சிகப்பழகானவர்களுக்கான சினிமா என்பதை மாற்றியவர்.. கோடிகளை கொட்டினாலும் விளம்பரங்களில் நடிக்காதவர்.. முதல்வர் பதவி ஆசையில்லாதவர்..; ரஜினி 46 வருடங்கள் ஒரு பார்வை

சிகப்பழகானவர்களுக்கான சினிமா என்பதை மாற்றியவர்.. கோடிகளை கொட்டினாலும் விளம்பரங்களில் நடிக்காதவர்.. முதல்வர் பதவி ஆசையில்லாதவர்..; ரஜினி 46 வருடங்கள் ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

46 வருடங்களுக்கு முன் 1975 ஆகஸ்ட் 18ல் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரஜினிகாந்த்.

கே பாலசந்தர் இயக்கிய இந்த படத்தில் கமல் ஸ்ரீவித்யா இருவரும் ஜோடியாக நடிக்க கெஸ்ட் ரோலில் நடித்தவர் தான் ரஜினிகாந்த், ரஜினி ரசிகர்கள்

இன்று 46 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் 46YEARSOFRAJINISM என கடந்த ஒரு வாரமாகவே ட்ரெண்டிங் செய்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.

ரஜினியை பற்றி சொல்ல வேண்டுமானால் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

எனவே அவரைப் பற்றிய சிறு தொகுப்பு இது..

*1977 -1978 காலகட்டத்தில் வருடத்துக்கு
20 படங்களில் நடித்தவர் இவர்தான்.

*10 வருடங்களில் 100 படங்களில்
நடித்துக் கொடுத்தவர் அவர்தான்.

சிகப்பாக இருப்பவர்களுக்கு மட்டுமே சினிமா சான்ஸ் என்பதை மாற்றிய கறுப்பழகர் இவர்தான்.

*ஐந்தே வருடங்களில் எம்.ஜி.ஆரை விட
அதிக சம்பளம் பெற்றவர் இவர்தான்.

கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்க பலர் ரெடியாக இருந்தாலும் வர்த்தக ரீதியான விளம்பரங்களில் நடிக்காதவர் இவர்தான்.

எந்த சூழ்நிலையிலும் யாரையும் புறம் பேசாத நல்ல மனிதர் இவர்தான்.

ஜப்பான் வரைக்கும் தமிழைக்
கொண்டு சேர்த்தவர் இவர்தான்.

தன் சொந்தப் படத்தில் ஏற்பட்ட
நஷ்டத்தை திரும்ப கொடுத்தவர்
இவர்தான்.

இவரைப் பின்பற்றி சினிமாவுக்கு வந்தவர்கள் பலர். ஆனால் யாரையும் பின்பற்றாதவர் இவர்தான்.

வில்லனாக நடித்து பின்னர் ஹீரோவாகி 40 வருடங்களாக நம்பர் 1 இடத்தை
பிடித்தவர் இவர்தான்.

இன்றைய தலைமுறை நடிகர்களுக்கும் இவரது நம்பர் 1 இடத்தை தொட முடியாத இடத்தில் வைத்தவரும் இவர்தான்.

நூறாவது படம் ஒரு மாஸ் படமாக
அல்லது ஒரு குடும்ப படமாக
கமர்சியல் படம் நடிக்க வேண்டும்
என்று நினைக்கும் நடிகர்களுக்கு
மத்தியில் தனது ஸ்ரீராகவேந்திரரை
தனது 100வது படமாக தேர்வு செயத துணிச்சலானவர் இவர்தான்.

பாபா படம் சரியாக போகவில்லை
என்று தெரிந்ததும் அதற்கான
நஷ்ட ஈட்டை விநியோகஸ்தர்களுக்கு
திருப்பி தந்தவரும் இவர்தான்.

சந்திரமுகி படத்தில் ஜோதிகாவை
மிக முக்கியமான கதாபாத்திரத்தில்
நடிக்க வைததிருந்தலும, சந்திரமுகி
படத்தை இது ரஜினி படம் என்று சொல்ல வைத்தவர் இவர்தான்.

