‘உள்ளத்தை அள்ளித்தா’ படம் போல ‘காசேதான் கடவுளா’ படமிருக்கும் – கண்ணன்

‘உள்ளத்தை அள்ளித்தா’ படம் போல ‘காசேதான் கடவுளா’ படமிருக்கும் – கண்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் கண்ணன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘காசேதான் கடவுளடா’.

இந்த படத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர.

இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் பத்திரிகையாளர்களை படக்குழு சந்தித்தது.. அப்போது படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான கண்ணன் பேசியதாவது…

“போன மாதம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ வெளியானது. இந்த மாதம் ‘காசேதான் கடவுளடா’ திரைப்படம் வெளியாக இருக்கிறது.

சினிமா இன்று இருக்கக்கூடிய சூழலில் மாதம் ஒரு படம் வெளியிடுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதற்கு எனக்கு பலருடைய ஆதரவு இருந்தது. அவர்கள் அனைவருக்கும் நன்றி! குறிப்பாக மகேந்திரன் சார், தயாரிப்பாளர் ராஜன் சாருக்கு நன்றி! மிர்ச்சி சிவா இந்த படத்தின் ஹீரோ. அவர் இல்லாமல் இந்த படம் இல்லை. அவரால்தான் இந்த படம் தொடங்கப்பட்டது.

நீண்ட கால நண்பர். இப்போதுதான் இருவரும் படம் இணைந்து வேலை செய்ய சூழ்நிலை அமைந்தது. ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘பம்மல் கே சம்மந்தம்’ படம் போல, இந்தப் படம் ஜாலியான ஒன்றாக இருக்கும். படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், உடன்நின்ற அனைவருக்கும் நன்றி”. என்றார்.

எடிட்டர் சூர்யா பேசியதாவது…

“இது எனக்கு முதல் படம். இயக்குநர் கண்ணன் தான் எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்தார். எளிதாக பழகக்கூடியவர். ‘காசேதான் கடவுளடா’ போன்ற கல்ட் கிளாஸிக் படத்தை எடுக்கும்போது ஒரு தெளிவு தேவை. அது இயக்குநர் கண்ணனிடம் இருக்கிறது. படத்தின் எல்லா ஃப்ரேம்களிலும் உங்களுக்குப் பிடித்த நடிகர்கள் தான் இருப்பார்கள். படம் நகைச்சுவையாக நன்றாக வந்திருக்கிறது. வெற்றியடைய வாழ்த்துக்கள்”.

படத்தை வெளியிடும் மீனாட்சி சுந்தரம் பேசியதாவது…

“ஒரு படம் வெளியாவதற்கு நிறைய பிரச்சனைகள் இருக்கும். அந்த பிரச்சினைகளை எல்லாம் தாண்டி வெளியிடுவதற்கு இயக்குநர் கண்ணன் என்னிடம் இந்த படத்தைக் கொடுத்தார். நயன்தாரா நடித்த ‘கனெக்ட்’ திரைப்படத்தை தமிழ்நாடு முழுக்க வெளியிட்டு கொடுத்தேன். அது வெற்றி படமாக அமைந்தது.

ஆர் ஜே பாலாஜியின் ‘எல்கேஜி’ திரைப்படத்தைப் பார்த்து அது வெற்றியடையும் என்று வாழ்த்தி அந்த படத்தை விட இரண்டு மடங்கு பிசினஸ் செய்து கொடுத்தேன்.

சினிமாவை நேசித்து இயங்கக்கூடிய நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என யாராக இருந்தாலும் அவர்களுக்கு சினிமா நல்லதையே திருப்பி கொடுக்கும். அதனால்தான் கண்ணன் சாரிடம் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் பரவாயில்லை இந்த படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று வாங்கினேன்.

‘வணக்கம் சென்னை’ படத்தில் எப்படி பிரியா ஆனந்துக்கும் மிர்ச்சி சிவா சாருக்கும் நல்ல ஒரு கெமிஸ்ட்ரி இருந்ததோ அது போலவே இந்த படம் முழுக்க ஒரு ஃபீல் குட்டாக இருக்கும். படம் வெற்றியடைய வாழ்த்துகள்”. என்றார்.

காசேதான் கடவுளடா

director kannan speech at Kasethan Kadavulada Press Meet

பழைய படம் போல எடுக்க முடியாது.. பயத்தோடு எடுத்தோம்.; சிவா ஓபன் டாக்

பழைய படம் போல எடுக்க முடியாது.. பயத்தோடு எடுத்தோம்.; சிவா ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் கண்ணன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘காசேதான் கடவுளடா’.

