அஜித் பட நடிகர் வீட்டில் போதை பொருள் தடுப்பு போலீசார் சோதனை

அஜித் பட நடிகர் வீட்டில் போதை பொருள் தடுப்பு போலீசார் சோதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தில் அறிமுகமானவர் நவ்தீப்.

இதை தொடர்ந்து ‘நெஞ்சில்’ படத்தில் மற்றும் அஜித்குமாருடன் ‘ஏகன்’ படத்தில், ‘சொல்ல சொல்ல இனிக்கும்’, ‘சீறு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

நவ்தீப் தெலுங்கில் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருகிறார்.

ஐதராபாத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சில நைஜீரிய இளைஞர்களையும், தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் டைரக்டரையும் போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.

போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு வைத்து இருந்த நடிகர் நவ்தீப்பை தேடி வருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

போதை கும்பலுடன் தனக்கு தொடர்பு இல்லை என்று நவ்தீப் மறுத்தார். மேலும், கோர்ட்டிலும் நவ்தீப் முன்ஜாமீன் பெற்றார்.

இந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள நவ்தீப் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள்.

சோதனையில் சில ஆவணங்களை போலீசார் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. போதைப் பொருள் வழக்கில் ஏற்கனவே கைதான ராம் சந்த் என்பவரிடம் இருந்து நவ்தீப் போதைப் பொருள் வாங்கியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், நவ்தீப் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் திடீர் சோதனை அப்போது நவ்தீப் வீட்டில் இல்லை தகவல் வெளியாகியுள்ளது.

Anti Narcotics Police raids actor Navdeep’s house in drugs case

பள்ளிகள் கற்பது 25%.. மீதி 75% நம் கையில்..; விஜய்ஆண்டனி மகள் தற்கொலை குறித்து உதயா உருக்கம்

பள்ளிகள் கற்பது 25%.. மீதி 75% நம் கையில்..; விஜய்ஆண்டனி மகள் தற்கொலை குறித்து உதயா உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா தற்கொலை குறித்து நடிகர் உதயா அறிக்கை..

திரு விஜய் ஆண்டனி அவர்களின் அன்பு மகள் மீராவின் அகால மரணம் எனக்கு மிகுந்த மன உளச்சலை ஏற்படுத்தியது. விஜய் ஆண்டனி அவர்களின் இல்லத்திற்கு நான் நேரில் சென்று ஆறுதலாக இருந்த போதும், அவரையும், அவரது மனைவி திருமதி ஃபாத்திமா விஜய் ஆண்டனி அவர்களையும் என்ன சொல்லி தேற்றுவது என்று புரியாமல் நின்றேன்.

அவர்களது வலியை நேரில் கண்ட எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. பெற்றோர்கள் அனைவரும் வாழ்வதும், சம்பாதிப்பதும் அவர்களது பிள்ளைகளுக்காகத் தான். இப்படி இருக்கும்போது, அந்த குழந்தையே அவர்களிடம் இல்லை என்ற நிலைமை மிகவும் கவலை அளிக்கக் கூடியது.

விஜய் ஆண்டனி தம்பதியரின் இளைய மகள் லாரா அவர்களுக்கு துணையாக இருக்கும் போதிலும், மீராவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.

மீராவின் முடிவுக்கு மன அழுத்தம் காரணம் என்று சொல்லப்படுகிறது. அவரை மன அழுத்தத்தில் ஆழ்த்தியது எது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் எனக்கு தோன்றுவது என்னவென்றால் கொரோனா காலகட்டத்தில் படிப்பிற்காக கைபேசிகளையும் லேப்டாப்புகளையும் குழந்தைகளிடம் நாம் கொடுத்தோம்.

இதன் காரணமாக அவர்கள் அவர்களது உணர்வுகளையும், எண்ணங்களையும் மொபைல், லேப்டாப்பில் பகிர்ந்து கொள்கிறார்களே தவிர, நண்பர்களிடமோ, பெற்றோர்களிடமோ பகிர்ந்து கொள்வதில்லை. நாமும் சரி, நமது குழந்தைகளும் சரி, கைபேசியே உலகம் என்று இருக்கிறோம். இதை சிறிது சிறிதாக மாற்றி அமைக்க வேண்டியது நமது கடமை.

பெற்றோர்கள் ஆகிய நாம் வாழ்வில் பல்வேறு சவால்கள், சிக்கல்கள் மற்றும் இன்னல்களுக்கு இடையே தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறோம்.

