தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமா உலகில் காதல், திருமணம் மற்றும் விவாகரத்து அடிக்கடி நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான்.
இதில் நீண்ட நாட்களாக பேசப்பட்டது விஷால்-வரலட்சுமியின் காதல்தான்.
இவர்கள் இருவரும் காதலை வெளிப்படையாக இதுவரை கூறவில்லை.
ஆனால் நல்ல நட்பு உள்ளது என்று பலமுறை தெரிவித்துள்ளனர்.
ராதிகா சரத்குமாரின் மகளின் திருமண விழாவில் கூட கலந்து கொள்ளாத வரலட்சுமி, விஷாலின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
இந்நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் தன் காதலை போட்டு உடைத்துள்ளார் வரலட்சுமி.
“ஏழு ஆண்டுகளாக இருந்த எங்களுடைய காதல் உறவை உடைத்து விட்டார்.
அச்செய்தியை, தன்னுடைய மேலாளர் மூலமாக சொல்லி அனுப்பியுள்ளார்.
உலகம் எங்கே போகிறது; காதல் எங்கே? என பாய்ந்துள்ளார் வரலட்சுமி.
அவர் யாரை குறிப்பிட்டு சொல்லியுள்ளார் என்பது அவருக்கே தெரிந்த ரகசியம்.
பின்குறிப்பு: அதன் பின்னர் சில மணி நேரங்கள் கழித்து, நான் என் வேலையை பற்றியே குறிப்பிட்டேன். அது என்னை பற்றியது இல்லை என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.