இந்த படத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர.

இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் பத்திரிகையாளர்களை படக்குழு சந்தித்தது..

அப்போது இசையமைப்பாளர் ராஜ் பிரதாப் பேசியதாவது…

” இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த ஆர். கண்ணன் சாருக்கு என்னுடைய நன்றி. அவருடைய ‘பிஸ்கோத்து’ படத்துக்கு பிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. அதன் பிறகு மீண்டும் என்னை நம்பி இந்த படத்திற்கு அழைத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் நிறைய புது முயற்சிகள் செய்வதற்கான சுதந்திரம் இயக்குந்ர் எனக்கு கொடுத்தார். ‘பிஸ்கோத்து’ படம் பண்ணும்போது, ‘இந்த படம் மட்டும் நீ செய்துவிட்டால் அடுத்த பத்து வருடத்திற்கு எந்த படம் கொடுத்தாலும் செய்வாய்’ என்று ஒரு வார்த்தை சொன்னார்.

‘காசேதான் கடவுளா’ ஒரு காமெடிப்படம் எனும்போது ஒரே மாதிரியான இசை கொடுக்க முடியாது.

ஒவ்வொரு இடத்திலும் வித்தியாசப்படுத்த வேண்டும். 1972-ல் வந்த படத்தின் ரீகிரியேஷன் என்பதால் விண்டேஜ் ஸ்டைலும் இசையில் நாங்கள் முயற்சி செய்திருக்கிறோம். லைவ் இசையும் நாங்கள் முயற்சி செய்திருக்கிறோம்.

எம்எஸ்வி சாரின் இசையை கெடுக்காத வண்ணம் நான் இதில் வேலை செய்து இருக்கிறேன் என நம்புகிறேன். சிவா சாரும் படத்தின் இசையில் ஆர்வமாக எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார். அவரை சந்தித்தது மகிழ்ச்சி. வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி”.

காசேதான் கடவுளடா

ஜீ5 எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜெயக்கிருஷ்ணன் பேசியதாவது…

” நடிகர் சிவா என்னுடைய நெருங்கிய நண்பர். மிகவும் பாசிட்டிவான நபர். கண்ணன் சார் இயக்கிய ‘ஜெயங்கொண்டான்’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ஆகிய படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த படத்திற்கு ஒப்பந்தம் போட்டுவிட்டு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு அதன் பிறகு தான் படம் பார்த்தேன்.

விழுந்து விழுந்து சிரித்தேன். சிரிக்க வைத்தது மட்டும் இல்லாமல் பல காட்சிகள் உங்களை சிந்திக்கவும் வைக்கும். பழைய படத்தை விட இந்த படம் இன்னும் பல மடங்கு சிறப்பாகவே வந்திருக்கிறது. பார்த்துவிட்டு சொல்லுங்கள் “.

சிவா

நடிகர் சிவா பேசியதாவது….

” கண்ணன் சார் எனக்கு நீண்ட வருடமாகவே பழக்கம். லாக்டவுன் சமயத்தில் என்னை அழைத்து இந்த முறை படம் செய்தே ஆக வேண்டும் என்று சொன்னார். பெரிய படங்கள் எடுத்து அதை ரீமேக் செய்யும் பொழுது கண்டிப்பாக ஒப்பீடு இருக்கும் என்று தெரியும்.

அந்த பயத்தோடு தான் நாங்கள் இதனை எடுத்தோம். அந்தப் படத்தை விட சிறப்பாக யாராலும் எடுக்க முடியாது. இருந்தாலும், எங்களால் முடிந்த அளவிற்கு நன்றாக கொடுத்திருக்கிறோம். யோகி பாபு சார், கருணாகரன் என இந்த படத்தில் நடித்த எங்கள் எல்லாருக்குமே இந்த டைட்டில் எங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாக இருந்தது.

தயாரிப்பாளராக அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் இயக்குநராக கண்ணன் அவரது பணியை இனிமேல் சிறப்பாக செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன். படம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க”.” என்றார்.

காசேதான் கடவுளடா

Shiva speech at Kasethan Kadavulada Press Meet

வேல்ஸ் பிலிஃம்ஸின் 15 படங்கள் : விஜய் இயக்கத்தில் ஜீவாவுடன் ஒரு படம்.; ஜெயம்ரவி & ரஹ்மானுடன் ஒரு படம்

வேல்ஸ் பிலிஃம்ஸின் 15 படங்கள் : விஜய் இயக்கத்தில் ஜீவாவுடன் ஒரு படம்.; ஜெயம்ரவி & ரஹ்மானுடன் ஒரு படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகத்தின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது.

