மீரா மிதுன் பேசியது மடத்தனம். அகங்காரத்தின் உச்சம்..; எம்எஸ் பாஸ்கர் ஆவேசம்

மீரா மிதுன் பேசியது மடத்தனம். அகங்காரத்தின் உச்சம்..; எம்எஸ் பாஸ்கர் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை மாடல் என பெயர் பெற்றவர் மீரா மிதுன்.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய் குறித்து அவதூறாக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அண்மையில் தலித் சாதியினரை SC இனத்தவர்களை விமர்ச்சித்துள்ளார்.

மீரா மிதுன் பேசியதாவது…

“பொதுவாக நான் தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றி பேசுவது இல்லை. ஏன் அவர்களைப் பற்றி தவறாகப் பேசுகிற மாதிரி வருகிறது என்றால், எல்லா தாழ்த்தப்பட்ட மக்களும் தப்பான, மோசமான குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

அதனால்தான் அவர்களுக்கு நிறைய பிரச்னைகள் வருகிறது.

திரையுலகில் இருக்கும் தாழ்த்தப்பட்ட இயக்குனர்கள் எல்லா வேலையும் செய்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள்.

தாழ்த்தப்பட்ட இயக்குனர்களுக்கு மற்றவர்கள் ஏன் உதவி செய்கிறார்கள் என்று தெரியவில்லை” என பேசியுள்ளார்.

இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

மேலும் மீராவை கைது செய்ய வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர்.

இதனால் மீரா மிதுன் மீது சென்னை வெப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு அளித்த புகாரின் பேரில் நடிகை மீரா மிதுன் மீது கலகம் செய்ய தூண்டுவது, சாதி, மத விரோதத்தை தூண்டுவது, இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்குவது, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அவர் விரைவில் கைதாவார் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் பிரபல குணசித்திர நடிகர் எம்எஸ் பாஸ்கர் அவர்கள் மீரா மிதுனுக்கு தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அதில்…

என்னவாயிற்று இந்த பெண்ணுக்கு..

உன் போதைக்கு நான் ஊறுகாயா? என்று காமெடியாக கேட்பார்கள். ஆனால் இவர் சமீபத்தில் பேசியிருப்பது காமெடியல்ல.

வீணாக வம்புக்கு இழுக்கும் விஷமத்தனம்.

சாதிப் பெயரை சொல்லி பேசுவது மிகவும் கண்டனத்திற்குரியது. எவ்வளவோ சாதித்தவர்கள் பலர் அடக்கமாக இருக்கும் போது இவர் ஏன் இவ்வளவு ஆணவமாக பேசுகிறார்?

சாதனைக்கும், அறிவுக்கும், சாதிக்கும் சம்பந்தம் ஏது?

பெருமதிப்பிற்குரிய என் தெய்வம் ‘கலைஞானி’ கமலஹாசன் அவர்கள் தன்னை ஒரு படத்திலிருந்து ஒதுக்கித்தள்ளி விட்டார் என்று இவர் கூறியிருப்பதை கேட்டு அழுவதா, சிரிப்பதா?

ஈர்க்குச்சியை ஒதுக்கித்தள்ள யானை வேண்டுமா? என்ன மூடத்தனமான பேச்சு இது?

விஜய், சூர்யா ஆகியோர் பண்பின் சிகரங்கள். அவர்களுக்கு அடுத்து இவரது வசைபாடலில் இன்று கலைஞானி அவர்களா?

“குறிப்பிட்ட சாதியினரை திரை உலகை விட்டு துரத்த வேண்டும்” என்று சொல்ல இவருக்கு என்ன உரிமை இருக்கிறது?

இவரது பேச்சு மனதை புண்படுத்தும் விஷயம் மட்டுமல்ல. மடத்தனம். அகங்காரத்தின் உச்சம்.
மற்றவர்கள் மனதை புண்படுத்தி விளம்பரம் தேடுவது கயமைத்தனம்.

இத்தகைய பேட்டிகளை யூட்யூப் சேனல்கள் புறக்கணித்தாலே இப்படிப்பட்ட வம்புக்காரர்களின் வாயை அடைத்து விடலாம்.

மிகுந்த மனவேதனையோடு வன்மையாக இவரை கண்டிக்கிறேன்.

