சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் ஜி.வி பிரகாஷ்

சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் ஜி.வி பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakashநடிகராக ஜி.வி பிரகாஷ் தனது தடத்தை அழுத்தமாகப் பதிய வைத்துள்ளார். நாச்சியார், சர்வம் தாளமயம் என வெரைட்டியான கேரக்டர்களில் நடித்து மக்களின் கவனத்தை பெரிதாக ஈர்த்த அவருக்கு, அவரின் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக Provoke magazine சிறந்த நடிகருக்கான விருதை வழங்கியுள்ளது. இவ்விருது சர்வம் தாளமயம் படத்தில் ஜி.வி பிரகாஷ் சிறப்பாக நடித்ததிற்காக வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதை மகிழ்வோடு பெற்றுக்கொண்ட ஜி.வி பிரகாஷ், ட்விட்டரில் இயக்குநர் ராஜீவ்மேனனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சர்வம் தாளமயம் படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. ராஜீவ்மேனன் இயக்கிய இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார்.

ஜி.வி பிரகாஷுடன் அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினித், குமரவேல் ஆகியோர் நடித்திருந்தனர். இசைஞானம் மனிதரின் பிறப்பு பார்த்து வருவதில்லை என்ற கதைக் கருவை அடிப்படையாக கொண்ட இப்படம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களைப் பெற்றது. ஜப்பானில் நடைபெற்ற டாக்கியோ இண்டெர்நேஷனல் பிலிம் பெஸ்டிவெலில் கலந்து கொண்ட சர்வம் தாளமயம் ஜப்பான் ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்தது. உலகெங்கும் பல்வேறு மக்களின் ஆதரவைப் பெற்றும் பல திரைப்பட பிரிவுகளில் திரையிடப்பட்டு பாராட்டுக்களைக் குவித்தும் வந்த இப்படத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக Provoke magazine விருது அமைந்துள்ளது.

ஜி.வி பிரகாஷ் இவ்விருதைப் பெற்றுள்ளதை தெரிந்ததும் இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் ஜி.வி பிரகாஷுக்கு வாழ்த்துகள் என ட்விட்டரில் தெரிவிக்க உற்சாகமான ஜி.வி, ஏ.ஆர் ரகுமானுக்கு தனது நன்றியினை தெரிவித்துள்ளார். இந்த விருது வழங்கும் விழா நேற்று இரவு மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசை அமைப்பாளராக வெயில் படத்தில் அறிமுமாகி தமிழில் பல்வேறு படங்களில் வெற்றிகரமான பாடல்களையும் அசத்தலான பின்னணி இசையையும் வழங்கியவர் ஜி.வி பிரகாஷ். தற்போது நடிகராகவும் பிரமாதமாக பயணித்து வருகிறார்.

NKPக்காக கூவத் தொடங்கிய ட்வீட் குருவிகள்.; இதானே விஸ்வாசம்!

NKPக்காக கூவத் தொடங்கிய ட்வீட் குருவிகள்.; இதானே விஸ்வாசம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nerkonda paarvai release updates and Twitter reviewers இந்தாண்டு ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய திரைப்படங்கள் வெளியானது.

எனவே இரு தரப்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து பேட்ட படத்தை எப்படியாவது வீழ்த்தவேண்டும் அதன் வசூலை விஸ்வாசம் முந்த வேண்டும் என விஸ்வாசம் பட விநியோகஸ்தர் சில முயற்சிகளில் இறங்கினார்.

அதன்படி ட்விட்டரில் நிறைய பாலோயர்களை வைத்திருக்கும் சிலரை விலைக்கு வாங்கி அவர்களை கவனித்து நிறைய கூவ சொன்னார். அதன்படி அவர்களும் செய்தனர்.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படமான நேர் கொண்ட பார்வை நாளை வெளியாகவுள்ளது. இதன் பிரிமியர் ஷோ (பிரஸ் ஷோ) நேற்றே போடப்பட்டது.

பெரும்பாலான (90%) பத்திரிகையாளர்களுக்கு இந்த படம் அதிருப்தியை தந்துள்ளது.

எனவே மீண்டும் ட்விட்டர் குருவிகளை கவனித்துள்ளனர். அதன்படி அவர்கள் நேர் கொண்ட பார்வை படம் ஆஹா.. தல வேற லெவல்.. பெண்ணியம் காக்க வந்த தல என தங்கள் விஸ்வாசத்தை காட்ட ஆரம்பித்துள்ளனர்.