இந்த நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்கு சந்தை வணிகத்தில் இன்று பட்டியலிடப்பட்டிருகிறது.

இதற்கான பிரத்யேக தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

இதன் போது தேசிய பங்கு சந்தையின் தென் மண்டல வணிக பிரிவின் தலைவரான கௌரி சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இவருடன் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு சந்தை வர்த்தகத்திற்கு தொழில்நுட்ப ரீதியாக உதவி புரியும் கம்பட்டா செக்யூரிட்டிஸ் லிமிடெட் நிறுவனத்தினை சார்ந்த விபின் அகர்வால், இந்த நிறுவனத்தின் நிதி தணிக்கையாளரான சுந்தர்ராஜன், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான டாக்டர் ஐசரி கே கணேஷ், முதன்மை நிர்வாக நிர்வாக அதிகாரியான அஸ்வின், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவரான ப்ரீத்தா கணேஷ் ஆகியோரும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

மேலும் இவ்விழாவில் தேசிய பங்கு சந்தையில் முதன்முதலாக பட்டியலிடப்பட்டிருக்கும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் எனும் நிறுவனத்தின் முயற்சிகளை பாராட்ட தமிழ் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜீவா, Hiphop ஆதி, ஆரி அர்ஜுனன், ஆரவ், பிரசாந்த் உள்ளிட்ட நடிகர்களும், இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி, பேரரசு, ஆர்வி உதயகுமார், ஆர். கே. செல்வமணி, கௌரவ் நாராயணன், நடிகை சங்கீதா கிரிஷ், இயக்குநர்கள் கோகுல், ஏ. எல். விஜய், தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகளில் ஒருவரான திருப்பூர் சுப்பிரமணியம் என திரையுலகின் முன்னணி பிரபலங்கள் வருகை தந்தனர்.

ஐசரி கே கணேஷ்

இந்த நிகழ்விற்கு வருகை தந்திருந்த அனைவரும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் முன்னுதாரண முயற்சியை அங்கு அமைக்கப்பட்டிருந்த மணி ஓசையை எழுப்பி தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவன தலைவரான ஐசரி கே கணேஷ் பேசுகையில்…

” இங்கு வருகை தந்திருக்கும் தொழில்துறை, கல்வித்துறை, திரைத்துறையைச் சேர்ந்த அனைவருக்கும் வணக்கம். எங்களது நிறுவனத்தின் பங்கு சந்தை வர்த்தகத்தின் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டிருப்பதற்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

வேல்ஸ் குழுமம் தொடக்கத்தில் வேல்ஸ் கல்வி அறக்கட்டளை எனும் பெயரில் நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் தொடங்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டில் செவிலியர் பயிற்சி கல்லூரியாக 39 மாணவர்களுடனும், 10 ஊழியர்களுடனும் தொடங்கப்பட்டது.

தற்போது 43 நிறுவனங்களும், ஏறத்தாழ 40 ஆயிரம் மாணவர்களும் கல்வி பயில்கிறார்கள். முப்பது ஆண்டுகளில் இந்த முன்னேற்றமும் வளர்ச்சியும் நடைபெற்றிருக்கிறது.

நான் சிறிய வயதிலேயே என் தந்தையும், நடிகருமான ஐசரி வேலனுடன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த “ரிக்க்ஷகாரன்” எனும் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று பார்வையிட்டிருக்கிறேன். அப்போதிருந்து தற்போது வரை.. கிட்டத்தட்ட 45 ஆண்டு காலமாக எனக்கு தமிழ் திரையுலகத்துடன் தொடர்பிருக்கிறது.

நான் பச்சையப்பன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது, ‘வாக்குமூலம்’ என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்திருக்கிறேன்.

தயாரிப்பு மட்டுமல்ல 25 முதல் 30 திரைப்படங்கள் வரை நான் நடித்திருக்கிறேன். 25 படங்களை தயாரித்திருக்கிறேன். எனவே திரை துறையில் நல்ல அனுபவத்தையும், திரை துறையினரிடத்தில் நம்பிக்கையையும் பெற்றிருக்கிறேன். இதன் காரணமாக தற்போது பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபட உள்ளோம்.