இனியாவது இவர் நாவடக்கத்தோடு இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

– அன்பன் எம்.எஸ்.பாஸ்கர் (நடிகர்)

Actor MS Bhaskar slams Meera mithun’s contoversial speech

எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன பெயரை மாற்றியது தமிழக அரசு

எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன பெயரை மாற்றியது தமிழக அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைத்துறையில் நுழைய நினைப்பவர்களுக்கு அதற்கேற்ப படிப்புகளும் கல்லூரி நிறுவனங்களும் உள்ளன.

இதில் சினிமா தொடர்பான பல துறைகள் கொண்ட படிப்புகளும் உள்ளன.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் உள்ளன.

இதில் அரசு சார்பாக திரைப்படம் சார்ந்த படிப்புகளுக்கு தமிழக அரசால் சென்னையில் நடத்தப்படும் கல்லூரி எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் உள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த நிறுவனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில்…

‛‛எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தை *தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்* என பெயர் மாற்றம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களில் அனைத்து ஆவணங்களிலும் இந்நிறுவனத்தின் பெயரினை புதிய மாற்றத்தின்படி குறிப்பிட அறிவுறுத்தப்படுகிறது என அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN govt changed film institute name in chennai

முன்னாள் கடற்படை வீரர் இயக்கத்தில் ரகுமான்.; நடுக்கடலில் நடந்த ராணுவ ஆப்ரேஷன்

முன்னாள் கடற்படை வீரர் இயக்கத்தில் ரகுமான்.; நடுக்கடலில் நடந்த ராணுவ ஆப்ரேஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னாள் கடற்படை வீரர் பிராஷ் இயக்கத்தில் ரகுமான் கதாநாயகனாக நடித்திருக்கும் “ஆபரேஷன் அரபைமா” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

துருவங்கள் பதினாறு படத்திற்குப் பின் அந்நிய எதிரிகளை வேட்டையாட தன் படையுடன் கடற்படை அதிகாரியாக வருகிறார் ரகுமான்.

நம் நாட்டை அந்நிய ஆபத்துகள் சூழும் நேரங்களிலும், தீயவர்கள் நம் நாட்டிற்குள் கொடுஞ்செயல்கள் செய்யும் நோக்கத்துடன் நுழையும் நேரங்களிலும், நமது இராணுவ வீரர்கள் தங்கள் உயிரை துச்சமென மதித்து ஆபத்துகளிடம் இருந்தும் எதிரிகளிடம் இருந்தும் நம்மைக் காக்கின்றனர்.

அதற்காக பல ஆபரேஷன்களை நம்நாட்டு வீரர்கள் வெற்றிகரமான செய்திருக்கின்றனர். அப்படி நடுக்கடலில் நடந்த ஒரு உண்மையான இராணுவ ஆபரேஷனை தழுவி எடுக்கப்பட்ட படம் தான், “ஆபரேஷன் அரபைமா”.

தமிழ்நாடு, கேரளா, அந்தமான், கோவா, துபாய் உள்பட பல இடங்களில், பல கடல்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தின் இயக்குநர் பிராஷ் முன்னாள் கடற்படை வீரர் என்பதால், கடலில் நடைபெறும் ஆபரேஷன் உண்மையான ஆபரேஷன் போல இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய உழைத்திருக்கிறார்.

கேரளா போலீஸ் கமாண்டோ படையின் துணை கண்காணிப்பாளர் அஜித்குமார் மற்றும் நேஷனல் செக்யூரிட்டி கார்டு கமான்டோ பயிற்சியாளர் கேப்டன் அனில்குமார் ஆகியோரை வரவழைத்து ஆபரேஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து இப்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்துகொண்டிருக்கிறது.

மலையாள நடிகர் சங்கத்தின் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான டினி டாம், இப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகிறார்.

இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெயின் ஜார்ஜ்-ம் ஒரு கடற்படை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரகுமான், டினி டாம், பாலாஜி, நாடோடிகள் அபிநயா, அனுப் சந்திரன், ஷிகாத், நேகா சக்ஸேனா, அர்விந்த், சஜி, மனிஷா, ரமேஷ் ஆறுமுகம், கௌரி லஷ்மி, மேபூ உள்பட பலர் நடித்திருக்கும் ஆபரேஷன் அரபைமா படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ராகேஷ் பிரம்மானந்தன், ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஃபீனிக்ஸ் உதயன்.

பாடல்களை முருகன் மந்திரம் எழுதி இருக்கிறார். நிர்வாகத்தயாரிப்பு: ஏழுமலை சரணவன். இணை தயாரிப்பு: ஜெயின் ஜார்ஜ். தயாரிப்பு: டைம் அண்ட் டைட் ப்ரேம்ஸ் ஸ்டுடியோஸ்.

