தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய அளவில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்தியில் மட்டும் பிக் பாஸ் நிகழ்ச்சி 15 சீசன்களை கடந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி 15 சீசனை இந்தி நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கினார்.
அதே போல் 16-வது சீசன் பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியையும் சல்மான்கானே தொகுத்து வழங்கினார்.
ஏற்கனவே ரூ.250 கோடி சம்பளம் பெற்ற சல்மான்கான் பிக்பாஸ் 16-வது சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ.1,000 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், பிக்பாஸ் ஒடிடி 2 பல சிறப்பு அம்சங்களுடன் இன்று தொடங்குகிறது.
மும்பை பிலிம் சிட்டியில் இந்தி பிக்பாஸ் ஒடிடி 2 நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.புதிய சீசனின் போட்டியாளர்கள் இன்று தொடக்க எபிசோடில் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள்.
பிக் பாஸ் சீசன் ஜியோ சினிமா மூலம் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
இது ஜியோ சினிமா பயன்பாட்டில் இரவு 9 மணி முதல் ஒளிபரப்பத் தொடங்கும்.
இதை ஆன்லைனில் இலவசமாகப் பார்க்கலாம் மற்றும் 24X7 நேரலை ஸ்ட்ரீமிங்கைக் கொண்டிருக்கும்.
இந்த நிலையில், பிரபல ஆபாச நடிகை மியா கலீபா வைல்டு கார்டு என்ட்ரி ஆக பிக் பாஸ் தரப்பில் அணுகப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவும் அணுகப்பட்டதாக கூறப்படுகிறது.
Famous porn actress Mia Khalifa who participated in Hindi Bigg Boss