2019 ஆம் ஆண்டில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் எனும் நிறுவனத்தை தொடங்கினேன். தற்போது தேசிய பங்கு சந்தை வர்த்தகத்தில் எங்களுடைய நிறுவனம் பட்டியலிடப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக எங்களுடைய முயற்சி ஓராண்டு காலம் தாமதமானது. எங்களுடைய திட்டம், மூன்றாண்டுகளுக்கு பிறகு நிறைவேறியிருக்கிறது.

பங்கு சந்தை வர்த்தகத்தில் நுழைந்த முதல் நாளே பலர் எங்களுடைய நிறுவன பங்குகளை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். எங்கள் பங்குகளின் தொடக்க விலை 99/- ரூபாய் என்று நிர்ணயித்தோம்.

தற்போது 106 ரூபாய்க்கு வர்த்தகமாகி இருக்கிறது. பங்கு சந்தை வர்த்தகம் தொடர்பான நுட்பமான விபரங்களை தற்போது நேரடியாக கற்கத் தொடங்கி இருக்கிறேன். விரைவில் இதில் நிபுணத்துவம் பெறுவோம் என நம்பிக்கை உள்ளது.

பொழுதுபோக்கு துறையில் எங்களுடைய நிறுவனம் தரமான படைப்புகளை வழங்கி சிறப்பாக செயல்படும். எங்களுடைய பங்குகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலீட்டாளர்களுக்கு விரைவில் டிவிடெண்ட் எனப்படும் ஊக்கத் தொகையை வழங்குவதற்கு முயற்சிப்பேன் எனக் கூறினார்.

எங்களுடைய நிறுவனத்தின் பங்கு சந்தை வர்த்தக முயற்சிக்கு உறுதுணையாக இருந்த மதன் லால், வெங்கடேஷ், சச்சின் பிள்ளை, குணா உள்ளிட்ட ஏராளமானவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களது நிறுவனம், திரைப்படத் தயாரிப்புகளில் மட்டுமல்லாமல் திரைப்படத்தின் விநியோகம் மற்றும் திரையிரங்க திரையிடல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறது.

எங்கள் நிறுவனத்தின் சார்பில் பெங்களூரூவில் படப்பிடிப்பு வளாகம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடனான உள்ளரங்கத்துடன் கூடிய பொழுதுபோக்கு பூங்காவினை உருவாக்கி இருக்கிறோம் ஜூன் மாதம் இதனை பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படவிருக்கிறது.

இந்த ஜாலிவுட் எனப்படும் பொழுதுபோக்கு சாகச பூங்காவின் 77 சதவீத பங்குகளை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் பெற்றிருக்கிறது. இது இந்தியாவிலேயே தலைசிறந்த தீம் பார்க்காக திகழும்.

முதலீட்டாளர்களுக்கு ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்கிறேன். எங்களது நிறுவனம் ஐந்து திரைப்படங்களை வெளியிட தயார் நிலையில் வைத்திருக்கிறது. ஐந்து திரைப்படங்களை தயாரித்து வருகிறது. மேலும் ஐந்து திரைப்பட தயாரிப்பிற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி இருக்கிறது.

ஜெயம் ரவி – ஏ ஆர் ரகுமான் ஆகியோர் கூட்டணியில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் திரைப்படம் ஒன்று தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகர்கள் ஜீவா, அர்ஜுன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் பான் இந்திய திரைப்படம் ஒன்றும் தயாராகிறது. இதனை இயக்குனர் பா விஜய் இயக்குகிறார்.

தொடர்ந்து முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறுவதற்காகவும், அவர்களின் முதலீடு லாபத்துடன் உயர்வதற்கான முயற்சிகளிலும் முழுமூச்சாக ஈடுபடுவோம்.” என்றார்.

முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த விருந்தினர்களையும், பார்வையாளர்களையும், முதலீட்டாளர்களையும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியான அஸ்வின் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவரான ப்ரீத்தா கணேஷ் நன்றி தெரிவித்தார்.

ப்ரீத்தா கணேஷ்

Vels films International announced their upcoming movies

‘பத்து தல’ பார்க்க ரெடியா.? அப்போ ரன்னிங் டைம் தெரிஞ்சிக்கோ தல..

‘பத்து தல’ பார்க்க ரெடியா.? அப்போ ரன்னிங் டைம் தெரிஞ்சிக்கோ தல..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சில்லுன்னு ஒரு காதல்’ புகழ் ஒபேலி என் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் படம் ‘பத்து தல’.