ஒரு வருடம் இரண்டு வருடம் இடைவெளி
ஏற்ப்ப்ட்டு விட்டாலே நடிகர்களுக்கு மார்க்கெட் குறைந்துவிட்டது என்று சொல்வார்கள். ஆனால் 4 வருடம் இடைவெளிக்குப்பிறகு தனக்கான
இடத்தை கொஞ்சமும் கூட குறையாமல்
தக்க வைத்தவர் இவர்தான்

இந்தியாவிலுள்ள மிகப் பெரிய அரசியல்வாதிகள் எல்லோரிடம்
நட்பு கொண்டிருந்தவர் இவர்தான்.

தன்னை விமர்சித்தவர்களை கூட
நண்பர்கள் என்று அழைப்பவர் இவர்தான்.

இவரின் போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்து மலேசியா பிரதமர் இவரிடம் செல்பி எடுத்துக் கொண்டார். இன்னொரு நாட்டின் பிரதமர் செல்பி எடுத்துக் கொண்டவர் இவர்தான்.

95 கால கட்டத்தில் அப்போது பிரதமராக இருந்தவர் நரசிம்மராவ். கட்சியின் தமிழக தலைமை பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். முதலமைச்சர் வேட்பாளராக நீங்கள் இருக்க வேண்டும் என்று சொல்லும்போது எனக்கு வேண்டாம் என்று சொன்னவர் இவர்தான்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியே ரஜினிதான் என மூப்பனாரையே சொல்ல வைத்தவர் இவர்தான்.

அரசியல் கட்சி ஆரம்பிக்கு உள்ளதாக சொன்ன காலத்திலும் முதல்வர் பதவி ஆசையில்லை என்று சொன்னவரும் இவர்தான்.

தன் உடல்நிலையால் கட்சி ஆரம்பிக்க முடியாமல் போன போதும் தன் இமேஜ் பற்றி கவலைப்படாமல் தன்னை நம்பியவர்களை கொரோனா வைரசுக்கு பலிகடா ஆக்க மாட்டேன் என்ற உண்மையை பேசியவரும் இவர்தான்.

அரசியல்வாதிகளே அழகுக்காக அரிதாரம் பூசும் போதும் பொதுவெளியில் வழுக்கை தலை தாடியுடன் வலம் வரும் நடிகரும் இவர்தான்.

இந்திய நாட்டின் பிரதமரே #தலைவா
என்று அழைக்கப்பட்டவரும் இவர்தான்.

#46YEARSOFRAJINISM

தலைவருக்கு வாழ்த்துக்கள்…

#46YEARSOFRAJINISM – A tribute of Super Star Rajinikanth

விநாயகர் சதுர்த்திக்கு 3 வேஷம் போட்டு ‘டிக்கிலோனா’ ஆட வரும் சந்தானம்

விநாயகர் சதுர்த்திக்கு 3 வேஷம் போட்டு ‘டிக்கிலோனா’ ஆட வரும் சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’. செப்டம்பர் 10 தேதியன்று ஜீ 5யில் வெளியாகிறது.

அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்குகிறார்.

2020 ஆம் ஆண்டில் ஜீ 5 ‘லாக்கப்’, ‘க/ பெ ரணசிங்கம்’, ‘முகிலன்’, ‘ஒரு பக்க கதை’ உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்தது.

அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டிலும் கே எஸ் ரவிக்குமார் நடித்த ‘மதில்’ படத்தை வழங்கி, ரசிகர்களை மகிழ்விக்கத் தொடங்கியிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து மேலும் சுவராசியமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த வரிசையில் ஜீ 5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. ‘டிக்கிலோனா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த டைம் டிராவல் ஃபேண்டசி டிராமா படத்தில் முன்னணி நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கியுள்ள இந்தப் படத்தை கே. ஜே. ஆர். ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.

