தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சின்னத்திரையில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி, தாயுமானவன் உள்ளிட்ட டிவி சீரியல்கள் மூலம் பிரபலமானவர் கவின்.
ஒரு கட்டத்தில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்தபோது ரசிகர்களின் ஆதரவை பெரும் அளவில் பெற்றார். அங்கு இவருக்கும் ஒரு பிரபல நடிகைக்கும் கொஞ்சம் நெருக்கமானது.
தொடர்ந்து இருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் பிரிந்து விட்டனர்.
தற்போது சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் கவின். இவர் நடித்த லிப்ட் மற்றும் டாடா ஆகிய இரு படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இவருக்கு வீட்டில் பெண் பார்த்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தனியார்ப் பள்ளியில் பணியாற்றி வரும் மோனிகா என்பவரை காதலித்து வந்தார் கவின். மிக ரகசியமான இவர்களின் காதல் தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் திருமணக் கட்டத்தை எட்டியுள்ளது.
இவர்களின் திருமணம் அனைவரின் ஆசியுடன் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.
Actor Kavin marriage news updates