இப்படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், செண்டாயன், ரெடின் கிங்ஸ்லி, டீஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஆக்‌ஷன் டிராமா மற்றும் ட்ரைலர் வீடியோக்கள் மூலம் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த படம் மார்ச் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் ரன்னிங் டைம் 152 நிமிடங்கள் என்றும் அதாவது 2 மணி நேரம் 32 நிமிடங்கள் என்றும் கூறப்படுகிறது.

‘பத்து தல’ படம் கன்னடப் படமான ‘முஃப்தி’யின் படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

simbu starrer ‘Pathu Thala’ run time revealed

மாணவர்களுக்கு வேளாண் சுற்றுலா.. உழவர்களுக்கு வேளாண் கருவிகள்.; கார்த்தியின் நன்றியும் கோரிக்கையும்

மாணவர்களுக்கு வேளாண் சுற்றுலா.. உழவர்களுக்கு வேளாண் கருவிகள்.; கார்த்தியின் நன்றியும் கோரிக்கையும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக அரசுக்கு நடிகர் கார்த்தியின் அறிக்கை கடிதம்…

22-03-2023

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கும் வணக்கம்.

வேளாண்மைக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகத் தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருவதற்கு எங்களுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். நேற்றைய வேளாண் பட்ஜெட்டில் முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் நம் மாணவர்கள் உழவு பற்றியும் உழவர்களின் நிலைப் பற்றியும் அறிந்து கொள்ள வேளாண் சுற்றுலா, சிறு குறு உழவர்களுக்கான வேளாண் கருவிகள் வழங்க நிதி ஒதுக்கீடு, நீர் நிலைகள் சீரமைப்பு , மரபு விதைகள் பரவலாக்கம், அதிக அளவு சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருதுகள் போன்ற பல அறிவிப்புகள் இக்காலகட்டத்திற்கு அவசியமானது.

இதுபோன்று உழவர்களின் தேவைகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி.

அதோடு சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அவசியமான முன்னெடுப்பு. தற்போது சாமை, வரகு, குதிரைவாலி, போன்றவைகளுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது.

ஆனால் அவைகளை அரிசியாகப் பிரித்தெடுக்க போதுமான அளவுக்கு இயந்திரங்களும், பழுது ஏற்பட்டால் சரி செய்யத் தேவையான நிபுணத்துவம் பெற்றவர்களும் மிகக் குறைவாக உள்ளனர் என்பது இத்தளத்தில் இயங்குவதன் மூலம் எங்களுக்குத் தெரிய வருகிறது.

இதனையும் அரசு கவனத்தில் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இதோடு மட்டுமன்றி சிறு குறு உழவர்களுக்கு அளிக்கப்படும் வேளாண் கருவிகள் அந்தந்த நில அமைப்புக்கு ஏற்றவாறும், அவர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டியது மிக அவசியமானதாக உள்ளது.

இதுப் போன்ற குறிப்புகளையும் அரசின் திட்டமிடலில் இணைத்துக் கொண்டால், அரசு மேற்கொள்ளும் வேளாண் நலத்திட்டங்கள் இன்னும் பெருவாரியான உழவர்களுக்கும் பொது மக்களுக்கும் பயனளிக்கும் என நம்புகிறோம்

என்றென்றும் அன்புடன்

கார்த்தி சிவகுமார்,
நிறுவனர்.

——-

கார்த்தி

வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர் @mkstalin அவர்களுக்கும் மற்றும் அமைச்சர் @MRKPanneer அவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகரும், உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி.

Actor karthi praising tamilnadu government in agriculture budget

‘லியோ’ படத்தில் யூடியூப் பிரபலங்களை இணைத்த லோகேஷ்

‘லியோ’ படத்தில் யூடியூப் பிரபலங்களை இணைத்த லோகேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் படம் ‘லியோ’.

இப்படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

லியோ

இந்நிலையில், பிரபல யூடியூபர்களான இர்ஃபான் மற்றும் குறும்புக்காரர் ராகுல் ஆகியோர் படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடிக்கிறார்களாம்.

காஷ்மீரில் இர்ஃபான் மற்றும் ராகுல் இருவரும் இருப்பதால், இவர்கள் படத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று ரசிகர்கள் கணிக்கத் தொடங்கியுள்ளனர்.

மேலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் ஒரு படத்தையும் இர்ஃபான் தனது சமூக வலைப்பின்னல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

லியோ

Popular YouTubers Irfan and Rahul in Vijay’s ‘Leo’

More Articles
Follows