தேசப் பாதுகாப்பு, கடற்படை, இராணுவ ஆபரேஷன் என எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் ஆபரேஷன் அரபைமா படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Wrap up for “Operation Arapaima”, and Rahman force getting ready for Operation!

மானிய விலையில் தீவனங்கள்.. உணவுப் பதன தொழிற்சாலைகள்.; வேளாண் பட்ஜெட்டை முன்னிட்டு பவன்குமார் பன்சால் கோரிக்கை

மானிய விலையில் தீவனங்கள்.. உணவுப் பதன தொழிற்சாலைகள்.; வேளாண் பட்ஜெட்டை முன்னிட்டு பவன்குமார் பன்சால் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக சட்டசபையில் விரைவில் வேளாண் தொடர்பாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.

அது தொடர்பாக அனைத்து கட்சி வேளாண் பிரதிநிதிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில விவசாய அணி தலைவர் பவன் குமார் பன்சால் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன் வைத்தார்.

அவர் வெளியிட்ட கோரிக்கைகள்:

தமிழகத்தில் சிறப்பான நிர்வாகத்தை தொடங்கி இருக்கும் தமிழக அரசுக்கு தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு தனது வாழ்த்துகளையும், பாராட்டுதலையும் தெரிவிக்கிறது.

தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் நலன் கருதியும், விவசாயத்தை மேம்படுத்தவும் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு சில கோரிக்கைகளை முன் வைக்கிறது.

***கோரிக்கைகள்***

# காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை வீணாகாமல் பாதுகாத்து வைக்க மண்டல வாரியாக அனைத்து வட்டங்களிலும் குளிர்ப்பதனக் கிடங்கு அமைக்கப்பட வேண்டும்.

# விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை சேமித்து வைக்க உலர்த்தும் வசதியுடன் கூடிய பிரம்மாண்டக் கிடங்குகள் அமைக்கப்பட வேண்டும்.

# கொள்முதல் நிலையங்களில் குறைந்தபட்சம் 5,000 நெல் மூட்டைகளை சேமிக்கும் வசதி ஏற்படுத்தப்படும். இனி மழையால் நெல் மூட்டைகள் சேதம் என்ற நிலை ஏற்படாமல் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

# உற்பத்தி செய்யப்பட்ட நெல் மூட்டைகளில் ஈரப்பதத்தை காரணம் காட்டி கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் வாங்கப்படாமல் காத்திருக்கும் நிலையால், குறைந்த விலைக்கு இடைத்தரகர்களிடம் நெல் மூட்டைகளை விற்பனை செய்யும் அவலம் ஏற்படுகிறது. அந்த நிலையை மாற்றி ஈரப்பதத்தை காரணம் காட்டி தாமதப்படுத்தும் நிலையைமாற்ற வேண்டும்.

# அனைத்து மாவட்டங்களிலும் உணவுப் பதனத் தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.

# விவசாயிகள் தங்களின் விளைப் பொருட்களை மதிப்புக் கூட்டுவதற்கு வசதியாக ஒவ்வொரு பகுதியிலும் விளையும் பொருட்களுக்கு ஏற்ப மதிப்புக் கூட்டுவதற்கான தொழில்நுட்பம் மற்றும் கட்டமைப்பு ஏற்படுத்தித் தரப்பட வேண்டும்.

# விவசாய வேளாண் கல்வியை அதிகரிக்க புதிய பல்கலைக்கழகங்கள் அமைக்க வேண்டும். கோவையில் ஏற்கெனவே கோவையில் வேளாண் பல்கலைக்கழகம் இருப்பதை போல விவசாய மண்டலமான தஞ்சாவூரிலும், திருநெல்வேலியிலும், விழுப்புரத்திலும் புதிய விவசாய வேளாண் பல்கலைக்கழகங்கள் அமைத்து விவசாயத்தை இளைய சமுதாயத்தினரும் மேற்கொள்ள வழி செய்ய வேண்டும்.

# விவசாயிகளுக்கு நல்ல தரமான விதைகள் கிடைப்பதற்கு வசதியாக மாவட்டம் தோறும் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட வேண்டும்.

# கால் நடைகளுக்கான தீவன வினியோகமும், தீவனங்களுக்கான விலையும் சாமானியர் வாங்கும் நிலையில் இல்லை. கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ளது. எனவே இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தி மண்டல வாரியாக நல்ல தரமான கால் நடைத்தீவனங்கள் மானிய விலையில் கிடைப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

# தமிழகம் முழுதும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

# பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியை மேலும் அதிகரித்து இயற்கை சீற்றங்களால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.

# தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 வீதம் அதிகபட்சமாக ரூ.30,000 மூலதன மானியம் வழங்கப்படுகிறது. அதோடு, மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் ரூ.6 ஆயிரத்தையும் சேர்த்து அதிகபட்சமாக ரூ.36,000 வழங்கப்படுகிறது. இந்த தொகையை இன்னும் உயர்த்தி வழங்க வேண்டும்.

#இயற்கை சீற்றங்களால் பயிர்களை இழந்த விவசாயிகளின் விவசாய கடன் தொகைகளை எந்த நிபந்த்னையும் இல்லாமல் தள்ளுபடி செய்ய வேண்டும்.

# விவசாய நிலங்களின் குறுக்கே உயர் மின் அழுத்த கம்பிகள் செல்லும் பட்சத்தில், அந்த விவசாயிக்கு பாதிப்பு தொகையாக ஒரு மானியத்தை மாதந்தோறும் வழங்க வேண்டும்.

# நீலகிரி தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வன விலங்குகளால் பாதிப்பு ஏற்படா வகையில் காப்பீடு அறிவிக்கப்பட வேண்டும். அதே நேரம் பறிக்கப்படும் தேயிலைக்கும் உரிய நியாயமான விலையும் வழங்கப்பட வேண்டும்.

# கிராமப்புரத்தை ஒட்டி இருக்கும் நெடுஞ்சாலைகளில் தினசரி சந்தை அமைக்க ஆவன செய்ய வேண்டும். இதன் மூலம் விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு உரிய விலையும் கிடைக்கும், விளைபொருட்கள் வீணாவதும் தவிர்க்கப்படும்.

# விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த 3 தீர்மானங்களையும் ஏற்கமாட்டோம் என கூட்டத்தொடரில் அரசு அறிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

# மழைக்காலத்தை சமாளிக்கவும், கோடை காலத்தில் குடி நீர் தட்டுப்பாட்டை போக்கவும் நீர் நிலைகளை தூர் வாரி ஆக்ரமிப்புகளை அகற்றி நீரை சேமிக்க ஆவன செய்ய வேண்டும்.

# மண்டலங்கள் தாண்டி மாவட்ட, வட்ட தாலுகா வாரியாக விவசாய சந்தைகளை ஏற்படுத்தி விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

Congress leader Bawan Kumar Bansal requests TN govt

சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்தார் விஜய்யின் ‘பீஸ்ட்’ பட ஹீரோயின்

சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்தார் விஜய்யின் ‘பீஸ்ட்’ பட ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.

இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் அடுத்த படத்திலும் பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகேஷ் பாபுவின் 28வது படம் இதுவாகும்.

இன்று மகேஷ்பாபுவின் தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெலுங்கில் பிரபாஸின் ’ராதேஷ்யாம்’ மற்றும் சிரஞ்சீவியின் ’ஆச்சாரியா’ ஆகிய பிரம்மாண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார் பூஜா.

Beast heroine Pooja Hegde’s next film with Super Star

மீண்டும் கமல் படத்தில் விஸ்வரூப நாயகி.; லோகேஷுடன் மீண்டும் கூட்டணி

மீண்டும் கமல் படத்தில் விஸ்வரூப நாயகி.; லோகேஷுடன் மீண்டும் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் நடித்து வரும் படம் ‘விக்ரம்’.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் நாயகி யார் என்பதை படக்குழுவினர் அறிவிக்கவில்லை.

இதனிடையில் பிரபல நடிகை ஆண்ட்ரியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை பதிவு செய்து அதில் ‘Code Red’ என குறிப்பிட்டுள்ளார்.

‘விக்ரம்’ படத்தின் அனைத்து போஸ்டர்களிலும் இதே வார்த்தைகள் குறிப்பிடப்பட்டு இருப்பதால் அவர் ‘விக்ரம்’ படத்தில் நாயகியாக இணைகிறாரா என சந்தேகம் எழுந்துள்ளது.

கமலுடன் ‘விஸ்வரூபம்’ படத்திலும் லோகேஷுடன் ‘மாஸ்டர்’ படத்திலும் ஆண்ட்ரியா பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Andrea joins Kamal Haasan’s Vikram movie ?

More Articles
Follows