தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நம்ம ஹீரோ நடிச்ச படம் இந்த வருஷமாச்சும் வரும்? வராதா? என பல நடிகர்களின் ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.
ஆனால் விஜய் சேதுபதி நடிப்பில் மாதத்திற்கு ஒரு படம், போய் மாதத்திற்கு இரண்டு படம் வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு ஆகஸ்ட் 19ஆம் தேதி இவரது நடிப்பில் தர்மதுரை படம் வெளியானது.
இதனை தொடர்ந்து ஒரு மாதத்திற்கு பிறகு (செப். 23) ஆண்டவன் கட்டளை வெளியானது.
இவை இரண்டும் இன்றும் வெற்றிகரமாக சத்யம் சினிமாஸில் ஓடிக்கொண்டிருக்கிறது.
தற்போது இரண்டு வார இடைவெளியில் அக்டோபர் 7ஆம் தேதி றெக்க வெளியாக உள்ளது.
இந்த படமும் சத்யம் சினிமாஸ் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
எனவே ஒரே நடிகரின் 3 படங்களும் ஒரு திரையரங்க வளாகத்தில் திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
இது எந்த நடிகருக்கும் கிடைக்காத பெருமையாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.