‘டிக்கிலோனா’ படத்தில் யோகி பாபு, அனகா, ஷிரின் காஞ்ச்வாலா, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், முனிஸ்காந்த், சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அரவிந்த் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ஜோமின் மேத்யூ படத்தை தொகுத்துள்ளார். பாடலாசிரியர்கள் அருண்ராஜா காமராஜ் மற்றும் கு. கார்த்திக் எழுதிய பாடல்களுக்கு யுவன் சங்கர்ராஜா இசை அமைத்திருக்கிறார்.

‘கோமாளி’ பட புகழ் கலை இயக்குனர் ராஜேஷ் கலை இயக்கத்தை கவனிக்க, தினேஷ் சுப்பராயன் சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குனர் பேசுகையில்,’ சயின்ஸ் ஃபிக்ஷன் டைம் ட்ராவல் ஜானரில் படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

கதையின் நாயகனான சந்தானம் டைம் ட்ராவலில் பயணித்து தன்னுடைய திருமணத்தை தடுத்து நிறுத்தினாரா? இல்லையா? என்பதுதான் சுவராசியமான கதை’ என்றார்.

இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி 15 மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

சந்தானம் நடித்திருக்கும் டிக்கிலோனா படத்தின் முன்னோட்டம் தான் அவர் நடித்த திரைப்படங்களில் அதிக பார்வையாளர்களை கவர்ந்த முன்னோட்டமாக அமைந்திருக்கிறது.

இந்த படத்தில் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் இடம்பெற்ற ‘பேர் வச்சாலும்..’ என தொடங்கும் பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டு, இணையத்தில் வெளியானது.

அந்தப் பாடல் இதுவரை 6 மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு புதிய சாதனையை படைத்திருக்கிறது.

அத்துடன் இந்தப்படத்தில் முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

இது போன்ற பல அம்சங்கள் ‘டிக்கிலோனா’ படத்தில் அமையப் பெற்றிருப்பதால் இப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் ஜீ 5, தன்னுடைய ஒரிஜினல் பட வரிசையில் ‘டிக்கிலோனா’ திரைப்படத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10 தேதி, விநாயகர் சதுர்த்தி திருவிழா தினத்தன்று வெளியிடுகிறது.

Santhanams Dikkiloona to release on Zee5 tamil on 10th September

தமிழ் சினிமா PROக்கள் எலெக்சன்..: தலைவர் பதவிக்கு ஜான் & டைமன்ட் பாபு மோதல்

தமிழ் சினிமா PROக்கள் எலெக்சன்..: தலைவர் பதவிக்கு ஜான் & டைமன்ட் பாபு மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவிற்கும் ரசிகர்களுக்கும் பாலமாக இருப்பவர்கள் ‘பி.ஆர்.ஓ.க்கள்’ என்றழைக்கப்படும் பத்திரிகை தொடர்பாளர்கள்.

தமிழ் சினிமாவில் ‘பி.ஆர்.ஓ.க்கள்’ சங்கமான ‘தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்க’த்திற்கு நாளை ஆகஸ்ட் 19ல் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த சங்கத்திற்கு 2 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம்.

தற்போதைய நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. எனவே புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிஆர்ஓ சங்க முன்னாள் தலைவரான டைமண்ட் பாபு தலைமையில் ஒரு அணியும், முன்னாள் செயலாளர் ஜான் தலைமையில் ஒரு அணியும் தற்போது களத்தில் உள்ளனர். இவர்கள் தலைவர்கள் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

டைமண்ட் பாபு அணியில் தலைவர் பதவிக்கு அவரே போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு யுவராஜ் போட்டியிடுகிறார். பொருளாளர் பதவிக்கு ஆனந்த் போட்டியிடுகிறார்.

துணைத் தலைவர்கள் பதவிக்கு வி.கே.சுந்தரும், ராஜ்குமாரும், இணைச் செயலாளர்கள் பதவிக்கு முத்துராமலிங்கமும், கணேஷூம் போட்டியிடுகின்றனர்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு, ‘திரைநீதி’ செல்வம், ‘மதிஒளி’ குமார், இனியன் ராஜன், சரவணன், புவன், செய்யது இப்ராஹிம், தர்மதுரை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஜான் தலைமையிலான அணியில் அவரே தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.

