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் ஹரிஷ் கல்யாணின் பிறந்தநாளன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து ‘லப்பர் பந்து’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில், ‘லப்பர் பந்து’ படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக படக்குழு புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளது.

லப்பர் பந்து

Sanjana begins dubbing for Harish Kalyan’s ‘Lubber Pandhu’

24 மணி நேரத்தில் 100M+ பார்வைகள்.; சரவெடியாய் ‘சலார்’ டீசர்.!

24 மணி நேரத்தில் 100M+ பார்வைகள்.; சரவெடியாய் ‘சலார்’ டீசர்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KGF புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘சலார்’.

இப்படத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர்.

கே.ஜி.எப். படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் ‘சலார்’ படத்தையும் தயாரித்து வருகிறது.

சலார்

‘சலார்’ படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

‘சலார்’ திரைப்படத்தின் டீசர் 06-07-2023 தேதி காலை 5.12 மணிக்கு படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில், ‘சலார்’ படத்தின் டீசர் வெளியாகிய 2 நாட்களில் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து டிரெண்டிங்கில் உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும், படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Salaar – Teaser

Prabhas’ Salaar Teaser Crosses 100 Million Views

ஓர் ஆணின் நேசத்திற்குரிய தருணங்களை கொண்ட ‘கைலி’ பாடல்

ஓர் ஆணின் நேசத்திற்குரிய தருணங்களை கொண்ட ‘கைலி’ பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓர் ஆணின் வாழ்வில் கைலி எனும் ஆடையானது, சோதனைகள், வெற்றிகள் மற்றும் அவனுடைய நேசத்துக்குரிய தருணங்களை உள்ளடக்கி, அவன் வாழ்நாள் முழுவதும் பயணிக்கிறது.

இந்த உணர்ச்சிகளின் கோர்வையை, இசையமைப்பாளரும் பாடகருமான கார்த்திக் திறம்பட இப்பாடலில் கொண்டு வந்திருக்கிறார்.

பாடலாசிரியர் மதன் கார்க்கியின் வரிகள், கைலியுடனான ஒரு ஆண்மகனின் வாழ்நாள் பயணத்தின் பல உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.

ஒரு அழுத்தமான மற்றும் உற்சாகமான இசை அனுபவத்தை வழங்கும் கைலி பாடல், தற்போது பா மியூசிக் யூடியூப் தளத்தில் காணக் கிடைக்கிறது.

YouTube 🔗 ➡️

Kaili An indie song by Gautham Menon, Karthik & Karky

YouTube 🔗 ➡️ https://youtu.be/8wJschH7YzA

More Articles
Follows