தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா தொற்று அச்சம், அவரின் உடல்நிலை பாதிப்பு உள்ளிட்ட சில காரணங்களால் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா? என்ற சந்தேகம் மக்களிடையே வலுத்து வருகிறது.
இதனால் ரஜினி ரசிகர்களே செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
நேற்று ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையிலும்.. தன் உடல்நிலை பற்றி வெளியான (போலி) அறிக்கையில் கூட உண்மை இருந்ததாக தெரிவித்தார்.
இதனால் பல ஊடகங்களில் இதுவே விவாதப் பொருளாக மாறியது.
இந்த நிலையில் இன்று காலை ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டு முன்பு அவரது ரசிகர்கள் திரண்டனர்.
அப்போது அவர்கள் ஊடகங்களிடம் தங்கள் தலைவருக்கு கோரிக்கை வைத்தனர்.
“தமிழகத்தை ஆள வா…. ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம்… இப்போ இல்லனா எப்பவுமே இல்ல.. விவசாயிகள் துயர் துடைக்க வா தலைவா… ஓட்டுன்னு போட்டா ரஜினிக்கு தான்… உள்ளிட்ட பல கோரிக்கைகள் வைத்தனர்.
மேலும் இது போன்ற வாசக போஸ்டர்களை சென்னை நகரில் பல முக்கிய பகுதிகளில் ஒட்டியுள்ளனர்.
Rajinikanth fans gathered at Poes Garden