அவ்வாறு இருக்கும் போது குழந்தைகளிடம் நாம் நட்புடன் இருக்க வேண்டும் என்பதையும், குழந்தைகள் நம்மை நண்பர்களாக பார்க்க வேண்டும் என்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும். குழந்தைகள் நம்மிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் நட்பான சூழலை நாம் உருவாக்க வேண்டும்.

படிப்பு படிப்பு என்று அவர்களுக்கு அழுத்தம் தரக் கூடாது. அவர்களுக்கு விருப்பமானதை கற்று கொள்ள அனுமதிக்க வேண்டும். பள்ளிகள் கற்று கொடுப்பது 25% தான், மீதி 75% நமது கையில் தான் உள்ளது.

வாழ்க்கையை எவ்வாறு அணுக வேண்டும், எதிர்மறை விஷயங்களையும் நேர்மறையாக எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது குறித்து நாம் தான் குழந்தைகளுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.

அது மட்டுமில்லாது, மோட்டிவேஷன் கிளாசஸ் எனப்படும் மன ஊக்கம் அளிக்கும் வகுப்புகளை சில பள்ளிகளில் நடத்துகிறார்கள். அனைத்து பள்ளிகளும் இதை நடத்த வேண்டும்.

தாழ்வு மனப்பான்மையை குழந்தைகள் மனதில் இருந்து அறவே நீக்க வேண்டும். பாட முறையை மாற்றியமைக்க வேண்டும். வரலாற்றை சொல்லிக் கொடுப்பதை விட அதிகமாக எதிர்காலம், மன ஊக்கம், சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும். நமது குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பதை நாம் தான் உறுதி செய்ய வேண்டும்.

இன்னொரு இளம் உயிர் போவதற்கு நாம் அனுமதிக்க கூடாது. மீராவின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என்பது எனக்கு உண்மையில் தெரியவில்லை. அருமையான பெற்றோர் அவருக்கு கிடைத்தார்கள், பள்ளியிலும் அவரது ஆசிரியர்கள் அவரைப் பற்றி நல்லவிதமாகவே கூறுகிறார்கள்.

விஜய் ஆண்டனி அவர்களுக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் போதுமான வார்த்தைகள் இல்லை. மீராவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

குழந்தைகளே, எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன்னால் உங்கள் பெற்றோர்களையும் உடன் பிறந்தவர்களையும் பற்றி சிந்திக்குமாறு உங்களை நான் மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஏதாவது விபரீத எண்ணம் தலை தூக்கும் போது, பெற்றோர்களிடமோ, ஆசிரியர்களிடமோ நண்பர்களிடமோ பகிர்ந்து கொள்ள தயங்காதீர்கள். நீங்கள் ஜெயிக்க பிறந்தவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இதை நான் ஒரு நடிகனாக சொல்லவில்லை. ஒரு சக மனிதனாகவும், தந்தையாகவும் கூறுகிறேன்.

பொறுப்புள்ள அப்பாவாக இன்னும் முயற்சித்து கொண்டிருக்கும்….

உதயா
நடிகர்

Udhaya statement about Vijayantony daughter suicide

ஒயிலாட்டம் மயிலாட்டத்துடன் தள்ளாட்டம்.; சர்ச்சையுடன் முடிந்த ‘சரக்கு’ இசை விழா

ஒயிலாட்டம் மயிலாட்டத்துடன் தள்ளாட்டம்.; சர்ச்சையுடன் முடிந்த ‘சரக்கு’ இசை விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மன்சூர் அலிகானின் “சரக்கு” படத்தின் இசை மற்றும் திரை முன்னோட்டம் தாரை தப்பட்டை, ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், பிரமாண்டமான அம்மன் சிலை அலங்காரம், அக்கினி சட்டி என மிகப் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.

கே பாக்யராஜ், பழ கருப்பையா, நாஞ்சில் சம்பத், லியாகத் அலிகான், ரவிமரியா, பயில்வான் ரங்கநாதன், கூல் சுரேஷ், கோதண்டம், சூப்பர் குட் சுப்பிரமணியம், சூரிய பிரபா, ஸ்னாசி தமிழச்சி திவ்யா ஆகியோர் கலந்துக் கொண்டு சரக்கு படத்தின் டிரைலர், பாடல்கள் மற்றும் கதாநாயகன் மன்சூர் அலிகானை பாராட்டி பேசினார்கள்!

வழக்கமான இசைத் தட்டு வெளியிடாமல், பாடல்கள் மற்றும் திரை முன்னோட்டம் திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, விருந்தினர்கள் சிறப்புரை ஆற்றி, விழாவை நிறைவு செய்தனர்!

ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில் மன்சூர் அலிகான் கதை எழுதி, தயாரித்து, நாயகனாக நடிக்கும் இப்படத்தை ஜெயக்குமார்.ஜெ இயக்குகிறார். அருள் வின்செண்ட் மற்றும் மகேஷ்.டி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுதியிருக்கிறார். எஸ்.தேவராஜ் படத்தொகுப்பு செய்ய, சண்டைக்காட்சிகளை கனல் கண்ணன், ஸ்டண்ட் சில்வா வடிவமைத்துள்ளார். மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார்.

மிகப்பெரிய பொருட்செலவில், முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் மூலம் பிரமாண்டமான திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில், கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், கிங்ஸ்லி, சரவண சுப்பையா, சேசு, அனுமோகன், பாரதி கண்ணன், ஆடுகளம் நரேன், தீனா, லொள்ளு சபா மனோகர், வினோதினி, சசி லயா, டி.எஸ்.ஆர், மதுமிதா, வலினா, மோகன்ராம், மூசா, ரெனீஸ், நிகிதா, கூல் சுரேஷ், நீதியின் குரல் சி.ஆர்.பாஸ்கர், கோமாளி சரவணன், பபிதா என 40-க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். பரபரப்பான பாடல்களை தொடர்ந்து, விரைவில் திரைக்கு வருகிறது “சரக்கு”.

கூடுதல் தகவல்..

இந்த விழா வெகு விமர்சையாக நடைபெற்றாலும் சின்ன சின்ன சலசலப்புகள் ஏற்பட்டது. இந்த விழாவினை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி ஐஸ்வர்யா கழுத்தில் அனுமதியின்றி கூல் சுரேஷ் மாலை போட்டது சர்ச்சையானது. அதற்கு பின்னர் மன்சூர் அலிகான் சொன்னதன் பேரில் சுரேஷ் மன்னிப்பு கேட்டார்.

மேலும் இந்த சரக்கு இசை விழாவுக்கு பத்திரிக்கையாளர்கள் தவிர வெளிநபர்களும் உள்ளே நுழைந்தனர். அதில் சரக்கு குடித்து மட்டையான ஒரு நபர் சென்னை பிரசாத் லேபில் விழுந்து கிடந்தார்.

ஆக சந்தோஷத்திற்கும் குறைவில்லை.. சர்ச்சைக்கு குறைவில்லை.. என சரக்கு இசை விழா நிறைவு பெற்றது.

சரக்கு

Controversy at Sarakku trailer and Audio launch

தல ஆளு வேண்டாம்..; வெங்கட் பிரபுவுக்கு கண்டிஷன் போட்ட தளபதி விஜய்

தல ஆளு வேண்டாம்..; வெங்கட் பிரபுவுக்கு கண்டிஷன் போட்ட தளபதி விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘லியோ’ படத்தை தொடர்ந்து ‘தளபதி 68’ படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் விஜய்.

இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கப்பட உள்ளது. வெங்கட் பிரபு இந்த படத்தை இயக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

பொதுவாகவே வெங்கட் பிரபு படத்தில் கதை இருக்கிறதோ இல்லையோ அவரது தம்பி பிரேம்ஜி கண்டிப்பாக இடம் பெறுவார் என்ற கருத்து பரவலாகவே திரையுலகில் உள்ளது.

எனவே தளபதி 68 படத்திலும் பிரேம்ஜி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி ஆகிய இருவரும் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் விஜய் கூறிய கருத்தை தெரிவித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்.. “நானும் உங்க அண்ணனும் இணைந்து பணிபுரிந்தால் பிரேம்ஜி அந்த படத்தில் நீ நடிக்கக்கூடாது என கண்டிஷன் போட்டாராம் விஜய்.

ஏனென்றால் நீ தல ஆள் என்று தெரியும். என் படத்துல உனக்கு வாய்ப்பு கிடையாது.. வேணும் என்றால் நீ இசையமைத்துக் கொள் என்று விஜய் சொன்னாராம்.

பின்னர் பிரேம்ஜி கெஞ்சி கேட்கவே சரி நீ நடித்துக் கொள்” என தெரிவித்தாராம் விஜய்.

இதை கலகலப்பாக தெரிவித்தனர் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி.

Thala fan not allowed Vijay condition to Venkatprabu

பெண் கழுத்தில் மாலை; கூல் சுரேஷை மன்னிப்பு கேட்க வைத்த மன்சூர் அலிகான்

பெண் கழுத்தில் மாலை; கூல் சுரேஷை மன்னிப்பு கேட்க வைத்த மன்சூர் அலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மன்சூர் அலிகான் தயாரித்து, நடித்துள்ள படம் ‘சரக்கு’.

