தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஐஸ்வர்யாவை ஒரு பெண் இயக்குனராகவும் ரஜினியின் மகளாகவும் தனுஷின் மனைவியாகவும் பலருக்கு தெரியும்.
இவர் பரதநாட்டிய கலைஞர் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இவர் சமீபத்தில் ‘Standing On An Apple Box’ என்ற புத்தகத்தை எழுதி தான் ஒரு எழுத்தாளர் என்பதையும் நிரூபித்தார்.
இந்நிலையில் வருகிற மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஐ.நா. சபையில் தன் பரதநாட்டிய நிகழ்ச்சியை அரங்கேற்றவிருக்கிறார்.
இதை தன் ட்விட்டரில் பதிவிட்டு, தற்போது அந்த அரங்கேற்றத்திற்கான ரிகர்சலில் ஈடுபட்டு வருகிறேன் என பதிவிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் நல்லெண்ண தூதராக தேர்வு செய்யப்பட்டவர்.
இவர் பங்கேற்கும் நடன விழா ஐ.நா.வில் இருக்கும் இந்திய தூதகரத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
45 நிமிடம் முதல் 1 மணி நேரம் நடக்கும் இந்த கச்சேரியில் நாட்டியக் கடவுள் நடராஜருக்கு புஷ்பாஞ்சலியில் தொடங்கி, மதுரையை ஆண்ட மீனாட்சியின் வாழ்க்கையை சொல்லி உலக பெண்களின் மகத்துவத்தையும், வைரமுத்துவின் அவசர தாலாட்டு என்ற பாடலில் இன்றைய நாளில் பணிக்கு செல்லும் தாய்மார்களின் மேன்மையையும் தன் நாட்டியத்தின் மூலம் கூற இருக்கிறார்.
முடிவில் காஞ்சி பெரியவர் எழுதிய. மைத்ரிம் பஜத என்ற பாடலுடன் உலக சமாதானத்தை வேண்டி நிறைவு செய்கிறார்.
இது எம்.எஸ்.சுப்புலெட்சுமியால் ஐக்கிய நாடுகள் சபையில் முதல் முறையாக பாடப்பட்ட பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் எம்.எஸ் சுப்புலெட்சுமி, பண்டிட் ரவிசங்கர், அம்ஜத் கான், ஷாகிர் உசேன், ஏ.ஆர்.ரகுமான், டாக்டர் எல் சுப்பிரமணியன், சுதா ரகுநாதன் போன்றோர் மட்டுமே கலந்து கொண்ட இவ்விழாவில் முதல் நடனம் ஆடும் பெண் என்ற பெருமையை ஐஸ்வர்யா தனுஷ் பெறுகிறார்.
இவ்விழாவிற்கு பின் அமெரிக்க தமிழ்சங்கம் சார்பில் ஞாயிறு அன்று விழா எடுத்து அமெரிக்க தமிழ்ச்சங்கம் சார்பாக விருது வழங்கி கௌரவிக்கவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் ரஜினி குடும்பத்தை சேர்ந்த சிலர் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
#recordingsession gearing up for NYC #March8 #UN #dancelove
Aishwaryaa Dhanush gping to perform bharatanatyam at un headquarters