செயலாளர் பதவிக்கு விஜயமுரளி போட்டியிடுகிறார். பொருளாளர் பதவிக்கு குமரேசன் போட்டியிடுகிறார்.

துணைத் தலைவர்கள் பதவிக்கு மதுரை செல்வம், கோவிந்தராஜ் இருவரும் போட்டியிடுகின்றனர்.

இணைச் செயலாளர்கள் பதவிக்கு ராமானுஜம், செல்வரகு இருவரும் போட்டியிடுகின்றனர்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு, கடையம் ராஜூ, ‘கிளாமர்’ சத்யா, வெங்கட், சாவித்திரி, வி.எம்.ஆறுமுகம், நித்திஷ் ஸ்ரீராம், பிரியா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்தத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை காலை 8 மணி முதல் மதியம் 1 மணிவரையிலும் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெறவுள்ளது.

வாக்குப் பதிவு முடிந்த உடனேயே ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Pro John and Diamond Babu to contest in Pro elections

50% மாணவர்களுக்கு அனுமதி.. வைட்டமின் மாத்திரைகள்.. ஆசிரியர்களுக்கு தடுப்பூசி.; செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு

50% மாணவர்களுக்கு அனுமதி.. வைட்டமின் மாத்திரைகள்.. ஆசிரியர்களுக்கு தடுப்பூசி.; செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போடப்பட்ட ஊரடங்கால் இந்தியா முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

எனவே ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனை கணக்கிட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் இந்திய நாடு முழுவதும், தொடக்க பள்ளி முதல் அனைத்து வகை வகுப்புகளையும் திறந்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்துமாறு, இந்திய மருத்துவ கவுன்சிலான (ஐ.சி.எம்.ஆர்) அறிவுறுத்தியுள்ளது.

எனவே தமிழ்நாட்டில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறப்பது குறித்து வரும் 20ஆம் தேதி முடிவுசெய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து இருந்தார்.

அதன்படி தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகளை திறந்து 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளிகள் திறந்தவுடன் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குநர் இன்று வெளியிட்டுள்ளார். அதில்…

*பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். காற்றோட்டமான சூழலை பள்ளியில் உறுதி செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கைகழுவுவதற்கான உரிய ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்.

*தொடுதல் இல்லாத தெர்மாமீட்டர், கிருமி நாசினி, சோப்புகள் உள்ளிட்டவை கட்டாயம் போதிய இருப்பு வைத்திருக்க வேண்டும். பள்ளி பேருந்துகள் உரிய முறையில் தூய்மைப்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.

*வகுப்பறைகளில் 6 அடி இடைவெளி விட்டு அமரும் வகையில் மாணவர்களுக்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட இடங்களில் குறியீடு போட்டிருக்க வேண்டும்.

*ஆசிரியர்கள், அலுவலக அறை மற்றும் பள்ளியின் அனைத்து இடங்களிலும் போதிய இடைவெளியை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

*வாய்ப்புகள் இருந்தால் திறந்தவெளி வகுப்பறைகளை கையாளலாம். வகுப்பறைக்குள் செல்ல, வெளியே வர தனித்தனி குறியீடுகள் போட வேண்டும். பள்ளிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட கேட்கள் இருந்தால் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

*பள்ளிகளில் உரிய இடங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

எச்சில் துப்புவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பள்ளிகளில் ஒரேநேரத்தில் ஒரு வகுப்பில் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

*ஆசிரியர்கள் அனைவரும் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

*பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வைட்டமின் சி மாத்திரைகள், நோய் எதிர்ப்பு மாத்திரைகள் வழங்க வேண்டும். வாரம் ஒருமுறை பள்ளி மாணவர்களின் உடல்நிலையை பரிசோதிக்க வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் இடம்பெற்றுள்ளன

Schools to reopen for classes 9 to 12 from September 1 in TN

சிங்கிள் ஷாட் விருதை வென்ற போஸ் வெங்கட் – ஸ்ரீராம் கார்த்திக் கூட்டணியின் ‘யுத்த காண்டம்’

சிங்கிள் ஷாட் விருதை வென்ற போஸ் வெங்கட் – ஸ்ரீராம் கார்த்திக் கூட்டணியின் ‘யுத்த காண்டம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கன்னி மாடம்’ புகழ் ஸ்ரீராம் கார்த்திக், மற்றும் ‘கோலி சோடா’ புகழ் க்ரிஷா க்ருப், யோக்ஜேப்பி, போஸ் வெங்கட், சுரெஷ் மேனன் உள்பட பலர் நடித்துள்ள படம் ‘யுத்த காண்டம்’.