Nerkonda paarvai release updates and Twitter reviewers

பெண் உரிமைக்காக போராடும் 2ஆம் பாரதியே; வைரலாகும் அஜித் போஸ்டர்

பெண் உரிமைக்காக போராடும் 2ஆம் பாரதியே; வைரலாகும் அஜித் போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith fans welcome poster for Nerkonda Paarvai movieஹிந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற பிங்க் படத்தை தமிழில் ரீமேக் செய்து நேர் கொண்ட பார்வை படப்பெயரில் நாளை வெளியிடுகின்றனர்.

அஜித் நடித்துள்ள இப்படத்தை போனிகபூர் இயக்க, வினோத் இயக்கியுள்ளார்.

நாளை வெளியாகவுள்ள இப்படத்தை வரவேற்கும் விதமாக அஜித் ரசிகர்கள் விதம் விதமாக போஸ்டர்கள் அடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை மாவட்ட அஜித் ரசிகர்கள் பெண் உரிமைக்காக போராடவரும் எங்களின் இரண்டாம் பாரதியாரே என வாசகம் கொண்ட போஸ்டரை அடித்து மாவட்டம் தோறும் ஒட்டியுள்ளனர்.

Ajith fans welcome poster for Nerkonda Paarvai movie

அஜித்

ஏ.ஆர்.ரகுமானிடம் உள்ள அதே அன்பு, பணிவு, திறமை லிடியனிடம் உண்டு – பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்

ஏ.ஆர்.ரகுமானிடம் உள்ள அதே அன்பு, பணிவு, திறமை லிடியனிடம் உண்டு – பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் இந்தியன் பப்ளிக் ஸ்கூல் குழந்தைகளுக்கென பிரத்யேக செய்தி மற்றும் கலை, புகைப்பட திறமையை ஊக்குவிக்கும் இரண்டு புதிய முயற்சிகளை ஆகஸ்ட் 6 ஆம் தேதி (இன்று) அறிமுகம் செய்தது.

கிட்ஸ் நியூஸ் மற்றும் அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி என்ற இரு புதிய முயற்சிகளை உலக மேடையில் புகழ்பெற்ற லிடியன் நாதஸ்வரம் துவங்கி வைத்தார். அறிமுக நிகழ்வை தொடர்ந்து லிடியன் நாதஸ்வரம் பள்ளி மாணவர்களுடன் உரையாடி, அவர்களின் கேள்விக்கு அற்புதமாக பதில் அளித்தார். பின்னர் மாணவர்கள் முன்னிலையில் பியானோ வாசித்து காண்பித்து அவர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் லிடியனின் சகோதரி அமுர்த வர்ஷினி பாட்டு பாடி அசத்தினார்.

அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி என்ற சர்வதேச தரத்திலான புதிய முயற்சியை பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர் வடிவமைத்திருக்கிறார்.

இந்நிகழ்ச்சியில், புகழ்பெற்ற புகைப்பட கலைஞர்கள், ஓவியர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர், மேலும் நக்கீரன் கோபால் அவர்களும் கலந்துக் கொண்டார்.

நக்கீரன் கோபால் பேசும்போது, ‘நான் புத்தக கண்காட்சிக்காக ஈரோடு வந்தேன். அப்போது தம்பி ஸ்ரீதர் என்னை அழைத்ததால் இங்கு வந்தேன். நான் இப்படிப்பட்ட மாணவர்களை பார்ப்பேன் என்று நினைக்கவில்லை, மிகவும் அருமையானவர்கள். நான் ஒரு சாதாரண பள்ளி கல்லூரியில் படித்தேன். பின் பிழப்புக்காக சென்னை வந்தேன். கற்பனை பண்ணாத அளவிற்கு இப்பள்ளியின் சுற்றுப்புற சூழல் அழகாக அமைந்திருப்பது பாராட்டக்குறியது. நான் பெரிய பாக்கியமாக நினைப்பது குட்டி புலி லிடியன் அருகில் இருப்பதுதான். ஏனென்றால் 12 வயதில் உலக சாதனையும் பாராட்டுகளையும் சேர்ப்பது சாதாரணம் அல்ல. எதும் நம்மால் முடியும் என்பதற்கு லிடியன் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார். இவர் பியானோ வாசிப்பதில் ஒரு ஸ்டைல் உள்ளது. ஆனால் இப்போது மிக சாதாரணமாக அமர்ந்திருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்தது லிடியனின் தந்தை. இவர்களுக்கு தமிழ் பெயர்களை வைத்திருப்பது. நானும் பிற்காலத்தில் இப்படிப்பட்ட பள்ளிக்கு வந்தேன் என்று பெருமைக்கூறி கொள்வேன்’ என்றார்.

