தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ராம்பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இடியட்’ படம் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தில் மிர்ச்சி சிவாவுடன், நிக்கி கல்ராணி, ஊர்வசி, அக்ஷரா கவுடா, மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ளனர்.
இதே நாளில் ‘செல்ஃபி’ படமும் வெளியாகவுள்ளது.
ஜிவி பிரகாஷ், கௌதம் மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘செல்ஃபி’.
சென்சாரில் ‘யுஏ’ சான்றிதழ் பெற்றுள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 1ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
இயக்குநர் வெற்றிமாறனுடன் உதவி இயக்குநராக பணியாற்றிய மதிமாறன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
நீட் தேர்வை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாம்.
இந்த நாளில் இணைந்துள்ளது மற்றொரு படம். அதன் விவரம் வருமாறு…
ட்ரையம் ஸ்டுடியோ மலேசிய பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆண்டி தயாரித்துள்ள பூச்சாண்டி என்ற தமிழ் படம் வரும் ஏப்ரல் 1ம் தேதி “பூசாண்டி வரான்” என்ற பெயரில் தமிழ்நாட்டில் வெளியாக இருக்கிறது.
இப்படம் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி மலேசியாவில் பூச்சாண்டி என்ற தலைப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
JK விக்கி எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு டஸ்டின் இசை அமைக்க, அசலிஷாம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
எடிட்டிங் பணியை இயக்குநர் JK விக்கியே செய்துள்ளார்.
இப்படத்தில், லோகன், தினேஷ், எஸ்.கிருஷ்ணன், கணேசன், மனோகரன், ரமணா, ஹம்ஷினி பெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர்.
வெள்ளித்திரை டாக்கீஸ் தயாரிப்பாளர், நடிகர் முஜீப் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடும் “பூ சாண்டி வரான்”.
வரலாற்று நிகழ்வுகள் மற்றும் சில உண்மை சம்பவங்கள் பிண்ணணியோடு உருவாக்கப்படுள்ள இந்த திரில்லர் படத்தை மலேசிய தமிழ் மக்கள் வெகுவாக ரசித்ததை போல தமிழக மக்களும் ரசித்து மகிழ்வார்கள் என்று நம்புகிறது படக்குழு…
வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘மன்மதலீலை’ படமும் ஏப்ரல் 1-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
வெங்கட் பிரபுவிடம்
உதவி இயக்குநராக பணியாற்றிய மணிவண்ணன் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இப்படத்தில் அசோக்
செல்வனுடன் நாயகிகளாக சம்யுக்தா ஹெக்டே,
ஸ்மிருதி வெங்கட்,
ரியா சுமன் ஆகியோர்
நடித்துள்ளனர். பிரேம்ஜி இசையமைத்துள்ள இப்படத்துக்கு தமிழ்
ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
4 Tamil movies clash on April 1st week