ஹரிசாய் இசையில், இனியன் ஜே ஹாரிஷ் ஒளிப்பதிவில், போஸ் வெங்கட் கதை, திரைக்கதையில், ஆனந்தராஜன் இயக்கியுள்ளார்.

பேரடைஸ் சினிமாஸ் தயாரிப்பில் இது ஒரே ஷாட்டில் உருவாகி உள்ள படமாகும்.

இந்த படம் தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளை பெற்று வருகிறது.

இது குறித்து படத்தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

“25 நடிகர்கள், 100 தொழில்நுட்ப கலைஞர்கள் , 50 இரவுகள் ஒத்திகை செய்து உருவாக்கப்பட்ட சிங்கிள் ஷாட் ஆக்ஷன் மூவி யுத்தகாண்டம்.

ஸ்வீடன் உலக திரைப்பட விழாவில் சிறந்த சிங்கிள் ஷாட் படத்திற்கான விருதை வென்றுள்ளது.

மேலும் கல்கத்தா சர்வதேச படவிழாவிலும், பூட்டான் சர்வதேச படவிழாவிலும், கோவா உலக திரைப்பட விழாவிலும் சிறந்த படத்திற்கான விருதை வென்றுள்ளது.

மேலும் பல திரைப்பட விழாக்களில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.”

என செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Bose Venkat’s Yuddha Kaandam won awards at international film festival

மீரா மிதுன் யூடியூப் சேனலை முடக்க யூ-டியூப் நிறுவனத்திற்கு போலீசார் கடிதம்

மீரா மிதுன் யூடியூப் சேனலை முடக்க யூ-டியூப் நிறுவனத்திற்கு போலீசார் கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி தன்னை எப்போதும் சமூக வலைத் தளங்களில் பேச வைப்பவர் நடிகை மீரா மிதுன்.

சமீபத்தில் இவர் தலித் இன மக்களைப்பற்றி இழிவாக பேசியிருந்தார்.

எனவே மீரா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதனையடுத்து ஒரு வீடியோ வெளியிட்டார் மீரா.

அதில்..

‛‛நான் ஒட்டுமொத்த பட்டியல் இன மக்களை பற்றி தவறாக பேசவில்லை. என்னை தொந்தரவு செய்தவர்களை பற்றி மட்டும்தான் பேசினேன்.

என்னை கைது செய்ய வேண்டும் என சிலர் சொல்கிறார்கள். தாராளமாக கைது செய்யுங்கள்.

ஏன் காந்தி, நேரு சிறைக்கு போகலையா..? என்னை கைது செய்ய ஒரு சூழல் எனக்கு வராது. என்னை கைது செய்ய வேண்டும் என்றால் அது கனவில் தான் நடக்கும். தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள்” என போலீசுக்கு சவால் விடும் வகையில் பேசியிருந்தார்.

இதனை பிரபலங்களும் சமூக ஆர்வலர்களும் கடுமையாக கண்டித்தனர்.

இதனையனுத்து கேரளாவில் நடிகை மீரா மிதுனை சென்னை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்

இந்த நிலையில் நடிகை மீரா மிதுன் நடத்தி வரும் யூடியூப் சேனலை முடக்க யூ-டியூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றபிரிவு போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதில்.. மீரா மிதுன், வன்முறையை தூண்டும் வகையில் பேசி வீடியோ வெளியிட்டதால் மத்திய குற்றப்பிரிவினர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Meera Mithun’s Youtube channel to be suspended

More Articles
Follows