லிடியனின் தந்தையும் இசையமைப்பாளருமான வர்ஷன் சதீஷ் பேசும்போது, ‘நான் இங்கு இருப்பது மிகவும் மகிழ்ச்சி. எங்களை இங்கு அழைத்ததற்கு நி்ர்வாக இயக்குனர் டாக்டர் சிவகுமார் மற்றும் கிருத்திகா சிவகுமார் மற்றும் ஸ்ரீதர் அவர்களுக்கு நன்றி. பள்ளி பருவம் என்பது ஒரு அரிய வாய்ப்பு, அனைவரும் கூறும்படி லிடியன் உலக புகழ், பெருமைகளையும் பாராட்டுக்களையும் பெற்றாலும் என் மகனிற்கு நான் ஒரு ரசிகன்.

லிடியன் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் பயிற்சி எடுக்கிறார். இந்த வயது மிகவும் அற்புதமான வயது. அதை டெக்னாலஜி எனும் செல்போன், யூடியூப், கேம்ஸ் ஆகியவற்றில் நேரத்தை செலவிடாமல் இருத்தல் நல்லது. என் மகனை நான் பள்ளிக்கு அனுப்பவில்லை, ஆனால் பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக வருவது சச்சின் டெண்டுல்கர் போன்றோரைத்தான் பார்த்துள்ளேன். இப்போது என் மகன் அப்படி செல்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.

ஏ.பி.ஸ்ரீதர் பேசும்போது, ‘என் வாழ்வில் ஒரு சர்வதேச அளவிலான ஓவியக்கல்லூரி ஒன்று கட்ட வேண்டும் என்பது ஆசை. அதன் தொடக்கமாக இப்பள்ளியில் டிப்ஸ் கிட்ஸ் நியூஸ் மற்றும் அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி தொடங்கியுள்ளேன்.

லிடியனின் தந்தை பார்க்கும் போது என் தந்தை நியாபகம் வருகிறது. என் தந்தையும் இதே போன்றுதான் உற்சாகப்படுத்தினார். உலகம் மறக்கமுடியாத இசையமைப்பளார்களில் ஒருவராக லிடியன் இருப்பார். 2002ல் இருந்து ஏ.ஆர்.ரகுமான் அவர்களை தெரியும். அவரிடம் உள்ள அதே அன்பு, பணிவு, அளவற்ற திறமை லிடியனிடம் உண்டு. மேலும் லிடியனின் பெற்றோர்களை பெருமைப்படுத்துவதில் மகிழ்ச்சிக்கொள்கிறேன். இப்பள்ளியின் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைவர் டாக்டர் சின்னுசாமி, நி்ர்வாக இயக்குனர் டாக்டர் சிவகுமார் மற்றும் கிருத்திகா சிவகுமார் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.

இந்தியன் பப்ளிக் ஸ்கூல் நிர்வாக இயக்குனர் டாக்டர் சிவகுமார் மற்றும் கிருத்திகா சிவகுமார் அவர்கள் இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை மிகவும் சிறப்பாக செய்திருந்தார்கள்.

பரபரப்பான ஷீட்டிங்கில் நடிகர் கார்த்தியின் அடுத்த படம் !!

பரபரப்பான ஷீட்டிங்கில் நடிகர் கார்த்தியின் அடுத்த படம் !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திண்டுக்கலில் 5.8.19 அன்று துவங்கியது . “கார்த்தி19” என்கிற இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

படங்களின் எண்ணிக்கையில் கவனம் செலுத்தாமல், படங்களின் தரத்தில் கவனம் செலுத்தி தன் ஒவ்வொரு படத்தையும் மிகவும் கவனத்துடன் தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் கார்த்தி.
கொம்பன், தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டிச் சிங்கம் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி வரும் நடிகர் கார்த்தி முற்றிலும் புதுமையான கதையில் “ரெமோ” இயக்குனர் பாக்கியராஜ் கண்ணண் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் கார்த்தி நடிப்பில் ‘மாநகரம்’ புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “கைதி” டீஸர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. முற்றிலும் வித்தியாசமான முறையில் இருந்த “ கைதி” பட டீஸரை பிரபலங்கள் பலரும் பாராட்டினர். இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் மற்றும் வெளியீட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது.

