அர்த்தமுள்ள வாழ்வை வாழ்ந்தாய்.. போய் வா.. விசுவுக்கு சிவகுமார் இரங்கல்

அர்த்தமுள்ள வாழ்வை வாழ்ந்தாய்.. போய் வா.. விசுவுக்கு சிவகுமார் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakumar emotional statement on Actor Visus deathதயாரிப்பு, இயக்கம், நடிப்பு, வசனம், கதாசிரியர் என பன்முகம் காட்டியவர் விசு.

இவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் சிவகுமார் அவர்கள் உருக்கமாக தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதில்…

அன்பு விசு !டைரக்டர் கே. பாலச்சந்தரை அடுத்து நகரத்து நடுத்தர மக்களின் வாழ்க்கையை உணர்வு பூர்வமாக மேடையிலும் திரையிலும் கூர்மையான வசனங்களால் படம் பிடித்து காட்டியவர் நீங்கள்..‘சம்சாரம் அது மின்சாரம்’-‘மணல் கயிறு’- இரண்டு படங்கள் போதும். உங்களை உலகம் புரிந்து கொள்ள..‘அரட்டை அரங்கம்’- அகில உலகப் புகழை உங்களுக்கு சேர்த்தது.

தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கெல்லாம் படையெடுத்து குக்கிராமத்தில் உள்ள ஏழை மாணவ மாணவிகளின் ஏக்கங்களை, வலிகளை வெளிப்படுத்த வாய்ப்பளித்து பல பேருக்கு வாழ்வில் ஒளியேற்றி வைத்தீர்கள்.

மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை ரத்தமும் சதையுமாக படைப்புக்களில் வெளிப்படுத்திய நீங்கள் தனி மனித வாழ்க்கையிலும் ஆரோக்கியத்துக்காக கடைசி நிமிடம் வரை தளராது போராடினீர்கள் . இறைவன் விதித்த மானுட வாழ்வை கடைசி மணித்துளி வரை வாழ்ந்து விட்டீர்கள்..மண்ணில் பிறந்த மனிதன் ஒரு நாள் இந்த மண்ணை விட்டு பிரிந்தே ஆகவேண்டும்.

உங்களுக்கு கடைசி மரியாதை செய்யக்கூட முடியாதபடி கொரோனா வைரஸ் எச்சரிக்கையால் பஸ் பயணம்,ரயில் பயணம், விமானப்பயணம் தவிர்க்கும்படி டாக்டர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

வெளியூர் சென்றவர்கள் வெளியூரிலும், உள்ளூரில் உள்ளவர்கள் வீட்டுக்குள்ளேயும் அடைபட்டு கிடக்க 144 தடை உத்தரவு வேறு.

என் உயிர் பிரிந்தால் வெளிநாட்டிலிருக்கும் என் குழந்தைகள் இந்தியா திரும்பும் வரை நான் அனாதைப் பிணம்தான் என்று உருக்கமாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தீர்கள்.

அந்தக்குறை இல்லாமல் மக்கள் கடைசி தருணத்தில் உங்களோடு இருந்தார்கள் என்று அறிகிறேன். பூமியில் வாழ்ந்த காலம் வரை அர்த்தமுள்ள வாழ்வு, மக்களுக்கு பயன்படும் வாழ்வு வாழ்ந்து விட்டாய் போய் வா நண்பா ! அடுத்த பிறவியில் சந்திப்போம்” என சிவகுமார் தெரிவித்துள்ளார்.

Sivakumar emotional statement on Actor Visus death

சினிமா சூட்டிங் ரத்து; தொழிலாளர்களுக்கு சூர்யா-கார்த்தி 10 லட்சம் உதவி

சினிமா சூட்டிங் ரத்து; தொழிலாளர்களுக்கு சூர்யா-கார்த்தி 10 லட்சம் உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya Karthi and Sivakumar donate Rs 10 lakh to FEFSI உலகையை தாக்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் 2வது கட்டத்தை எட்டியுள்ளது.

அது 3ஆம் கட்டத்தை எட்டிவிடாத வகையில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக கண்காணித்து முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன.

இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 19-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.

இதனால் பெப்சியில் உறுப்பினர்களாக இருக்கும் பல ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்திருந்தார்.

மேலும் திரைத்துறையில் நல்ல நிலையில் இருக்கும் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்தார்.

“இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள 15 ஆயிரம் பெப்சி ஊழியர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு மூட்டை அரிசி தந்தால் அவர்கள் கஞ்சி சோறாவது சாப்பிட்டு உயிர் வாழ இயலும்.

