தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மறைந்த பிரபல இயக்குனர்கள் கே. பாலசந்தர், விசு, ராம நாராயணன் ஆகியோரிடம் 60 படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் டி.பி.கஜேந்திரன்.
அதன்பின்னர் இயக்குனராக மாறி.. எங்க ஊரு காவல்காரன், மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாதன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி இருக்கிறார் டி.பி. கஜேந்திரன்.
மேலும் 100+ திரைப்படங்களில் காமெடியனாகவும் குணசித்திர கேரக்டர்களிலும் நடித்து மக்களிடையே பிரபலமானார்.
சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் பயணித்து வருகிறார்.
இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக இயக்குநர் டி.பி.கஜேந்திரன் உடல்நலக் குறைவால் இன்று பிப்ரவரி 5 காலை காலமானார். இவருக்கு வயது 72.
Actor Director TP Gajendiran passed away