தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர் கண்ணன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘காசேதான் கடவுளடா’.
இந்த படத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர.
இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் பத்திரிகையாளர்களை படக்குழு சந்தித்தது..
அப்போது இசையமைப்பாளர் ராஜ் பிரதாப் பேசியதாவது…
” இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த ஆர். கண்ணன் சாருக்கு என்னுடைய நன்றி. அவருடைய ‘பிஸ்கோத்து’ படத்துக்கு பிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. அதன் பிறகு மீண்டும் என்னை நம்பி இந்த படத்திற்கு அழைத்திருக்கிறார்.
இந்தப் படத்தில் நிறைய புது முயற்சிகள் செய்வதற்கான சுதந்திரம் இயக்குந்ர் எனக்கு கொடுத்தார். ‘பிஸ்கோத்து’ படம் பண்ணும்போது, ‘இந்த படம் மட்டும் நீ செய்துவிட்டால் அடுத்த பத்து வருடத்திற்கு எந்த படம் கொடுத்தாலும் செய்வாய்’ என்று ஒரு வார்த்தை சொன்னார்.
‘காசேதான் கடவுளா’ ஒரு காமெடிப்படம் எனும்போது ஒரே மாதிரியான இசை கொடுக்க முடியாது.
ஒவ்வொரு இடத்திலும் வித்தியாசப்படுத்த வேண்டும். 1972-ல் வந்த படத்தின் ரீகிரியேஷன் என்பதால் விண்டேஜ் ஸ்டைலும் இசையில் நாங்கள் முயற்சி செய்திருக்கிறோம். லைவ் இசையும் நாங்கள் முயற்சி செய்திருக்கிறோம்.
எம்எஸ்வி சாரின் இசையை கெடுக்காத வண்ணம் நான் இதில் வேலை செய்து இருக்கிறேன் என நம்புகிறேன். சிவா சாரும் படத்தின் இசையில் ஆர்வமாக எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார். அவரை சந்தித்தது மகிழ்ச்சி. வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி”.
ஜீ5 எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜெயக்கிருஷ்ணன் பேசியதாவது…
” நடிகர் சிவா என்னுடைய நெருங்கிய நண்பர். மிகவும் பாசிட்டிவான நபர். கண்ணன் சார் இயக்கிய ‘ஜெயங்கொண்டான்’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ஆகிய படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த படத்திற்கு ஒப்பந்தம் போட்டுவிட்டு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு அதன் பிறகு தான் படம் பார்த்தேன்.
விழுந்து விழுந்து சிரித்தேன். சிரிக்க வைத்தது மட்டும் இல்லாமல் பல காட்சிகள் உங்களை சிந்திக்கவும் வைக்கும். பழைய படத்தை விட இந்த படம் இன்னும் பல மடங்கு சிறப்பாகவே வந்திருக்கிறது. பார்த்துவிட்டு சொல்லுங்கள் “.
நடிகர் சிவா பேசியதாவது….
” கண்ணன் சார் எனக்கு நீண்ட வருடமாகவே பழக்கம். லாக்டவுன் சமயத்தில் என்னை அழைத்து இந்த முறை படம் செய்தே ஆக வேண்டும் என்று சொன்னார். பெரிய படங்கள் எடுத்து அதை ரீமேக் செய்யும் பொழுது கண்டிப்பாக ஒப்பீடு இருக்கும் என்று தெரியும்.
அந்த பயத்தோடு தான் நாங்கள் இதனை எடுத்தோம். அந்தப் படத்தை விட சிறப்பாக யாராலும் எடுக்க முடியாது. இருந்தாலும், எங்களால் முடிந்த அளவிற்கு நன்றாக கொடுத்திருக்கிறோம். யோகி பாபு சார், கருணாகரன் என இந்த படத்தில் நடித்த எங்கள் எல்லாருக்குமே இந்த டைட்டில் எங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாக இருந்தது.
தயாரிப்பாளராக அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் இயக்குநராக கண்ணன் அவரது பணியை இனிமேல் சிறப்பாக செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன். படம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க”.” என்றார்.
Shiva speech at Kasethan Kadavulada Press Meet