10 ஆயிரம் உறுப்பினர்களுக்கு ஒரு மூட்டை அரிசி அளிப்பதாக இருந்தால் ஒரு மூட்டை சுமாரான அரிசி என்றாலும் ரூ.1250 என கணக்கு வைத்தால் ரூ.2 கோடி ஆகிறது.

உங்களோடு பணிபுரிந்து உங்களோடு வாழ்ந்து வருகின்ற குடும்பங்களுக்கு உணவு அளிப்பீர். நிதி அளிப்பீர் என கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் சிவகுமார் அவரின் மகன்கள் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

Suriya Karthi and Sivakumar donate Rs 10 lakh to FEFSI

விசு மரணம்.: ரஜினிகாந்த் & டிபி. கஜேந்திரன் உருக்கமான இரங்கல்

விசு மரணம்.: ரஜினிகாந்த் & டிபி. கஜேந்திரன் உருக்கமான இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and TP Gajendiran mourn demise of Actor Visuதமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் விசு.

இயக்கம் மட்டுமில்லாமல் நடிப்பு, வசனம், கதாசிரியர் என பன்முகம் காட்டியவர் இவர்.

இவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர். ஒப்பற்ற எழுத்தாளர், இயக்குனர், நடிகர் விசு மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது. அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவரைத் தொடர்ந்து இயக்குனர் டிபி கஜேந்திரன் அவர்களும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியருப்பதாவது : ஒவ்வொரு மனிதனுக்கும் தாய், தந்தையை தேர்ந்தெடுக்கும் உரிமையும் இல்லை, வழியும் இல்லை. ஆனால் குருவை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் ஒரு குரு தன் சிஷ்யனை தேர்ந்தெடுப்பது, இன்னும் கொடுப்பினை. அந்த கொடுப்பினையை எனக்கு தந்தவர் என் குருநாதர் விசு. அவர் குருவாய் வந்ததால் நான் நிறைவாய் வாழ்ந்தேன்.

அவரின் மறைவுச் செய்தி என் தலையில் பேரிடியாக விழுந்தது. அவர் இந்த உலகில் இப்போது இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. காரணம் அவர் வெறும் குருவாக எனக்கு பாடம் மட்டும் நடத்தவில்லை.

வாழ்க்கையை சொல்லிக் கொடுத்தார், சினிமாவை சொல்லிக் கொடுத்தார். எனக்கு எந்த பிரச்சினை என்றாலும் அவரிடம் சொல்வேன். அடுத்த நிமிடமே அதற்கு தீர்வு சொல்வார்.

சினிமா என்னை நிராகரித்து தள்ளியபோது அள்ளி அணைத்துக் கொண்டவர் அவர். பொள்ளாச்சி படப்பிடிப்பில் “நீங்களே படம் இயக்குகிறீர்களே உங்கள் உதவியாளர்கள் இயக்குனராக மாட்டார்களா?” என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது சிறிதும் யோசிக்காமல் “இதோ என் உதவியாளர் கஜேந்திரன் அடுத்த படத்தை இயக்குவார்” என்று சொன்னதோடு, அடுத்த சில மாதங்களிலேயே வீடு மனைவி மக்கள் மூலம் என்னை இயக்குனராக்கி அழகு பார்த்தவர்.

அன்று அவர் போட்டுக் கொடுத்த பாதையில்தான் நான் இன்றும் பயணித்துக் கொண்டிருக்கிறேன். அவர் காட்டிய நெறிமுறையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். விசு ஒரு படைப்பாளி மட்டுமல்ல நல்ல வழிகாட்டி, தத்துவவாதி. உடைந்து வரும் கூட்டுக் குடும்பங்களை மீண்டும் உருவாக்க அவர் இயக்கிய படங்களே போதும். அரட்டை அரங்கம் மூலம் தமிழ் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியவர். இளைஞர்களை தட்டி எழுப்பியவர்.

ஒவ்வொரு பொங்கல், தீபாவளிக்கும், அவர் இல்லம் சென்று அவர் பாதம் தொட்டு வணங்கி ஆசி பெற்று வருவேன். அந்த பாக்கியம் இனி இல்லை என்பதுதான் என் நெஞ்சை பிளக்கும் வேதனை. படைப்புகள் வாழும் வரை படைப்பாளிகள் மரணிப்பதில்லை.

என் குருநாதர் தன் படைப்புகள் மூலம் இன்னும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவே நம்புகிறேன். விண்ணுலகில் இறைவன் அவருக்கு சாந்தியையும், சமாதானத்தையும் தந்து அவரை இளைப்பாற வைக்கட்டும் என்று வேண்டுகிறேன்.

Rajini and TP Gajendiran mourn demise of Actor Visu

ஏஆர். முருகதாஸின் ‘துப்பாக்கி 2’ படத்தில் விஜய்யின் ஜோடி காஜல்..?

