‘லவ் டுடே’ படத்திற்கு 300 தியேட்டர்கள்.; ‘வாரிசு’ பட தயாரிப்பாளரின் தில் முடிவு

‘லவ் டுடே’ படத்திற்கு 300 தியேட்டர்கள்.; ‘வாரிசு’ பட தயாரிப்பாளரின் தில் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘விக்ரம்’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவை சமீபத்தில் அதிர வைத்த படம் என்றால் அது ‘லவ் டுடே’ தான்.

‘கோமாளி’ பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ‘லவ் டுடே’ படத்தை இயக்கி ஹீரோவாக நடித்திருந்தார்.

ரூ. 6 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த படம் பத்து மடங்கு லாபத்தை அதாவது 60 கோடிக்கு அதிகமான வசூலை பெற்று தந்துள்ளது.

எனவே இந்த படத்தை தெலுங்கிலும் டப்பிங் செய்து படக்குழுவினர் வெளியிட உள்ளனர்.

இதற்கான புரோமோசன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

இந்த நிலையில் நாளை நவம்பர் 25ஆம் தேதி ‘லவ் டுடே’ படத்தை தெலுங்கில் வெளியிட உள்ளார் ‘வாரிசு’ பட தயாரிப்பாளர் தில் ராஜு.

இந்த படத்தின் தெலுங்கு டிரைலருக்கு 2 மில்லியனுக்கு மேல் வரவேற்பு கிடைத்ததால் 300-க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

அட்லி இயக்கும் ‘ஜவான்’ படம் ‘பேரரசு’ படக் காப்பியா? விசாரணை முடிவு இதோ…

அட்லி இயக்கும் ‘ஜவான்’ படம் ‘பேரரசு’ படக் காப்பியா? விசாரணை முடிவு இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் கதை திருட்டு விவகாரங்களில் சிக்கிய இயக்குனர்கள் பலரை நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால் ஒருவர் இயக்கிய எல்லா படங்களுமே காப்பி்தான் என சிக்கியவர் என்றால் அது இயக்குனர் அட்லி தான்.

இவர் இயக்கிய ராஜா ராணி படம் மோகனின் ‘மௌன ராகம்’ பட காபி என கூறப்பட்டது. ஆனால் மௌனராகம் படத்தை நான் பார்க்கவில்லை என்றவர் அட்லி.

அதன் பின்னர் இவர் இயக்கிய ‘தெறி’ திரைப்படம் விஜயகாந்த் நடித்த சத்ரியன் படத்தின் காப்பி என கூறப்பட்டது.

அதன் பிறகு இவர் இயக்கிய ‘மெர்சல்’ திரைப்படம் கமல் நடித்த ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் காப்பி என கூறப்பட்டது.

இப்படி தொடர்ச்சியாக சர்ச்சைகளுக்கு ஆளான அட்லி தற்போது ஷாருக்கான் நயன்தாரா விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஜவான்’ என்ற படத்தை ஹிந்தியில் இயக்கி வருகிறார்.

இந்த படமும் இந்த காப்பி அடித்த குற்றச்சாட்டுக்கு ஆளானது.

விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தின் காப்பி தான் இந்த ஜவான் என தகவல்கள் வந்தன.

மேலும் இது தொடர்பாக புகார் தயாரிப்பாளர் சங்கத்தில் அளிக்கப்பட்டது.

ஆனால் இது தொடர்பான விசாரணையில் ‘ஜவான்’ பட கதை ‘பேரரசு’ படத்தின் கதையல்ல என தெரியவந்துள்ளதாக சொல்லப்படுகின்றது.

சூரியாவின் வணங்கான் படத்தில் இணைந்த இளம் இயக்குனர்

சூரியாவின் வணங்கான் படத்தில் இணைந்த இளம் இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘அருவி’ மற்றும் ‘வாழ்’ பட இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன்
சூரியா – பாலா கூட்டணியில் உருவாகும் வணங்கான் படத்தில் இணைந்து இருப்பதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இயக்குனர் பாலா மற்றும் அருண் இணைந்து உருவாக்கியுள்ள புதிய திரைக்கதையுடன் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் இது தொடர்பாக 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இல்லை.

இலங்கை செல்லும் ‘சூர்யா 42’ படத்தின் படக்குழு…!

இலங்கை செல்லும் ‘சூர்யா 42’ படத்தின் படக்குழு…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் தற்காலிகமாக ‘சூர்யா 42’ என்று அழைக்கப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

முதல்கட்ட படப்பிடிப்பு கோவா மற்றும் சென்னையில் நிறைவடைந்தது.

தற்போது, படக்குழு இலங்கை சென்று வனப்பகுதியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்த உள்ளது.

60 நாட்கள் நடக்கும் இந்த ஷெட்யூலில் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளது.

மேலும், சூர்யா இப்படத்தில் 5 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் அல்லது ஏப்ரல் 2023க்குள் முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘Surya 42’ team going to Sri Lanka

BREAKING மருத்துவமனையில் கமல்ஹாசன் எப்படி இருக்கிறார்? மருத்துவர்கள் அறிக்கை!

BREAKING மருத்துவமனையில் கமல்ஹாசன் எப்படி இருக்கிறார்? மருத்துவர்கள் அறிக்கை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று நவம்பர் 23 நள்ளிரவில் நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து அவரது ரசிகர்களும் திரையுலகினரும் அதிர்ச்சியாகினர்.

தற்போது நவம்பர் 24 அவரது உடல்நிலை குறித்து சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் சளி மற்றும் காய்ச்சல் காரணமாக கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது குணமாகி வருகிறார். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hospital statement about Kamalhassan health

நடிகை சமந்தாவின் உடல்நிலை குறித்த சமீபத்திய அப்டேட்

நடிகை சமந்தாவின் உடல்நிலை குறித்த சமீபத்திய அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மாதம் தனக்கு ‘மயோசிடிஸ்’ எனப்படும் ஆட்டோ இம்யூன் நோய் இருப்பது குறித்து தகவலை பகிர்ந்தார் நடிகை சமந்தா .

தான் எதிர்பார்த்ததை விட சிறிது காலம் கழித்து குணமாகி வருவதாகவும், மெதுவாக குணமடைந்து வருவதாகவும் கூறினார்.

இந்நிலையில், நடிகை சமந்தவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

இருப்பினும், சாமின் செய்தித் தொடர்பாளர் வதந்திகளை மறுத்து, அவர் ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுப்பதை உறுதிப்படுத்தினார்.

More Articles
Follows