இதில் கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, பழ கருப்பையா, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜெயக்குமார்.ஜே இயக்க அருள் வின்செண்ட் மற்றும் மகேஷ். டி ஒளிப்பதிவு செய்துள்ளனர். இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார்.

திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுத, எஸ்.தேவராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார்.

இந்த படம் டாஸ்மாக் சரக்கினால் சமூகத்திற்கு ஏற்படும் விளைவுகளை சித்தரிக்கும் படமாக உருவாகியுள்ளது. குடிமகன்களால் மட்டுமே அரசாங்கம் இயங்கி வருவதாக குற்றம் சாட்டியுள்ள இந்த படத்தில் இதற்கான தீர்வும் சொல்லப்பட்டுள்ளத.

இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் நேற்று செப்டம்பர் 19ஆம் தேதி மாலை ‘சரக்கு’ இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியை ஐஸ்வர்யா என்பவர் தொகுத்து வழங்கினார்.

அப்போது மேடையில் பேச வந்த நடிகர் கூல் சுரேஷ். தனக்கு அணிவிக்கப்பட்ட மாலையை திடீரென பெண் தொகுப்பாளரின் கழுத்தில் அவரது அனுமதியின்றி போட்டார். இதனால் எரிச்சலடைந்தார். ஆனாலும் வேறு வழியின்றி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.

இந்த நிகழ்ச்சி முடிவடையும்போது பத்திரிக்கையாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கவே.. கூல் சுரேஷ் நீ பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் சொல்லவே கூல் சுரேஷ் மன்னிப்பு கேட்டு நிகழ்ச்சி முடிவுற்றது.

சரக்கு

Mansoor Alikhans Sarakku Audio launch Cool Suresh Apology

விஜய் & ஜெயம் ரவி படங்களுக்கு முன்பே சதீஷ் படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ்

விஜய் & ஜெயம் ரவி படங்களுக்கு முன்பே சதீஷ் படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாபெரும் வெற்றிப்பெற்ற ‘லவ் டுடே’ படத்திற்கு பிறகு ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட்டின் அடுத்த படைப்பாக வரவிருக்கும் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’. இந்நிறுவனத்தின் 24வது தயாரிப்பு ஆகும்.

ஏஜிஎஸ்ஸின் 23வது திரைப்படமாக ‘லவ் டுடே’ இந்தி பதிப்பும், 25வது படமாக தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் ‘தளபதி 68’-ம், 26வது தயாரிப்பாக ஜெயம் ரவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கும் ‘தனி ஒருவன் 2’‍‍‍‍-ம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் செல்வின் ராஜ் சேவியர், இயக்குந‌ர்கள் சிம்புதேவன், சுமந்த் ராதாகிருஷ்ணனிடம் உதவி இயக்குநராக‌ பணிபுரிந்துள்ளார்.

சென்னையில் பெரும் பொருட்செலவில் பழங்கால அரங்குகள் அமைத்து இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ திரைப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்ற, நிர்வாக தயாரிப்பை எஸ். எம். வெங்கட் மாணிக்கம் கவனிக்கிறார்.

கான்ஜூரிங் கண்ணப்பன்

காமெடி நடிகர் சதீஷ், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெஜினா கசன்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லீ, நமோ நாராயணன் போன்ற நட்சத்திரங்களுடன், ‘நானே வருவேன்’ படத்தில் நடித்துள்ள எல்லி ஆவரம், ஜேஸன் ஷா, பிஎனேடிக்ட் காரெட் போன்ற வெளிநாட்டு நடிகர்களும் இதில் நடித்துள்ளனர்.

‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ பற்றி பேசிய இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர், “ரசிகர்களுக்கு வித்தியாசமான புதுவித அனுபவத்தை கொடுப்பதோடு நல்ல பொழுதுப்போக்காகவும் இப்படம் இருக்கும். முக்கியமாக குழந்தைகள் பார்த்து ரசிக்கும் வகையிலும் நகைச்சுவை, திகில், ஃபான்டசி கலந்த படமாக இதை உருவாக்கியுள்ளோம். இப்படம் அனைத்து வயதினரையும் நிச்சயம் கவரும்,” என்று கூறினார்.

ஒரு புறம் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் இணைந்து பிரம்மாண்ட படைப்புகளை தயாரித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட், மறு புறம் ‘லவ் டுடே’ போன்று வளர்ந்து வரும் மற்றும் புதிய திறமைகளுக்கும் தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறது. அந்த வரிசையில் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ அமையும் என்று படகுழுவினர் தெரிவிக்கின்றனர்.

கான்ஜூரிங் கண்ணப்பன்

Conjuring Kannappan comedy horror fantasy multi starrer film by AGS

More Articles
Follows