ஏஆர். முருகதாஸின் ‘துப்பாக்கி 2’ படத்தில் விஜய்யின் ஜோடி காஜல்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kajal Aggarwal will join with Vijay in Thuppakki 2கத்தி, துப்பாக்கி, சர்கார் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

இது விஜய்யின் 65வது படமாக உருவாகவுள்ளது.

இது துப்பாக்கி 2 படமாக உருவாகலாம் எனத் தெரிய வந்துள்ளது.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்பட நாயகி யார்? என்பது குறித்த தகவல் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் காஜல் அகர்வால் மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக அண்மையில் தெரிவித்துள்ளார்.

எனவே அவர் தான் தளபதி 65 படத்தின் நாயகியாக இருக்கலாம் என நம்பலாம்.

Kajal Aggarwal will join with Vijay in Thuppakki 2

செம லக்கிம்மா நீ… ஒரே படத்தில் விஜய்-அஜித்-சூர்யாவுடன் நடித்த நடிகை

செம லக்கிம்மா நீ… ஒரே படத்தில் விஜய்-அஜித்-சூர்யாவுடன் நடித்த நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Jennifer talks about Nerrukku Ner flash backநேருக்கு நேர் படத்தின் மூலம் தான் நடிகர் சூர்யா சினிமாவில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார்.

வசந்த் இயக்கிய இந்த படத்தை மணிரத்னம் தயாரிக்க 1997 ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது.

இந்த படத்தில் சூர்யா வேடத்தில் முதலில் அஜித் தான் நடித்திருந்தார்.

சில நாட்கள் அவர் நடித்த காட்சிகளும் படமாக்கப்பட்டது.

அதன் பின்னர் சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து விலகினார் அஜித்.

இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஜெனிஃபர்.

இவர்தான் சில ஆண்டுகளுக்கு பிறகு ‘கில்லி’ படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் ‘நேருக்கு நேர்’ படம் தொடர்பாக விஜய் அஜித் மற்றும் சூர்யாவுடன் இருக்கும் படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

அதில் ”வாழ்க்கை என்பது நிகழ்வுகளின் தொகுப்பு. நான் தல அஜித் மற்றும் தளபதி விஜய்யுடன் நடித்தேன்.
அந்த படம் என் வாழ்வில் மிகச்சிறந்த நிகழ்வு.

ஒரு வாரம் மட்டுமே அந்த படத்தில் நடித்தார் அஜித். பின்னர் சூர்யா நடித்தார். அந்த காட்சிகளை மறுபடியும் படமாக்கினார்கள்.

இந்த படத்துக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற விருதை பெற்றேன். மாநில அரசின் விருது உட்பட என தெரிவித்துள்ளார் ஜெனிஃபர்.

இப்போ சொல்லுங்க.. ஜெனி.. லக்கியான ஆளுதானே…

Actress Jennifer talks about Nerrukku Ner flash back

Vijay Ajith Suriya in Nerrukku Ner

கொரோனா பாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்!

கொரோனா பாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sathish varshan asmin“நாளை உனக்கொரு காலம் வரும்” என்ற கொரோனா விழிப்புணர்வு பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு “வானே இடிந்ததம்மா” இரங்கல் பாடல் ஊடாக அஞ்சலி செலுத்திய கலைஞர்கள் சதீஸ் வர்சன் அஸ்மின் ஆகியோர் இப் பாடல் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.

இசையமைப்பாளர் சதீஸ் வர்சன் இவர் எஸ்பி ஜனநாதன் இயக்கிய “புறம்போக்கு” திரைப்படத்தின் ஊடாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்.இவரது புதல்வர்தான் உலகளவில் புகழ்பெற்ற இளம் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் .வர்சன் இப்பாடலுக்கு இசையமைத்து பாடலை பாடியுள்ளார்.

பாடல் வரிகளை தமிழ் சினிமாவில் “தப்பெல்லாம் தப்பேயில்லை” பாடலினூடாக விஜய் ஆண்டனி மூலம் அறிமுகமான இலங்கை கவிஞர் , பாடலாசிரியர் அஸ்மின் எழுதியுள்ளார்.

இலங்கையில் புகழ்பெற்ற கவிஞரான இவர் பல தேசிய விருதுகளையும் பெற்றவர். “விஸ்வாசம்” திரைப்படத்துக்கு இவர் எழுதிய (Tribute Song) ‘தூக்குதொர பேரக்கேட்டா வாயப்பொத்தும் நெருப்பு” பாடல் கூட வைரலானது குறிப்பிடத்தக்கது.

அம்மா இரங்கல் பாடல்

விஸ்வாசம் தூக்குத்தொர பாடல்

More Articles
Follows