இதனைத்தொடர்ந்து கார்த்தி தன் அடுத்த படத்தில் முழுக் கவனம் செலுத்தி வருகிறார். “ரெமோ” படத்தினை இயக்கி சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்த இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார்.

இப்படத்தில் “கீதா கோவிந்தம்” தெலுங்கு படம் மூலம் இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்த நடிகை ராஷ்மிகா மந்தனா முதல்முறையாக நேரடித் தமிழ்ப்படத்தில்
கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். நடிகர் நெப்போலியன், யோகி பாபு, சதீஸ்,லால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம்
இசை – விவேக் மெர்வீன் / ஒளிப்பதிவு – சத்யன் சூர்யன்
எடிட்டிங் – ரூபன்
கலை – ஜெய்சந்திரன்
சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயன்
புரொடெக்‌ஷன் டிசைனர் – ராஜீவன் நம்பியார்
நிர்வாக தயாரிப்பு : அரவிந்த்ராஜ் பாஸ்கரன்

தயாரிப்பு – Dream warrior Pictures S.R.Prakashbabu, S.R.Prabhu

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில் இன்று திங்கள் முதல் திண்டுக்கல்லில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது.தொடர்ந்து 50 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும்.
அனைவரையும் மகிழ்வித்து வரும் கார்த்தியின் மற்ற படங்கள் போல் இப்படமும் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் உருவாகியுள்ளது.

50 -மும்பை நடன அழகிகளுடன் C.M. CAPMAARI ( கேப்மாரி ) பாடல் காட்சி

50 -மும்பை நடன அழகிகளுடன் C.M. CAPMAARI ( கேப்மாரி ) பாடல் காட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectஎஸ். ஏ. சந்திரசேகரன் இயக்கும் 70-வது படம் “கேப்மாரி” என்கிற C.M.

ஜெய்-யின் 25-வது படமான கேப்மாரி என்ற CM படத்தில் வைபவி சான்ட்லியா, அதுல்யா ரவி இருவரும் நாயகிகளாக நடிக்க சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர்ஸ்டார், சித்தார்த் விபின் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தப்படம் காதல், நகைச்சுவை, இளமை குறும்புகளுடன் உருவாகிறது.

பிரமாண்ட அரங்கம் – அதிரடி நடனம்.

விழிகளை விரிய வைக்கும் பிரமாண்ட அரங்கம்.

M.G.R. பிலிம் சிட்டியில் வடிவமைக்கப்பட்டு அதிரடியான பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

“ என் காதல் ராணி என்னை தூக்கி வீசிட்டா

என் ஹார்ட்ட அவ தேனி போல கொட்டிட்டா “

என்ற ஹரிசரண் பாடிய பாடலை 50 -க்கும் மேற்பட்ட மும்பை அழகிகளுடன் கலர் புல்லாக படமாக்கப்பட்டது. இந்த பாடலுக்காக ஜெய் மிக சிரந்தை எடுத்து சிறப்பாக நடனமாடியுள்ளார். தெறி, பேட்டை முதலான படங்களுக்கு நடனம் அமைத்த ஷெரீப்ஃ மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

இசை : சித்தார்த் விபின், ஒளிப்பதிவு : ஜீவன்,

படத்தொகுப்பு : ஜி.கே. பிரசன்னா, கலை: வீரமணி கணேசன்.

கதை – திரைக்கதை – வசனம் – இயக்கம் : எஸ் .ஏ. சந்திர சேகரன்.

C.M- யாருமே எதிர்பாராத இளமை ததும்பும் காதல் கதை இது.

படத்தின் ஒவ்வொரு காட்சியும் இளைஞர்களை விசிலடிக்க வைக்கும் என்று இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகரன் கூறுகிறார். இவர் நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்கும் படம் இது.

கதாநாயகன் .- ஜெய்,

கதாநாயகிகள் – அதுல்யா ரவி, வைபவி சான்ட்லியா

More Articles
Follows